பெரு முதலாளிகள் சாதி, மதங்களைக் கடந்து, சுயநலத்துக்காக எப்போதும் கைக்கோர்த்துக்கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால். உழைக்கும் மக்கள் எப்போதும் தங்களுக்குள் பகைமை பாராட்டி, அடிப்படைவாதிகளால் அடித்துக்கொள்ளத் தூண்டப்படுகிறார்கள் என்ற கருத்தை மிகவும் அழுத்தமான திரைக்கதையில் ரயில் திரைப்படம் வெளியாகி இருந்தது.
உழைக்கும் தமிழர்கள் குடிநோய்க்கு அடிமையான நிலையில், அவர்களின் வேலை வாய்ப்புகள் பரிக்கப்பட்டு, அந்த இடத்தில் வடநாட்டு கூலிகளை அனுமதிக்கும் தமிழ்நாட்டுச் சூழல் ஒருபக்கம் என்றால், அடையாள அரசியல்வாதிகளின் காட்டமான எதிர்வினை இன்னொரு பக்கம் என அனைத்தையும் கடந்து, ரயில் திரைப்படம், பொதுமக்களாலும் ஊடகங்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. மேலும், சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையம் ரயில் திரைப்படக் குழுவிற்கு பாராட்டு விழா நடத்தி வரவேற்றது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில், ரயில் திரைப்படம் ஆஹா ஓடிடி யில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் வெளியாகிறது. திரையரங்குகளில் வெளியான நீளத்திலிருந்து 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, ஏற்கனவே பார்த்தவர்கள் கூட மீண்டும் பார்க்கத் தூண்டும் விதத்தில் படம் வெளியாகிறது என்று திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.
தயாரிப்பு – மு. வேடியப்பன் எழுத்து இயக்கம் – பாஸ்கர் சக்தி ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர் இசை -எஸ். ஜே. ஜனனி எடிட்டிங் -நாகூரான் ராமச்சந்திரன் பாடல்கள் – ரமேஷ் வைத்யா.
நடிகர்கள் குங்குமராஜ் வைரமாலா பர்வேஸ் மெஹ்ரூ செந்தில் கோச்சடை
பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியப் படமான ‘தி ராஜா சாப்’ படத்திலிருந்து, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, தயாரிப்பாளர்கள் ஒரு அருமையான க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த க்ளிம்ப்ஸ்ல் அசத்தலான விண்டேஜ் லுக்கில் இளமை துள்ளலுடன் ஜொலிக்கிறார் பிரபாஸ்.
‘தி ராஜா சாப்’ திரைப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தந்துள்ள, க்ளிம்ப்ஸ் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விண்டேஜ் காரில் காட்சியளிக்கும் பிரபாஸ், ரொமாண்டிக் ஹாரர் காமெடி மூலம் அனைவரையும் வசீகரிக்க தயாராக இருக்கிறார். மாருதி பிரபாஸை ஸ்டைலான தோற்றத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இது திரைப்பட ஆர்வலர்களுக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.
தற்போது, படத்தின் 40% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் மற்றொரு பிரமாண்ட ஷெட்யூல் தொடங்க உள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார், ராம் லக்ஷ்மன் மாஸ்டர்ஸ் மற்றும் கிங் சாலமன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர். பாகுபலி புகழ் கமலகண்ணன் ஆர்.சி. VFX பணிகளைக் கவனிக்கிறார். மிக சிறப்பான தொழில்நுட்பக் குழு ஒரு புதுமையான, தரமான சினிமா அனுபவத்தை உறுதி செய்கிறது.
மாருதி இயக்கத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் சார்பில் விஸ்வ பிரசாத் தயாரிக்கும், “தி ராஜா சாப்” திரைப்படம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. குடும்ப பொழுதுபோக்கு படமான ‘பிரதி ரோஜு பாண்டேஜ்’, முதல் தெலுங்கு ஹாரர் காமெடி படமான ‘பிரேம கதா சித்ரம்’ மற்றும் காதல் நகைச்சுவை படமான ‘மஹானுபாவுடு’ போன்ற சூப்பர்ஹிட்கள் மூலம் புகழ் பெற்ற மாருதி, பிரபாஸுடன் இணைந்து, மீண்டும் ஒரு அட்டகாசமான படத்துடன் வருகிறார்.
‘கார்த்திகேயா 2’ மற்றும் ‘தமக்கா’ போன்ற சூப்பர்ஹிட் கமர்ஷியல் படங்களை வழங்கிய தெலுங்குத் துறையில், முன்னணித் தயாரிப்பாளரான டிஜி விஸ்வ பிரசாத் இந்தத் திரைப்படத்தை, பெரும் உற்சாகத்துடன் தயாரித்து வருகிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் இதுவரை இல்லாத அளவிலான பிரம்மாண்டமான படமாக “ராஜா சாப்” படம் தயாராகி வருகிறது.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி பற்றி: மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரியை தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் நிறுவினார், இந்நிறுவனத்தின் சார்பில் முன்மாதிரியான பல திரைப்படங்களைத் தயாரித்து, வழங்கி வருகிறார்.
தொழில்நுட்பக்குழு
படத்தொகுப்பு – கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் ஒளிப்பதிவு – கார்த்திக் பழனி இசை – தமன் எஸ் ஃபைட் மாஸ்டர் – ராம் லக்ஷ்மன் & கிங் சாலமன் VFX – ஆர்.சி. கமலகண்ணன் தயாரிப்பு வடிவமைப்பாளர் – ராஜீவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – எஸ்.கே.என் மக்கள் தொடர்பு – யுவராஜ் இணை தயாரிப்பாளர் – விவேக் குச்சிபோட்லா தயாரிப்பாளர் – டிஜி விஸ்வ பிரசாத் எழுத்து இயக்கம் – மாருதி.
நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ப்ரமோ வெளியீடு
திறமையான படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரித்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஸ்வீட் ஹார்ட்’ என பெயரிடப்பட்டு, இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலுக்கான காணொளி பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஜூலை 27ஆம் தேதியன்று சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியின் போது, ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் காணொளி வெளியிடப்பட்டதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது.
இந்த காணொளியில் நடிகர் ரியோ ராஜ் – அருணாசலம் – இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் – யுவன் சங்கர் ராஜா கூட்டணியின் ஜாலியான உரையாடல்களும், அது தொடர்பான காட்சிகளும் பார்வையாளர்களிடத்தில் புன்னகையை ஏற்படுத்தி, இன்ப அதிர்ச்சியை அளித்திருப்பதால்… இந்த பிரத்யேக காணொளிக்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
கல்கி கி.பி 2898 இல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை ‘கடவுளுக்கு நிகரானவர்’ என்று அழைத்தது, பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும்.
சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ் பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரமாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் பெயர் மட்டுமே திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக ரசிகர்களைக் குவிக்கிறது.
மிகக்குறைந்த பப்ளிசிட்டியுடன் அதிக கூட்டத்தை வரவழைக்கும் பிரபாஸின் திறமை, அவரது நட்சத்திர பலத்திற்குச் சான்றாகும். சமீபத்தில் அவர் நடித்த “கல்கி” திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரே ஒரு விளம்பர நிகழ்வில் பங்கேற்ற போதிலும், திரைப்படம் மிகப்பெரிய அன்பையும் வரவேற்பையும் பெற்றது, நடிகரின் ஈடு இணையற்ற செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நிகழ்வு இந்தியாவில் மட்டும் அல்ல; பிரபாஸின் திரைப்படங்கள் ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. இது அவரது உலகளாவிய ஈர்ப்பைப் பிரதிபலிக்கிறது. , பிரபாஸின் ரசிகர்கள் பான் இந்தியா சூப்பர் ஸ்டாரை மீது மிகப்பெரும் அன்பு வைத்துள்ளனர். ஆதரவற்றவர்களுக்கு நன்கொடை அளிப்பது அல்லது நடிகரின் பிரம்மாண்ட கட் அவுட்களை உருவாக்குவது என அவருக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் எப்போதும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான அவரது ‘கல்கி’ பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் 1100 கோடிகளை வசூலித்து ஒரு வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது, இது உலகளாவிய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த சாதனை நடிகர் பிரபாஸின் மகத்தான புகழையும், திரைப்படத் துறையில் தாக்கத்தையும் மேலும் பெருக்குகிறது. 500 கோடியைத் தாண்டிய தொடக்க வார இறுதி வசூல் மூலம், இந்தியத் திரையுலகில் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது ‘கல்கி’. இந்திய சினிமாவில் 1000 கோடி வசூலைத் தாண்டிய இரண்டு படங்களில் நடித்த இரண்டு நடிகர்களில் பிரபாஸ் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது, அதில் “பாகுபலி 2” முதல் படமாகும்.
பிரபாஸின் பணிவு மற்றும் எளிமை அவரை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாக மாற்றியுள்ளது. அவரது பார்வையாளர்களுடனான இந்த உண்மையான தொடர்பு அசைக்க முடியாத ஆதரவாக உள்ளது, இது அவரது ஒவ்வொரு பட வெளியீட்டையும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாற்றுகிறது. “பாகுபலி” தொடரின் மகத்தான வெற்றியிலிருந்து “சாஹோ” மற்றும் “சலார்” போன்ற வெற்றிகள் வரை, பிரபாஸ் பாக்ஸ் ஆபிஸ் டைட்டன் என்ற நிலையை உறுதிப்படுத்தி, அடுத்தடுத்து பெரிய ப்ளாக்பஸ்டர்களை வழங்கியுள்ளார்.
பிரபாஸின் முதல் நாள் கலக்சனில் தொடர்ந்து சாதனை படைக்கும் திறன் ஈடு இணையற்றது. “பாகுபலி: தி பிகினிங்” முதல் நாள் வசூல் மூலம் ₹75 கோடிகள் வசூல் சாதனை படைத்தது, அதைத் தொடர்ந்து “பாகுபலி: தி கன்க்ளூஷன்” முதல் நாள் வசூல் ₹200 கோடியுடன் வசூலில் அசத்தியது. “சாஹோ” முதல் நாள் ₹130 கோடி வசூலுடன் இந்தப் போக்கைத் தொடர்ந்தது, மேலும் “சலார்” முதல் நாள் வசூல் ₹178 கோடிகளுடன் பிரபாஸின் ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியது. இப்போது, ”கல்கி” திரைப்படம் அதன் முதல் நாள் வசூல் ₹180 கோடியுடன் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது, பிரபாஸ் இந்தியாவின் வலிமைமிகு நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
பாகுபலி முதல் கல்கி வரை: உண்மையிலேயே மிகப்பெரிய பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் !!
கல்கி கி.பி 2898 இல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை ‘கடவுளுக்கு நிகரானவர்’ என்று அழைத்தது, பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும்.
சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ் பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரமாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் பெயர் மட்டுமே திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக ரசிகர்களைக் குவிக்கிறது.
மிகக்குறைந்த பப்ளிசிட்டியுடன் அதிக கூட்டத்தை வரவழைக்கும் பிரபாஸின் திறமை, அவரது நட்சத்திர பலத்திற்குச் சான்றாகும். சமீபத்தில் அவர் நடித்த “கல்கி” திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரே ஒரு விளம்பர நிகழ்வில் பங்கேற்ற போதிலும், திரைப்படம் மிகப்பெரிய அன்பையும் வரவேற்பையும் பெற்றது, நடிகரின் ஈடு இணையற்ற செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நிகழ்வு இந்தியாவில் மட்டும் அல்ல; பிரபாஸின் திரைப்படங்கள் ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. இது அவரது உலகளாவிய ஈர்ப்பைப் பிரதிபலிக்கிறது. , பிரபாஸின் ரசிகர்கள் பான் இந்தியா சூப்பர் ஸ்டாரை மீது மிகப்பெரும் அன்பு வைத்துள்ளனர். ஆதரவற்றவர்களுக்கு நன்கொடை அளிப்பது அல்லது நடிகரின் பிரம்மாண்ட கட் அவுட்களை உருவாக்குவது என அவருக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் எப்போதும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான அவரது ‘கல்கி’ பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் 1100 கோடிகளை வசூலித்து ஒரு வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது, இது உலகளாவிய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த சாதனை நடிகர் பிரபாஸின் மகத்தான புகழையும், திரைப்படத் துறையில் தாக்கத்தையும் மேலும் பெருக்குகிறது. 500 கோடியைத் தாண்டிய தொடக்க வார இறுதி வசூல் மூலம், இந்தியத் திரையுலகில் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது ‘கல்கி’. இந்திய சினிமாவில் 1000 கோடி வசூலைத் தாண்டிய இரண்டு படங்களில் நடித்த இரண்டு நடிகர்களில் பிரபாஸ் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது, அதில் “பாகுபலி 2” முதல் படமாகும்.
பிரபாஸின் பணிவு மற்றும் எளிமை அவரை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாக மாற்றியுள்ளது. அவரது பார்வையாளர்களுடனான இந்த உண்மையான தொடர்பு அசைக்க முடியாத ஆதரவாக உள்ளது, இது அவரது ஒவ்வொரு பட வெளியீட்டையும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாற்றுகிறது. “பாகுபலி” தொடரின் மகத்தான வெற்றியிலிருந்து “சாஹோ” மற்றும் “சலார்” போன்ற வெற்றிகள் வரை, பிரபாஸ் பாக்ஸ் ஆபிஸ் டைட்டன் என்ற நிலையை உறுதிப்படுத்தி, அடுத்தடுத்து பெரிய ப்ளாக்பஸ்டர்களை வழங்கியுள்ளார்.
பிரபாஸின் முதல் நாள் கலக்சனில் தொடர்ந்து சாதனை படைக்கும் திறன் ஈடு இணையற்றது. “பாகுபலி: தி பிகினிங்” முதல் நாள் வசூல் மூலம் ₹75 கோடிகள் வசூல் சாதனை படைத்தது, அதைத் தொடர்ந்து “பாகுபலி: தி கன்க்ளூஷன்” முதல் நாள் வசூல் ₹200 கோடியுடன் வசூலில் அசத்தியது. “சாஹோ” முதல் நாள் ₹130 கோடி வசூலுடன் இந்தப் போக்கைத் தொடர்ந்தது, மேலும் “சலார்” முதல் நாள் வசூல் ₹178 கோடிகளுடன் பிரபாஸின் ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியது. இப்போது, ”கல்கி” திரைப்படம் அதன் முதல் நாள் வசூல் ₹180 கோடியுடன் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது, பிரபாஸ் இந்தியாவின் வலிமைமிகு நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நில கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் டீசர், இரண்டு பாடல்கள், ப்ரோமோ பாடல், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நிர்வாக தயாரிப்பாளர் ஜிதேந்திரன், இயக்குநர் சிம்பு தேவன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, நடிகர்கள் யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மாஸ்டர் அக்ஷத் தாஸ் , நடிகைகள் மதுமிதா, கௌரி கிஷன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இயக்குநர் சிம்பு தேவன் பேசுகையில், ”நான் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ஃபேண்டஸி, காமெடி என வித்தியாசமான வகைமையில் இருக்கும். இந்த படத்திலும் இவை இரண்டும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நல்ல வாய்ப்பை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் பிரேம்குமார் தான் வழங்கினார். அவரை முதன்முதலாக சந்தித்து அரை மணி நேரம் இந்த கதையை விவரித்தேன். இந்தக் கதை என் மனதில் நீண்ட நாளாக இருக்கும் கதை.
கொரோனா காலகட்டத்தின் போது நான் எழுதிய ‘கசடதபற’ எனும் படைப்பு வெளியானது. அந்தத் தருணத்திலேயே ‘போட்’ கதையை எழுதிக் கொண்டிருந்தேன். இந்த கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன போது, ‘இதில் இடம் பெறும் உணர்வும், வித்தியாசமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதனை என்னிடம் விவரித்தது போல் படமாக உருவாக்கி தாருங்கள்’ எனக் கேட்டுக் கொண்டார். என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் சொன்ன அந்த வார்த்தை தான் இதன் தொடக்க புள்ளி.
இந்தப் படத்தில் நானும் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறேன். இந்த கதைக்கு யார் நாயகன் என தேடும்போது நான் ஏற்கனவே யோகி பாபுவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தேன். அவரை ஒரு முறை மீண்டும் சந்தித்து இக்கதையை விவரித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. ‘இதில் நான் நடிக்கிறேன்’ என்றார். அதன் பிறகு அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்றன.
யோகி பாபுவை தொடர்ந்து எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த் ஆகியோர் ஒப்பந்தமானார்கள். கௌரி கிஷன் – இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு சாம்ஸ், மதுமிதா, ஷா ரா, அக்ஷத் ஆகியோரும், ஜெஸ்ஸி என்ற வெளிநாட்டு நடிகரும் நடிக்க ஒப்பந்தமானார்கள். அதன் பிறகு பாட்டி கேரக்டரில் குலப்புளி லீலா நடித்தார்கள். இந்த வயதிலும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினார். இப்படி திறமையான கலைஞர்கள் ஒரு பக்கம் ஒன்றிணைந்தார்கள்.
இவர்களுக்கு நிகராக என்னுடைய இனிய நண்பர் எஸ். ஆர். கதிர் மூலம் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் அறிமுகமாகி, எங்களுடன் இணைந்தார். இந்தத் திரைப்படத்தை பொருத்தவரை இசையும் , ஒளிப்பதிவும் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் கடல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அனைவரையும் போல நானும் கடல் என்றால் அதன் கரையில் நின்று பாதத்தை நனைத்துக் கொண்டும், உற்சாகம் மிகுதியானால் கூடுதலாக பத்து அடி உள்ளே சென்று நீராடவும் மட்டும் தான் தெரியும். அதனால் இந்த படத்தில் என்ன கஷ்டங்கள் வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே என்னுடைய குழு வலிமையானதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.
மாதேஷிடம் முதன்முறையாக சந்தித்து உரையாடிய போது, ‘இதில் நாம் ஏராளமான தடைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்’ என்று சொன்னேன். அந்தத் தருணத்தில் நான் எந்த படப்பிடிப்பு தளத்திற்கும் சென்று பார்வையிட்டு தேர்வு செய்யவில்லை. அலுவலகத்தில் அமர்ந்து கதையை மட்டும் ரசித்து ரசித்து எழுதினேன்.
கதை எழுதுவது எளிது. அதனை செயல்படுத்தும் போதும் நடைமுறைப்படுத்தும் போதும் தான் அதன் கடினம் தெரியும். எழுதிய கதையை காட்சிப்படுத்துவதற்காக குழுவாக நிறைய மெனக்கடல் இருந்தது. இது கடினம் என்று தெரியும். இருந்தாலும் விரிவாக இதைப்பற்றி சிந்திக்கவில்லை.
இந்தப் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றிய சந்தானம் இன்று நம்மிடம் இல்லை. மறைந்துவிட்டார். இருந்தாலும் அவர்தான் இந்த கதைக்கான காட்சிப்படுத்துதலின் அடித்தளத்தை உருவாக்கினார்.
படத்தொகுப்பு பணிகளை தினேஷ் பொன்ராஜ் கவனித்துக் கொண்டார். இப்படி ஒரு திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் குழு எனக்கு பக்க பலமாக இருந்து செயல்பட்டனர்.
கதைப்படி போட் மூன்று நாள் கடலுக்குள் இருக்கும். இதனால் நடிகர்களுக்கு உடை பற்றிய கவலை இல்லை. அனைவருக்கும் ஒரே உடை தான். ஆனாலும் படப்பிடிப்பின் போது நடிகர்கள் அணிந்திருந்த ஆடை பாழானது. இந்த விஷயத்தில் நட்சத்திரங்கள் கஷ்டப்பட்டனர்.
இந்தப் படத்தின் திரைக்கதைக்கு 1943ம் ஆண்டு காலகட்டத்திய பின்னணியை அமைத்திருந்தோம். ஏனெனில் பொதுவாகவே வரலாற்றில் நம் விஷயங்கள் மறைக்கப்படுகிறது என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது. சுதந்திர போராட்டத்தை பொறுத்தவரை மும்பையையும், டெல்லியையும் முதன்மைப்படுத்தும் அளவிற்கு சென்னையையும், கொல்கத்தாவையும் கண்டு கொள்வதில்லை. ஆனாலும் பரவாயில்லை, இது தொடர்பாக நம் வரலாறு குறித்து ஆய்வு செய்ய தொடங்கினேன். குறிப்பாக இரண்டாம் உலக போர்.
1943ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் குறித்த விவரங்களையும், ஆவணங்களையும் பார்வையிட தொடங்கினேன். இதில் திரைப்படங்களையும் இணைத்துக் கொண்டேன். டொரண்டீனோவின் ஆங்கில திரைப்படத்திலிருந்து பல திரைப்படங்கள் வரை இரண்டாம் உலகப்போர் குறித்த குறிப்புகளில் எதிலும் இந்தியர்கள் இடம்பெறவில்லை. ஆனால் சரித்திரத்தின்படி இரண்டாம் உலகப்போரில் 25 லட்சம் இந்தியர்கள் இறந்திருக்கிறார்கள். இதுதான் எனக்கு கிடைத்த முதல் தகவல். இதிலிருந்து உந்துதலை பெற்று இரண்டாம் உலக போர் பற்றிய ஒரு கதை கருவினை உருவாக்கி, அதனை படைப்பாக்க வேண்டும் என திட்டமிட்டேன்.
அந்த காலகட்டத்தில் சென்னை மீது ஜப்பான் குண்டு வீச தயாராக இருந்திருக்கிறது. இதற்கான எச்சரிக்கை வெளியாகி ஆறு மாத காலம் வரை மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக லண்டனில் உள்ள என்னுடைய நண்பர் ஸ்ரீ கணேஷ் மற்றும் பெங்களூரூவில் உள்ள நண்பர் ஜெயராஜ் ஆகியோருடன் விவாதிக்கத் தொடங்கி, தகவல்களை சேகரிக்கத் தொடங்கினோம்.
அந்தத் தருணத்தில் சென்னையிலிருந்து ஐந்து லட்சம் மக்கள் வெளியேறி இருக்கிறார்கள். சென்னையிலிருந்து எழுபது சத மக்கள் வெளியேறி விட்டார்கள். மீதமிருந்த மக்கள் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி பதுங்கு குழிகளில் பதுங்கியபடி வாழ பழகியிருந்தார்கள். இது தொடர்பாக மக்களுக்கு போலீசார் பயிற்சி அளித்து இருந்தனர். எந்த அரசு அலுவலகமும் செயல்படவில்லை. உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் இவை அனைத்தும் ஒரு பொது இடத்தில் வைத்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்கள்.
இந்த தகவல்களை எல்லாம் சேகரித்து, விவாதித்து அதன் பிறகு இது தொடர்பாக படைப்பை உருவாக்கலாம் என திட்டமிட்டோம். அந்த காலகட்டத்தில் துடுப்பு படகு தான் இருந்தது. 1980களுக்கு முன்னர் வரை துடுப்பு படகைத் தான் மீனவர்கள் பயன்படுத்தினார்கள்.
துடுப்பு படகை உருவாக்குவதற்கு கலை இயக்குநர் சந்தானம் கேரளா, ராமேஸ்வரம் என பல இடங்களுக்கு அலைந்து திரிந்து படத்தில் இடம்பெற்ற துடுப்பு படகை வடிவமைத்தார்.
இந்தக் கதையை எழுதும் போது நன்றாக இருந்தது. ஒரு படகில் பத்து பேர் அமர்ந்திருக்கிறார்கள் என எழுதினேன். ஆனால் இதனை படமாக்கும் போது என்னைவிட நடிகர்கள் சிரமப்பட்டார்கள். நாங்கள் வடிவமைத்த ‘போட்’டில் நடிகர்கள் அமர்ந்து விடுவார்கள். ஆனால் அவர்களால் நகரவோ.. அசையவோ இயலாது. அந்த அளவிற்கு நெருக்கடியாக இருந்தது.
அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தை தேடி தமிழக கடற்கரையோரம் முழுவதும் பயணித்தோம். இறுதியாக திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள உவரியை தேர்ந்தெடுத்தோம். இங்குதான் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கினோம்.
அடர்ந்த வனப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம், உயர்ந்த மலைப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். இங்கெல்லாம் கடினம் இருந்தாலும், பிறகு பழகிவிடும். ஆனால் கடல் என்பது ஒவ்வொரு நிமிடமும் புதிராக இருந்தது. எதையுமே தீர்மானிக்க இயலாது. முதலில் எங்களுக்கு எதுவும் புரியவில்லை.
மாதேஷ் ஒரு காட்சியை படமாக்க தொடங்குவார். அதை காட்சிப்படுத்துவதற்குள் கடல் அலையின் காரணமாக நட்சத்திரங்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் நிறைவு செய்ய இயலாது. எங்களுக்கும், கடலுக்கும் இடையேயான ஒரு ரிதம் கிடைப்பதற்கு நான்கு நாட்கள் ஆனது.
நடிகர்களுக்கு நீச்சல் தெரியாது. தொழில்நுட்ப குழுவினர்களில் பலருக்கும் நீச்சல் தெரியாது. அதனால் அந்த மீனவ கிராமத்தில் உள்ள இளைஞர்களை எங்களுக்கு உதவியாக அமர்த்திக் கொண்டோம். அவர்கள் எங்களுக்கு உதவி செய்வதற்காக தொடர்ச்சியாக தண்ணீரில் இருந்ததால் அவர்களின் கை கால்கள் எல்லாம் ஊதி வெளுத்து விட்டன. ஏராளமான தருணங்களில் படப்பிடிப்பிற்கான உபகரணங்கள் வீணாகி இருக்கின்றன. இப்படி தொழில்நுட்ப ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டோம்.
ஒரு அலை வந்தால் எங்களுடைய எல்லா உழைப்பும் வீணாகிவிடும். ஒரு காட்சியை நிறைவு செய்வதற்குள் சூரிய ஒளியில் நிறைய மாறுபாடு ஏற்படும்.
நடிகர்களுக்கு இது மிகப்பெரும் சவாலாக இருந்தது. எனக்கு கடலுக்குள் இறங்கினாலே தலை சுற்றி விடும். ஆனால் நடிகர்கள் இவற்றையெல்லாம் கடந்து, படகில் அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த படம் கடின உழைப்பால் உருவாகி இருக்கிறது. நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த குழுவினரும் வியர்வை சிந்தி உழைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பெரிய அனுபவமாக இருந்தது. ஏனெனில் என்னைப் பொருத்தவரை கடல் என்பதை தனி உயிரினமாகத் தான் பார்க்கிறேன். சில நேரங்களில் கோபமாக இருக்கும். சில நேரங்களில் அமைதியாக இருக்கும். கடலின் வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். காலையில் தொடங்கி மாலைக்குள் இருபது வண்ணங்களை காணலாம். நாங்கள் எதை எல்லாம் சந்தித்தோமோ எங்களது அனுபவம் என்னவாக இருந்ததோ.. அவற்றை எல்லாம் காட்சிப்படுத்தி இருக்கிறோம். அதனால் இந்த திரைப்படம் சுவாரசியமாக இருக்கும். அனைத்து வகையிலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.
நடுக் கடலுக்கு சென்று படம் எடுத்தால் யார் வேண்டுமானாலும் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். நாங்கள் மட்டும்தான் கஷ்டப்பட்டு படமாக்கினோம் என்று சொல்ல வரவில்லை. கடல் என்று சென்றாலே கஷ்டம் தான்.
நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உருவாக்கியது ஒரு பாதி தான். மீதி பாதியை சென்னையில் ஒரு அரங்கத்தில் அமர்ந்து இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கினார். ஜிப்ரானுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். படத்தை பார்ப்பதற்கு முன் அதைப்பற்றி அவர் பேசியதற்கும் படத்தை பார்த்த பிறகு கதையை உள்வாங்கி அவர் பணியாற்றிய விதமும் வித்தியாசமாக இருந்தது. கதைகளை அவர் உள்வாங்கி இசை மூலமாக வெளிப்படுத்தும் போது சிறப்பாக இருக்கும். ஒரு வகையில் பார்க்கும் போது, இது சிங்கிள் லொகேஷனில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும். அதை உடைத்து இசை வடிவில் ஒரு கதையை சொல்லி ரசிகர்களை அவர் வழி நடத்தும் விதம் பிரமிக்க வைத்தது. உண்மையிலேயே இந்த படத்தில் அவருடைய பங்களிப்பு சிறப்பானது. ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கடும் உழைப்பு பாராட்டுக்குரியது. படத்திற்கு வண்ணக் கலவையை சீராக்கும் பணியை மேற்கொண்ட கலரிஸ்ட் பாலாஜியின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. இவர் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கதையை செழுமை படுத்தினார். சுரேன் மற்றும் அழகியகூத்தன் ஆகிய இரண்டு தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து ஒலி வடிவமைப்பில் சிறப்பாக பணியாற்றினார்கள். என்னுடைய குழுவின் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் அளித்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, யோகி பாபு நடிக்க ஒப்புக்கொண்டு, அவருடன் இத்தனை நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து பணியாற்றி நல்லதொரு படைப்பாக ‘போட்’டை உருவாக்கி இருக்கிறோம். நிச்சயமாக இந்த திரைப்படத்தை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கும் போது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறோம். எனக்கும், என்னுடைய குழுவினருக்கும் ஆதரவு தாருங்கள்,” என்றார்.
நிர்வாக தயாரிப்பாளர் ஜிதேந்திரன் பேசுகையில், ”போட் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. இயக்குநர் சிம்பு தேவன் அற்புதமாக இயக்கி இருக்கிறார். ஜிப்ரானின் இசையில் படம் நேர்த்தியாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் , பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் சிம்பு தேவன் உள்ளிட்ட அனைவருக்கும் தயாரிப்பாளர் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் இரண்டாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது திரையரங்கிற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், ”சிம்பு தேவனின் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருக்கிறேன். இதில் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தில் நடிக்கும் போது கஷ்டப்பட்டேன். இந்த படத்திலும் நடிக்கும் போது கஷ்டப்பட்டேன். அந்தப் படத்தில் குதிரை என்றால் இந்த படத்தில் போட்.
தம்பி சிம்பு தேவன் சொன்னது போல் கடலை கணிக்க முடியவில்லை. திடீரென்று தண்ணீர் உள்வாங்குகிறது. திடீரென்று தண்ணீர் அதிகரிக்கிறது. திடீரென்று அலை அடிக்கிறது. போட்டில் அமர்ந்து நடிக்கும் போது முதுகு வலியும் ஏற்பட்டது.
சிம்பு தேவன் பேசும் போது, ‘எழுதுவது எளிதாக இருந்தது’ எனக் குறிப்பிட்டார். ஆனால் இப்படி எழுத வேண்டும் என்று மனதிற்குள் தோன்ற வேண்டும் அல்லவா, அது கடினம் தானே. கற்பனையில் உதித்ததை எழுதி, அதற்காக படப்பிடிப்பு தளத்தை தேடி பயணித்து தேர்வு செய்து அதில் படபிடிப்பு நடத்தி நாங்கள் கொடுக்கும் தொல்லைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு படமாக்கினார். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் இன்பச் சுற்றுலா சென்றது போல் தான் இருந்தது. என்னுடன் நடித்த சக நடிகர்கள் அனைவரும் அதே போட்டில் தான் இருக்க வேண்டும். யாரும் எங்கும் செல்ல முடியாது.
இந்தப் படத்தில் அவர் எனக்கு கொடுத்த வேடத்தில் நடிக்கும் போது, நான் யாரை குருவாக மனதிற்குள் நினைத்திருக்கிறேனோ.. அவருடைய சீடனாகவே நடிக்க கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது என்ன கதாபாத்திரம் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நான் ரசித்து ரசித்து செய்து கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று,” என்றார்.
நாயகி கௌரி கிஷன் பேசுகையில், ”நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற வளரும் கலைஞர்களின் கனவாக இருக்கும். இந்தப் படத்தில் நடித்ததை பெருமிதமாக கருதுகிறேன். இந்தப் படத்தில் நடிக்கும் போது கஷ்டங்களும் சவால்களும் இருந்தன. இருந்தாலும் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டே படத்தின் பணிகளை நிறைவு செய்து இருக்கிறோம். இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருந்தோம்.
படத்தின் மேக்கிங் வீடியோவை பார்க்கும் போது அந்த தருணங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் சிம்பு தேவனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் லட்சுமி என்ற இளம் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தை ஏற்று நடிக்க முடியும் என்று என் மீது நம்பிக்கை வைத்தது பெரிய விஷயம். நான் தமிழ் பெண் அல்ல. கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்த பெண். அதனால் ஓரளவிற்கு தான் தமிழ் பேசுவேன். இந்தப் படத்தில் செந்தமிழை பார்ப்பனர்களின் பேச்சு மொழியுடன் பேசி இருக்கிறேன். இதனை பேசும் போது எனக்குள் தயக்கம் இருந்தது. இருந்தாலும் இயக்குநர் அதனை உடைத்து உன்னால் முடியும் என்று நம்பிக்கை அளித்தார்.
படப்பிடிப்பு நடைபெற்ற படகுக்குள் நான் பாதுகாப்பாக இருந்தேன். படத்தில் நடித்திருக்கும் சக கலைஞர்களுடன் இதற்கு முன் நான் பணியாற்றியதில்லை. இருந்தாலும் அவர்களுடைய எனர்ஜி, மேஜிக்கை நிகழ்த்தியது. இந்தப் படத்தின் மூலம் மதுமிதா எனக்கு சொந்த சகோதரி போல் ஆகிவிட்டார்.
படப்பிடிப்புக்காக படகிற்குள் அமர்ந்து விட்டால் அவ்வளவுதான். அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவு என்று சொன்ன பிறகுதான் படகிலிருந்து இறங்கி கரைக்கு வருவோம். அதுவரை எங்களுடைய மேக்கப்பை சீராக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்காது. என்னைப் பொருத்தவரை ஒரு நடிகைக்கு அழகான தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் தோற்றத்தை விட ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலம் நடிப்பை வெளிப்படுத்துவது தான் சிறந்தது என்ற எண்ணம் உதித்தது. இந்த ஒரு விஷயத்தை இந்த படத்தில் கற்றுக் கொண்டேன்.
மாலி & மான்வி பட தயாரிப்பு நிறுவனத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். அவர்கள் தயாரிப்பில் நான் நடித்த முதல் படமான ‘அடியே’ திரைப்படமும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் வெளியானது. அந்த வகையில் இந்தப் பட நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்திலும் பாடகியாக தான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் ஜிப்ரானின் இசை அற்புதமாக இருக்கிறது. நானும் அவரின் தீவிர ரசிகை. இந்தப் படத்தில் கானா பாடல் கலந்த ஒரு நாட்டுப்புற பாட்டு இருக்கிறது. அந்த பாடல் காட்சியை நான் நன்றாக ரசித்து அனுபவித்து நடித்தேன்.
இந்தப் படத்தில் நடித்த ஜெஸ்ஸி ஒரு ஆஸ்திரேலிய நடிகர். எனக்கு கிடைத்த சிறந்த நண்பர். படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு சில விஷயங்களை மொழிபெயர்ப்பதில் உதவியிருக்கிறேன்.
இந்தப் படத்தில் என்னை தவிர்த்து என்னுடன் நடித்தவர்கள் அனைவரும் நகைச்சுவை கலைஞர்கள். அதனால் படப்பிடிப்பு தருணத்தின் போது அனைவரும் பேசி காட்சிகளை மேம்படுத்துவார்கள். அதை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன். எனக்கு அவர்களைப் போல் உடனடியாக காமெடியாக பேச முடியாது, பேசவும் தெரியாது. இது தொடர்பாக இயக்குநரிடம் பேசும் போது, அவர் ‘லட்சுமி என்கிற கதாபாத்திரம் ரசிகர்களிடம் நிறைய பேசும்’ என்றார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை பொருத்தவரை எனக்கு ஒரு பயிற்சி பட்டறை போல் தான். தினமும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொண்டே இருந்தேன்.
இந்தத் திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் போது பிரமிப்பை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு விஷுவல் ட்ரீட் இருக்கிறது. கடல் பேரழகு. அதனைக் காண ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள்,” என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், ”சிம்பு தேவனுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது. ’24ம் புலிகேசி’ படத்தில் இணைந்தோம். அதற்காக விவாதித்து பாடல்களையும் உருவாக்கினோம். அவருடன் பணிபுரிந்த அனுபவம் இனிமையாக இருந்தது. அதன் பிறகு அவருடன் ஒரு குறும்படத்தில் இணைந்தேன். அதன் பிறகு இந்தப் படத்தின் கதையை விவரித்தார். கேட்கும்போதே எனக்கு ஆவலாக இருந்தது. முழுவதும் கடல் தானா..! என கேட்டேன். அவர் ஆமாம் என்றார். அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் கடலுக்குள் சென்று தான் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார். ஆனால் அதன் பின்னணியில் இவ்வளவு கடினமான உழைப்பு இருக்கும் என்று எனக்குத் தெரியாது.
பாடலை உருவாக்கும்போது அவருக்குள் எப்போதும் இருக்கும் கவிதைத்தனம் எட்டிப் பார்க்கும். பார்த்திபன் சார் ஒரு விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது போல் சிம்பு தேவன் ஒரு விஷயத்தை வித்தியாசமான கோணங்களில் பார்ப்பார். முதலில் கர்நாடக இசை பாணியில் ஒரு பாடல் என்றார். உடனே நல்லதொரு ராகத்தின் பின்னணியில் நேர்த்தியாக உருவாக்கலாம் என மனதிற்குள் நினைத்தேன். ஆனால் பாடல் வரிகள் சென்னை மக்களின் பேச்சு மொழியில் இருக்க வேண்டும் என்றார். அப்படித்தான் ‘சோக்கா..’ எனும் பாடல் உருவானது.
அடுத்த பாடலை உருவாக்கலாம் என பேச தொடங்கிய போது.. சென்னையில் இசை மொழியான கானா பாடலை உருவாக்குவோம் என்றார். ஆனால் இந்தப் பாடல் கர்நாடக இசையில் பயன்படுத்தும் ‘சரிகம’ என்ற சொல்லாடலை பயன்படுத்த வேண்டும் என்றார். சிம்பு தேவனின் இந்த முரண்பாட்டை ரசித்தேன். இது சவாலாகவும் இருந்தது. ஏனெனில் இந்தப் பாடலை ‘பத்ம பூஷன்’ சுதா ரகுநாதன் பாடினார்கள். முதலில் அவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறிய பிறகு அவர்கள் பாட சம்மதிப்பார்களா என்ற தயக்கம் எங்களுக்குள் இருந்தது. ஆனால் பாடலைக் கேட்டுவிட்டு, இந்த பாடல் ராகத்தில் அழகாக அமைந்திருக்கிறது, நான் பாடுகிறேன் என்றார். அப்போதுதான் எங்களுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது.
இரண்டாவதாக கானா பாடல். கானா என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது இசையமைப்பாளர் தேவா தான். அவரை தொடர்பு கொண்டு விவரத்தை சொன்ன போது, அவரும் பாடலை கேட்டு விட்டு, மகிழ்ச்சியுடன் பாட ஒப்புக்கொண்டார்.
இந்த ரெண்டு பாடலில் பணியாற்றிய அனுபவம் தனித்துவமாக இருந்தது. சுதா ரகுநாதனின் பாடலுக்கு நடிகை கௌரி கிஷன் பொருத்தமாக இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் எங்களை வியக்க வைத்தார்.
பின்னணி இசைக்காக படத்தின் காட்சிகள் என்னிடம் வந்தன. இதில் எதிர்பாராத விதமாக மிகப்பெரும் சவால் ஒன்று இருந்தது. படத்தின் தொடக்கத்தில் பத்து நிமிடம் வரை காட்சிகள் நிலத்தில் நடைபெறும். அதன் பிறகு கடலுக்குள் சென்று விடும். பிறகு கடலிலிருந்து கடைசி பத்து நிமிடத்தில் மீண்டும் கரைக்கு திரும்புவார்கள். மீதமுள்ள பெரும்பாலான காட்சிகள் கடலில் தான் இருக்கும். அதை பார்க்கும் போது எங்கே முற்றுப்புள்ளி வைப்பது, எங்கே தொடர் புள்ளி வைப்பது என்று தெரியாமல், சிம்பு தேவனை தொடர்பு கொண்டேன். பொதுவாக மாற்றங்கள் இசையமைப்பாளருக்கு உதவி புரியும். ஏதேனும் ஒரு இடையூறு இருக்கும் அல்லது பின்னணியில் மாற்றம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் எங்கு தொடங்குவது எங்கு முடிப்பது என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் படத்தில் உணர்வு என்பது தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும். அதிலும் அதில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் திறமையாக நடித்திருப்பார்கள். ஒருவருடைய நடிப்பிலிருந்து மற்றவர்கள் அதை புரிந்து கொண்டு பேசுவார்கள். அதை துல்லியமாக உணர்ந்து கொண்டு இதற்கு பின்னணி இசை அமைக்க வேண்டியதாக இருந்தது.
இந்த படத்தில் இயக்குநர் சிம்பு தேவனை ஒரு தயாரிப்பாளராகவும் பார்த்திருக்கிறேன். கடும் போராட்டத்திற்கு இடையே அனைவரையும் ஒருங்கிணைத்து தன்னுடைய கற்பனையை சாத்தியமாக்கி இருக்கிறார். அவரிடம் இருந்த பாசிட்டிவிட்டி பாராட்டத்தக்கது.
திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்க வேண்டிய ஒரு படம் இது. அதனால் அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ரசித்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் யோகி பாபு பேசுகையில், “போட் திரைப்படம் இந்த அளவுக்கு சிறப்பாக உருவாகி உள்ளதற்கு இயக்குநர் சிம்பு தேவன் தான் காரணம், அவருக்கு எனது நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர், என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. கடின உழைப்போடு இப்படம் உருவாகியுள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் மேலான ஆதரவை ‘போட்’ திரைப்படத்திற்கு வழங்க வேண்டும். மிக்க நன்றி,” என்று கூறினார்.
Capital to accelerate MATTER’s innovations in electric motorbikes and scaling in manufacturing, supply chain, marketing and retail. Chennai 29 July 2024: MATTER Group, an innovative EV tech and energy storage firm committed to propelling India towards energy independence, announced today that it had secured a first tranche of $35 million in the current investment round. The round is led by Helena, a US-based global problem-solving organization, which invested through its venture capital arm. Other notable investors in this round include, Capital 2B, Japan Airlines & Translink Innovation Fund, Saad Bahwan Investment Management Company (SB Invest), other Institutional investors and Family Offices. This global collaboration between forward-thinking partners marks a significant milestone in the pursuit of a mobility transformation that is solving environmental challenges through technological innovation.
Accentuating MATTER’s agile approach towards innovation in electric vehicles, the funding by prominent, impact-oriented institutions validates MATTER’s continued commitment to its two-pronged approach – empowering mobility and fostering a cleaner future. The capital will accelerate MATTER’s efforts to scale manufacturing, supply chain, marketing and retail to meet the growing demand for sustainable, high-performance mobility solutions.
Commenting on the occasion, Mr. Mohal Lalbhai, Founder & CEO of MATTER Group, said, “We at MATTER welcome Helena and notable investors – including Capital 2B, Japan Airlines & Translink Innovation fund, SB Invest, other Institutional investors and family offices – with much excitement on this fascinating journey. We are dedicated to creating accessible, reliable, and high-performance products driven by our innovative technology. Leading this complex mobility transformation are over 600+ MATTER innovators, who keep riders at the forefront of our efforts. With MATTER electric motorbikes, we are ready to embrace a new reality and rewrite the rules of mobility by transforming the world’s largest two-wheeler market”.
Mr. Suprotik Basu, Managing Partner of Helena, added, “We believe it is an inevitability that transportation in this market will electrify, and India is the most exciting place in the world for that transition to materialize. The question is which team will be nimble, innovative and hardworking enough to seize this moment of transition. The MATTER team has impressed us immensely with their approach towards value driven, high performance technology products. It has been wonderful to see the initial positive consumer traction, and strong progress from the company thus far. We are excited to deeply partner with MATTER to reshape the electric vehicle landscape for India and for other emerging markets to address our shared global climate challenges.”
Mr. Vibhore Sharma, Partner Capital 2B added, “We are thrilled to be a part of the growth trajectory of MATTER Group and their vision of empowering mobility through breakthrough technology, prioritizing performance, reliability, safety, and security as core principles. The team at MATTER has successfully developed a unique blend of great performance and best value that is poised to transform the entire two-wheeler industry with their electric motorbikes.”
“The Japan Airlines & Translink Innovation Fund is dedicated to fostering sustainable and innovative businesses through pioneering use of cutting-edge technologies and business collaborations in mobility, digital, ESG-related, and other fields. We are pleased to collaborate with MATTER to explore the potential of MaaS (Mobility-as-a-Service) by adding electric motorcycles and energy storage technology to JAL’s new challenge through our investment in MATTER Group,” said Takao Suzuki /Executive Officer, Senior Vice President – Innovation at Japan Airlines
Sheikh Mohammed Saad Bahwan, MD at SB Invest and Director of OTE Group said, “At SB Invest, we believe in supporting transformative technologies that have the potential to make a global impact. MATTER Group’s vision and technological prowess makes them a standout player in the energy domain. We are proud to be part of their journey towards energy independence. Our commitment to empowering every individual through efficient mobility gets a clear direction through this association.”
As a vertically integrated company, MATTER has meticulously developed its in-house, hyper-scalable technology stack, leveraging the power of data, software and machine intelligence to create India’s first 4-speed Hyper-shift geared electric motorbike, AERA. The proprietary 5 KWh liquid-cooled battery and powertrain offer great performance and longevity. The product empowers riders to charge anywhere by delivering over 125 kms range per charge, with a 5-amp onboard charging system. The Internet-enabled navigation, music, calls, and a 7″ touchscreen provide a new experience at the user’s fingertips. It’s truly creating a future that is beautiful and cleaner. MATTER secured 40,000 pre-bookings for its electric motorbike AERA, which is set to commence deliveries this festive season. MATTER’s consumer front is led by more than 100 dealer partners who will be creating a first-of-its-kind retail experience. reinforced by the most innovative suppliers. This partner ecosystem is enthusiastic and geared up to create a better future for the planet and people.
MATTER is revolutionizing mobility in India by offering innovative alternatives to traditional two-wheelers, which currently consume 62% of the country’s petrol and contribute significantly to environmental pollution
through tailpipe emissions. MATTER’s advanced tech stack is poised to drive a fundamental shift in transportation, catalyzing a cleaner, more sustainable global future that begins in India.
A 2-year-old child presented to the Kauvery Institute of Brain and Spine, Kauvery Hospital, Radial Road, with a progressively increasing hump on her upper back. She had also started developing weakness of the legs especially after playing for some time. The child had a history of tuberculosis infection affecting her spine when she was 6 months old.
After evaluating the child, Dr Krish Sridhar, Group Mentor, Neurosciences & Director, Institute of Brain & Spine, Neurosurgery, Kauvery Hospital, Radial Road, and his spine team found that the problem was due to very bad curvature deformity (Kyphosis), and compression of the spinal cord caused due to near collapse of the spinal column in the upper thoracic region. A multi-disciplinary team meeting was held to decide on the best course of action for this complex case, following which Surgical Correction of the deformity was advised for the child.
An eight-hour complex spinal procedure through the chest wall was performed on the child by a team of 4 surgeons led by Dr K Sridhar. The collapsed part of the spine was removed, and the spine reconstructed after reducing the curve. Surgery was done under continuous neuro-monitoring.
Dr Sridhar said, “Major surgery in children is relatively difficult compared to that in adults. The team performing these complex spine procedures not only requires experience, but also a thorough understanding of the developmental changes related to child growth.”
“Spinal surgery is no longer something that one needs to be scared about. The technological advances in anaesthesia, monitoring, spinal implants and other equipment⸻like high-speed drill and the operating microscope⸻have allowed precision surgery, especially in complex cases, with positive outcomes.” he stated.
The child was discharged after a week in the hospital, and is back to running around and playing. The parents and family are happy that they have been able to get a Complex Spinal Deformity Corrective Surgery done.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் ரியோராஜ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ- மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, புதுமுக இயக்குனர் “பிளாக்ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது.
திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லும், ரொமான்ஸ் காமெடி ஜானரில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது.
ரியோ- மாளவிகா மனோஜ் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க பிளாக்ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், Stills பாண்டியன், ஜென்சன் திவாகர் , ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு , சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு , சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு , என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணி இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது. S2 மீடியா சதீஷ்குமார் இப்படத்தின் மக்கள் தொடர்பு பணிகளைக் கவனிக்கிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கிய படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்து, அசத்தியுள்ளது படக்குழு.
படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை துவக்கியுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.
நடிகர்கள் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான திரில்லர் டிராமா “மெட்ராஸ்காரன்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!
SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
தயாரிப்பாளர் B.ஜெகதீஸ் பேசியதாவது… நம் மெட்ராஸின் அடையாளம் எல்லா ஊர்க்காரரும் இங்கு இருப்போம், எல்லா ஊர்க்காரரும் வேலை பார்ப்போம், அதே போல் இந்த மெட்ராஸ்காரனில் எல்லாமே இருக்கிறது. எந்த ஒரு தயாரிப்பாளரும் முழு கதை கேட்டுத் தான் ஒகே செய்வார்கள், ஆனால் நான் பாதி கதை கேட்ட போதே, படத்தை ஆரம்பிக்க சொல்லிவிட்டேன். இயக்குநர் மீது இருந்த நம்பிக்கை தான் காரணம். படம் பார்த்து விட்டேன் திருப்தியாக இருக்கிறது. ஷேன் அவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்துள்ளார். ஷேன் நிகாம் படப்பிடிப்பிற்கு எப்போதும் சீக்கிரம் வந்து விடுவார், இப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார், அவருக்குத் தமிழில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. கலை பிரதர் மிக உரிமையாகப் பழகுவார். மெட்ராஸ் அன்பு பாத்திரத்திற்குப் பிறகு, இந்தப்படத்தில் துரை சிங்கமாகக் கலக்குவார். நிஹாரிகா மிக அழகாக, அற்புதமாக நடித்துள்ளார். நான் தயாரிப்பாளராக இருக்க ஐஸ்வர்யாவும் ஒரு காரணம், அவர் கதாபாத்திரம் நன்றாக வந்துள்ளது. சாம் சிஎஸ் ஒரு மியூசிக் டாக்டர், படத்தை எப்படி கொடுத்தாலும் சரியாக்கி விடுவார். கேமராமேனும் நானும் எப்போதும் சாப்பாடு பற்றித் தான் பேசுவோம் அவ்வளவு நெருக்கம். எடிட்டர் சின்னப் பையன் தான் ஆனால் கலக்கிவிட்டார். படம் மிக அருமையாக வந்துள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது… என் புரோடியூசர் முதலாளி ஜெகதீஸ், இந்தப்படம் ஆரம்பமாக, காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தா இருவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து கதையை முழுதாகக் கூட கேட்காமல் தயாரித்தார். இந்தப்படம் பற்றி அனைவரும் சொல்லிவிட்டனர். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.
நடிகர் ஷேன் நிகம் பேசியதாவது… அன்புள்ள மனிதர்களுக்கு வணக்கம், என்ன சொல்வதென்றே தெரியவில்லை, மனது நிறைவாக இருக்கிறது. வாலி ப்ரோ, ஜெகதீஸ் ப்ரோ இருவருக்கும் நன்றி. என் மீதே, எனக்கே சந்தேகம் இருந்தபோது, வாலியும், ஜெகதீஸும் என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தை உருவாக்கியுள்ளனர். என் பட டீசரை வெளியிட்ட நடிகர் எஸ் டி ஆருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகை நிஹாரிகா பேசியதாவது… எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. டீசர் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மிக நல்ல திறமையாளர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளனர், ஷேன் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை தந்த வாலிக்கு, என் நன்றிகள்.
நடிகர் கலையரசன் பேசியதாவது… மெட்ராஸ்காரன், என் ஊர் மெட்ராஸ் ஆனால் இந்தப்படத்தில் புதுக்கோட்டை ஆளாக நடித்துள்ளேன். ஷேன் நிகாம் மிக அருமையான நடிகன், அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. வாலி அவர் முன்பு செய்த படத்தின் டீசர் காட்டினார், மேக்கிங் பிடித்திருந்தது, படத்தின் கதையும் பிடித்தது, உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். படம் அருமையாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் முக்கியமில்லை, நல்ல படத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் மிக ஆதரவாக இருந்தார். கதையை நம்பி நல்ல படத்தை எடுத்துள்ளார். எல்லோருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது… பணம் கொடுத்துப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு தரமான படைப்பைத் தர வேண்டும். நல்ல கதை வைத்து படம் செய்யும் இயக்குநருக்குக் கதை எழுதும்போது, இந்த மாதிரி நடிகர்கள் தான் நினைவுக்கு வருவார்கள், பெரிய ஹீரோ படம் என்றால் அவருக்கு எனக் கதை மாற்றி, சீன் மாற்றி, இறுதியாக நினைத்தது வராது. இந்த மாதிரி சின்ன படத்தில் அது நிகழாது. பெரிய ஹீரோ படம் நல்லாயில்லை என்றாலும், அது வைரலாகிறது. ஆனால் சின்ன படத்திற்கு நல்லா இருந்தாலும் அது நிகழ்வதில்லை, ரசிகர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஷேன் உடன் மலையாளத்தில் வேலை பார்த்தாலும், தமிழில் வேலை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு படம் நன்றாக எடுக்கும் போது, எல்லோருடைய பங்களிப்பும் மிக நன்றாக வந்து விடும். இப்படம் மிகத் தரமான படைப்பாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். இளன் பாடல் மிக நன்றாக எழுதியுள்ளார். கல்யாணம் பற்றி மிக அருமையான பாடலாக வந்துள்ளது. இப்படத்தில் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சி, வாலி உடன் பணியாற்றியது மகிழ்ச்சி நன்றி.
இயக்குநர் இளன் பேசியதாவது… இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரும் என் ஃப்ரண்ட்ஸ். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஒரு பாடல் எழுதியுள்ளேன் உங்கள் ஆதரவைத் தாருங்கள், இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் பாண்டியன் பேசியதாவது… மெட்ராஸ்காரன் படத்தில் நான் ஒரு அப்பா கேரக்டர் செய்துள்ளேன். இயக்குநர் தான் என் ஃபெர்பார்மன்ஸ் பற்றிச் சொல்ல வேண்டும். என் மகன் இளன் இப்படத்தில் பாடல் எழுதியிருப்பது இப்போது தான் தெரியும். பாடல் அருமையாக உள்ளது. பாடல் தனியே, இசை தனியே, எனக் கேட்க இனிமையாக உள்ளது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது… தமிழ் சினிமாவில் இது எனக்கு 11 வது வருடம், பல தடைகளைத் தாண்டி எனக்கு இந்தப்படம் கிடைத்துள்ளது. பல படங்கள் நடித்துள்ளேன் ஆனால் சில படங்கள் வெளியாகவே இல்லை. வாலி மோகன் தாஸ் ஒரு முறை என்னிடம் கதை சொன்னார் , மிக அருமையாக இருந்தது, அந்தப்படம் 5 நாளில் நின்று விட்டது. மிக அருமையான படம், தயாரிப்பாளர் ஜெகதீஸ் என்னோட ஃபிரண்ட், ஃபெண்டாஸ்டிக் ஹியூமன் பீயிங், அவரிடம் எல்லாமும் சொல்வேன், வாலி பற்றிச் சொன்னேன். அப்படித்தான் இந்தப்படம் ஆரம்பித்தது. எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது. பிடிச்ச டைரக்டர், பிடிச்ச புரோடியூசர். ஒரு நல்ல படம். தமிழில் இந்தப்படம் மூலம் நான் மீண்டும் வருவேன். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் சரண் பேசியதாவது… இந்தப்படத்தின் ஒருங்கிணைப்பாகவும் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறேன். இப்படத்தில் எல்லோருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள். நான் வாலி ப்ரோ, இருவரும் ரங்கோலி படம் முடித்த பிறகு, நிறையப் பேசிக்கொண்டிருந்தோம், அவருக்குக் கல்யாணம் நடந்தது. அப்போது தான் இந்தக்கதையை எழுதினார். அப்போது இரண்டாவது பாகத்தை எப்படி முடிப்பது என விவாதித்துக் கொண்டிருந்தோம், ஆனால் தயாரிப்பாளர் இரண்டாம் பாகம் கேட்காமலே படத்தைத் தயாரிக்க ஒத்துக்கொண்டு செக் கொடுத்துவிட்டார். ஷேன் நிகம் ரங்கோலி படம் பார்த்து விட்டு இந்தப்படத்தை ஒத்துக்கொண்டார். இந்தப்படத்திற்காக அவர் கொடுத்த உழைப்பு பிரமிப்பானது. கலை பிரதர் பல வருடம் பழகியவர் போலவே, அன்பைப் பொழிவார். ஐஸ்வர்யா இந்தப்படம் ஆரம்பிக்க ஒரு காரணமாக இருந்தார். நிஹாரிகா அருமையாக நடித்துள்ளார். சாம் சிஎஸ் அவர் கையில் இந்தப்படத்தின் மூச்சு உள்ளது. படம் மிக அருமையாக வந்துள்ளது, அனைவருக்கும் நன்றி.
மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர்.
ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாகத் தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.
பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பைச் சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ், ‘சட்னி – சாம்பார்’. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சீரிஸின் முதல் இரண்டு எபிஸோடுகள், பத்திரிக்கையாளர்களுக்காகச் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இத்திரையிடலைத் தொடர்ந்து வெப் சீரிஸ் குழுவினர், பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்
வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அஸ்வின் பேசியதாவது… வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், நாங்கள் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது. பெரிய நட்சத்திரங்களை வைத்துத் தயாரித்துள்ளோம், ஹாட்ஸ்டார்க்கு எங்களது நன்றி. இயக்குநர் ராதா மோகன் மிக அற்புதமாக இயக்கியுள்ளார். இரண்டு எபிஸோட் பார்த்திருப்பீர்கள், உங்களுக்குப் பிடித்திருக்குமென நம்புகிறோம். மற்ற 4 எபிசோடுகள் உட்பட 6 எபிஸோடுகளும் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. முமுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள், அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா பேசியதாவது… இயக்குநர் ராதா மோகனின் படைப்பில், நானும் இருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமை தான். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எனது நன்றி. இந்த படைப்பில் உழைத்த அனைவருக்கும் எனது நன்றி, இந்த சீரிஸ் உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
இசையமைப்பாளர் அஜீஸ் அசோக் பேசியதாவது… இது எனக்கு மூனாவது வெப்சீரிஸ், ஹாட்ஸ்டாரில் இரண்டாவது வெப் சீரிஸ். என்னோட ஃபேவரைட் இயக்குநர் ராதா மோகன் சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. வேல்ஸ் பிலிம்ஸுக்கு நன்றி. யோகி பாபு சார், வாணி போஜன், கயல் சந்திரன் என எல்லோருமே மிக அருமையான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். உங்கள் எல்லோரையும் இந்த சீரிஸ் கவரும் என நம்புகிறேன் நன்றி.
நடிகர் இளங்கோ குமரவேல் பேசியதாவது… இயக்குநர் ராதா மோகன் திரைக்கு வந்து 20 வருடங்கள் கடந்திருக்கிறது. அவரது முதல் படத்திலும் நான் இருந்தேன், அவரது முதல் சீரிஸிலும் இருக்கிறேன், மகிழ்ச்சி. ஆர்ட் டைரக்டர் கதிர், ரைட்டர் பொன் பார்த்திபன் என, நண்பர்கள் அனைவரும் அவரோடு இத்தனை வருடம் இணைந்து, பயணித்து வருகிறோம். அன்று எப்படி எனர்ஜியோடு இயங்கினாரோ, அதே எனர்ஜியோடு இன்றும் இயங்குகிறார். நடிக்கும் போது பொறுப்பை நம்மிடம் கொடுத்துவிட்டு, வேடிக்கை மட்டுமே பார்ப்பார். நமக்கு முழு சுதந்திரம் கொடுத்து, நடிக்க வைப்பார். அவரது சிறப்பு அம்சம் அது, அவருடன் வேலை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த சீரிஸை உருவாக்க மிகுந்த ஒத்துழைப்பு தந்த, வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், ஹாட்ஸ்டாருக்கும் எனது நன்றி. இந்த சீரிஸுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் நிதின் சத்யா பேசியதாவது… வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் அவர்களுக்கு என் முதல் நன்றி, பலருக்கு வாழ்க்கை தந்திருக்கும் பிரதீப் அவர்களுக்கு நன்றி. நான் வாய்ப்பு கேட்டு ராதா மோகன் சாரிடம் சென்றேன், ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கிறது செய்கிறாயா? என்று கேட்டார், அதே கதாபாத்திரத்தைக் கொஞ்சம் டெவலப் செய்து, மிகப் பெரிய பாத்திரம் ஆக்கி, என்னை இதில் நடிக்க வைத்திருக்கிறார். சார் மிகப்பெரிய நன்றி சார். என்னுடன் நடித்த இளங்கோ குமரவேல் சார், வாணி போஜன், யோகி பாபு, சந்திரன் என எல்லோருமே மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். பிரசன்னா மிக அருமையாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார், இசையில் அஜீஸ் அசத்தி இருக்கிறார். பொன் பார்த்திபன் மிக அருமையான வசனங்கள் தந்திருக்கிறார். உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.
நடிகர் கயல் சந்திரன் பேசியதாவது… வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் அவர்களுக்கு என் நன்றிகள், இத்தனை பிரம்மாண்டமான சீரிஸ் உருவானதற்கு அவர்கள் தான் காரணம், இதற்கு ஒத்துழைத்த ஹாட்ஸ்டாருக்கு எனது நன்றிகள். இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு சீரிஸில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு எனது நன்றிகள். ராதா மோகன் சார் ஐ லவ் யூ சார், என்னை ஒரு நடிகனாக பயன்படுத்தியதற்கு நன்றி. என்னுடன் நடித்த அத்தனை பேரும் மிக அற்புதமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள், உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
நடிகை சம்யுக்தா பேசியதாவது… இம்மாதிரி மேடையில் மிகப் பெரும் ஆளுமைகளுடன் இருப்பது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெப் சீரிஸில், அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். நான் ராதா மோகன் சாரின் ரசிகை, அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட கால ஆசை. இவ்வளவு விரைவில் அது நடைபெறும் என நினைக்கவில்லை, இந்த சீரிஸில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்த சீரிஸில் பணிபுரிந்தது மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சீரிஸ் உங்கள் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தும் நன்றி.
நடிகை நந்தினி பேசியதாவது… ஹாட்ஸ்டாருக்கு என்னுடைய நன்றி, ஹாட்ஸ்டாரில் நான் செய்யும் இரண்டாவது சீரிஸ் இது. ராதா மோகன் சார் எனக்கு ஒரு மிகச் சிறந்த கதாபாத்திரம் தந்திருக்கிறார். இங்குள்ள அனைவரும் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார்கள், எல்லோரும் இனிமையாகப் பழகினார்கள். எல்லோருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு இந்த சீரிஸ் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
நடிகை மீரா கிருஷ்ணன் பேசியதாவது… வேல்ஸ் நிறுவனத்திற்கும் ஹாட்ஸ்டாருக்கும் என் முதல் நன்றி. இது நான் நடிக்கும் முதல் வெப்சீரிஸ். இந்த கதாபாத்திரத்தைத் தந்த இயக்குநர் ராதா மோகன் சாருக்கு நன்றி. கிட்டத்தட்ட அவரை நாங்கள் லவ் பண்ணவே ஆரம்பித்து விட்டோம், அவர் எப்படி வேலை வாங்குகிறார் என்றே தெரியாது, நடிகர்களை இயல்பாக வைத்து, மிக அற்புதமாக வேலை வாங்கி விடுவார். ஜாலியாக ஒரு ஃபேமிலியில் இருப்பது போலவே தான் இருந்தது. இங்குள்ள அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் என் நன்றி.
நடிகை வாணி போஜன் பேசியதாவது… ராதா மோகன் சாருடன் நான் இரண்டாவது முறையாக வேலை பார்க்கிறேன், சட்னி சாம்பார் சீரிஸ் மிக அற்புதமாக வந்துள்ளது. ராதா மோகன் சார் ஐ லவ் யூ. என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் எனது அன்புகள். இந்த சீரிஸ் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், அனைவருக்கும் என் நன்றிகள்.
ஹாட்ஸ்டார் சார்பில் பிரதீப் மில்ராய் பேசியதாவது… ஹாட்ஸ்டாரில் பதினைந்துக்கும் மேற்பட்ட சீரிஸ் தயாரித்து வருகிறோம், நிறைகுடம் எப்பொழுதும் தளும்பாது என்பது, ராதா மோகன் சாருடன் வேலை பார்க்கும் போது தான் தெரியவந்தது. ஊட்டியில் படப்பிடிப்பாகட்டும், டிஸ்கசனாகட்டும், பல ஸ்டார்களை ஒன்றிணைத்து சூட்டிங் ஆக இருக்கட்டும், எந்த ஒரு சலனமும் இல்லாமல் மிகச் சிறப்பாகப் படப்பிடிப்பை நடத்துவார். அவருக்குள் இத்தனை காமெடி இருக்கிறது என்றே தெரியாது, மிக மிக இயல்பாக இருப்பார். யோகிபாபு மிக நன்றாக நடித்திருக்கிறார், அவருக்கு இது முதல் வெப் சீரிஸ், ராதா மோகன் சாருக்கும் இது முதல் வெப் சீரிஸ், மிக அற்புதமாக வந்துள்ளது. அத்தனை நடிகர்களும் மிக அற்புதமான உழைப்பைத் தந்திருக்கிறார்கள். பிரசன்னா மிக பிஸியான ஒளிப்பதிவாளர், ஆனால் இந்த சீரிஸில் பணியாற்றித் தந்ததற்கு நன்றி. அஜீஸ் நல்ல இசையைத் தந்துள்ளார். இந்த சீரிஸில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இந்த சீரிஸை உருவாக்கித் தந்த வேல்ஸ் நிறுவனத்திற்கு என்னுடைய நன்றிகள். உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி.
கலை இயக்குநர் கதிர் பேசியதாவது… இயக்குநர் ராதா மோகனுடன் பணியாற்றுவது மிக மகிழ்ச்சியானதாக இருக்கும், அவருடன் பணியாற்றும் போது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். நான் இயக்குநர் ஹரி உடன் அடிதடி, சண்டை, ரத்தம், போன்ற காட்சிகள் என பணிபுரிந்து கொண்டிருப்பேன், ஆனால் இவருடன் வந்து பணியாற்றும் போது மனது இலகுவாகிவிடும். ஆரம்பகால படங்களிலிருந்து இவருடன் பணியாற்றி வருகிறேன். திடீரென ஒரு நாள் கூப்பிட்டு, ஒரு விமானத்தை செட் போட முடியுமா? என்று கேட்டார். உனக்கு என்ன பைத்தியமா? என்று கேட்டேன். ஆனால் கதையைச் சொல்லி, விமான செட் போடச் சொன்னார். அந்த விமான செட் போட்டது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இன்று வரை நான் பல படங்களில் வேலை பார்த்து இருக்கிறேன், ஆனால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. விமானத்தை உருவாக்கியது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த சீரிஸில் பணியாற்றியதும் நல்ல அனுபவமாக இருந்தது. இதில் உழைத்த அனைத்து கலைஞர்களும், தங்கள் முழு உழைப்பைத் தந்திருக்கிறார்கள். ராதா மோகன் முத்திரை காமெடிகள் இந்த சீரிஸில் இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் நன்றி.
எழுத்தாளர் பொன் பார்த்திபன் பேசியதாவது…. உப்புக் கருவாடு படத்தில் என்னை எழுத்தாளர் ஆக்கி அழகு பார்த்தார் ராதா மோகன் சார், இப்போது இந்த படைப்பின் மூலம் சீரிஸிற்கும் என்னைக் கூட்டி வந்துள்ளார், நன்றி சார். இந்த சீரிஸ் திரையிட்டபோது, நீங்கள் எங்கெல்லாம் சிரிக்கிறீர்கள் எனப் பதட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம், நீங்கள் சிரிக்க ஆரம்பித்தவுடன் தான் எங்களுக்குப் பயம் விலகியது. இந்த சீரிஸ் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த வேல்ஸ் நிறுவனத்திற்கும், ஹாட்ஸ்டாருக்கும் எனது நன்றிகள். எங்களுக்கு இன்னும் நிறைய ஆதரவு தந்தால், உங்களுக்கு இன்னும் நிறையப் படைப்புகளைத் தருவோம். கலை இயக்குநர் கதிர் அவர் பணிபுரியும் படங்களுக்கு, என்னையும் கூட்டிச் சென்று விடுவார். ரத்தம், வெட்டு என பணிபுரிந்து விட்டு வரும்போது ராதா மோகன் சார் கூப்பிட்டு மனதை இலகுவாக்கிவிடுவார். அவர் உன்னால் முடியும் என்று நம்பி பொறுப்பைத் தந்துவிடுவார். இந்த சீரிஸில் அனைத்து கலைஞர்களின் கெமிஸ்ட்ரியும் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் ராதா மோகன் பேசியதாவது… திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறேன் என்கிறார்கள், 20 ஆண்டுகளைக் கடந்து இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம், பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். சட்னி சாம்பார் சீரிஸ் பற்றி எல்லோரும் சொல்லி விட்டார்கள். இந்த சீரிஸில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் முதல் சீரிஸ், எங்களுக்காக அவர் மிக பிஸியான நேரத்தில் பத்து நாட்கள் கால்ஷீட் தந்தார், எல்லோரும் உங்களுக்கு பத்து நாள் கால்ஷீட் தந்தாரா? என ஆச்சரியப்பட்டார்கள். அவர் தந்த ஒத்துழைப்பிற்கு நன்றிகள். இந்த நேரத்தில் ஓடிடிக்கு என்னை அணுகிய செந்தில், கிருஷ்ணன் குட்டி, பிரதீப், ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நடிகர்கள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள், எல்லோரும் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார்கள். அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். என்னுடைய உதவி இயக்குநர் குழுவிற்கு, என்றும் நான் நன்றி சொன்னதே இல்லை, அவர்கள் இல்லாமல் நான் இல்லை, அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸ் என்னுடைய மற்ற படைப்புகள் போல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி’ என்றார்.
இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது. யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘சட்னி-சாம்பார்’ சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜீஸ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன், இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ‘சட்னி – சாம்பார்’ சீரிஸ் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் துவங்கியுள்ளது.