Breaking
January 11, 2025

deccanwebtv

விஜய்ஆண்டனிநடிப்பில் “ஹிட்லர்”

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர்திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

சென்னை 16 செப்டம்பர் 2024 செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”.

வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

தயாரிப்பாளர் ராஜா பேசியதாவது..,

செந்தூர் பிலிம்ஸின் 7 வது திரைப்படம் இது, கோடியில் ஒருவன் படம் நல்ல வரவேற்பைக் குவித்தது.

விஜய் ஆண்டனி நடிப்பில் இந்தப்படமும் கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் பெறும். இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் அற்புதமான இசையைத் தந்துள்ளார்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடினமான உழைப்பைத் தந்துள்ளனர்.

இப்படத்தை முன்பே வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தோம், ஆனால், விஜய் ஆண்டனி சாருக்கு எதிர்பாரா விதமாக விபத்து நடைபெற்றது. யாராயிருந்தாலும் ஒரு வருடம் வரமாட்டார்கள், அதைத்தாண்டியும் அவர் ஒரு மாதத்தில் வந்து எங்களுக்காக நடித்தார். ரிலீஸ் வரை, பிஸினஸ் முதற்கொண்டு உறுதுணையாக இருந்தார். இயக்குநர் தனா மிகக் கடினமான உழைப்பாளி, அற்புதமாகப் படத்தை உருவாக்கியுள்ளார்.

கௌதம்மேனன் சார் எங்களுக்காக வந்து நடித்துத்தந்தார். படம் மிக நன்றாக வந்துள்ளது.

இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது..,

இப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு தந்த, இசையமைப்பாளர், இயக்குநருக்கு என் நன்றிகள்.

எனக்கு நிறையப் படங்களில் தொடர்ந்து வாய்ப்பு தரும் விவேக் மெர்வினுக்கு நன்றிகள்.

என் பாடலை விஜய் ஆண்டனி சார் பாடியிருப்பது எனக்குப் பெருமை, இப்படிப் பட்ட மிகச்சிறந்த குழுவில் நானும் இருப்பது மகிழ்ச்சி, அனைவருக்கும் நன்றி.

இயக்குநர், நடிகர் தமிழ் பேசியதாவது..,

தயாரிப்பாளர் ஒரு ஹீரோவைப்பார்த்து மாமனிதன் எனச் சொல்கிறார் என்றால், அவர் எத்தனை நல்லவராக இருக்கிறார் என்பது புரிகிறது.

விஜய் ஆண்டனி சார், எப்போதும் தயாரிப்பாளரின் ஹீரோவாக இருக்கிறார். எங்களுக்கும் வாய்ப்பு தாருங்கள் சார், இயக்குநர் தனா தனக்கு என்ன வேண்டுமோ, அதைத் தெளிவாக எடுத்து விடுவார், எனக்கு இப்படத்தில் நல்ல ரோல் தந்துள்ளார்.

இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி.

நடிகர் விவேக் பிரசன்னா பேசியதாவது..,

இயக்குநர் தனா மணிரத்னம் சாரிடம் இருந்து வந்தவர், இவரிடம் ரைட்டிங் இன்னும் பலமாக இருக்கும், படத்தை அருமையாக எடுத்துள்ளார்.

இசையில் விவேக் மெர்வின் நல்ல பாடல்கள் தந்துள்ளார்கள்.

விஜய் ஆண்டனி சார் எப்போதும் கதைக்காக மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கிறார், அதனால் தான் எல்லா இயக்குநருக்கும் பிடித்த நடிகராக இருக்கிறார்.

கௌதம் மேனன் சார் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் மாதிரி திரையில் ஸ்டைலாக நடிக்க ஆசை, இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…,

தனா சாருக்கும், ராஜா சாருக்கும் நன்றி.

ஒரு நாள் போன் செய்து, இந்த மாதிரி ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டுமெனக் கேட்டார்கள், நானும் சரி எனச் சொல்லிவிட்டேன், ஆனால் பிருந்தா மாஸ்டர் பாட்டு கேட்டீர்களா எனக்கேட்டார், அப்போது தான் பாட்டு கேட்டேன்.

ஸ்பீட் சாங், நிறைய பீட் இருந்தது, எனக்குப் பயமாக இருந்தது.

தனா சார் தைரியம் தந்து ஆட வைத்தார். இந்தப்பாடல் கண்டிப்பாகப் பிடிக்கும்.

படம் அருமையாக எடுத்துள்ளார். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

பாடலாசிரியர் கிருத்திகா பேசியதாவது..,

இயக்குநர் தனா எனக்கு நெருங்கிய நண்பர். எனக்கு போன் செய்து, ஒரு ஐட்டம் சாங் எழுதனும் என்றார்.

ஒரு பெண்ணிடம் கூப்பிட்டு, ஐட்டம் சாங் விரசமில்லாமல் எழுதச் சொல்வதே, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இப்படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் நான் எழுதியுள்ளேன்.

உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

ஸ்டண்ட் மாஸ்டர் முரளி பேசியதாவது..,

தயாரிப்பாளர் ராஜா சார், இயக்குநர் தனா இருவருக்கும் நன்றி.

எனக்கு இந்தப்படத்தில் உறுதுணையாக இருந்து, ஆக்சன் காட்சிகளை நன்றாகச் செய்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி.

எனக்கு ஆதரவாக இருந்த ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர் இருவருக்கும் நன்றிகள். கௌதம் மேனன் சார் படத்தில் வேலை உதவியாளனாகப் பார்த்திருக்கிறேன், அவரை இந்தப்படத்தில் வேலை வாங்கியது மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.

கலை இயக்குநர் உதயகுமார் பேசியதாவது

செந்தூர் பிலிம்ஸில் எனக்கு இது மூன்றாவது படம், ராஜா சார் எனக்குத் தொடர்ந்து வாய்ப்பு தருகிறார் நன்றி.

என் குரு கதிர் சார் தான் இந்தப்படம் செய்வதாக இருந்தது.

கதை கேட்டேன், பிரம்மாண்டமாக இருந்தது, இயக்குநர் கேட்டதை, இந்தப்படத்தின் கலர் பேலட்டுக்கு ஏற்றவாறு செய்து தந்தேன், முதல் நாளே பாராட்டினார்.

இயக்குநர் நல்ல ஆதரவு தந்தார். அனைவருக்கும் நன்றிகள்.

எடிட்டர் சங்கத்தமிழன் பேசியதாவது..,

வானம் கொட்டட்டும் படத்திலிருந்து, தனாவுடன் வேலை செய்து வருகிறேன்.

மிக நல்ல நண்பர், மிகச்சிறந்த இயக்குநர். எனக்குப் பிடித்த நடிகர் விஜய் ஆண்டனி, அவர் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி.

கௌதம் மேனன் சார் கேரக்டர், இந்தப்படத்தில் ரொம்ப நன்றாக இருக்கும்.

படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் மெர்வின் பேசியதாவது..,

ஹிட்லர் எங்க ரெண்டு பேருக்கும் மிக முக்கியமான படம், விவேக் முக்கிய வேலையால் வர முடியவில்லை.

இப்படி ஒரு நல்ல கமர்ஷியல் படத்தில் எங்களைத் தேர்ந்தெடுத்தற்கு இயக்குநருக்கு நன்றி.

படம் ஆரம்பித்த முதல் நாளே, எங்களை பாராட்டி ஊக்கம் தந்த, தயாரிப்பாளர் ராஜாவுக்கு நன்றி.

படத்தை முடித்து, படம் திருப்தியாக இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

விஜய் ஆண்டனி சார் அருமையாக நடித்துள்ளார்.

கௌதம் மேனன் சார் ரசிகன் நான், அவர் இந்தப்படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் தியேட்டரில் பார்த்து ரசிக்கும்படியான ஆக்சன் கமர்ஷியல் படமாக இருக்கும். நன்றி.

நடிகை ரியா சுமன் பேசியதாவது..,

இந்தப்படம் மனதுக்கு மிக நெருக்கமான முக்கியமான படம்.

எனக்கு மிக நல்ல ரோல் தந்த தனா சாருக்கு நன்றி.

விஜய் ஆண்டனி சார் எப்படி இப்படி முழுக்க பாஸிடிவிடியுடன், நல்ல மனிதராக இருக்க முடியுமென ஆச்சரியப்பட்டுள்ளேன்.

இப்படத்தில் உங்களுடன் நடித்தது மகிழ்ச்சி.

கௌதம் சார் படங்கள் அவ்வளவு பிடிக்கும் அவருடன் நடித்தது மகிழ்ச்சி.

இப்படத்தில் உடன் நடித்த, மற்றும் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

இப்படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் கௌதம் மேனன் பேசியதாவது..,

இந்தப்படம் பண்ண ரெண்டே காரணம் தான்.

தனா, அவர் விஜய் ஆண்டனி நீங்கள் தான் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டார் என்று சொன்னார்.

பொதுவாக நான் நடிக்கத் தயங்குவேன், எனக்கு இந்தப்படத்தில் அவ்வளவு கம்பர்டபிளாக வைத்துக் கொண்டார்கள்.

விஜய் ஆண்டனி ஆசைப்பட்டதால் தான் இந்தப்படத்தில் நடித்தேன் நன்றி.

இந்தப்படத்தில் மிகப்பெரிய கதை இருக்கிறது,

அதை தனா இயக்கிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

விஜய் ஆண்டனி விபத்தைத் தாண்டி ஒரே மாதத்தில் நடிக்க வந்தது வியப்பாக இருந்தது.

இந்தப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி.

ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இப்படம் இருக்கும்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது

கௌதம் சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி.

முன்பு அவர் படத்தில், இசையமைக்க வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறேன், இந்தப்படத்தில் அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி.

தனா மிகச்சிறந்த இயக்குநர் படத்தை மிக அற்புதமாக எடுத்துள்ளார்.

ரியா உங்களின் மன்மத லீலை பார்த்தேன், அந்தளவு இல்லை என்றாலும் இதில் ரொமான்ஸ் இருக்கிறது.

வந்த சில படங்களில், நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவது, ஆச்சரியமாக இருக்கிறது.

விவேக் மெர்வின் ரசிகன் நான், உங்கள் இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.

எடிட்டர் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், விவேக் பிரசன்னா எல்லாம் நன்றாக நடித்துள்ளார்கள்.

ராஜா பல தடைகளைக் கடந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப்படத்தில் நாங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை, எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான ஜாலியான, ஆக்சன் படமாக இப்படம் இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் தனா பேசியதாவது..,

இந்தப்படம் ஒரு நல்ல ஆக்சன் படம், ஒரு பக்கம் விஜய் ஆண்டனி சார், இன்னொரு பக்கம் கௌதம் மேனன் சார் கொஞ்சம் தயக்கமாக இருந்தது,

ஆனால் அவர்கள் தந்த ஒத்துழைப்பில் தான், இந்தக்கதையைச் சிறப்பாகச் செய்தேன்.

ராஜா சார் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார்.

நடிகர்கள் மற்றும் குழுவினர் முழு உழைப்பைத் தந்துள்ளனர்.

இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் கம்ர்ஷியல் ஆக்சன் படமாக இருக்கும்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார்.

இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் விவேக், மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார்.

Chendur film international சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

Tata Motors to empower customers in Chennai to unlock greater business profitability at DeshKaTruck Utsav

•       First-hand experience of Tata Motors’ latest range of trucks

• Expert guidance to optimise fuel efficiency, reduce total cost of operations, and boost profitability

Chennai, 18 September 2024: Tata Motors, India’s largest commercial vehicle manufacturer, is set to host Desh Ka Truck Utsav – an immersive daylong event in Chennai on 19th September 2024. The event is designed to empower the trucking community in Chennai with actionable insights and hands-on experience with Tata Motors’ latest range of trucks and value added services, all aimed at enhancing profitability and delivering a low total cost of ownership (TCO).

During the event, attendees will receive expert guidance on enhancing fleet performance, improving fuel efficiency, and achieving greater profitability. They will also benefit from in-depth vehicle demonstrations and insights into Tata Motors’ comprehensive after-sales support. This includes vehicle maintenance programs, fleet management solutions, annual maintenance packages, and 24/7 roadside assistance through the Sampoorna Seva 2.0 initiative – designed to equip customers with detailed information to drive long-term success with their fleets. Additionally, the company will honour also key customers for their partnership and support, making the overall experience more rewarding. 

Mr. Rajesh Kaul, Vice President & Business Head – Trucks, Tata Motors Commercial Vehicles, sharedTata Motors is committed to understanding and addressing customers’ evolving needs. Desh Ka Truck Utsav offers a vital platform for us to engage directly with them, highlighting our latest digital solutions. The event allows us to not only showcase our robust truck range and value-added services, but also demonstrate their real-world impact on customers’ long-term profitability and success. Our cutting-edge solutions are designed to make customers’ businesses future-ready, ensuring they remain ahead in an evolving landscape. We look forward to interacting with our customers and partners to strengthen our collaboration and achieve shared success.”

Tata Motors offers the widest range of trucks, with cabin options including the LPT, Ultra, Signa and the Prima. The trucks are available with fully-built body options, designed to meet the diverse demands of goods movement, including market load, agriculture, cement, iron & steel, container, petroleum, chemical, water tankers, LPG, FMCG, construction, mining, and municipal applications among others. The range is equipped with Fleet Edge, Tata Motors’ connected vehicle platform for efficient fleet management. Engineered with advanced technology for durability and rigorously tested to meet specific customer needs, the vehicles are supported by Tata Motors’ extensive network. With over 2500 service points nationwide, including 220 in Tamil Nadu, the company ensures holistic support and the highest vehicle uptime.

விழாவில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது

சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சேவகர்’.இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் ஊடகத்தினர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது.

இப்படத்தை திரையரங்குகளில் ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனத்தின் சார்பில் வெளியிடும் விநியோகஸ்தர் ஜெனிஷ் விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். அவர் பேசும்போது,

” இந்தப் படத்தின் அறிமுக விழாவைப் பெரிதாக நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் ஆசைப்பட்டார். அதன்படி இன்று அரங்கு முழுதும் நிறைந்த பார்வையாளர்களோடு இந்த விழா நடைபெறுகிறது. இந்தப் படத்தின் கதை விஜய்க்காக உருவாக்கப்பட்டது. அவரை வைத்து இயக்குவதற்காக எழுதப்பட்ட கதை இது என்று கூறும் போது, கதை எப்படிப்பட்டது என்று புரியும். அப்படிப்பட்ட கதையில் பிரஜின் நடித்துள்ளார்.
சென்சாரிலேயே இந்தப் படத்தைப் பாராட்டினார்கள்.
இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கும்படியான படமாக இருக்கும் .எந்த நல்ல முயற்சிக்கும் ஆதரவு தரும் ஊடகங்கள் இதற்கும் ஆதரவு தர வேண்டும். ” என்றார்.

தயாரிப்பாளர் ராஜன் ஜோசப் தாமஸ் பேசும்போது,

” எனக்கு சினிமா மீது மிகவும் ஆர்வம் ஈடுபாடு உண்டு. அதனால் கேரளாவில் இருந்து இங்கே வந்து சினிமாவில் நுழைய வேண்டும் என்று பல நாட்கள் அலைந்தேன்.
ஒரு துணை நடிகராகக் கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு நன்றாகப் படித்து அமெரிக்கா சென்றேன். அங்கே தபால் துறையில் 28ஆண்டுகள் வேலை பார்த்தேன். இப்போது ஓய்வு பெற்றுவிட்டு அதே சினிமா ஆர்வத்துடன் தான் இந்தியா திரும்பினேன். அந்த ஆர்வத்தை அணைய விடாமல் வைத்திருந்தேன். மலையாளத்தில் சில படங்கள் தயாரித்தேன், நடித்தேன். இங்கே பாக்யராஜ் சார் வந்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி.
பாக்யராஜ் சாரின் அந்த 7 நாட்கள் என்னை மிகவும் கவர்ந்த திரைப்படம். அவர் இங்கே வந்ததில் எனக்குப் பெருமை.
ஏனென்றால் அவர்களது மனைவி பூர்ணிமா அவர்கள் மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் காலத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் ஆக விளங்கியவர்.அவரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.அவர் படப்பிடிப்பில் இருப்பதால் இங்கே வர முடியவில்லை.

சினிமா என்பது என் கனவு.எனக்குப் பணத்தைவிட நல்ல படம் எடுப்பது தான் முக்கியம். இந்தப் படத்தின் மூலம் சம்பாதித்தால் வேறு பெரிய நல்ல படம் செய்வேன். எனவே மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

‘சேவகர்’ படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபிநாத் பேசும்போது ,

“எனக்கு தமிழ் நாட்டின் மீது, திரை உலகத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு . நல்ல நல்ல புதிய முயற்சிகளை வரவேற்பார்கள். அந்த நம்பிக்கையில் தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். படத்தைப் பற்றி நான் பெரிதாகப் பேச விரும்பவில்லை .என் படம் பேசப்பட வேண்டும் என்று தான் நான் நினைக்கின்றேன்” என்று கூறினார்.

கதைநாயகி ஷானா பேசும்போது,

” எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் தெரியும் .முதல் படமாக இந்தப் படம் அமைந்தது மிக்க மகிழ்ச்சி அனைவரும் ஆதரவு தர வேண்டும் “என்றார்.

படத்தின் நாயகன் பிரஜின் பேசும் போது,

” ஒவ்வொரு ஊரிலும் ஊருக்கு நல்லது செய்யும் சேவகர்கள் நாலு பேர் இருப்பார்கள்.அவர்கள் ஊருக்கு எதாவது நல்லது செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஒரு குழுவாக இருப்பார்கள். அப்படி நல்லது செய்பவர்களைத் தடுக்கும் தீய சக்திகள் இருப்பார்கள். அப்படி நல்லது செய்யும் சேவகனும் அவனை தடுக்கும் தீய சக்திகளையும் பற்றிச் சொல்வது தான் இந்தப் படம். அப்படி ஒரு பாத்திரத்தில் தான் நான் நடித்துள்ளேன்.

இதில் பலரும் படத்திற்காக உழைத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள்.
ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்று தான் நானும் சினிமாவில் 18 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது,

“இந்தச் சிறிய படத்திற்கு இவ்வளவு பெரிய கூட்டம் வந்தது ஆச்சரியமாக உள்ளது. பிரஜின் எனக்கு பதினைந்து ஆண்டு காலமாக நட்புள்ள தம்பி. நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தபோது தூங்காமல் இருப்பதற்காக இரவில் ஆட்டோ ஸ்டாண்டில் கதை சொல்வேன் . அப்படி சொன்ன ஒரு கதை தான் கன்னி மாடம். என் மனநிலையுடன் தான் பிரஜினும் இருப்பதாக உணர்கிறேன். ஆனாலும் அவர், சரியான இடத்திற்கு வரவில்லை, வரவேண்டும். நான் கன்னிமாடம் படத்திற்கு பிரஜினை மனதில் வைத்து தான் இருந்தேன். தயாரிப்பாளரிடம் கூறியிருந்தேன். அவரும் சமதித்திருந்தார்.ஆனால் அந்தப் படத்திற்காக துறுதுறுவென உழைத்த ஸ்ரீராமுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தேன். இப்போது சொல்கிறேன் எனது அடுத்த படத்தில் பிரஜினைப் பயன்படுத்திக் கொள்வேன். இந்த படத்திற்காகத் தயாரிப்பாளர் பணத்துக்கு எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நேரில் பார்த்தேன்.

சிறிய படங்களுக்கு இந்த சினிமாவில் வளர்ந்தவர்கள் ஆதரவு கொடுப்பதில்லை.இந்த நிலையில் இயக்குநர் பாக்யராஜ் அவர்கள் எல்லா சின்ன படங்களுக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார். அதேபோல் கே. ராஜன் சார் அவர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார் .இப்படி உதவி செய்கிற மனநிலையில் இருக்கும் இருவரும் இங்கே வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த அவை சிறக்கும்.

இது பற்றி நான் வெற்றிமாறன் அவர்களிடம் கேட்டபோது அவர் எனது அடுத்த ‘சார்’ படத்திற்கு ஆதரவு கொடுத்தார். வெற்றிமாறன் வழங்கும் சார் என்றவுடன் அந்த படத்தின் உயரம் எங்கோ சென்று விட்டது. எனது படத்தின் விழாவுக்கும் அவர் வருகிறார்.

ஊடகங்கள் சிறிய படங்களின் குறைகளை அதிகம் சொல்லாமல் ஊக்கப்படுத்த வேண்டும். ” என்றார்.

கதை வசனகர்த்தா வி. பிரபாகர் பேசும் போது,

“சின்ன படம் பண்ணும் தயாரிப்பாளர் தான் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை கொடுக்கிறார்கள் . பல குடும்பங்களை வாழ வைக்கிறார்கள் .இந்த தயாரிப்பாளர் தமிழ் பார்வையாளர்களை நம்பி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இயக்குநரின் நம்பிக்கையை அறிய முடிந்தது .இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் பேசும்போது,

“தமிழ் ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாட்டுக்குப் படம் எடுக்க, கேரளாவில் இருந்து வந்திருக்கும் இவர்களை வரவேற்கிறேன். அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். அவர்களது துணிச்சலைப் பாராட்டுகிறேன் .

ஒரு திரைப்படம் எடுக்க இயக்குநரை விட, நடிகர்களை விட தயாரிப்பாளர் முக்கியம்.

தமிழில் ஆண்டுக்கு 200 படங்கள் வந்தாலும் 150 தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். இதுதான் நிலைமை. இதற்கு யார் காரணம்?

25 நாட்களில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் ராமநாராயணன் குறுகிய காலத்தில் நன்றாகத் திட்டமிட்டுப் படத்தை எடுத்து அதிக அளவில் வெற்றிகளைக் கொடுத்தவர். 20 அல்லது 28 நாட்களில் ஒரு படத்தை முடித்து விடுவார்.ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வேலைகள் நடந்து கொண்டிருக்கும். அவர் கதாநாயகனை நம்பாமல் விலங்குகளை நம்பிப் படம் எடுத்தார் ,வெற்றி பெற்றார்.

எந்த ஒரு நடிகர் தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த நடிகர் வெற்றி பெறுவார். அந்த வகையில் பிரஜினுக்கு நல்ல வெற்றி காத்திருக்கிறது. அண்மைக்காலமாகப் பெரிய கதாநாயகர்கள் படங்கள் எல்லாம் பெரிதாக ஓடவில்லை. சிறிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன.
குட் நைட், டாடா, போர் தொழில் இப்போது வந்துள்ள வாழை போன்ற சிறிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. தமிழ் மண்ணை அதன் பண்பாடு கிராமியத்தை சரியாகச் சொன்னால் மக்கள் ஏற்கத்தான் செய்கிறார்கள். இந்த சேவகர் படம் நிச்சயம் வெற்றி பெறும். தயாரிப்பாளர் மனதிற்கும் இயக்குநரின் நம்பிக்கையும் உரிய பலன் கிடைக்கும்.

இப்போது அதிகாரிகளிடம் 70 சதவீதம் கையூட்டு வாங்குகிறார்கள். நேர்மையானவர்கள் 30 சதவீதம் தான் இருக்கிறார்கள். அக்கிரமம் நடக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் காரணம்.
எதற்கெடுத்தாலும் முதலமைச்சரைக் குறை கூறுகிறார்கள். இவனுக்கு பஸ் தாமதமாக வந்தால் கூட முதலமைச்சர் என்ன செய்கிறார் என்கிறான். எல்லாவற்றையும் முதலமைச்சர் எப்படி கவனித்துக் கொண்டிருக்க முடியும்? சம்பந்தப்பட்ட இலகா அதிகாரிகள் தான் அதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் .முதல்வரும் எத்தனையோ சந்திப்பு போட்டு அதிகாரிகளிடம் பேசுகிறார். சம்பந்தப்பட்டவர்கள் சரியாகப் பணியாற்ற வேண்டும்.

சமுதாய சீர்கேட்டைத் தட்டிக் கேட்கும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.
அக்கிரமம் நடைபெறும் போது நாம் கண்டிக்க வேண்டும். தண்டிப்பதை அரசு பார்த்துக் கொள்ளும். இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.

இயக்குநர் மோகன் ஜி பேசும்போது,

‘ எனது முதல் படத்தின் கதாநாயகன் பிரஜின். அவருக்காகத் தான் நான் இங்கே வந்தேன் .அவருக்கு நல்லதொரு வெற்றி கிடைக்க வேண்டும் .அவருடைய உழைப்புக்குப் பெரிய வெற்றி காத்திருக்கிறது. இந்தப் படத்தை மலையாளத்தில் வந்து இயக்குநர் இயக்கி உள்ளார். கேரளாவில் உள்ள அரசியல் வேறு, தமிழ்நாட்டு அரசியல் வேறு. இதில் எப்படி செய்திருக்கிறார் என்று பார்ப்போம்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்கிறது. இங்கே அப்படி இல்லை. இப்போது இங்கே கம்யூனிசம் அதிகம் பேசப்படவில்லை. இளைஞர்கள் கம்யூனிசம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். தோழர் ஜீவா என்ன செய்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த படம் வெற்றி பெற வேண்டும் ” என்று கூறி வாழ்த்தினார்.

இயக்குநர் கே பாக்யராஜ் பேசும்போது,

” தமிழ் ஆட்களை நம்பி இங்கே படம் எடுக்க வந்திருக்கும் கேரள தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. எங்கிருந்து வந்தாலும் தமிழ் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள். இங்கே அப்படிப்பட்ட ஆட்கள் தான் இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் இல்லை என்றால் இயக்குநர் இல்லை நடிகர் இல்லை என்று கே. ராஜன் சொன்னார் .கதை இல்லை என்றால் தயாரிப்பாளரே இல்லை .கதை இல்லை என்றால் சினிமாவில் எதுவுமே முடியாது.

ஒருவருக்கு சினிமா பிடித்து விட்டது என்றால் அது விடவே விடாது. இந்தத் தயாரிப்பாளர் அப்படித்தான் இங்கே வந்திருக்கிறார் .

அவர்
பல ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு மீண்டும் இங்கே வந்திருக்கிறார்.
இந்தப் படத்தை 25 நாட்கள் சிரமப்பட்டு முடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு செய்வது
எத்தனை நாட்கள் என்பது முக்கியமல்ல. 16 வயதிலே படம் கூட 32 நாட்களில் எடுக்கப்பட்டது தான். எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது .எவ்வளவு நாட்கள் என்பதை வைத்துப் படத்தைப் பற்றி நாம் முடிவு செய்ய முடியாது. அப்படித் திட்டமிட்டு இந்த படத்தை திட்டமிட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளரை இந்தப் படம் காப்பாற்றும்.

சினிமா ஆசை யாரையும் விடாது என்பது பற்றி யோசிக்கும் போது ஒன்று நினைவு வருகிறது.

ஏற்காட்டில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது ஒருவரைச் சந்தித்தேன். அவர் ஒரு டாக்டர் அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு உள்ளவர் .அவருக்கு இரண்டு பிள்ளைகள்.
அவர் வீட்டில் மிருதங்கம் வைத்து வாசித்துக் கொண்டு ஏதாவது செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

அவர் சினிமா ஆர்வத்தில் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தபோது
அவர் படிப்பை பாதியில் விட்டு விட்டு ஓடி வந்தவர். அப்பா அவருக்காக பெரிய ஹாஸ்பிடல் கட்டியிருந்தார். ஒரு வழியாக அவரைச் சமாதானப்படுத்தி படிக்க வைத்து டாக்டர் ஆக்கி இருக்கிறார். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. அவர் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு நான் ராசுக்குட்டி படத்தில் ஐஸ்வர்யாவுக்கு அப்பாவாக நடிக்க வைத்தேன்.அவருக்கு அதில் மிகவும் மகிழ்ச்சி – அதுவும் ஐஸ்வர்யாவுக்கு அப்பாவாக நடித்தது மிக மிக மகிழ்ச்சி.

அதே போல் லால்குடி முனுசாமி என்பவர் இன்னொரு ரசிகர் .அவரை எல்லாரும் ஊமை என்பார்கள். அவர் என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வருவார்.உதட்டு அசைவை வைத்து என்ன பேசுவது என்று கண்டுபிடிக்கும் லிப் ரீடிங் நன்றாக வரும். சரியாகச் செய்வார் .அவரை பவுனு பவுனுதான் படத்தில் டி டி ஆர் ஆக நடிக்க வைத்து என்னிடமே பேச வைப்பது போல் ஒரு காட்சியில் நடிக்க வைத்தேன்.நான் எழுதிக் கொடுத்தபடியே உதட்டு அசைவு செய்தார்.டிக்கட் இல்லாமல் வந்திருக்கிறாயே என்று என்னுடன் அவர் பேசுவது போன்ற காட்சி. அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து படத்தில் காட்டினோம்.
படமாக வந்த போது ஊரில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியம். அவர் எப்படிப் பேசினார் என்று .இப்படி சினிமாவில் நிறைய நிஜ கேரக்டர்களைச் சந்தித்து இருக்கிறேன் .

இங்கே இசையமைப்பாளராக இருக்கும் இந்த மோகன் எனக்கு சிங்கு என்றுதான் பழக்கம். பல ஆண்டுகளாக கோடம்பாக்கத்தில் வலம் வந்தவர். ஏவிஎம் ஸ்டுடியோவையே சுற்றிச் சுற்றி வருவார். எப்படியாவது ஒரு இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார். பல ஆண்டுகள் இருந்தவருக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நான் அண்மையில் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்திருந்தேன். படத்தின் பெயர் 35 .அதில் பெரிய கதாநாயகனா பெரிய நடிகர்களோ கிடையாது. குழந்தைகள் சம்பந்தப்பட்ட கதை .சின்ன சின்ன சராசரியான நடிகர்களை வைத்து தான் எடுத்திருந்தார்கள்.

அமீர்கான் எடுத்தாரே தாரே ஜமீன்பர், அது போல
ஒரு சின்ன பையனை மையமாக வைத்து தான் அந்தக் கதை நகரும் .ஆனால் அந்தப் படம் இப்போது வெளியாகி பெரிய வெற்றி பெற்றுள்ளது. பெரிதும் பேசப்படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் மக்கள் நல்ல கதையைப் பார்க்கிறார்கள் .

பொதுவாக எப்போதும் தெலுங்கில் பெரிய ஐட்டம் சாங் , சண்டைக் காட்சிகள், பெரிய ஸ்டார்கள் என்று இருந்தால்தான் படம் பார்ப்பார்கள் .இப்போது அவை இல்லாமல் கதையைப் பார்க்கிற பழக்கம் தெலுங்கு திரை உலகத்திலேயே வந்துவிட்டது .அந்தப் படத்தை தமிழில் வெளியிடும் நோக்கத்தில் தமிழில் பேச வைத்து எடுத்தார்கள். விரைவில் தமிழில் வெளியாகும்.

நல்ல படமாக இருந்தால் தெலுங்கு ரசிகர்களும் பார்ப்பார்கள். தமிழ் ரசிகர்களும் பார்ப்பார்கள். தமிழில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்.

நல்ல படம் எடுத்து தமிழ் ரசிகர்களை நம்பினால் கை கொடுப்பார்கள். நன்றாக இருந்தால் வரவேற்பு தருவார்கள் .இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று கூறினார் .

விழாவில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது .

ஃபைனான்ஸியல் திரில்லர் திரைப்படம் “ஜீப்ரா” !!

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யராஜ், பிரியா பவானி சங்கர் இணையும் பான் இந்திய திரில்லர் திரைப்படம் “ஜீப்ரா”!!

தீபாவளி வெளியீடாக 2024 அக்டோபர் 31 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாகப் பன்மொழிகளில் வெளியாகிறது “ஜீப்ரா” !!

மூன்று மாநிலங்கள், மூன்று கதைகள், பிரம்மாண்ட பான் இந்திய திரில்லர் திரைப்படம் “ஜீப்ரா”

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜீப்ரா”. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 2024 அக்டோபர் 31 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது.

தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

ZEE தமிழ் தொலைக்காட்சியில், பெரும் வெற்றிபெற்ற “செம்பருத்தி” சீரியலின் தயாரிப்பாளர்கள், தங்களது முதல் திரைப்படமாக இப்படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும், நிதிக்குற்றங்களை ஆராயும் இப்படத்தின் கதைக்களம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மூன்று வெவ்வேறு கதைகள் ஒன்றாக இணையும் இப்படத்தில், தென்னிந்தியத் திரைத்துறையின் மூன்று முக்கிய நட்சத்திரங்கள், ஒவ்வொரு கதையிலும் முதன்மைப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கு சினிமாவில் இருந்து சத்யதேவ், கன்னடத்தைச் சேர்ந்த தனஞ்சயா என நட்சத்திர நடிகர்கள் இப்படத்திற்காகக் கைகோர்த்திருக்கின்றனர்.

இவர்களுடன், பிரபல நடிகர்களான பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில் வர்மா, சுரேஷ் மேனன் மற்றும் சத்யா அக்கலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

சலார் மற்றும் கேஜிஎஃப் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது அதிரடியான பின்னணி இசை, இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.

இப்படத்தை ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம் மற்றும் தினேஷ் சுந்தரம் இணைந்து, மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.

நம்மைச் சுற்றி நிகழும் பெரும் நிதிக்குற்றத்தின் நாம் அறிந்திராத பக்கங்களைச் சொல்லும் ஒரு அதிரடி சஸ்பென்ஸ், திரில்லர் அனுபவத்திற்குத் தயாராகுங்கள். ஜீப்ரா தீபாவளி பண்டிகை தினமான அக்டோபர் 31, 2024 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படம் புதிய

ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான ‘தி லெஜெண்ட்’ திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது இரண்டாவது படத்தை அவர் தொடங்கினார்.

தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘காக்கி சட்டை’, ‘கொடி’, உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘கருடன்’ திரைப்படத்தின் இயக்குநருமான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, ‘பாகுபலி’ பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ‘லியோ’ புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் நடிக்க, இதர முக்கிய பாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.

இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தற்போது தொடங்கி அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. தேனியை மையமாக வைத்து துரை செந்தில்குமார் உருவாக்கிய ‘கருடன்’ பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளது.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கம்: துரைராஜ், நிர்வாக தயாரிப்பு: அம்பிகாபதி, உடைகள் வடிவமைப்பு: தீப்தி, புகைப்படங்கள் சுரேஷ், போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ், சண்டை காட்சிகள்: மேத்யூ மகேஷ், தயாரிப்பு நிர்வாகி: சின்னமனூர் சதீஷ், புரொடக்ஷன் மேலாளர்கள்: முனுசாமி, ஆர் எஸ் கோவிந்தராசு.

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தை தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘ஹிட் -3’

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால்போஸ்டர் சினிமா + யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும் ‘ஹிட் : மூன்றாவது வழக்கு’ ( HIT : 3rd Case) எனும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி தனது 32 வது படமான ஹிட் : மூன்றாவது வழக்கு ( HIT : 3rd Case) எனும் திரைப்படத்தில் சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். யுனானிமஸ் புரொடக்ஷன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது. இந்த திரைப்படத்தில் ஹிட் அதிகாரியாக நடிக்கும் நானியின் அபாயகரமான கதாபாத்திரத்தை பற்றி ஒரு கண்ணோட்டத்தை வழங்கும் பிரத்யேக காணொளி மூலம் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியானது.

இதற்கிடையில் தொடர்ச்சியாக பிளாக் பஸ்டர் வெற்றிகளுடன் பயணித்து வரும் நடிகர் நானி, ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் . ஹிட் 2 படத்தின் இறுதியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளபடி ஹிட் அதிகாரியான அர்ஜுன் சர்க்கார் – ஹிட் ( HIT) அதிகாரியாக அவர் நடிப்பார். மேலும் ஹன்டர்ஸ் கமாண்ட் ஆஃப் ஹிட் தேர்ட் கேஸ் (Hunter’s Command. of HIT : 3rd Case எனும் இந்த படத்தில் அவர் மேலும் ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவரது இந்த தோற்றம் பாராட்டை பெற்றிருக்கிறது. மேலும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

இந்த படத்திற்காக நானி தன் புதிய வடிவிலான உடல் தோற்றத்திற்கு மாற்றம் பெற்றுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்திருக்கிறார்கள். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு மிக்கி ஜே. மேயர் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக ஸ்ரீ நாகேந்திர தாங்கலா பணியாற்றுகிறார்.

HIT-3 அடுத்த ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள் :
நானி

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : டாக்டர் சைலேஷ் கொலனு
தயாரிப்பாளர் : பிரசாந்தி திபிர்னேனி
தயாரிப்பு நிறுவனம் : வால்போஸ்டர் சினிமா & யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்
ஒளிப்பதிவு : சானு ஜான் வர்கீஸ்
இசை : மிக்கி ஜே .மேயர்
படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்
தயாரிப்பு வடிவமைப்பு : ஸ்ரீ நாகேந்திர தாங்கலா
நிர்வாக தயாரிப்பாளர் : எஸ் வெங்கடரத்தினம் ( வெங்கட்)
ஒலி கலவை : ஜி . சுரேன்
லைன் புரொடியுசர் : அபிலாஷ் மந்தாதுபு
தலைமை இணை இயக்குநர் : வெங்கட் மட்டிராலா
ஆடை வடிவமைப்பாளர்: நானி கமருசு
எஸ் எஃப் எக்ஸ் : சிங் சினிமா
வி எஃப் எக்ஸ் மேற்பார்வை : வி எஃப் எக்ஸ் டி டி எம் ( VFX DTM)
டி ஐ : B2h ஸ்டூடியோஸ்
வண்ணக் கலவை : எஸ். ரகுநாத் வர்மா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படம்- 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌசல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த காவிய கதையாக உருவாகும் திரைப்படத்திற்கு ‘லவ் அண்ட் வார்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த தலைப்பு வெளியானவுடன் பெரும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.‌ மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த தருணத்தில் படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி அன்று வெளியாகிறது.‌ இந்த அறிவிப்பு உண்மையில் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்.. முற்றிலும் உற்சாகமூட்டும் வகையில் வெளியீடு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி அன்று பிரம்மாண்டமான முறையில் வெளியிட தயாராக உள்ளது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படத்தைப் பற்றிய தகவல்களில் ஆச்சரியமான விசயம் இதுதான். இதனால் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கான எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது . மேலும் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் திறமையான முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌசல் ஆகியோரின் நடிப்பில், உருவாகும் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள்.

‘மூக்குத்தி அம்மன் 2’ வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி ‘

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ பட அப்டேட்

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’ படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் உருவாகிறது. தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ரசிகர்களுக்கு திரையரங்குகளில் புதுவிதமான அனுபவத்தை வழங்குவதற்காக படக்குழுவினர் தெளிவாக திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள். டிவைன் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அஸோஸியேட் ஆகிறது.. மேலும் ஐ வி ஓய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்பிரமணியன் தலைமையிலான பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணை தயாரிப்பாளராக பங்களிப்பு செய்கிறது.

‘அரண்மனை’ பட வரிசையில் வெளியான நான்கு பாகங்களையும் இயக்கி வெற்றி பெற்ற அனுபவம் கொண்ட இயக்குநர் சுந்தர் சி- வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2 ‘எனும் திரைப்படத்தினை இயக்குவதால், இந்தத் திரைப்படமும் நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமையும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் முதல் பாகத்தை விட, பல அற்புதமான திரையரங்க அனுபவ தருணங்களை வழங்கும் வகையில் உருவாகிறது. இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சுந்தர் சி – வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் -நயன்தாரா கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திற்கு பார்வையாளர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

பிரைம் வீடியோ – அதன் அசல் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் நகைச்சுவை இணைய தொடரின் வசீகரமான முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உள்ளார்ந்த கிராமத்தின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த இணைய தொடர் எளிமையானதாகவும், அதே தருணத்தில் பிடிவாதமான கதையம்சத்தின் மூலம் மனதைக் கவரும் வகையிலும் நகைச்சுவையுடன் தயாராகி இருக்கிறது.‌

இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இந்த தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ‘தலை வெட்டியான் பாளையம்’ இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.

முன்னோட்டம் இணைப்பு இங்கே…

மும்பை -செப்டம்பர் 13 2024- இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுது போக்கு தளமான பிரைம் வீடியோ – விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் அசல் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டிருக்கிறது.

இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த இணையத் தொடரை பாலகுமாரன் முருகேசன் கதை எழுதி, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார். எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த நகைச்சுவை இணைய தொடர் – தமிழகத்தின் தொலைதூர கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் தனது புதிய மற்றும் அறிமுகம் இல்லாத சூழலில் சவால்களை எதிர்கொள்ளும்.. மாநகரத்தை சேர்ந்த ஒருவரின் பயணத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. இந்த குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இணைய தொடரில் திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.‌ குறிப்பாக இந்த இணையத் தொடரில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி , பால்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘தலைவெட்டியான் பாளையம்’ பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20ஆம் தேதி அன்று தமிழிலும், ஆங்கில வசனங்களுடனும் பிரத்யேகமாக வெளியாகிறது.‌ ‘தலைவெட்டியான் பாளையம்’ பிரைம் வீடியோவின் உறுப்பினர்களுக்கான பட்டியலின் அண்மைய சேர்க்கையாகும்.‌ இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் ஆண்டிற்கு ₹ 1,499/- மட்டும் செலுத்தி உறுப்பினராக சேரலாம். மேலும் இந்தப் பட்டியலில் சேரும் உறுப்பினர்கள் சேமிப்பு, வசதி மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள்.

தலை வெட்டியான் பாளையத்தின் முன்னோட்டம்… விசித்திரமான கதாபாத்திரங்கள்- எதிர்பாராத சவால்கள் நிறைந்த கிராமத்தில் பயணிக்கும் சித்தார்த்தின் கிராமப்புற வாழ்வியலின் விசித்திரங்களுக்கு ஏற்ப.. பார்வையாளர்களை அவரின் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். கூர்மையான உரையாடல்கள்- நகைச்சுவையான ‘பஞ்ச்’ லைன்கள்- மற்றும் மகிழ்வான தருணங்களுடன் கிராமத்தின் இயல்பான வாழ்வியலை ஆராய்கிறது. அதே தருணத்தில் கிராமப்புற பின்னணியின் நிலவியல் அழகை நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறது.‌ மேலும் இந்த இணைய தொடர் உண்மையான ஆசைகள்- உயர்ந்த லட்சியங்கள்- கருணை- பொறாமை – போன்ற உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகவும், அதே தருணத்தில் எளிய கதையாகவும் அமைந்திருக்கிறது. நடிகர்களின் சிறப்பான நடிப்பும், அவர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்களின் ஆழத்தையும், யதார்த்தத்தையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால் பார்வையாளர்களுக்கு பல பரிணாமங்கள் கிடைக்கின்றன. எம். எஸ். கிருஷ்ணாவின் ஆத்மார்த்தமான மெல்லிசை இந்த இணைய தொடரின் வசீகரத்தை மேலும் உயர்த்துகிறது.‌

இந்த இணைய தொடர் பற்றி இயக்குநர் நாகா பேசுகையில், ” தலை வெட்டியான் பாளையம் கிராமப்புற வாழ்வை பற்றிய ஓர் இதயப்பூர்வமான கதையை விவரிக்கிறது. சமூகம் மற்றும் பாரம்பரியத்தின் முக்கிய கருப் பொருளுடன் நகைச்சுவையையும் கலந்திருக்கிறது. தி வைரல் ஃபீவர் நிறுவனம் மற்றும் பிரைம் வீடியோவுடன் இணைந்து பணிபுரிவது அற்புதமான அனுபவம். இந்த இணையத் தொடரை உருவாக்குவதில் என்னுடைய பார்வையின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையும், அவர்கள் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவும் என்னை கவர்ந்தது. மேலும் திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றியதும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் ஒத்துழைப்பு இந்த கதைக்கு மேலும் வலு சேர்த்தது. பிரைம் வீடியோவின் சர்வதேச அளவிலான அணுகுமுறைக்கும் நன்றி. தமிழ்நாட்டிற்குள்ளும், இந்தியாவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் எங்களின் உழைப்பை எடுத்துச் செல்வதால் பிரைம் வீடியோவிற்கு மேலும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடரை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

கதையின் நாயகனான சித்தார்த் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அபிஷேக் குமார் பேசுகையில், ” தலைவெட்டியான் பாளையத்தில் பணிபுரிவது ஒரு நம்ப முடியாத பயணமாக இருந்தது. இயக்குநர் நாகாவுடன் இணைந்து பணியாற்றியதும் மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. அவருடைய சௌகரியமான தளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் உருவாக்கிய உலகத்தில் உலவும் ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். தமிழ்நாட்டின் கிராமத்தில் வசிக்கும் மாநகரத்துவாசியின் நிஜ வாழ்க்கையை சவால்களுடன் நகைச்சுவையையும் அழகாக இணைத்திருக்கிறார். இந்தத் தொடரில் நாயகன் சித்தார்த்தின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சுவராசியமான அம்சங்களை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன். இந்த இணைய தொடரை செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரைம் வீடியோவில் முதல் காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். ” என்றார்.

இந்த இணையத் தொடரில் மீனாட்சிசுந்தரம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சேத்தன் கடம்பி பேசுகையில், ” நான் எப்போதும் வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களை நடிப்பதற்காக தேடுவேன். தலைவெட்டியான் பாளையத்தில், தனது கிராமத்தில் உள்ள மக்களுடன் எப்போதும் மற்றவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் மீனாட்சி சுந்தரம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் அந்தக் கதாபாத்திரம்- உடனடியாக ரசிகர்களுடன் தொடர்புப் படுத்திக்கொள்வதையும் கண்டேன். நகைச்சுவை மற்றும் உணர்ச்சியுடன் கலந்த கலவையானது இந்த கதாபாத்திரம். மேலும் இதில் நடிக்கும் போது பரந்த அளவிலான உணர்வுகளை வெளிப்படுத்தவும் எனக்கு வாய்ப்பளித்தது. இந்தத் தொடரில் எனது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து பணியாற்றியதால்.. மேலும் உற்சாகத்தை அளித்தது. உணர்வுபூர்வமான மற்றும் எதிர்பாராத சுவராசியமான திருப்பங்களை கொண்ட இந்த இணையத் தொடரை பார்வையாளர்கள் விரும்புவார்கள் என நம்புகிறேன். மேலும் பிரைம் வீடியோவில் உலக அளவில் இந்த தொடர் வெளியாகும் தருணத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

இந்த இணையத் தொடரில் மீனாட்சி தேவி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை தேவதர்ஷினி பேசுகையில், ” தலைவெட்டியான் பாளையம் போன்ற நகைச்சுவை பின்னணியிலான இணையத் தொடரில் நடித்தது ஒரு மறக்க முடியாத அழகான அனுபவம் . மீனாட்சி தேவி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம்.. பல பெண்களைப் போலவே தன் குடும்பம் மற்றும் தினசரி பொறுப்புகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது. இருப்பினும் இந்த கதை களத்தில் உள்ள நகைச்சுவைகள் மற்றும் ஆச்சரியமான திருப்பங்களால் மீனாட்சி தேவியை தனித்துவமாக காட்சிப்படுத்தி இருக்கின்றனர். அவர் கிராமத்தில் உள்ள பகுத்தறிவின் குரலாகவும் தோன்றுகிறார். மேலும் அவரது நடைமுறை மற்றும் அடிப்படையான ஆளுமையை திரையில் கொண்டு வருவதை நான் விரும்பினேன். செப்டம்பர் 20ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் வெளியாகும் இந்த இணைய தொடரின் பிரத்யேக காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

Chennai Kaalpandhu League- Season 4

Government Model Higher Secondary School Saidapet Boys & Jayagopal Garodhiya Girls Higher Secondary School Madhavaram Creates History, winning

~ Rahul & Maruva Farzeen players scores maximum goals~

Chennai, September, 14 2024:

Chennai Kaalpandhu League (CKL) Season 4 organised by LatentView
Analytics saw Government Model Higher Secondary School, Saidapet boys school and Jayagopal
Garodhiya Girls Higher Secondary School, Madhavaram girls school emerge as winners. CKL Season 4
took place in SDAT Grounds, Nehru Park, Chennai from September 09, 2024 onwards. This league
witnessed 36 teams from Government and Corporation-run schools playing 46 matches in the Under-14
category.
The prize distribution ceremony saw, Arjuna Awardee Joshna Chinappa – Indian Squash Player and 10m
Air Rifle Gold Medalist Sri Karthik Sabari Raj – National Games 2023 as Chief Guests. Mr.Venkat
Viswanathan, Founder, LatentView Analytics and Mr. Parminder, Head-Sportzvillage Foundation, and
Ms. Poornima, Head of CSR, LatentView Analtyics were also present at the prize distribution ceremony.
The girls finals was played between Jayagopal Garodhiya Girls Higher Secondary School, Madhavaram
and Government Higher Secondary School, KK Nagar. The boys finals was played between Cosmos
Fighters and Government Model Higher Secondary School, Saidapet.
The overall league tournament saw Master Rahul from GHSS, Kuthambakkam and Miss M.H. Maruva
Farzeen from Jayagopal Garodhiya Girls Higher Secondary School, Madhavaram scoring maximum
number of goals – 8 & 10 each in the overall tournament.


FINALS Scores:

GIRLS FINALSJayagopal Garodhiya Girls Higher Secondary School Madhavaram – (5 Goals)
Government Higher Secondary SchoolKK Nagar (0 Goals)

WINNERS – Jayagopal Garodhiya Girls Higher Secondary School Madhavaram 
BOYS FINALSCosmos Fighters – (0 Goal)
Government Model Higher Secondary School Saidapet (1 Goal)

WINNERS THROUGH TIE-BREAKER– Government Model Higher Secondary School Saidapet

PLAYERS OF THE TOURNAMENT
Girls – Miss M.H. Maruva Farzeen from Jayagopal Garodhiya Girls Higher Secondary School, MadhavaramBoys – Master Rahul from GHSS, Kuthambakkam