deccanwebtv

RAI’s Chennai Retail Summit 2024 Drives Strategic Innovation in aTransforming Retail Landscape.


Chennai, August 28, 2024: The Retailers Association of India (RAI) held a landmark
‘Chennai Retail Summit 2024’ at the renowned ITC Grand Chola in Chennai, drawing
together leading decision-makers and industry frontrunners from across the Indian
retail sector. This year’s summit, centred on the theme “Changing World of Retail”
provided an engaging platform for retail executives and service providers to explore
emerging trends, share insights, and refine strategies in an ever-evolving retail
landscape.
The summit featured a stellar lineup of speakers, including Chockalingam S, Co-Founder
& Director of Opn Advertising Pvt. Ltd.; Balachandar R, Director of Junior Kuppanna; C K
Kumaravel, Co-Founder & CMD of Naturals Salon; Saurabh Kumar, CEO – Retail at
Kaleesuwari Group; Gautam Saraogi, CEO of Go Fashion (India) Ltd. (Go Colors); and
Madhumitha Udaykumar, Co-Founder & COO of The Indus Valley. Each speaker brought
a wealth of knowledge and experience, offering valuable insights into the challenges and
opportunities faced by the retail industry today.
Speaking about the Chennai Retail Summit, Kumar Rajagopalan – Chief Executive
Officer, Retailers Association of India (RAI), said, “Chennai Retail Summit highlights
the strength of Chennai as a market that was one of the earliest adopters of the chain
store model in India. Retailers from the region —across Tier 1 to Tier 3—have successfully
navigated the complexities of modern retail while staying true to their cultural roots. In an
industry marked by critical shifts such as time poverty and the growing demand for
hyperlocal solutions, the region’s ability to retain tradition while embracing
modernisation sets it apart. As consumers increasingly prioritise convenience and
personalized experiences, retailers must pivot their strategies to meet these evolving
needs. The ability to adapt quickly and innovate in response to these changes is what will
define success in this dynamic market.”
Sonali Lalvani, CEO, Toniq Retail Brands, said, “The modern retail environment
demands agility and an in-depth understanding of consumer behaviour. As retail shifts
from traditional brick-and-mortar to omnichannel experiences, brands that prioritise
seamless customer journeys and personalized interactions will thrive in this
competitive market.”
Anand Bharadwaj, Co-Founder, Sweet Karam Coffee, said, “In today’s retail
landscape, it’s not just about selling a product; it’s about creating a story that resonates
with consumers along with the right value-added experiences. As we see a shift toward
local and authentic preferences, brands that can harness the power of tradition with a
contemporary twist and blend it with modern retail practices will find themselves
leading the way.”

C K Kumaravel, Co-Founder & CMD, Naturals Salon:
The future of retail lies in the ability to innovate using technology while staying true to
your brand’s core values. In the beauty and wellness sector, this means continuously
evolving our services to meet the changing needs of our customers while maintaining
the essence of what makes us unique. The key is to listen, adapt, and always put the
customer first.
Madhumitha Udaykumar, Co-Founder & COO, The Indus Valley, said, “Indians are
more likely to choose a healthy product over an unhealthy one, with an increasing
preference for toxin-free and safe options. This shift accompanies a trend toward
premiumization. Thankfully, today’s customers are very vocal about their needs. For
retailers, this means a significant opportunity to expand their sales pie and increase
gross margins by introducing these new-age offerings driven by customer demand.”
The Chennai Retail Summit 2024 once again underscored RAI’s commitment to
supporting the growth and advancement of the retail sector, offering a vibrant forum
for industry leaders to collaborate, innovate, and drive the future of retail in India.

The Sleep Company announces India’s largest mattress giveaway; to give around INR 1 Crore worth of mattress for free across four cities


Around INR 25 lakhs worth mattresses will be up for grabs for Chennaites on August 31, 2024
Chennai, 27th August 2024: Chennaites, get ready to claim your dream mattress at The Sleep Company (TSC) stores on 31st August 2024. The giveaway of 100 free mattresses worth around INR 25 lakhs will take place from 11AM to 1PM on a first-come, first-served basis. For a decade-long good night’s sleep all you need to do is reach the nearest TSC store in the locations mentioned here – Nungambakkam, OMR, Anna Nagar, and Adyar. This is as part of its massive giveaway wherein the company is offering around INR 1 Crore worth of free mattresses across major metros including Chennai, Mumbai, Delhi and Hyderabad.
This makes it India’s first mattress brand to announce such a huge giveaway and is a testament to the leadership’s vision of helping India sleep better. TSC recently launched its 100th store in India and is delighted to celebrate this milestone with this offer, making it a unique opportunity for Chennaites to experience the unparalleled comfort and quality of its mattress.
India’s leading Comfort-Tech brand, The Sleep Company is one of the fastest D2C brands to reach the milestone of opening 100 COCO (Company-Owned, Company Operated) stores in just two years of marking its foray into offline retail business. The company opened its first store in Bengaluru in June 2022.
The Sleep Company Cofounder, Priyanka Salot said, “We are thrilled to celebrate the 100th store milestone by giving away 400 free mattresses across India in our mission to help the people sleep better. In addition to Chennai, the giveaway will take place across Mumbai, Delhi-NCR and Hyderabad. In the first phase, we conducted a similar giveaway in Bengaluru, making this India’s largest mattress giveaway worth INR 1.25 crores. We are incredibly grateful to our customers, who have played an instrumental role in our growth journey and this is a true reflection of the strong bond we share with them. People across the key metros, including in Chennai, are often faced with sleep deprivation issues due to their busy and hectic lifestyles. Through this initiative, we want to provide people with an opportunity to take home our patented SmartGRID mattress and have out-of-the-world sleeping experience for over a decade.’’
Ripal Chopda, Chief Marketing Officer of The Sleep Company added, “This giveaway is our way of thanking Chennaites for their trust and loyalty, and we look forward to catering to more customers in the years to come. With the innovative and patented SmartGRID technology, our mattress provides deep and undisturbed sleep to individuals. Our omnichannel expansion across the country is to offer a superior and delightful experience to our customers and redefine the way people sleep and sit.”
The Sleep Company is Asia’s first and only provider of SmartGRID technology, revolutionizing sleeping and sitting solutions. As one of the country’s fastest growing brands, it is at the forefront of reshaping both the D2C as well as the omnichannel landscape in the mattress industry. Founded in 2019 by Priyanka and Harshil Salot, the company stands true to its commitment of offering customers the best sleeping experience. In just 4.5 years since inception, The Sleep Company has achieved a significant milestone of achieving INR 500 ARR in FY24 and is well positioned to touch the INR 1000 crore mark in the next 2-3 years.
The Sleep Company offers a wide range of products, including smart recliner beds, pillows, office chairs, & recliner sofas. We encourage all Chennaites to visit the designated locations early to secure their chance to win a free mattress.
Locate the designated store here: https://thesleepcompany.in/pages/our-store

தங்கலான் – உலகளாவிய அளவில் ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி பயணம்.

சீயான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் எழுத்து-இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்து, உலகளவில், ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி தற்போது நகர்ந்திருக்கிறது. தங்கலான் திரைப்படம், சீயான் விக்ரம் அவர்களுக்கு அவரது திரை வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முதல் நாள் வசூலை கொண்டு வந்தது. ரூபாய் 26 கோடிக்கும் மேல் முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்த இப்படம், தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது வாரம், தமிழ்நாட்டில் பல புதிய திரைப்படங்கள் வெளியாகி இருந்த போதிலும், வசூலில் ஸ்டெடியாக இப்படம் சென்று கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் மற்றும் தெலங்கானாவில், பெரும் வரவேற்பை பெற்று இரண்டாவது வாரம் இப்படம் 141 தியேட்டர்கள் அதிகரித்து, தற்போது 391 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 30-ம் தேதியன்று மும்பை, டெல்லி மற்றும் அனைத்து வட மாநிலங்களில் தங்கலான் வெளியாக உள்ளது. அதன் மூலம் மேலும் பல கோடிகளை இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இப்படத்திற்கு கிடைத்த வெற்றிகளினால், தயாரிப்பாளருக்கு அவரின் முதலீட்டை தாண்டி வசூல் செய்யும் என அனைவராலும் பேசப்படுகிறது. பா. ரஞ்சித் அவர்களின் சிறப்பான இயக்கத்தால், உருவான தங்கலான் திரைப்படத்தில், சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டகிரோன், பசுபதி என பல நடிகர்கள் தங்களின் சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். சீயான் விக்ரம் அவர்கள் இப்படத்திற்காக கொடுத்த உழைப்பையும், அர்ப்பணிப்பையும், ஆகச்சிறந்த நடிப்பையும் பாராட்டாத பார்வையாளர்களோ ஊடகங்களோ இல்லை. அந்த அளவு தன் மாபெரும் உழைப்பை இப்படத்திற்காக விக்ரம் அவர்கள் கொடுத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இப்படம், 18-ம், மற்றும் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த விளிம்புநிலை மனிதர்கள், அவர்களின் போராட்டங்கள், மேஜிக்கல் ரியலிசம் என பல புதுமையான விஷயங்களை உள்ளடக்கி, ஒரு சிறந்த காட்சி அனுபவத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர் G.V. பிரகாஷ் குமாரின் பாடல்களும், பின்னணி இசையும், பெரிய பலமாக அமைந்துள்ள தங்கலான், 2024-ல் ஒரு மறக்க முடியாத திரைப்படமாகவும், ரூபாய் 100 கோடியளவில் வசூல் செய்த ஒரு படமாகவும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இருக்கும்.

விடுதலையின் கருத்தை மறுவரையறை செய்யும் விடுதலைப் பாடல்:

விடுதலையைப் புறவெளியில் தேடியலையும் மனிதன் நாள்தோறும் தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்ளும் அகவிடுதலையைப் பற்றி சிந்திக்க வேண்டுமென்ற கருப்பொருளோடு வெளியாகியுள்ளது ‘விடுதலைப் பாடல்’. ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைப்பில், மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலைத் தீபக் புளூ பாடியுள்ளார்.
தேர்வுகளின் தடைகளில் இருந்து அறிவு தேடும் விடுதலை, தோல் நிறத்தின் மதிப்பீடுகளிலிருந்து மெய்யழகு வேண்டும் விடுதலை, பொய்களின் சுமையிலிருந்து விடுபட விரும்பும் உண்மை, தொடுதிரையிலிருந்து விரல்கள் கோரும் விடுதலை என அன்றாடம் நம்மை நாமே சிறைப்படுத்திக்கொண்டு வாழ்வதைத் தகர்த்தெறிய இப்பாடல் வலியுறுத்துகிறது. இதோடு நம் நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த வீரர்களையும் போற்றுகிறது. விடுதலையின் பொருளை நாம் மறுமதிப்பீடு செய்துகொள்ள வேண்டுமென்ற ஆழமான கண்ணோட்டத்தை வலியுறுத்தும் இந்தப்பாடலை அபிநாத் சந்திரன் தயாரிக்க மதுரை குயின் மிரா பள்ளி வெளியிட்டுள்ளது.
இளைஞர்களின் துள்ளளான நடன அசைவுகளோடு உருவாகியுள்ள விடுதலைப்பாடலின் ஒளி வடிவம் பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் அனைத்து இசைச் சீரோடைகளிலும் இப்பாடல் வெளியிடப்படும்.

புகழ் நடிக்கும் ‘FOUR சிக்னல்’……

R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் தயாரிப்பில் மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் புகழ் நாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’

காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது

ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும்
மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகும் ‘Four சிக்னல்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

அறிமுக இயக்குநரான மகேஸ்வரன்கேசவன், காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படமாக ‘Four சிக்னல்’ படத்தை உருவாக்கி உள்ளார். நகரங்களில் வசிக்கும் வெகு ஜனங்கள் வெகுவாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை சுற்றி இந்த கதை சுழல்கிறது.

சென்னையின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தினமும் ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள ‘Four சிக்னல்’ திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

அருவி திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், லொள்ளு சபா சேஷு, ஷர்மிளா, விஜய் ஆதிராஜ், யூடியூபர் காத்து கருப்பு கலை உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க, A.J அலி மிர்சாக் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மனிதர்களின் அந்தரங்க உணர்வுகளையும் யதார்த்தங்களையும் உள்ளடக்கிய ரொமான்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள ‘Four சிக்னல்’ திரைப்படத்திற்கு பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்ய, பிரியன் எடிட்டிங் செய்துள்ளார்.

படம் குறித்து பேசிய இயக்குநர், “எளிய மக்களின் வாழ்க்கையில் நடக்கும் தினசரி நிகழ்வுகளின் சுவாரஸ்ய தொகுப்பாக ‘Four சிக்னல்’ இருக்கும். தரமான திரைப்படங்களை எப்போதும் ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் இந்த திரைப்படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்,” என்றார்.

SSN நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் (CSE) முதல் தரவரிசைகளுடன் பிரகாசிக்கிறார்கள்


முன்னாள் மாணவிகளான மாலதி டி, லிந்தியா எல், சிந்து என் ராகவன் மற்றும் சாய்கிரண் எஸ் ஆகியோர் இந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட் 27, 2024: ஷிவ் நாடார் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் முதன்மை பொறியியல் நிறுவனமான எஸ்எஸ்என் இன்ஸ்டிடியூஷன்ஸ், இன்ஜினியரிங் பிரிவில் 46வது இடத்தையும், என்ஐஆர்எஃப் 2024 தரவரிசையில் ஒட்டுமொத்தமாக 81வது இடத்தையும் பெற்றுள்ளது. இந்த ஆண்டு மதிப்புமிக்க இந்திய நிர்வாக சேவை (IAS) மற்றும் இந்திய வருவாய் சேவை (IRS) ஆகியவற்றில் பாதுகாப்பான பதவிகள் மற்றும் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற முன்னாள் மாணவர்களின் விவரங்களை அறிவித்தது. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) 2023 பேட்ச்சில் 1,016 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில், எஸ்எஸ்என் பெருமையுடன் நான்கு முன்னாள் மாணவர்களை பெருமைப்படுத்துகிறது: மாலதி டி, லிந்தியா எல் மற்றும் சிந்து என் ராகவன், ஐஏஎஸ் பதவிகளைப் பெற்றவர் மற்றும் ஐஆர்எஸ்க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சாய்கிரண் எஸ். அவர்களின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் அவர்களை இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லுக்கு கொண்டு சென்றுள்ளது.

எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பட்டதாரியான மாலதி டி (2010 ஆம் ஆண்டு பேட்ச்), இந்திய கடற்படையில் பணியாற்றிய பிறகு 237 AIR ஐப் பெற்றுள்ளார், இவர் பள்ளி செல்லும் குழந்தையின் தாய் . “எஸ்எஸ்என் கல்வியாளர்களுடன் சேர்ந்து நீங்கள் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்கிறீர்கள்” என்று முதலிடம் பிடித்தவர் குறிப்பிட்டார். SSN பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த (2020 ஆம் ஆண்டின் பேட்ச் ) சாய்கிரண் எஸ், 712 AIR ஐப் பெற்றார். இவர் நான்கு வருட படிப்புக்கான SSN இன் வாக்-இன் வாக்-அவுட் முழு உதவித்தொகையையும் பெற்றவர் .மேலும் 2016 ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் அகில இந்திய ரேங்க் 7 வது இடத்தைப் பெற்றுள்ளார் . “எனது கல்வியில் நிர்வாகத்தின் அர்ப்பணிப்பு என்னை சிறந்து விளங்குவதற்கு தூண்டியது.” என்று அவர் கூறினார் .

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த லிந்தியா எல் (2020 ஆம் ஆண்டு பேட்ச்), SSNCE பட்டதாரிகளின் பன்முகத்தன்மை மற்றும் தகவமைப்புத் திறனை 354 AIR மூலம் எடுத்துக்காட்டுகிறார். 2022 இல் UPSC தேர்வுகளுக்குத் தயாராவதற்காக உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தில் வேலையை விட்டுவிட்டார். “எனது உத்வேகங்களில் ஒன்று திரு. ஷிவ் நாடார் அவர்களின் நேர்காணல், அதில் அவர் இளைஞர்களை பொது சேவையில் ஈடுபட ஊக்குவிக்கிறார்.”என்று அவர் நினைவு கூர்ந்தார்

சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான சிந்து என் ராகவன் (பேட்ச் 2015) 336 AIR ஐப் பெற்றுள்ளார். முன்னதாக, அவர் பட்டப்படிப்பில் இருந்து தனது சிவில் சர்வீசஸ் தயாரிப்பைத் தொடர்ந்தார். அவர் கூறுகையில் “திரு. ஷிவ் நாடாரின் பரோபகார நடவடிக்கைகள் மற்றும் கல்வித் துறையில் சிறந்து விளங்குவதற்கான அவரது வேட்கை உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று கூறினார்.

SSN நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கலா, இந்த சாதனை குறித்து தனது பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். அவர்களின் வெற்றி அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும், மேலும் எதிர்காலத் பேட்ச்களுக்கு ஒரு அளவுகோலை அமைத்துள்ளது, உயர் இலக்கை அடையவும் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவும் அவர்களை ஊக்குவிக்கிறது. SSN குடும்பம் அவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்களிக்கும் வகையில், சேவைகளில் தங்கள் பயணத்தைத் தொடங்கும்போது, அவர்களின் எதிர்கால முயற்சிகளில் சிறந்து விளங்க வாழ்த்துகிறது.

திறமையை வளர்ப்பதற்கும் கல்வியை மேம்படுத்துவதற்கும் அதன் அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட ஷிவ் நாடார் அறக்கட்டளை, இந்த வெற்றியை அதன் மற்றொரு பெருமையாக கொண்டாடுகிறது. ஒரு உகந்த கற்றல் சூழலை வழங்குவதற்கும், சிறந்து விளங்குவதற்கும் அறக்கட்டளையின் தொடர்ச்சியான முயற்சிகள் இந்த சாதனையாளர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் கருவியாக உள்ளன.

“சாலா” திரைவிமர்சனம்

சிறுவயதில் தீரன் ஏரியாவில் தாதாவாக இருக்கும் அருள்தாஸின் உயிரை ஒரு மோதலில் போது காப்பாற்றுகிறார்.உடனே தாதா அருள்தாஸ் தன் வாரிசாக கதாநாயகன் தீரனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அருள்தாஸின் எதிரி தாதாவான சார்லஸ் வினோத் ஏலத்தில் அருள்தாஸ் நடத்தும் பார்வதி பார் உரிமையை ஏலத்தில் கைப்பற்றுகிறார். இழந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதே அருள்தாஸின் லட்சியமாக வாழ்ந்து வருகிறார்.கதாநாயகன் தீரன் வளர்ந்து தனது குருவிற்காக அந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதில் உறுதுணையாக நிற்கிறார்.பலநூறு பார்களை நடத்த வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கும் கதாநாயகன் தீரன்.
மதுபான கடைகளையும் பார்களையும் மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நாயகி ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, எதிரும் புதிருமாக இருக்கும் இருவருக்கும் நடக்கும் மோதல் காதலாக மாறுகிறது.இதற்கிடையே இந்த பார்வதி பாரை ஏலம் எடுப்பதில் நாயகன் தரப்புக்கும், வில்லன் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
பார்வதி பாரை ஏலம் எடுத்தார்களா? எடுக்கவில்லையா?ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் காதல் என்ன ஆனது ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் இந்த சாலா திரைப்படத்தின் மீதிக்கதை.

சாலா திரைப்படத்தில் அறிமுக நாயகனாக தீரன் அறிமுகமாகியிருக்கிறார். ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என்று முரட்டுத்தனமாக இருந்தாலும் அப்பாவித்தனமான தனது நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.தன் காதலி கதாநாயகி ரேஷ்மா பாதிப்புக்கு ஆளாகும்போது பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷுக்கு புரட்சிகரமான கதாபாத்திரம், அதை புரிந்து நடித்திருக்கிறார்.
சார்லஸ் வினோத் மற்றும் அருள்தாஸ் வழக்கமான நடிப்பு கொடுத்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்கள்..
நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீநாத் , சம்பத் ராம், யோகிராம், பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் அற்புதமாகவும் காட்சிப்படுத்துள்ளார்.
இசையமைப்பாளர் தீசன் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்.
மதுப்பழக்கத்திற்கு மக்கள் எப்படியெல்லாம் அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் இயக்குநர் மணிபால் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

சபையர் ஸ்டுடியோஸ் வெளியிடும் பிரபு தேவாவின் ‘பேட்ட ராப்’

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சபையர் ஸ்டுடியோஸ்

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை சபையர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.கே.தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் மோசன் போஸ்டர், இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பினை பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக கோயம்புத்தூரில், Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert !!

Torque Entertainment மற்றும் Raj melodies வழங்கும், “Return Of The Dragon” ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert !!

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் Icon ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “Return Of The Dragon” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் மிகபெரிய கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

தமிழக Independent Music துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் Icon ஆக மாறியுள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. “Return Of The Dragon” எனும் பெயரில் லண்டன், மலேசியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் Music Concert யை நடத்தவுள்ளார்.

Torque Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து இந்த Music Concert யை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளன.
இந்த Music Concert ல் கோயம்புத்தூர் ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றது.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த Music Concert, இப்போதே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது.

இந்த Music Concert ல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதற்கு முன்பாக நடைபெற்ற Concert ல் ஏற்பட்ட சிக்கல்கள், எதுவும் இவ்விழாவில் ஏற்படாதவாறு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை, ஆன்லைனில் Paytm ஆப் மூலம் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

“போகுமிடம் வெகு தூரம் இல்லை” திரை விமர்சனம்….

விமல் கருணாஸ் மற்றும் பல நடிப்பில் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் போகுமிடம் வெகு தூரம் இல்லை

அமரர் ஊர்தி ஓட்டுனரான விமல், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது தாத்தாவை துணைக்கு வைத்து விட்டு மருத்துவ செலவிற்காக -சென்னையில் இறந்தவரின் சடலத்தை ஏற்றுக் கொண்டு திருநெல்வேலிக்கு பயணிக்கிறார்.வழியில் கூத்து கலைஞர் கருணாஸ் தன்னை செல்லும் வழியில் இறங்கி விடுமாறு கேட்க, மனதளவில் பிடிக்காமல் துணைக்காக ஏற்றுக்கொள்கிறார்.
இருவரும் பயணிக்க வழியில் ஒரு காதல் ஜோடியும் வண்டியை நிறுத்தி ஏறிக்கொள்ள இந்த இருவர் மற்றும் கருணாஸ்னால் பல விதத்தில் பல பிரச்சனைகள் கதாநாயகன் விமலுக்கு வருகிறது.
இந்த காதல் ஜோடிகளால் வந்த பிரச்சனை என்ன? அமரர் ஊர்தியில் உள்ள சடலத்தை ஒப்படைத்தாரா? ஒப்படைக்கவில்லையா? என்பதுதான் போகுமிடம் வெகு தூரம் இல்லை திரைப்படத்தின் மீதிக்கதை.
அமரர் ஊர்தி ஓட்டுனர் குமார் கதாபாத்திரத்தில் மிகவும் கனத்த முகத்துடனும் தன்னுடன் பயணித்த கருணாஸ் இறந்த பிறகு மிகவும் நினைத்து வேதனைப்படும் காட்சிகளிலும் அருமையாக தன்னை மறந்து நடித்துள்ளார்.எப்பொழுதும் பார்க்கும் விமலாக இல்லாமல் புது மாதிரியான விமலாக நடித்திருக்கிறார்.
மற்றொரு கதையின் நாயகனாக கருணாஸ் நடித்துள்ளார்.
கூத்துக் கலைஞர் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாகவும் கூத்துக் கலைஞரின் நடை உடை பாவனை அனைத்தையும் ஏற்று கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அற்புதமாக நடித்து இருக்கிறார்.
நம்மளால் ஏற்பட்ட தவறுக்கு நாம் தான் பரிகாரம் செய்ய வேண்டும் என கருணாஸ் எடுக்க முடிவு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை தூக்கி வாரி போட்டு விட்டது.
விமல் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மேரி ரிக்கெட்ஸ், அருமையாக நடித்துள்ளார்.
தீபா சங்கர், ஆடுகளம் நரேன், பவன், சார்லஸ் வினோத், அருள்தாஸ், வேல ராமமூர்த்தி, மனோஜ்குமார் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வர்ட்ஸ். மிகச்சிறந்த ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இசை உயிரோட்டமாக உள்ளது.
ஒரு அமரர் ஊர்தி ஓட்டுனரின் ஒரு நாள் வாழ்க்கையை வைத்து, அதை சுற்றிய பல சுவாரஸ்யமான காட்சிகளும் அந்த ஒரு நாள் வாழ்க்கையின் அனுபவங்களையும் படமாக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மைக்கேல் கே ராஜா. இந்த அமரர் ஊர்தியில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து யோசித்த கதை அருமை, அதன் திரை கதையை இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு சுவாரஸ்யமாக அமைத்திருந்தால், அந்த மனிதர்களின் வாழ்க்கையை சுவாரசியமாக கொடுத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
மொத்தத்தில் போகும் இடம் வெகு தூரம் இல்லை விமலின் திரை வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு மயில் கல்லாக இருக்கும்