‘கரவளி’ (Karavali) பட வெளியீட்டுக்கு முன்பே இயக்குநர் குருதத்த கனிகா (Gurudatta Ganiga )– ராஜ் B. ஷெட்டி உடன் இணைந்து, ‘ஜுகாரி கிராஸ்’ படத்தை துவங்கியுள்ளார் !
பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் ( Poornachandra Tejaswi’s ) ‘ஜுகாரி கிராஸ்’ நாவலின் உலகில் காலடி வைக்கும் ராஜ் B. ஷெட்டி!
சமீப காலங்களில் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பிரபல இலக்கிய படைப்புகளை திரை உலகில் கொண்டு வர வெகு சிலரே துணிகிறார்கள். ஆனால் இப்போது பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் புகழ்பெற்ற நாவல் ‘ஜுகாரி கிராஸ்’ திரைப்படமாக உருவாகிறது.
தனது அடுத்தப்படமான ‘கரவளி’ மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் குருதத்த கனிகா, தற்போது ‘ஜுகாரி கிராஸ்’ எனும் பிரபல நாவலை படமாக்கும் மிக தைரியமான முயற்சியில் களமிறங்கியுள்ளார்.
முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரபல நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில், யார் ஹீரோவாக நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். டீசர் அந்த ஆவலை நிவர்த்தி செய்துள்ளது. முன்னணி நட்சத்திரமான ராஜ் B. ஷெட்டி இதில் ஹீரோவாக நடிக்கிறார்.
புதிய டீசர் மொட்டையடித்த தலை, தெறிக்கும் இரத்தம் மற்றும் சிவப்பு இரத்தினகற்களின் காட்சிகளுடன், மிக அழுத்தமான பின்னணி இசையும் கலந்து, ரசிகர்களின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் பல மடங்காக உயர்த்தியுள்ளது.
இயக்குநர் குருதத்த கனிகா மற்றும் நடிகர் ராஜ் B. ஷெட்டி முன்னதாக ‘கரவளி’ படத்தில் இணைந்திருந்தனர். இப்போது மீண்டும் ‘ஜுகாரி கிராஸ்’ மூலம் இருவரும் கைகோர்த்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது ‘கரவளி’ இன்னும் திரைக்கு வரவில்லை என்றாலும், ‘ஜுகாரி கிராஸ்’ பட வேலைகள் தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது கதாபாத்திரங்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவரான ராஜ் B. ஷெட்டி, ‘சு ஃப்ரம் சோ’படத்தில் குருஜியாகவும், ‘கரவளி’யில் காளைகளுடன் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்போது அவர் ‘ஜுகாரி கிராஸ்’ எனும் அழுத்தமான நாவலின் உலகில் நுழைகிறார். இது அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான படியாகும்.
இயக்குநர் குருதத்த கனிகாவுடன் மீண்டும் ராஜ் B. ஷெட்டி இணைந்திருப்பது, இயக்குநர் மீதான அவரது நம்பிக்கையையும் உறுதியையும் காட்டுகிறது. டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
‘கரவளி’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் இறுதிக்கட்ட பணிகளில் குருதத்த கனிகா ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில், ‘ஜுகாரி கிராஸ்’ முன் தயாரிப்பு பணிகளிலும் இணைந்துள்ளார். இந்த படத்தை அவர் தனது குருதத்த கனிகா ஃபிலிம்ஸ் (Gurudatta Ganiga Films) என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்து, இயக்குகிறார். ‘கரவளி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த அபிமன்யு சாதானந்தன் மீண்டும் ‘ஜுகாரி கிராஸ்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சச்சின் பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் பங்குபெறவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்
ஜவான், பிகில், மெர்சல் போன்ற வெற்றிப் படைப்புகளைத் தந்த ப்ளாக்பஸ்டர் இயக்குநர் அட்லீ, தற்போது மிகப்பெரிய விளம்பர காம்பெயினாக உருவான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” என்ற விளம்பரபடத்தின் மூலம் தனது விளம்பர அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளார்.
இந்த விளம்பரத்தில் சிங்ஸ் மாஸ்காட்டாக தோன்றியிருக்கும் ரன்வீர் சிங், முன்னணி நட்சத்திரங்களான ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் அட்லியின் பிரத்தியேகமான ஸ்டைலில் பிரமாண்டம், இதுவரை காணாத விஷுவல் எபெக்ட்ஸ், அதிரடி காட்சிகள் என அனைத்தும் கலந்த இந்தப் படைப்பை, ஒரு சிறந்த குழு இணைந்து, இணையத்ததையே வைரலாக கலக்கும் அளவுக்கு உருவாக்கியுள்ளது!
இது குறித்து இயக்குநர் அட்லீ கூறுகையில்..,
“அன்பு தான் என் படைப்புகளின் அடிநாதம். சிங்ஸ் இந்தியாவில் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு விசயத்தை உருவாக்க விரும்பவில்லை, இந்திய மக்கள் பார்த்தவுடன் விரும்பும் வகையிலான ஒன்றை உருவாக்கவே நினைத்தார்கள். அதனால்தான் நான் என் முதல் விளம்பரத்துக்கு ஒப்புக்கொண்டேன். ரன்வீரின் அசரவைக்கும் துறுதுறுப்பு, பாபி சார் மாயம், ஸ்ரீலீலாவின் ஃப்ரெஷ்னெஸ் — இதையெல்லாம் நாங்கள் மிகச்சிறப்பாக ஒன்று சேர்த்தோம். இனி அதை பார்வையாளர்கள் ரசிக்கட்டும்.”
புதிய சிங்ஸ் தேசி சைனீஸ் விளம்பரம் விளம்பரத்துக்கும் சினிமாவுக்கும் இடையிலான எல்லையை முற்றிலும் அழித்துவிட்டது. இது ஒரு 8 நிமிட கதை வடிவிலான அனுபவமாக, டிராமா, நகைச்சுவை, ஆக்ஷன், இசை, மசாலா என அனைத்தையும் ஒருங்கே வழங்குகிறது.
இந்த விளம்பரம் ஸ்ரீலீலாவின் கவர்ச்சியாலும், “லார்ட்” பாபி தியோல் அவர்களின் அதிரடியிலும் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது அனிமல் மற்றும் தி பா**டட்ஸ் ஆஃப் பாலிவுட் போன்ற ப்ளாக்பஸ்டர் படைப்புகளில் அசரவைத்த பாபி தியோல் மீண்டும் சிங்ஸ் மூலம் தனது ஸ்வாக் ஸ்டைலில் கலக்குகிறார்.
தீபிகா பான், தலைவர் – டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், கூறியதாவது..,
“சிங்ஸில் ஒவ்வொரு உணவும் ஒரு ப்ளாக்பஸ்டர் போல இருக்க வேண்டும் — மிக உறுதியானதாகவும், சுவைமிக்கதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். ரன்வீர் சிங் மீண்டும் ஆக்ஷனில் களமிறங்கியிருப்பதால் எதிர்பார்ப்பு உச்சம் தொட்டுள்ளது. ஐந்து படங்களுப்பின், அவரின் எனர்ஜி இன்னும் உச்சத்தில் இருக்கிறது. இது எங்கள் மிகப்பெரிய, மிகுந்த உற்சாகமான தேசி சைனீஸ் கொண்டாட்டம், இது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும்!”
இந்தப் படத்தில் ஷங்கர்–எசான்–லாய் இசையமைப்பில் உருவான புகழ்பெற்ற “மை நேம் இஸ் ரன்வீர் ஜிங்” என்ற ஆந்தம் இடம்பெற்றுள்ளது. அர்ஜித் சிங் குரலில், குல்சார் சாஹப் எழுதிய பாடல் இப்போது சாய் அப்யங்கர் மூலம் மறுபதிப்பாக உருவாக்கப்பட்டு, தற்போது எங்கெங்கும் ஒலிபரப்பாகி வருகிறது.
சிங்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் சிங் அட்டாக்ஸ்” படம் நிச்சயமாக #AagLagaaDe என்கிற ஹாஷ்டேக்குக்கு ஏற்ப ஒரு தீப்பற்றி எரியும் அனுபவத்தை தருகிறது.
டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனம், டாடா குழுமத்தின் முக்கிய உணவு மற்றும் பானத் துறைகளின் பிராண்டுகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிறது. அதன் பரந்த வரிசையில் டீ, காஃபி, நீர், உப்பு, பருப்பு, மசாலா, ரெடி-டூ-ஈட் உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவை அடங்கும். டாடா டீ, டெட்லி, டாடா காஃபி கிராண்ட், ஹிமாலயன், டாடா சால்ட், டாடா சம்பன்ன், டாடா சோல்ஃபுல், சிங்ஸ் சீக்ரெட், ஸ்மித் & ஜோன்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளை உடைய இந்நிறுவனம், வருடாந்திர ரூ.17,618 கோடி வருவாயுடன், 275, மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்றடைகிறது. இந்நிறுவனம் இந்தியாவிலும் உலகளவிலும் மிகப்பெரிய அளவில் கோலோச்சி வருகிறது.
AI சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட Perplexity ஆப் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. Google Play Store மற்றும் Apple App Store ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பிடித்து, ChatGPT, Gemini போன்ற உலகப் பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி, இந்தியர்களின் விருப்பமான #1 AI பயன்பாடாக Perplexity உயர்ந்துள்ளது.
இந்தியாவைச் சார்ந்த புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு AI, வெற்றியின் பெருமையான தருணம் இது. நாட்டின் தொழில்நுட்ப பயணத்தில் இது ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. உலக தரத்தில் போட்டியிடும் திறன் கொண்ட உள்ளூர் வளர்ச்சியின் அடையாளத்தில், இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். உலகளவில் மாறி வரும் AI பயன்பாட்டில் Perplexity ஒரு சாதாரண சாட்பாட்டாக மட்டும் அல்ல தேடல், உரையாடல், மற்றும் உற்பத்தித் திறன் கருவிகளை ஒருங்கிணைக்கும் ஒரு சூப்பர் AI ஆப் ஆகும். மாணவர்கள், படைப்பாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் அலுவலக வல்லுநர்கள் ஆகியோருக்கு இது தினசரி வாழ்க்கையை மிகவும் எளிதாக்குகிறது.
இந்திய தொழில்நுட்ப எதிர்காலத்தின் இனிமையான போட்டி
Perplexity-யின் வேகமான வளர்ச்சி, இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப துறையின் இரண்டு முக்கிய முகங்களான வேம்பு மற்றும் ஶ்ரீனிவாஸ் ஆகியோரின் இனிமையான போட்டியை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்துள்ளது. Zoho நிறுவனத்தின் உறுதியையும் Perplexity குழுவின் AI புதுமையையும் இணைத்து, அவர்கள் இருவரும் இந்தியா உலகத்திற்கே புதுமையை ஏற்றுமதி செய்யும் புதிய காலத்தை தொடங்கியுள்ளனர்.
இந்தியர்கள் தேர்ந்தெடுத்த AI மில்லியன் கணக்கான பதிவிறக்கங்கள் இதை எடுத்துக்காட்டுகின்றன — இந்தியர்கள் தற்போது தங்களுக்கே உரிய AI தீர்வாக Perplexity-யை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களின் தேவை, மொழி, மற்றும் கனவுகளைப் புரிந்து கட்டப்பட்ட இந்த பயன்பாடு, நாட்டின் டிஜிட்டல் தன்னம்பிக்கையின் புதிய அடையாளமாக திகழ்கிறது.
தேசிய பெருமையின் தருணம்
இந்த தீபாவளி சீசனில் Perplexity-யின் வெற்றி, இந்திய தொழில்நுட்பத்துறையின் பெருமையையும் உலக அரங்கில் அதன் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. சிறுநகர கணிப்பொறி திறனர்களிடமிருந்து, பன்னாட்டு தொழில் தலைவர்கள்வரை இந்தியாவின் டிஜிட்டல் அடையாளம் விரைவாக மாறி வருகிறது — அந்த மாற்றத்தின் முன்னணியில் இப்போது Perplexity உயர்ந்து நிற்கிறது.
இப்போதெல்லாம் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லை — அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.
Chennai, 14th October 2025: Phoenix Marketcity Chennai, the city’s premier lifestyle destination blending shopping, dining, entertainment, and immersive experiences, hosted yet another spectacular edition of its signature Diwali celebration — “Euphoria: A Celebration of Sorts.” This year’s event lived up to its promise of being a sensory spectacle, bringing together fashion, music, theatre, and art under one roof. The evening’s highlight was the grand fashion showcase curated by India’s renowned fashion maestro, Prasad Bidapa, who brought together top fashion brands in an artistic narrative inspired by the five elements. The runway came alive with dazzling collections from leading labels such as Diesel, Armani Exchange, Calvin Klein, Brooks Brothers, Ritu Kumar, Tasva, Manyavar, Kalanikethan, Koskii, and Malabar Jewels, among others. As the night reached its crescendo, the audience cheered as Bollywood heartthrob Dino Morea took over the runway as the showstopper, representing Bell & Ross, adding glamour and charisma to the evening. The soulful Charu Semwal’s live performance set the perfect mood for the night, intertwining melody with celebration. Speaking about the event, Rituu Jai Mehhta, Centre Director – Phoenix Mall of Asia & Marketing Director – South, said: “At Phoenix Marketcity, we don’t just host events — we create experiences. Euphoria has evolved into an iconic celebration that beautifully merges fashion, culture, and entertainment. What makes Phoenix truly special is how we conceptualize each property as a distinctive IP, built around our core vision of offering our customers something unique every time they visit.” “The Phoenix Festival – 90 Days of Fun is one such example of how we curate happiness. It’s not just about shopping — it’s about the atmosphere we create. Our customers tell us that when they come to Phoenix, they love to stay longer, enjoy the music, the food, the decor, and even end their day with a movie. That’s the immersive experience we strive to deliver — where retail meets joy, and every corner tells a story.” “Unlike any other destination in the city, Phoenix Marketcity stands out for its festive décor and experiential designs that bring brands and emotions together. Our aim with Euphoria was to celebrate Diwali as a shared moment of joy — blending fashion, theatre, and art into one unforgettable evening.” Expressing his delight at being part of the show, Dino Morea, who walked as the showstopper for Diesel and Bell & Ross, shared: “I’ve always loved coming to Chennai — it’s one of my favorite cities for its warmth, culture, and energy. Walking the runway tonight for Diesel and Bell & Ross felt incredible. Diesel has always been one of my favourite brands — its edgy style and confidence perfectly resonate with my personality. I’m thrilled to have been part of such a spectacular celebration by Phoenix Marketcity.” Sharing his perspective on the showcase, Prasad Bidapa, the curator of Euphoria 2025, said: “Chennai has an extraordinary sense of style and a deep-rooted appreciation for tradition. What makes this city stand out is its ability to blend modern fashion with cultural richness. At Phoenix, we see this blend beautifully represented — through brands like Kalanikethan, Malabar, Tasva, and Manyavar, which bring together heritage and contemporary design.” “Curating Euphoria this year was an inspiring experience — combining the five elements with fashion, theatre, and performance in one cohesive narrative. Phoenix Marketcity continues to set the benchmark for experiential fashion showcases in India.”
The evening saw a lively turnout of shoppers, influencers, celebrities, and families, all soaking in the festive ambience and celebrating Diwali in style. As part of the ongoing Phoenix Festival – 90 Days of Fun, Euphoria kicked off a season of live performances, festive offers, and immersive brand experiences. With this grand celebration, Phoenix Marketcity reaffirmed its place as Chennai’s go-to destination for fashion, culture, and unforgettable experiences.
மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜின் “சம்பராலா ஏடிகட்டு (Sambarala Yetigattu) (SYG)” படத்தின் ஒரு புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், “அசுர ஆகமனா ” (Asura Aagamana) சிறு முன்னோட்டம் !
பான் இந்திய அளவில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG)” படத்தின் “அசுர ஆகமனா” (Asura Aagamana)எனும் சிறப்பு முன்னோட்டம், மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜின் பிறந்தநாளை (புதன்கிழமை, அக்டோபர் 15) முன்னிட்டு வெளியிடப்பட்டது. சாய் துர்கா தேஜின் நடிப்பில், இதுவரை உருவாகியுள்ள திரைப்படங்களில் மிக உயர்ந்ததாக ₹125 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இத்திரைப்படம், அதிரடியும் ஆழமும் நிறைந்த ஒரு மாபெரும் உலகத்தை பார்வையாளர்களுக்குக் காட்டுகிறது.
இந்த “அசுர ஆகமனா” முன்னோட்டம், இருள், ரகசியங்கள் மற்றும் மாபெரும் பிரம்மாண்ட காட்சிகளால் நிரம்பிய ஒரு புதிய சினிமா பிரபஞ்சத்தின் கதவுகளைத் திறக்கிறது. அதில் சாய் துர்கா தேஜ் கடுமையான, வீர உணர்வுடன் நிறைந்த போர்வீரராக களமிறங்குகிறார். போருக்கான தயாரிப்பில் இருக்கும் அசுரர்கள், எழுச்சியையும் புரட்சியையும் ஏற்படுத்தும் அதிர்ச்சியான தருணங்களை இந்த காட்சி வெளிப்படுத்துகிறது.
இயக்குநர் ரோஹித் KP இயக்கத்தில், முற்றிலும் பிரம்மாண்டமான இப்படத்தை தயாரிப்பாளர்கள் K. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் (Primeshow Entertainment) சார்பில், தயாரித்துள்ளனர்.
இந்த முன்னோட்டத்தின் முக்கிய சிறப்பு, இப்படத்திற்காக உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் முற்றிலும் மாறியுள்ள சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட தோற்றம் தான். பலம் நிறைந்த கட்டுடலும், கண்களில் எரியும் ஆவேசமும் அவரை உண்மையான போர்வீரனாக காட்டுகின்றன. தன்னம்பிக்கையான வசன உச்சரிப்பும் மற்றும் தனித்துவமான நடிப்பும் இக்காட்சிக்கு மேலும் உயிரூட்டுகின்றன.
“அசுர ஆகமனா” ஒரு உண்மையான பான் இந்திய அனுபவமாக திகழ்கிறது. ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பழனிசாமி , இருள், மாயம், ஆழம் கொண்ட ஒரு சினிமா உலகத்தை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் துள்ளும் ஆற்றலுடன், நிஜமான அதிரடி அனுபவத்தை அளிக்கும் ஸ்டண்ட் வடிவமைப்புகள் சிறப்பாக அமைந்துள்ளன. கந்தாரா படத்தின் இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத் வழங்கியுள்ள பின்னணி இசை ஒவ்வொரு போர்க்களத்தையும் அதிரவைக்கிறது. எடிட்டர் நவீன் விஜயகிருஷ்ணா மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் காந்தி நடிகுடிகர் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது.
மொத்தத்தில், “சம்பராலா ஏடிகட்டு (SYG)” ஒரு ஆழமான உணர்ச்சி, அதிரடி, மற்றும் அற்புத காட்சிகள் நிரம்பிய மாபெரும் வரலாற்று படைப்பாக உருவாகி வருகிறது. சாய் துர்கா தேஜ் மற்றும் இயக்குநர் ரோகித் KP ஆகியோரின் துணிச்சலான முயற்சி, தெலுங்கு சினிமாவின் புராண-அதிரடி வகையில் புதிய அளவுகோலை அமைத்துள்ளது.
இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னட, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் ‘கன்னி மாடம்’ பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். உன்னதமான காதல் உணர்வை போற்றும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் ப. அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.
திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டீசரை வெளியிடுவதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் திருமதி அகிலா பாலு மகேந்திரா, கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மிஷ்கின், மீரா கதிரவன், தயாரிப்பாளர் தனஞ்செயன், காவல்துறை உயரதிகாரி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். டிரென்ட் மியூசிக் நிறுவனம் ‘மைலாஞ்சி’ பாடல்களை வெளியிட்டுள்ளது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ப. அர்ஜுன் பேசுகையில், “இது நெகிழ்ச்சியான மேடை. உலகம் பெரியது, ஆனால் என்னுடைய உலகம் மிக சிறியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் மனநல மருத்துவராக பணியாற்றி வருகிறேன். அன்னை இல்லம் என்ற ஒரு கூட்டு இல்லம் தான் என்னுடைய உலகம். எனக்கு வெளி உலகம் தெரியாது. நோய்களைப் பற்றி, அதுவும் மனநலம் சார்ந்த நோய்களைப் பற்றியும் நோயாளிகள் குறித்தும் கண்டறிந்த நான் இந்த வெளி உலகத்தை பார்க்கவில்லை.
சினிமா தயாரிக்க போகிறேன் என்று சொன்னவுடன் என்னுடைய உறவுகளும் நண்பர்களும் பதட்டம் அடைந்தனர். வியப்பாகவும் பார்த்தனர், சிலர் வருத்தமும் அடைந்தனர். ஆனால் ‘மைலாஞ்சி’ திரைப்படம் எனக்கு ஏராளமான அனுபவங்களை கற்றுத் தந்திருக்கிறது. அனுபவ பாடங்களில் நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், தீயவற்றை விட்டு விடுங்கள். அடுத்த நாள் காலையில் நாம் இருப்போமா என்று உறுதியாக தெரியாது. மனித வாழ்க்கை நிலைத்தன்மை அற்றது.
கதை சொல்வதற்காக என்னுடைய ஹீரோ, இயக்குநர் அஜயன் பாலாவை எனக்கு அறிமுகப்படுத்துகிறார். நான்கு கதைகளை அவர் சொல்கிறார், அனைத்தையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எந்த கதைக்கும் எதிர்வினை ஆற்றாததால் ஹீரோவும், இயக்குநரும் என்னை பார்த்துக் கொண்டே இருந்தனர். நான் அடிப்படையில் மனநல மருத்துவன் என்பதால் எதிர்வினை ஆற்றாமல் இருப்பது என்னுடைய பழக்கமாகிவிட்டது. அதன் பிறகு அவர்களிடம் வேறு ஏதேனும் கதை இருக்கிறதா எனக் கேட்டேன்.
இயக்குநர்களில் பீம்சிங், ஸ்ரீதர், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலச்சந்தர், பாரதிராஜா உள்ளிட்டவர்களை எனக்கு பிடிக்கும். இவர்கள் மனித உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்துவார்கள். சினிமா பொழுதுபோக்கு ஊடகம் என்பதை கடந்து அதற்குள் மனித உணர்வுகளை கடத்தக்கூடிய அளவிற்கு கதையை சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டேன்.
அதன் பிறகு ஐந்தே நிமிடத்தில் ஒரு கதையை சொன்னார். அந்த கதை தான் ‘மைலாஞ்சி’. உணர்வுகள் எதுவும் புதிதில்லை, எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகள் ஒன்றுதான். இந்த பூமி அழியும் வரை காதல் ஒரு உன்னதமான நெகிழ்வான ஒரு உணர்வு. காதல் எனும் உணர்வு பழையதாக இருந்தாலும், அதை கொடுக்கும் விதம் புதிதாக இருக்க வேண்டும்.
இந்தத் திரைப்படம் எனக்கு நட்பை கற்றுக் கொடுத்திருக்கிறது. நட்பிற்குரிய மரியாதையும், மதிப்பும் குறைந்து கொண்டிருக்கிறது என்று நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். அது இல்லை என்பதை இந்த படத்தில் நான் கற்றுக் கொண்டேன். நட்பின் காரணமாக ஒளிப்பதிவாளர் செழியன் இந்த குழுவுடன் இணைந்தார்.
காதல் என்ற உணர்வை மென்மையாக சொல்லக்கூடிய இந்த கதைக்கு இசைஞானி இளையராஜா தான் வேண்டும் என கேட்டேன். செழியனின் நட்பிற்காக இளையராஜா இதில் பணியாற்ற ஒப்புக்கொண்டார். செழியனின் நட்பிற்காக படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் இந்த குழுவுடன் இணைந்தார். வெற்றிமாறன் இந்தப் படத்தை வழங்குவதற்கும் நட்புதான் காரணம். மிஷ்கின் அவர்களும் நட்பின் காரணமாகவே இங்கு வாழ்த்த வருகை தந்திருக்கிறார். அண்ணன் சீமானுக்கும் எனக்கும் இடையே உள்ள நட்பின் காரணமாகவே அவரும் இங்கு வருகை தந்திருக்கிறார். திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டாத என்னுடைய பால்ய கால வகுப்புத் தோழர் ஏடிஜிபி தினகரனையும் மற்றும் நட்பின் காரணமாக இங்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காதல் தற்போது வேறு விதமாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில், காதல் வேறுவிதமானதல்ல, காதல் என்றைக்கும் காதல் தான், உண்மையான காதல் என்பது எப்போதும் காதலாகவே இருக்க வேண்டும் என்பதை சொல்வதற்காகவே மைலாஞ்சியை உருவாக்கி இருக்கிறோம். இதனை இந்த இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார்.
ஒளிப்பதிவாளர் செழியன் பேசுகையில், “அஜயன் பாலா எனக்கு நண்பன். 2000ம் ஆண்டில் நான் பி. சி. ஸ்ரீராமின் உதவியாளராக பணியாற்றியபோது, அஜயன் பாலா மற்றொரு இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றிய போது நண்பர்களாக அறிமுகமானோம். அப்போது நடைபெற்ற உரையாடலில், ‘நான் முதலில் படத்தை இயக்கினால் அதற்கு நீதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்’ என என்னிடம் கேட்டுக் கொண்டார். கேட்டுக் கொண்டதுடன் மட்டும் இல்லாமல் அவருடைய பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து, ‘ இதுதான் உனக்கான அட்வான்ஸ்’ என்றார். அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு நாள் திடீரென்று அலுவலகத்திற்கு வந்து படத்தில் பணியாற்ற சம்மதமா எனக் கேட்டார். அப்போது அவரிடம், ‘நீ கொடுத்த அட்வான்ஸ் அப்படியே இருக்கிறது. வா படப்பிடிப்புக்கு செல்லலாம்’ என்றேன்.
ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும்போது யாரேனும் இருவர் எனக்கு நெருக்கமான நண்பர்களாக மாறிவிடுவார்கள். அந்த வகையில் இந்த படத்தில் நாயகனாக நடித்த ஸ்ரீராம் கார்த்திக் எனக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். இந்த படத்திற்காக தன்னுடைய முழு உழைப்பையும் வழங்கி இருக்கிறார். தமிழில் முக்கியமான நடிகராக அவர் வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் அர்ஜுன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி, அவரும் நெருக்கமான நண்பராக மாறிவிட்டார்.
ஊட்டி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது பாலுமகேந்திரா தான். அவர் காட்சிப்படுத்தாத லொகேஷன்களை தேடித் தேடி இந்த படத்திற்காக பதிவு செய்திருக்கிறோம். இருபது ஆண்டுகள் கழித்து கலர்ஃபுல்லாக க்ளாஸியாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பை அளித்த நண்பர் அஜயன் பாலாவிற்கு நன்றி. நான் பெரிதும் மதிக்கும் பாலு மகேந்திராவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த படத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்,” என்றார்.
நடிகர் சிங்கம் புலி பேசுகையில், “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மருத்துவர் அர்ஜுன் எனக்கு மாமா. எனக்கு சொந்த ஊர் சேத்தூர். நாங்கள் கால சூழலில் இடம் மாறி விட்டோம். ஆனால் அதே ஊரில் தான் இருப்பேன் என்று சொல்லி இன்றும் அங்கேயே இருக்கிறார் அர்ஜுன். அவருடைய அப்பா ஒரு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர். இவர் படித்து மருத்துவராகி இருக்கிறார்.
இப்போதும் அவர் காசு வாங்காமல் ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். அப்பா, அம்மா, பாரதியார், வள்ளுவர், கம்பர்… இதுதான் அவருடைய உலகம். அவர் எந்த ஹோட்டலிலும் சாப்பிட மாட்டார். வெளியிடங்களில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். குளிர்சாதன வசதி உள்ள அறையில் அதிக நேரம் இருக்க மாட்டார். தனி மனித ஒழுக்கத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய குலதெய்வத்தை வணங்குவதற்காக செல்லும்போது இவரை சந்திக்கிறேன். அப்போது என்னிடம் ஒரு படத்தை தயாரிப்பதற்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்டுவிட்டு, ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என அவருடைய விருப்பத்தை சொன்னார். அவர் சில கதைகளையும் சொன்னார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் அஜயன் பாலா அவரை சந்தித்து கதை சொன்ன போது, அந்த கதை பிடித்து, இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அஜயன் பாலா, செழியன், லால்குடி இளையராஜா, ஸ்ரீகர் பிரசாத், இசைஞானி ஆகியோர் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றால் தயாரிப்பாளர் சினிமாவை எவ்வளவு தூரம் நேசித்திருக்கிறார் என்பது புரியும். சினிமாவைப் பற்றி என்னிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசுவார்,” என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “இயக்குநர் அஜயன் பாலா பேரன்பு மிக்கவர். என்னுடைய சினிமா ஆய்வை, அறிவை உரசி பார்க்கக்கூடியவர். எப்போதும் சினிமாவைப் பற்றி ஆரோக்கியமான விவாதத்தை முன் வைப்பவர். நான் சினிமாவில் வந்ததற்கு அஜயன் பாலாவும் ஒரு காரணம். அன்பான மனிதர், பண்பான மனிதர். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. சினிமாவில் தேவையில்லாமல் ரொம்ப நல்லவர்கள் சில பேர் இருப்பார்கள். அதில் மீரா கதிரவனை போல் அஜயன் பாலாவும் ஒருவர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு முன்னால், வெற்றிமாறனுக்கு முன்னால், அஜயன் பாலா இயக்குநராகி இருக்க வேண்டும்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இசைஞானி இளையராஜாவை இணைத்துக் கொண்டது தான். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன், பார்த்தேன். சில இடங்களில் அவருடைய தனித்துவம் தெரிந்தது.
தயாரிப்பாளர் நட்பை பற்றி குறிப்பிட்டார் வேறு துறையில் நட்பு இருக்கிறதா, இல்லையா என எனக்குத் தெரியாது. ஆனால் சினிமா துறை போல் நட்பை போற்றும் ஒரு துறை கிடையாது.
தான் கண்டறிந்த விஷயத்தை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளியின் ஆசை. தான் கஷ்டப்பட்டு சிறுக சேகரித்த ஒரு விசயத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும் என்பது ஒரு தயாரிப்பாளரின் ஆசை. சினிமாவை எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அது ஆக சிறந்ததாகவே இருக்கிறது. இதற்கு நட்புதான் அடித்தளம். சினிமா என்பது மிகப்பெரிய நட்பு சமுத்திரம்.
இந்தத் திரைப்படம் மிக முக்கியமான படம். கதாசிரியனும் இந்த சமூகத்திற்கான மனநல மருத்துவன் தான். நல்ல படங்கள் இந்த சமூகத்திற்கு ஒரு தெரபி, சமூகத்திற்காக இப்படி சிந்திக்கும் தெரபிஸ்ட்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை.
கடந்த 30 வருடமாக இந்த சினிமாவில் நான் புரிந்து கொண்ட விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் முக்கோணம் என்ற ஒரு வடிவத்தை பற்றி தெரிந்திருக்கும். அதில் ஐந்து வகையான முக்கோணங்கள் இருக்கிறது என்பார்கள், மூன்று பக்கமும் ஒரே அளவுள்ள முக்கோணம் தான் தனித்துவமானது. அதேபோன்றுதான் இந்த சினிமா. தயாரிப்பாளர் – கதாசிரியர் & இயக்குநர் – தொழில்நுட்பக் கலைஞர்கள்- என இந்த மூவரும் சமமாக இருந்தால் படைப்பு நன்றாக இருக்கும்.
எங்கள் காலத்தில் சினிமா என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. 365 திரைப்படங்கள் உருவான இந்த தமிழ் சினிமாவில் தற்போது 35 திரைப்படங்கள் தான் உருவாகின்றன. ஐந்து படங்கள் தான் வெற்றி பெறுகின்றன. அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வரும் தயாரிப்பாளர்கள் ஒரு மூன்று படங்களை உருவாக்குவதற்கான திட்டமிடலுடன் வர வேண்டும். முதல் படம் அனுபவம். இரண்டாவது படம் எப்படி தோல்வி அடையாமல் படம் தயாரிப்பது, எப்படி வெற்றி பெறுவது என்று அனுபவத்தை தரும். மூன்றாவது படத்தில் பொருத்தமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்து வெற்றி படத்தை எப்படி அளிக்க வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவார்கள். இது என்னுடைய கணிப்பு,” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “எழுத்தாளர் அஜயன் பாலாவின் பல வருட கனவு இயக்குநராக வேண்டும் என்பது. அது இன்று நனவாகி இருக்கிறது. அதற்காக அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எழுதிய நிறைய புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். அஜயன் பாலா மீதான நட்பின் காரணமாகவே இங்கு அனைவரும் வருகை தந்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் இருப்பதை நான் பார்க்கிறேன்.
அரசியலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சீமான் திரைப்படங்களை பார்வையிட்டு தன் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார். இது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. அதனால் அவரிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன் ஊடகங்களால் நல்ல படைப்புகள் என பாராட்டப்படுவதை நீங்கள் அவசியம் பார்த்து உங்களுடைய கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக உங்களைப் பின்பற்றுபவர்கள் அந்த படத்தை பார்த்து வெற்றி பெறச் செய்வார்கள். அதனால் தொடர்ந்து சிறிய படங்களுக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், “எட்டு மாதத்திற்கு முன்பு மயிலாஞ்சி என்று ஒரு படம் வந்தது. இது மைலாஞ்சி. நீண்ட நெடிய பயணத்திற்குப் பின் இயக்குநராகி இருக்கும் அஜயன் பாலாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
1976ம் ஆண்டில் கோயம்புத்தூரில் நான் தான் முதல் மாணவன். எனக்கு கோவை மருத்துவக் கல்லூரியிலும், கோவை வேளாண்மை கல்லூரியிலும் படிப்பதற்கான இடம் கிடைத்தது. ஆனால் 4500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அதற்கு என் தந்தையிடம் பணம் இல்லாததால் என்னால் மருத்துவராக முடியவில்லை. இது தொடர்பாக எனது தந்தையிடம் பேசும் போது ‘நீ எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆளாக வருவாய்’ என்றார். என் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். அவரை கம்யூனிஸ்ட்டாக மாற்றியவர் பாவலர் வரதராஜன். அதன் பிறகு அவரிடம் உங்களால் எவ்வளவு கட்டணத்தை கட்ட முடியும் என கேட்டேன். அவர் 150 ரூபாய் என்று சொன்னதால், உடனே அரசு கல்லூரியில் 140 ரூபாய் செலுத்தி தாவரவியல் பட்டப் படிப்பில் சேர்ந்தேன்.
அஜயன் பாலாவிற்கு இந்தப் படத்தில் இயக்குநர் வாய்ப்பு அளித்த தயாரிப்பாளரை நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநர் சங்கத்தின் சார்பாக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்று விளம்பரப்படுத்தினாலே படங்கள் வியாபாரம் ஆகிவிடும். அந்த அளவிற்கு இந்த திரைத் துறையில் ஆளுமை கொண்டவர் இசைஞானி இளையராஜா. படத்திற்கு என்ன தேவையோ அதனை அவர் சரியாக கொடுத்திருப்பார். அவருக்கு பதிலாக அவருடைய சகோதரர் கங்கை அமரன் இங்கு வருகை தந்திருக்கிறார், அவருக்கும் நன்றி.
இயக்குநர் அஜயன் பாலா எப்போதோ வெற்றி பெற வேண்டியவர். லேட் பட் நெவர். இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி,” என்றார்.
ஏடிஜிபி தினகரன் பேசுகையில், “எனக்கு இந்த மேடைப் புதிது. சூழல் புதிது. ஆட்கள் புதிது. இதுதான் நான் கலந்து கொள்ளும் முதல் திரைத்துறை சார்ந்த விழா. இங்கு தயாரிப்பாளரின் நண்பனாக வருகை தந்திருக்கிறேன். அவருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அர்ஜுனின் பள்ளிக்கூட தோழராக இருந்த நான் சொல்கிறேன், அவர் மருத்துவர் ஆவதற்கு கடுமையாக உழைத்தார். அவருடைய வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் நடந்து வர வேண்டும். அவரிடம் சைக்கிள் கிடையாது. நான்தான் அவரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு செல்வேன். இன்று நான் ஐபிஎஸ் அதிகாரி ஆகிவிட்டேன். அவர் மருத்துவராகி விட்டார்.
சேத்தூர் என்ற சின்ன கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர், இன்றும் அவரது வீட்டில் ஒரு ஏசி கிடையாது, ஒரு பிரிட்ஜ் கிடையாது. இப்படி ஒரு வீட்டில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி மற்றும் மகன், மகள்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
‘மைலாஞ்சி’ படத்தை தயாரிப்பதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதும் எனக்குத் தெரியும். பள்ளியில் படிக்கும் போதே அவர் சினிமா மீது ஆர்வம் கொண்டவர்.
இசைஞானி இளையராஜாவை பற்றி நான் பல தருணங்களில் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். காவல்துறையில் பணியாற்றும் எங்களுக்கு விடுமுறை இல்லை. ஃபோனை ஆஃப் கூட செய்ய முடியாது. வெளிநாடு சுற்றுலா செல்ல முடியாது. குடும்பத்துடன் செலவிட முடியாது. இது போன்ற சூழலில் எங்களுக்கு மிகப்பெரிய வடிகால் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் தான்.
மிஷ்கின் எப்படி போலீஸ் போல் சிந்திக்கிறார் என ஆச்சரியப்படுவேன். எனக்கு அதிகாரம் இருந்தால் மிஷ்கினை சிபிசிஐடி ஆபிஸராக நியமித்து விடுவேன்.
சீமானை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பேச்சில் வேறு மொழி கலப்பில்லாமல் தமிழில் பேசக்கூடிய ஒரே தலைவர் அவர் தான். இதை நான் மகிழ்ச்சியுடன் சொல்கிறேன். தமிழை உணர்வோடு நேசிக்கக் கூடிய ஒருவராகவே சீமானை நான் பார்க்கிறேன்.
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசரை பார்க்கும்போது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் நன்றாக இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “நாம் ஒருவரை சந்தித்தால் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று தான் கேட்கிறோம். மனநிலை எப்படி இருக்கிறது என்று யாரும் கேட்பதில்லை. எவ்வளவு பணம் இருந்தாலும் மனம் சரியில்லை என்றால் அது பயனற்று போகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். அதனால் மருத்துவத்திலேயே மகத்தான மருத்துவம் மனநல மருத்துவம் தான்.
மனநலத்தை சரி செய்யும் மருத்துவர் அர்ஜுன் இந்தப் படத்தை தயாரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தன் மண்ணின் மக்களுக்காக தான் பயின்ற கல்வி பயன்பட வேண்டும் என்று அவர் சேத்துரிலேயே பணத்தை பெரிதாக எண்ணாமல், மனத்தை நலப்படுத்தி வரும் மகத்தான மருத்துவர் தான் தயாரிப்பாளர் அர்ஜுன்.
என் தம்பி அஜயன் பாலா தமிழ் திரை உலகில் சிறந்த படைப்பாளிகள் அனைவரையும் சந்தித்து இருப்பார். கேரளா போன்ற மாநிலங்களில் முதலில் எழுத்தாளர்களுக்கு தான் மரியாதை. அங்கு முதலில் கதையை வாங்கிய பிறகு தான் இயக்குநர், நடிகர் போன்றவற்றை தீர்மானிப்பார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை. அஜயன் பாலா ஒரு சிறந்த எழுத்தாளர். நான் அவருடைய எழுத்தின் ரசிகன். பல தருணங்களில் நான் வாசிப்பதற்கு நேரம் இல்லாத போது தலைவர்களைப் பற்றிய சுருக்கமான எழுத்துகளை எழுதித் தருவார். தலைவர்களைப் பற்றி முன்னணி வார இதழில் கட்டுரையாக அவர் எழுதி இருக்கிறார்.
இன்றைய தலைமுறையினருக்கு அம்பேத்கர் என்றால் யார் என்று தெரிந்து கொள்வதற்கு அவர் எழுதிய புத்தகம் உதவும். அவருடைய எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கும். புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் இறுதிப் பக்கம் வரை தொடர்ந்து வாசிப்பார்கள்.
எழுத்தாளரான அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கியம் பொய் பேசலாம். புராணம் பொய் பேசலாம். வரலாறு உண்மையை மட்டும் தான் பேசும். அப்படி ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்யக் கூடியவர் தான் அஜயன் பாலா.
இயக்குநர் வெற்றிமாறன் புதினங்களை திரைப்படமாக்குவார். ஆனால் இப்போது ஒரு எழுத்தாளனே திரைப் படைப்பாளியாக வந்திருக்கிறார். இந்த தலைமுறையில் இதுதான் தமிழ் திரையுலகத்தில் முதன்முறை. இதற்காக அவரை பாராட்டுகிறேன்.
ஒளிப்பதிவாளர் செழியன், கலை இயக்குநர் லால்குடி இளையராஜா போன்ற எனக்கு நெருக்கமான உறவுகள் பலரும் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.
ஜப்பானில் நூறு வயது வரை வாழ்வது எப்படி என்று ஒரு உரையாடல் நடைபெற்ற போது, அங்குள்ளவர்கள் சிரித்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் 110 வயது உள்ளவர்கள். அவர்களிடம் எப்படி இவ்வளவு நாள் வாழ்கிறீர்கள் என கேட்டபோது, முதலில் மொழி. அதனைத் தொடர்ந்து எங்களின் இயற்கை. மூன்றாவதாக மனமகிழ்ச்சி ஆகியவற்றை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
என் தம்பி சிங்கம்புலி அருகில் இருந்தால் போதும். உங்களுக்கு எந்த நோயும் வராது. ஏனெனில் அவன் உங்களை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான்.
‘வாழ்வே மாயம்’ என்பது ஒரு வாழ்க்கை தத்துவம். அந்தப் படத்தில் உச்சகட்ட காட்சியில் சண்டை காட்சி இல்லாமல் ஒரு பாடல் காட்சியை வைத்து, ஒரு படத்தை இசையமைப்பாளர் ஒருவர் வெற்றி பெற செய்திருக்கிறார் என்றால் அவர் கங்கை அமரன் மட்டும்தான். அதெல்லாம் மிகப் பெரும் சாதனை.
தாய்ப்பாலும், தண்ணீரும் மலிவாக கிடைப்பதால் தான் மனிதன் அதனை மதிப்பதில்லை. இதுபோன்ற கலைஞர்கள் நம் அருகே அமர்ந்திருப்பதால் அவர்களின் மகத்துவம் புரிவதில்லை. இதுதான் இங்கு சிக்கல். அந்த வகையில் இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைவது திருமதி அகிலா பாலு மகேந்திரா கலந்து கொண்டிருப்பதால் தான். அவர்களை இங்கு சந்திக்க வைத்ததற்காக தயாரிப்பாளருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்னிந்திய சினிமாவின் சிறந்த படைப்பாளியாக சிலரை தேர்வு செய்தால் அதில் பரதன், மணிரத்னம் போன்றவர்கள் இருப்பார்கள். அனைத்து படைப்பாளிகளுக்கும் அவர்களின் முதல் படைப்பில் பாலுமகேந்திரா தான் ஒளிப்பதிவாளர். அவரிடம் இருந்துதான் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு ‘சிம்பொனி செல்வன்’ என இளையராஜாவை குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலிலும், பாடல் வரிகளை தவிர்த்து விட்டு, இசையை மட்டும் கேட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு சிம்பொனி தான். அதனால் நாங்கள் சொல்கிறோம் அவர் சிம்பொனி செல்வன் அல்ல, இசைஞானி அல்ல, இசை இறைவன். ஏன் இறைவன்? இறைவனிடம் என்ன கேட்டாலும் கொடுப்பார். எல்லோரையும் மனதார வாழ்த்துவார். அதனால்தான் அவர் இசை இறைவன்.
நான் சின்ன வயதில் படம் பார்க்கும்போது கதாநாயகனுக்கு கிடைக்காத கைத்தட்டல் இசைஞானி இளையராஜா என்று பெயர் போட்டதும் எழுந்தது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் என பெயரை போட்டதும் கைத்தட்டல் எழுந்தது என்றால் அது இளையராஜாவிற்கு மட்டும்தான்.
என் நண்பர் மு. களஞ்சியம் இயக்கிய ‘பூமணி’ திரைப்படத்தை நண்பர்களுடன் திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்தோம். வண்டியில் கதாநாயகியை உட்கார வைத்து கதாநாயகன் வண்டியை ஓட்டுகிறான். அந்த சூழலில் ‘என் பாட்டு என் பாட்டு’ எனத் தொடங்கும் பாடலை இடம்பெறச் செய்து ரசிகர்களை உற்சாகமடைய செய்தவர் இளையராஜா. அதில் ‘நெஞ்சைத் துவைக்கிற ராகம் இது’ என்னும் வரிகள் கடந்ததும் திரையரங்கில் அனைவரும் எழுந்து ‘ஒன்ஸ்மோர்’ சொன்னபோது தான் இசையின் ஆக்கிரமிப்பை, இசையின் ஈர்ப்பை நான் உணர்ந்தேன்.
‘இசையால் அடைய முடியாத இன்பமும் இல்லை. இசையால் துடைக்க முடியாத துன்பமும் இல்லை’ என்கிறார்கள். எல்லா நோய்க்கும் ஒரு மருந்து இருக்கிறது என்றால் அது இசைதான். அதுபோன்றதொரு இசையை இந்த மண்ணுக்கு அளித்த மகத்தான மருத்துவர்தான் என் அப்பன் இளையராஜா. மனநல மருத்துவர் தயாரித்த இந்தத் திரைப்படத்தில் குணநல மருத்துவர் இளையராஜா இசையமைத்திருப்பது சிறப்பு. இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றியை பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்,” என்றார்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்தது.
“டூரிஸ்ட் ஃபேமிலி” படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இந்த புதிய படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் ஒரே கட்டமாக மின்னல் வேகத்தில், வெறும் 35 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களைக் கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம், இளைஞர்களின் கனவுக்கன்னியாகக் கொண்டாடப்படும் நாயகி அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தைத் தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளைச் செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்கிறார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கவுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனத்தின் சார்பில், உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளிக்கும் அற்புதமான திட்டம், பல வருடங்களாக நடந்து வருகிறது.
இந்தியா நாடு முன்னேறிய நாடு என்ற பெருமிதத்தை பெற்றிருந்தாலும், இன்றும் உணவில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் பெருமளவில் உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் கவலையளிக்கும் நிலையில் தான் உள்ளது. இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்.
கடந்த ஐந்து வருடங்களாக ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம், உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது.
இந்நிறுவனத்தின் சார்பில் உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் 5000 க்கு பேருக்கு பிரியாணி உணவு சமைத்து காஞ்சிபுரம், செங்கல் பட்டு, சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.
ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நடத்திய இந்த வருட நிகழ்வினில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் ஆதி, நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகர் மஹத், நடிகர் மைம் கோபி, நடிகர் கண்ணா ரவி, முத்துக்குமார் ஆகியோருடன் கலந்துகொண்டு, இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வினில் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் சார்பில் ஹோப் எனும் புதிய வெப்சைட் துவக்கப்பட்டது. இதன் மூலம் ஏழை எளியோருக்கு மாதாமாதம் மளிகை சாமான்கள் வழங்கப்படவுள்ளது. இந்த வெப்சைட்டில் மூலம், மாதம் வெறும் 35 ரூபாய்க்கு சப்ஸ்க்ரைப்சன் செய்யலாம், அதன் மூலம் பலருக்கு உதவலாம்.
இந்நிகழ்வினில்..,
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…
ஆலன் இதை 6 வருடமாக செய்து வருகிறார். நாம் நன்றாக இருக்கும் போது, பலர் நம்மைத் தேடி வருவார்கள். ஆனால் நாம் கஷ்டத்தில் இருக்கும் போது யாரெல்லாம் வருவார்கள் என்றால் அது கேள்விக்குறிதான். ஒரு 5000 பேருக்கு பிரியாணி போட வேண்டாம் என்றால் அதற்கு எவ்வளவு செலவாகும் என தெரியும், ஆனால் பெரிய பெரிய ஆட்களிடம் அதற்காக உதவி கேட்டுப் போனபோது, யாரும் உதவ முன்வரவில்லை. இதற்காக உண்மையாக ஸ்பான்ஸர் தந்த நல்ல உள்ளங்களுக்குப் பெரிய நன்றி. உதவி செய்யும் நண்பர்கள் தான் உலகில் மிக முக்கியம், அவர்களை விட்டுவிடாதீர்கள். நான் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷனில் ஒரு உறுப்பினர் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை. அதை நான் கர்வமாக சொல்லிக்கொள்வேன். இந்த முயற்சிக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். இந்த முயற்சி தொடர்ந்து நடக்க வேண்டும். இந்த மிகப்பெரிய செயல்பாட்டில் அடுத்ததாக ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் சார்பில் ஹோப் என ஒரு வெப்சைட் துவங்கியுள்ளோம், இந்த ஆப் உங்கள் மொபைலில் வைத்து மாதம் 35 ரூபாய் சப்ஸ்க்ரைப்சன் செய்யலாம், அதன் மூலம் பலர் பசியாறுவார்கள். நாம் அனைவரும் நம்மால் முடிந்த ஆதரவைத் தர வேண்டும். நான் என்றும் ஆலனுக்குத் துணையாக இருப்பேன் அனைவருக்கும் நன்றி.
நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது..,
உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் உடைய முயற்சி மிகச்சிறப்பானது. நம்மில் பலர் உதவ முன்வந்தாலும் அதைச் சரியாக முன்னெடுத்துச் செய்ய எந்த ஒரு இயக்கமும் இங்கு சரியாக இல்லை. அந்த வகையில் ஆலனின் இந்த ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் தொடர்ந்து பல வருடங்களாக, பலருக்குப் பயனளிக்கும் வகையில் இந்த உணவளிக்கும் திட்டத்தை, செயல்படுத்தி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் அதை அடுத்தகட்டத்திற்கும் எடுத்து சென்று வருகிறார்கள். நான் உதவி செய்ய நினைக்கும் போதெல்லாம் ஆலன் அதற்குப் பெருந்துணையாக இருந்தார். ஆலனின் இந்த முயற்சிக்கு நானும் ஒரு சிறு துரும்பாக இருப்பது எனக்குப் பெரு மகிழ்ச்சி. இந்த திட்டம் இன்னும் பெரிய அளவில் வளர நாம் அனைவரும் உதவ வேண்டும். அனைவருக்கும் நன்றி.
நடிகர் மஹத் பேசியதாவது..,
ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் பற்றி எனக்கு என் நண்பர் மூலம் தான் தெரியும். ஆலன் இதைப் பல வருடங்களாகச் செய்து வருகிறார் என்பது நண்பர் மூலம் தெரிய வந்தது. நான் அவரிடம் போனில் கூட பேசியது இல்லை, அவர் கேட்டவுடன் உதவி செய்தேன். என்னை நகரம் முழுக்க கூட்டிப்போய் எவ்வளவு பேர் உணவில்லாமல் தவிக்கிறார்கள் என்று காட்டியபோது, எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நம்மால் முடிந்த 35 ரூபாய், ஒருவருக்கு உணவளிக்கும். இதற்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் நாம் செய்ய வேண்டும். இதை முன்னெடுத்து நடத்தி வரும் ஆலனின் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷனுக்கு வாழ்த்துக்கள். இதற்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன் நன்றி.
ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனர் ஆலன் பேசியதாவது..,
நண்பர்கள் சிரத்தையடுத்து இங்கு வந்து வாழ்த்தியதற்கு என் நன்றிகள். இந்த முயற்சி தொடர்ந்து நடப்பதற்கு என் நண்பர்கள் இந்த பிரபலங்கள் தான் காரணம். ஐஸ்வர்யா ராஜேஷ் என் நெருங்கிய நண்பர். இதை முதன் முதலில் நடத்திய போது, ஏன் என் முகத்தை அம்பாஸிடராக போட்டு, இன்னும் பெரிய அளவில் எடுத்துச்செல்லக்கூடாது எனக் கேட்டார். அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதன் பின் இந்த முயற்சி இன்னும் பெரிதாக மாறியது. மஹத் அவர் வீட்டுக்கருகிலேயே இப்படியானவர்கள் இருப்பதைக் கேட்டு அதிர்ச்சியானர். உடனே உதவ முன் வந்தார். இதற்கு உறுதுணையாக இருக்கும் என் நண்பன் சமீருக்கு நன்றிகள். இது நடக்க முக்கிய காரணமாக இருக்கும் வாலண்டியர்ஸ்க்கு என் நன்றிகள். ஹோப் எனும் புது வெப்சைட் துவங்கியுள்ளோம், இதில் மாதம் நீங்கள் ஒரு முறை 35 ரூபாய் தந்தால் போதும், நீங்களும் இதில் பலருக்குப் பசியாற்றுவீர்கள். அனைவரும் இந்த ஆப் சப்ஸ்க்ரைப்சன் செய்து ஆதரவு தர வேண்டும். நன்றி.
நடிகர் மைம் கோபி பேசியதாவது..,
நம் நாட்டில் உணவில்லாமல் பலர் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும், உணவளிக்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் உடைய இந்த முயற்சி மிகப்பெரியது. இதை முன்னெடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும் ஆலன், தோழி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை மனதார வாழ்த்துகிறேன். இந்நிகழ்விற்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. இம்முயற்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம். நன்றி.
நடிகர் ஆதி பேசியதாவது..,
என்னை அழைத்ததற்கு முதலில் மிக்க நன்றி. சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்னை அழைத்தார். அவருக்காக என்றும் அழைக்க மாட்டார். வேறு ஒருவருக்கு உதவவே அழைப்பார். இந்நிகழ்வு குறித்து இப்போது தான் தெரிந்து கொண்டேன். மொய் விருந்தை 6 வருடங்களாக நடத்தி வருகிறார்கள். நம் நாட்டில் 18 மில்லியன் மக்கள் இன்றும் பசியால் வாடுகிறார்கள் என்பது சோகம். எளியோருக்கு உணவளிக்கும் இவர்களின் முயற்சி பெரும் பாராட்டுக்குரியது. இந்த நிகழ்வில் பங்கு கொண்டதைப் பெருமையாக நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி.
தில் ராஜு – சிரிஷ் (Dil Raju and Shirish )தயாரிப்பில், ரவி கிரண் கோலா (Ravikiran Kola,) இயக்க, ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!
ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக, ஹைதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர்.
‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ரவி கிரண் கோலா இந்த படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
முஹூர்த்தக் காட்சிக்காக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் ஹனு ராகவபுடி முதல் காட்சியை இயக்கினார்.
கிராம பின்னணியிலான ஆக்சன் டிராமா கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் வழக்கமான படப்பிடிப்பு அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது.
இந்த பிரமாண்டமான படத்தை அடுத்த ஆண்டு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற தி ஃபாஸ்ட் அண்ட் க்யூரியஸ் – தி ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்ச்சியில் சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடி, தனது வாழ்க்கை அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் சினிமா பயணம் குறித்து ஊக்கமூட்டும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும் என்ற முக்கியமான செய்தியுடன், அவருடைய கருத்துக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நிகழ்ச்சியைத் தொடங்கிய சாய் துர்கா தேஜ், அனைவருக்கும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக ஓட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்..,“அனைவரும் ஹெல்மெட் அணியுங்கள். வேகமாக ஓட்டாதீர்கள். பாதுகாப்பாக ஓட்டுங்கள்,”என்று கூறிய அவர், தனது உயிருக்கு ஆபத்தான விபத்துக்குப் பிறகு வாழ்க்கை குறித்து தன் கண்ணோட்டம் மாறியதை வெளிப்படுத்தினார்.
“அந்த விபத்துக்குப் பிறகு எனக்கு நிறைய சவால்கள் வந்தது. ஒரு கட்டத்தில் சரியாக பேச முடியாத நிலையும் வந்தது. அப்போது நான் தினமும் உடற்பயிற்சி செய்து, புத்தகங்கள் வாசித்தேன். இப்போது எல்லாரிடமும் சொல்ல விரும்புவது ஒன்றே — ‘பாதுகாப்பே எப்போதும் முதன்மையானது.’”
அவர் தனது தொடக்கக் காலப் போராட்டங்களை நினைவுகூர்கையில்..,
“நான் என் ப்ரொஃபைல் எடுத்துக்கொண்டு பல ஆபீசுகளுக்குப் போனேன். சிலர் என் போட்டோவை பயன்படுத்தி நிலக்கடலை சாப்பிட்டார்கள்! அப்படியொரு நேரத்தில் மஞ்சு மனோஜ் அவர்களின் ஆபீசில் இருந்தபோது வைகுண்டம் யு.வி.எஸ். சௌதரி அவர்கள் தான் என்னை முதன் முதலில் தேர்ந்தெடுத்தார்.— அப்படித்தான் ‘ரே’ படம் ஆரம்பமானது. பண பிரச்சனைகள், தாமதங்கள் வந்தாலும் நான் என் கனவை ஒருபோதும் கைவிடவில்லை.”
அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய ஊக்கமாக இருப்பவர் பவன் கல்யாண் என்று சாய் துர்கா தேஜ் பெருமையுடன் கூறினார்..,
“பவன் கல்யாண் அவர்கள் எனக்கு ஒரு குருவைப் போல. சிறுவயதிலிருந்து அவர் என்னை நடிப்பு, நடனம், ஜிம்னாஸ்டிக்ஸ், கிக் பாக்சிங் ஆகிய எல்லாவற்றிலும் வழிகாட்டி வந்திருக்கிறார். எனக்குப் பிடித்த ஆசிரியர் மாதிரி அவர் எப்போதும் என்னை ஊக்கப்படுத்துபவர்.”
சிரமங்களை எப்படி சமாளிப்பீர்கள் என்ற கேள்விக்கு அவர் சிரித்தபடி பதிலளித்தவர்.., “நான் எந்த சூழ்நிலையையும் லைட்டாகவே எடுத்துக்கொள்கிறேன். அதிகமாக சீரியஸாக நினைப்பதில்லை. கடினமான தருணங்களிலும் நான் சிரித்தபடியே முன்னேறுகிறேன். எனக்கு விபத்து நடந்த பிறகு ‘நான் கோமாவில் இருந்தேன்’ என்று சொல்லவில்லை — ‘நான் ஹாஸ்பிட்டலுக்கு ரிலாக்ஸ் பண்ணிக்க போயிருந்தேன்’ என்று தான் சொன்னேன்!”
சினிமா பற்றி பேசும்போது அவர் கூறியதாவது..? “எனக்கு ‘ரிபப்ளிக்’ படம் மிகவும் பிடிக்கும், குறிப்பாக அதன் கிளைமேக்ஸ். அப்படி ஒரு சமூக அர்த்தமுள்ள கதைகள் மீண்டும் கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன். ஆதார் கார்டை சமூக ஊடகக் கணக்குகளுடன் இணைப்பது அனைவருக்குமான பொறுப்பு என்று நம்புகிறேன்.”
கார்களை மிக விரும்பும் சாய் துர்கா தேஜ், தனது கனவு வாகனத்தை குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்..,“எனக்கு என் ராயல் என்ஃபீல்டும், மஹிந்திரா தார்- காரும் ரொம்பவும் பிடிக்கும். ஆனால் என் கனவு கார் 1968 ஷெல்பி GT 500 மஸ்டாங்க். ஒருநாள் அதை கண்டிப்பாக வாங்குவேன்.”
தனது நேர்மை, தாழ்மை, உறுதியின் மூலம், சாய் துர்கா தேஜ் திரையுலகத்திலும் வாழ்க்கையிலும் உண்மையான ஹீரோவாக ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறார் — உண்மையான ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் தங்கள் மனப்பாங்கினாலும் மக்களை ஊக்கப்படுத்துவதை அவர் நிரூபித்துள்ளார்.