Breaking
February 25, 2025

deccanwebtv

தில் ராஜூ – ஆதித்யாராம் கூட்டணியில் பான் இந்தியா படங்கள்

தமிழ், பான் இந்தியா படங்களுக்கு முக்கியத்துவம்.. தில் ராஜூ-ஆதித்யாராம் கூட்டணி அதிரடி

‘கேம் சேஞ்சர்’ ஆரம்பம் தான்.. தில் ராஜூ-ஆதித்யாராம் கூட்டணியின் மாஸ் அப்டேட்

இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் திரு. ஆதித்யாராம் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘கேம் சேஞ்சர்’ படத்தைத் தொடர்ந்து அதிக தமிழ் திரைப்படங்கள் மற்றும் பான் இந்தியா திரைப்படங்களை இணைந்து தயாரிக்க உள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டணி முதல் முறையாக ‘கேம் சேஞ்சர்’ படத்திற்காக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்வில் தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் ஆதித்யாராம் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கியேஷன்ஸ் சார்பில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, “21 ஆண்டுகால பயணத்தில் இது எனது 50வது திரைப்படம் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஷங்கர் என்னிடம் கூறிய கதைக்களம் எனக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. என் நண்பர் ஆதித்யாராம் நான்கு திரைப்படங்களை தெலுங்கு மொழியில் தயாரித்துள்ளார், அதன்பிறகு சென்னையில் அவர் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வந்தார். நான் அவரிடம் ‘கேம் சேஞ்சர்’ என்ற தெலுங்கு படத்தில் பணியாற்றி வருவதாக கூறி, இருவரும் இணைவது குறித்து பரிந்துரைத்தேன். ‘கேம் சேஞ்சர்’ மட்டுமில்லை, நாங்கள் தமிழ் மற்றும் பான் இந்தியன் திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்.”

முதற்கட்டமாக லக்னோவில் வைத்து நவம்பர் 9 ஆம் தேதி திரைப்படத்தின் டீசரை வெளியிடுகிறோம். அதன்பிறகு அமெரிக்கா மற்றும் சென்னையில் வைத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜனவரி மாத முதல் வாரத்தில் தெலுங்கானாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்தப் படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

“எல்லா இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறக்கூடிய அம்சங்கள் இந்தப் படத்தில் உள்ளன. எப்போதுமே ஷங்கர் படங்கள் விசேஷமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். விசேஷ தீம் மட்டுமின்றி இந்தப் படத்தில் ஏராளமான பொழுதுபோக்கு விஷயங்களும் உள்ளன. ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் படம் இது. கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்,” என்று கூறினார்.

ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யாராம் பேசும் போது, “ஊடகம் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்களை நான் சந்தித்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் முதல் முறையாக சந்திக்கிறேன். ‘நாம் பேசக் கூடாது, நமது வேலை தான் பேச வேண்டும்’ என்பதை நம்புவதால், நான் பொதுவாக யூடியூப் அல்லது வீடியோ நேர்காணல்கள் கொடுப்பதில்லை. எனினும், சூழ்நிலைகள் மாறிவிட்டதாலும், தில் ராஜூ சார் கொடுத்த ஊக்கம் காரணமாகவும், இந்த மேடையில் உங்களுடன் நான் உரையாற்றிக் கொண்டு இருக்கிறேன். ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.”

“எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே பிரபாஸ் நடித்த படம் உள்பட நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்துள்ளது. அதன்பிறகு, நான் ரியல் எஸ்டேட் மீது ஆர்வம் கொண்டு, திரைப்படத் துறையில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டேன். தற்போது தில் ராஜூ சாரின் ஆதரவுக்கு நன்றி கூறி, ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்துடன் கம்பேக் கொடுப்பதில் சுவாரஸ்யமாக இருக்கிறேன். இருவரும் அதிக தமிழ் மற்றும் பான் இந்தியன் படங்களை எடுக்க ஆர்வமாக இருக்கிறோம். தற்போது நாங்கள் சரியான இயக்குநர்கள் மற்றும் கதைகளை தேர்வு செய்து வருகிறோம். தில் ராஜூவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர் சரியான கதை மற்றும் இயக்குநரை தேர்வு செய்யும் விதம் தான். இத்துடன் அவரது அசாத்திய தயாரிப்பு பணிகள் என்னை கவர்ந்துள்ளது. அதிகளவு பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை கொண்ட வெகு சில தயாரிப்பாளர்களில் அவர் ஒருவர். ஆதித்யாராம் மூவிஸ் அவருடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் கூட்டணி அமைக்க ஆர்வம் மற்றும் பெருமை கொண்டுள்ளது,” என்றார்.

கேபிஒய் பாலா மற்றும் நியதி ‘ராக்காயி’

இந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. யுவன் 360 நிகழ்ச்சி அதன் சமீபத்திய மைல்கல் ஆகும்.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அதன் அடுத்த படைப்பாக நிறுவனத்தின் ஒரு அங்கமான பிங்க் ரிகார்ட்ஸ் (Ping Records) வாயிலாக ‘ராக்காயி’ என்ற பாடலை வழங்குகிறது. கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் இதை இணைந்து தயாரித்துள்ளனர். தொலைக்காட்சி பிரபலமான கேபிஒய் பாலா மற்றும் நட்சத்திர தம்பதிகள் சேத்தன், தேவதர்ஷினியின் மகளான ’96’ திரைப்பட புகழ் நியதி முதன்மை வேடங்களில் இதில் தோன்றுகின்றனர்.

கலகலப்பான காதல் பாடலான ‘ராக்காயி’ ஏ.கே. பிரியன் இசையிலும், மு.வி. பாடல் வரிகளிலும் உருவாகியுள்ளது. நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான கார்த்திக் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை தளபதி விஜய் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான ‘கோட்’ திரைப்படத்தில் ஸ்பார்க் பாடலை பாடிய வ்ருஷா பாலு உடன் இணைந்து பாடியுள்ளார்.

இப்பாடலை விர்ச்சுவல் செட் புரொடக்ஷன் டெக்னாலஜி எனும் அதி நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு அபு மற்றும் சல்ஸ் இயக்கி நடனம் அமைக்க, பிரம்மாண்ட பொருட்செலவில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மஹாவீர் அஷோக் தயாரித்துள்ளனர்.

விர்ச்சுவல் புரொடக்ஷன் சினிமாவில் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றும் என ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் கூறியது போல் இந்த நவீன தொழில்நுட்பத்தை ‘ராக்காயி’ குழுவினர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உற்சாகமூட்டும் காதல் பாடலான ‘ராக்காயி’ பிங்க் ரிக்கார்ட்ஸ் யூடியூப் பக்கத்தில் இன்று (நவம்பர் 4) வெளியாகிறது. இப்பாடல் இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெறும் என்று நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் மற்றும் பிங்க் ரிகார்ட்ஸ் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’

நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன் ‘.இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நடிகர் நகுல், இயக்குநர் பாலாஜி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி பேசும்போது,

“இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சசிகுமார் சார் இன்று வெளியிட்டார். எனது முதல் படத்திற்கும் அவர்தான் வெளியிட்டார்,அவரிடம் நான் உரிமையாகக் கேட்டபோது அவர் வெளியிட்டு உதவியுள்ளார்.அந்த அளவிற்கு நான் அவரிடம் உரிமை எடுத்துக் கொள்வேன்.

இந்தப் படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நகுலுக்கு இதில் நல்ல பெயர் கிடைக்கும். இதில் நடித்துள்ள இன்னொரு நடிகர் அலெக்ஸ் . அவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். மூன்று காலகட்டத்தில் மூன்று தோற்றங்களுக்கு அவர் மாற வேண்டி இருந்தது .அவர் அவ்வளவு உழைத்துள்ளார்.

நகுலைப் பல படங்களில் பார்த்திருக்கிறோம்.இதுவரை பார்த்து வந்த நகுல் வேறு. இதில் வேறு மாதிரியாக நகுலைப் பார்ப்பார்கள்.
டி3 படம் முடித்த பிறகு எனக்கு தோன்றியது ஒன்றுதான், இது தப்பான படம் இல்லை என்று தோன்றியது. அது கோவிட் கால கட்டத்தில் போராடி எடுத்த படம்.

ஒரு படம் வரவில்லை,வெற்றி பெறவில்லை என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கும். அதற்கு முக்கியமான காரணம் படத்தை நல்ல விதமாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.அது மிகவும் முக்கியம்.. ஏனென்றால் கடவுளுக்கே விளம்பரம் தேவைப்படும் காலம் இது. இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தையும் நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் நாட்டார் கதையை வைத்து ஒரு திரில்லராக உருவாக்கி இருக்கிறோம். இந்த திரில்லர் வேறு மாதிரியாக இருக்கும்.முதலில் இந்தப் படத்தை எடுக்கலாமா என்று யோசித்தபோது காந்தாரா படத்தின் வெற்றி எனக்குப் பெரிதும் நம்பிக்கை அளித்தது.

படத்தில் ஆங்கிலத் தலைப்பை வைத்ததைப் பற்றிக் கேட்கிறார்கள். படத்திற்குப் பொருத்தமாக இருப்பதால் தான் அப்படி வைத்தோம். வேறு வழி இல்லை. மற்றபடி தமிழில் வைக்கக் கூடாது என்று எந்த உள்நோக்கமும் கிடையாது.

என்னைப் பொறுத்தவரை ஒரு இயக்குநருக்கு முடியாது என்று எதையும் சொல்லக்கூடாது என்று நினைப்பவன். நகுல் ஒரு கதாநாயகனுக்குரிய நடிகர். ஆனால் அவரிடம் இருந்து அந்த கதாநாயகத்தனத்தை இன்னும் சரியாக வெளியே கொண்டு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நகுல் இந்தப் படத்தில் சொன்னபடி எல்லாம் கேட்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்குக் கதை தெரியுமா என்று கூடத் தெரியவில்லை .அந்த அளவிற்கு அவர் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்தப் படம் எல்லா காவல் தெய்வங்களையும் நினைவுபடுத்தும். சிறுவயதில் கேட்ட கேள்விப்பட்ட அனுபவங்களை வைத்து தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். . பட்ஜெட் படமாக ஆரம்பித்தது ஆனால் செலவு ஏழரைக் கோடி தாண்டி விட்டது. இந்தப் படம் நிச்சயமாக தப்பு பண்ணாது. அனைவருக்கும் பிடிக்கும். எனவே இந்தப் படத்தின் மீது அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம்”என்றார் –

இதில் கதாநாயகனாக காக்கி உடை அணிந்து நடித்திருக்கும் நடிகர் நகுல் பேசும் போது

”இதில் நான் போலீசாக நடித்திருக்கிறேன் .நான் சினிமாவிற்கு வந்து இப்போதுதான் முதல் முறையாக இப்படி நடிக்கிறேன். எனவே முதலில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது.எனக்குச் சின்ன வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை. காக்கி யூனிபார்ம் மீது எனக்கு ஒரு காதல் உண்டு.
நான் நடிக்க வந்து 20 ஆண்டு ஆகிவிட்டது என்று இங்கே கூறினார்கள். நன்றி. ஆனால் நான் எதையுமே செய்யாதது போல் இருக்கிறது. இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. நான் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் நடிக்க வந்தேன்.இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு அப்போது இல்லை. படிப்படியாக இப்போது 20 ஆண்டு கடந்து விட்டேன்.என்னை வளர்த்து ஆளாக்கி விட்டவர்கள் நீங்கள் தான் .என் நன்றிக்குரியவர்கள் முன்னால் நான் இப்போது நிற்கிறேன். மிக்க நன்றி.

இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன் .சினிமா எனது வாழ்க்கை ,நான் கடந்த காலத்தை பற்றிக் கவலைப்படுவதில்லை. அதை நினைத்துப் பார்ப்பதில்லை .இன்றைய இந்தத் தருணத்தை மட்டுமே இனிமையாக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். எதிர்காலத்தைப் பற்றி நான் நினைப்பதில்லை .ஒவ்வொரு நாளும் சிறு சிறு முன்னேற்றத்தைக் காண்கிறேன். ஒவ்வொரு நாளும் கேமரா முன் நிற்கும்போது நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.சிறுவயதில் யூனிபார்ம் மீது எனக்கு ஒரு ஆசை ஒரு கிரேஸ் இருந்தது. ராணுவம் போலீஸ் மூவி செய்ய ஆசை. ஏற்கெனவே கமல் சார் சூர்யா சார் என்று எல்லாம் ஒரு அடையாளமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சினிமாவில் போலீஸ் என்றால் ராகவன் , அன்புச் செல்வன் என்று பாத்திரங்கள் நினைவுக்கு வருகின்றன. அந்த வரிசையில் இளம் பாரியும் இருக்கும்.
என் மீது நம்பிக்கை வைத்து பாலாஜி அழைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .நான் பட்ஜெட்டை விட ஸ்கிரிப்டை முக்கியமாகப் பார்ப்பேன். நல்ல கதைதான் படத்திற்கு முக்கியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. நான் முடிந்த அளவிற்கு அனைவரையும் கவரும்படி இதில் நடித்துள்ளேன் என்று நம்புகிறேன். நான் இயக்குநர் பாலாஜியிடம் நிறைய கேள்வி கேட்பேன். எனக்குத் தெளிவாகும் வரை,விடமாட்டேன் கேட்டுக் கொண்டே இருப்பேன். ஆனால் பாலாஜி எப்போது கேட்டாலும் பதில் சொல்வதில் தெளிவாக இருந்தார்.படப்பிடிப்பின் போது தனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வதில் அவர் சமரசம் இல்லாமல் இருந்தார்.
அப்படியே இப்படத்தை முடித்து இருக்கிறார். திரைக்கதை நடிப்பு எல்லாமும் நன்றாக வந்திருக்கிறது.

இது மாஸ் ஆக்சன் படம் போல் இல்லாவிட்டாலும் பாபநாசம் படத்தைப் பார்த்த அந்த உணர்வு ஏற்படும்.

என்னை நினைத்தால் எனக்கே வேடிக்கையாக இருக்கும் . நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன் .நான் ஒரு தனிமை விரும்பி ,யாரிடம் அதிகம் பேச மாட்டேன்.ஆனால் உடன் பேசுவரின் மனநிலை அறிந்து அதன்படி பழகுவேன்.
நான் முன்பே சொன்னேன் ராணுவத்தின் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று.அப்படிச் சாதாரணமாக நினைத்து விட முடியாது. அதற்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும்; லட்சியம் இருக்க வேண்டும்; தேசப்பற்று இருக்க வேண்டும்.உடல் தகுதி வேண்டும்.

இப்படிப்பட்ட பாத்திரத்தில் நடிக்க,
யூனிபார்ம் போட்டால் மட்டும் போதாது .ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் ஆக இருந்தால் கூட அந்த யூனிஃபார்முக்கு ஒரு மரியாதை, சக்தி இருக்கிறது .அதை அணிந்த பிறகு வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும்.அதை நடித்த போது உணர்ந்தேன்.நம்மைப் பார்த்து ஒருவர் சல்யூட் அடிக்கும் போது நாம் உணர்வது வேறு வகையிலானது. நான் இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது சிரித்ததே கிடையாது.
யூனிஃபார்ம் அணிந்தவர்களின் குறிப்பாக போலீஸ் காவல்துறையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்கள் எப்படி வேலையே வாழ்க்கையாக இருக்கிறார்கள். அது சுலபமானதல்ல .அவர்களுக்கு விடுமுறையே கிடையாது எங்கும் எப்போதும் இருப்பார்கள். 100க்குப் போன் செய்தால் ஐந்து நிமிடத்தில் பேட்ரல் வண்டி வந்து விடுகிறது.ஸ்காட்லாந்து யார்டுக்குப் பிறகு தமிழ்நாடு போலீஸ் தான் என்பார்கள். அப்படி நான் இந்த இளம்பாரி கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன்.நான் அந்தப் பெயரையே நேசிக்கிறேன். காதலுடன் நான் சினிமாவில் இருக்கிறேன் ரசித்து ரசித்து செய்கிறேன். இன்னும் என்னவெல்லாமோ செய்ய வேண்டும் என்று ஆசைகள் உள்ளுக்குள் நிறைய உள்ளன.இந்தப் படத்தில் நடித்த போது ஒரு கிரிக்கெட் டீம் போல இருந்தோம்.வெங்கட் பிரபு சாரின் சென்னை 28 குழுவினர் போல் நாங்கள் இருந்தோம். இதில் புதிது புதிதாக நடித்தவர்கள் எல்லாம் ஊரிலிருந்து வந்திருக்கிறோம் சினிமா வெறியோடு வந்திருக்கிறோம் என்றார்கள். அப்படி அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள், பணியாற்றினார்கள்”என்றார்.

நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி ஆகியோருடன்
படத்தில் நடித்தவர்களும் சின்னத்திரை, யூடியூப் என்று தனக்கான தனிப்பாதையில் பயணம் செய்து வளர்ந்து வரும் கலைஞர்களான
அலெக்ஸ் , அந்தோணி, கோதை சந்தானம், சரண்,கேசவன், பிரதீப்,சிவா ருத்ரன் ஆகியோரும்
கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்தப் படம் விரைவில் வெளிவர உள்ளது.

டி 3 படத்திற்காகப் பட்ட கடனுக்காகத் தனது காரை விற்றிருந்தார் இயக்குநர் பாலாஜி. இந்தப் படத்தில் இலங்கையில் இருந்து வந்து நடித்திருந்த நடிகர் சரண், அந்தக் காரை வாங்கியிருந்த வரிடம் தேடிப் பிடித்து மீட்டு எதிர்பாராத வகையிலான தனது அன்புப் பரிசாக அந்தச் சாவியை இயக்குநர் பாலாஜியிடம் அளித்தார்.
பாலாஜி நெகிழ்ச்சியால் கண்ணீர் விட்டார் .விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றனர்.

நாக சைதன்யா, சாய் பல்லவி இணையும் – “தண்டேல்”

அல்லு அரவிந்த் வழங்கும் – நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்து மொண்டேடி, பன்னி வாஸ், கீதா ஆர்ட்ஸ் இணையும் – “தண்டேல்” திரைப்படம், பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது !!

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் “தண்டேல்” திரைப்படம் பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது !!

இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

காதலர் தினத்திற்கு சற்று முன்னதாக, தண்டேல் திரைப்படம் பிப்ரவரி 7, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது. காதலர்கள் காதலை இப்படத்துடன் கொண்டாட, சரியான வாய்ப்பை இது வழங்குகிறது.

படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் போஸ்டர், முன்னணி ஜோடியான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவிக்கு இடையேயான அற்புதமான கெமிஸ்ட்ரியை காட்டுகிறது, போஸ்டர் கடல் பின்னணியில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர், காதல் ஜோடியின் அன்பான அரவணைப்பை சித்தரிக்கிறது, அவர்களின் கதாபாத்திரங்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பின் ஆழமான கடலைக் குறியீடாக குறிக்கிறது. டீசர் மற்றும் போஸ்டர்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் ஏற்கனவே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி அவர்களின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான லவ் ஸ்டோரிக்குப் பிறகு, திரையில் மீண்டும் அவர்கள் இணைவதைக் காண ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள டி மச்சிலேசம் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் “தண்டேல்” திரைப்படம், பரபரப்பான தருணங்களுடன் கூடிய அற்புதமான காதல் கதையைச் சொல்கிறது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஷாம்தத் ஒளிப்பதிவைக் கையாள்கிறார் மற்றும் தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி, கலை இயக்கம் ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா உட்பட, இத்திரைப்படத்தில் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

நடிகர்கள் : நாக சைதன்யா, சாய் பல்லவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து இயக்கம் : சந்து மொண்டேடி வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாஸ்
பேனர்: கீதா ஆர்ட்ஸ்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : ஷாம்தத்
எடிட்டர்: நவீன் நூலி
கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

ஏன் பிரபாஸ் இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர்ஸ்டார் !

பாகுபலி To கல்கி தற்போதைய இந்திய திரை உலகில், மொழி இன எல்லைகளை கடந்து, இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன், தொடர்ச்சியான ப்ளாக்பஸ்டர்களை தந்து இந்தியாவின் ஒரே பான் இந்திய சூப்பர்ஸ்டாரால மலர்ந்திருக்கிறார் பிரபாஸ். பாகுபலி படத்தில் ஆரம்பித்த பான் இந்திய ப்ளாக்பஸ்டர் பயணம் இப்போது கல்கி வரை தொடர்கிறது. தெலுங்கில் மட்டுமல்லாது பாலிவுட்டை தாண்டி இந்தியாவெங்கும் பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்து பெரும் உயரத்தை எட்டியுள்ளது.

இந்திய சினிமாவில் மிகச்சில நட்சத்திரங்களே நம் மாநில எல்லைகளை கடந்து, இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தின் மனங்களை கவர்ந்து, இந்திய முழுமைக்குமான நட்சத்திரமாக மாறியுள்ளார்கள். அந்த வகையில் தற்போது பிரபாஸ் பான் இந்திய நட்சத்திரமாக மாறியுள்ளார்.

பிரபாஸ் ஸ்டைலிஷ் ஆக்சன், மாஸ் லுக், அற்புதமான திறமை மிக்க நடிப்பு மற்றும் வசீகரம் என ரசிகர்கள் கொண்டாடும் அனைத்தும் பிரபாஸிடம் நிறைந்து இருக்கிறது.

பாகுபலி திரைப்படம் இந்தியாவை மட்டுமல்ல உலகையே திரும்பி பார்க்க வைத்தது, அதைத் தொடர்ந்து சாகோ, சலார், கல்கி என தொடர்ச்சியாக பான் இந்திய ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை தொடர்ந்து தந்து வருகிறார் பிரபாஸ். பாகுபலி, சலார், கல்கி என 3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸின் மாஸ் தெலுங்கு சினிமாவைத் தாண்டி தற்போது தமிழ், மலையாளம், கன்னடம், பாலிவுட் என எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அளவில் விரிந்து வருகிறது. பிரபாஸ் படங்கள் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அவரது படங்களின் குறைந்த பட்ஜெட் அளவே, 500 கோடியைத் தொட்டுவிட்டது. அவரது படங்களுக்கான ஓபனிங்க், சாட்டிலைட் ரைட்ஸ், மற்ற மொழி ரைட்ஸ் எல்லாமே பெரும் உச்சத்தை தொட்டுவிட்டது. அவரது படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையியலேயே லாபத்தை குவிக்க ஆரம்பித்து விட்டது.

பெருகி வரும் ரசிகர் பட்டாளம், இந்தியாவில் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அளவில் பிரம்மாண்டமான பிஸினஸ், இந்திவாவை தாண்டி உலக அளவில் ரசிகர்களை கவரும் மாஸ் என பிரபாஸ் இந்தியாவில் பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார்.

‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர்‌. பி என்டர்டெய்ன்மென்ட் – ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் ரத்தம் தெறிக்க தெறிக்க, காதலைச் சொல்லும் “ஹேப்பி எண்டிங்” ரொமாண்டிக் காமெடி திரைப்பட, டைட்டில் டீசர் வெளியீடு !!

‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி நடிப்பில், கலக்கலான ரொமாண்டிக் காமெடியாக உருவாகும், ‘ஹேப்பி எண்டிங்’ படத்தின் அசத்தலான டைட்டில் டீசர், தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா, இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் வாழ்வியலைச் சொல்லும் வகையில், மிக புதுமையான திரைக்கதையில் இப்படத்தினை உருவாக்கி வருகிறார். நடிகர் ஆர். ஜே. பாலாஜி இதுவரை ஏற்றிராத புதுமையான வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

ஆண் பெண் உறவுகளை, இதுவரை தமிழ் சினிமா காட்டியிருக்கும் மரபிலிருந்து மாறுபட்டு, இன்றைய உலகின் உறவு சிக்கலை படம்பிடித்துக் காட்டுகிறது இந்த டீசர். மிகப் புதுமையான டைட்டில் டீசர், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பெண்களின் பலவிதமான எதிர்பார்ப்புகளில் சிக்கிக்கொண்டு அடி வாங்கும் இளைஞனை, ஒரு புதுமையான ஐடியாவில், அசத்தலாக காட்சிப்படுத்தியிருக்கும், டீசரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை இந்த டீசரை மேலும் அழகுபடுத்துகிறது.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள்.

தொழில் நுட்ப குழு விபரம்
இயக்கம் – அம்மாமுத்து சூர்யா
இசை – ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு – தினேஷ் புருசோத்தமன்
எடிட்டிங் – பரத் விக்ரமன்
புரடக்சன் டிசைனர் – ராஜ் கமல்
ஸ்டண்ட் – தினேஷ் காசி
உடை வடிவமைப்பு – நவா ராஜ்குமார்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

ஆக்சன் திரில்லரில் அசத்தும் முரா டிரெய்லர் !!

“கப்பேலா” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லர் டிராமாவாக உருவாகியிருக்கும் “முரா” படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ரகசியமாக பாதுகாக்கப்படும் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் இளைஞர் குழு, கேங்ஸ்டர், போலீஸ் என பரபரக்கும் சம்பவங்களை சொல்லும் இப்படம், திருவனந்தபுரத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையாக வைத்து, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சரமூடு, கனி குஸ்ருதி மற்றும் மாலா பார்வதி உள்ளிட்ட புதிய இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் மையத்தையும் கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும் இந்த டிரெய்லர், கேங்ஸ்டர் ஜானரில் ஒரு புதுமையான திரை அனுபவத்தை தரும் என்பதை உறுதி செய்கிறது.

கேன்ஸ் விருது பெற்ற “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”, அமேசான் வெப் சீரிஸ் “க்ராஷ் கோர்ஸ்”, ஹிந்தி திரைப்படம் “மும்பைகார்” மற்றும் தமிழ் திரைப்படமான தக்ஸ் திரைப்படங்களில் நடித்த ஆகியவற்றில் நடித்ததற்காக அறியப்பட்ட ஹிருது ஹாரூன் இப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார். “ஜன கண மன” மற்றும் “டிரைவிங் லைசென்ஸ்” படப்புகழ் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு மிக மிக முக்கியமான திருப்புமுனைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாறுப்பட்ட திரை அனுபவம் தரும் முரா திரைப்படம் நவம்பர் 8, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது

நடிப்பு : ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சாரமூடு, மாலா பார்வதி, கனி குஸ்ருதி, கண்ணன் நாயர், ஜோபின் தாஸ், அனுஜித் கண்ணன், யேது கிருஷ்ணா, பி.எல் தேனப்பன், விக்னேஷ்வர் சுரேஷ், கிரிஷ் ஹாசன், சிபி ஜோசப், ஆல்பிரட் ஜோஷெ.

தொழில் நுட்ப குழு :
இயக்கம் : முஹம்மது முஸ்தபா
தயாரிப்பாளர்: ரியா ஷிபு
எழுத்தாளர்: சுரேஷ் பாபு
நிர்வாக தயாரிப்பாளர்: ரோனி ஜக்காரியா
ஒளிப்பதிவு : ஃபாசில் நாசர்
எடிட்டர்: சமன் சாக்கோ
இசை : கிறிஸ்டி ஜாபி
சண்டைப்பயிற்சி : PC ஸ்டண்ட்ஸ்
கலை இயக்கம் : ஸ்ரீனு கல்லேலில்
ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர்
மக்கள் தொடர்பு – பிரதீஷ், யுவராஜ்,

Samsung Announces Biggest Ever Festive Offers on Galaxy Z Fold6 and Z Flip6 in India

Consumers purchasing Samsung’s sixth generation foldables will additionally get Galaxy Z Assurance worth up to INR 14999 at just INR 999

chennai, India – October 29, 2024: Samsung, India’s largest consumer electronics brand, today announced exciting limited period offers on its immensely popular sixth-generation foldable smartphones – Galaxy Z Fold6 and Galaxy Z Flip6.

Starting today, consumers purchasing Galaxy Z Fold6 will get the smartphone at as low as INR 144999 along with a 24 months no-cost EMI. Similarly, consumers purchasing Galaxy Z Flip6 will get the device at just INR 89999 with 24 months no-cost EMI as a part of a limited period festive offer. Galaxy Z Fold6 is priced starting INR 164999 and Galaxy Z Flip6 is priced starting INR 109999. Consumers seeking enhanced affordability can take advantage of the convenient EMI options starting as low as INR 2500 for Galaxy Z Flip6 and INR 4028 for Galaxy Z Fold6. 

Additionally, customers purchasing Galaxy Z Fold6 or Galaxy Z Flip6 will get Galaxy Z Assurance at just INR 999 for a limited period. The Galaxy Z Assurance programme, which provides complete device protection was originally priced at INR 14999 for Galaxy Z Fold6 and INR 9999 for Galaxy Z Flip6.  Under the Z Assurance programme, customers can now avail two claims in a year. 

Galaxy Z Flip6 and Galaxy Z Fold6 are the slimmest and lightest Galaxy Z series devices ever, and come with perfectly symmetrical design with straight edges. The Galaxy Z series is also equipped with enhanced Armor Aluminum and Corning Gorilla Glass Victus 2, making this the most durable Galaxy Z series yet. Galaxy Z Fold6 and Flip6 are equipped with the Snapdragon® 8 Gen 3 Mobile Platform for Galaxy, one of the most advanced Snapdragon mobile processors yet, combining best-in-class CPU, GPU, and NPU performance. The processor is optimized for AI processing and offers enhanced graphics along with improved overall performance.

The Galaxy Z Fold6 offers a range of AI-powered features and tools – Note Assist, Composer, Sketch to Image, Interpreter, Photo Assist and Instant Slow-mo – to maximize the large screen and significantly enhance your productivity.Galaxy Z Fold6 now comes with 1.6x larger vapor chamber for longer gaming sessions and ray tracing supports life-like graphics on its 7.6-inch screen that offers a brighter display of up to 2600 nits to deliver more immersive gaming.

The Galaxy Z Flip6 offers a range of new customization and creativity features so users can make the most of every moment. With the 3.4-inch Super AMOLED FlexWindow, consumers can use AI-assisted functions without even needing to open the device. Users can reply to texts with suggested replies, which analyzes their latest messages to suggest a suitable tailored response.

FlexCam now comes with the new Auto Zoom to compose the best framing for shots by detecting the subject and zooming in and out before making any necessary adjustments. The new 50MP Wide and 12MP Ultra-wide sensors provide an upgraded camera experience with clear and crisp details in pictures. Galaxy Z Flip6 now also comes with enhanced battery life and gets a vapor chamber for the first time.

Samsung Knox, Samsung Galaxy’s defense-grade, multi-layer security platform built to safeguard critical information and protect against vulnerabilities with end-to-end hardware, real-time threat detection and collaborative protection, secures Galaxy Z Fold6 and Z Flip6.

Galaxy Z Fold6 is available in three stunning colours- Silver Shadow, Navy Blue and Pink whereas Galaxy Z Flip6 is available in Silver Shadow, Mint and Blue. Both the devices are available across all leading online and offline retail stores.

ராம் சரணின் “கேம் சேஞ்சர்” படத்தின் வட இந்திய விநியோக உரிமையை AA பிலிம்ஸ் பெற்றுள்ளது.

“கேம் சேஞ்சர்” படத்தின் வட இந்திய விநியோக உரிமையைப் பெற்ற ஏஏ பிலிம்ஸ் !!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” திரைப்படம், நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பிலிருந்து வருகிறது. இப்படம் வரும் 10 ஜனவரி 2025 அன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வட இந்திய விநியோக உரிமை, அபரிமிதமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த தொகை ராம் சரணின் சினிமா கேரியரில் மிக அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

புகழ்மிகு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஜனவரி 10, 2025 அன்று சங்கராந்தி அன்று வெளியாகும் இப்படம், S.S. ராஜமௌலியின் “RRR” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராம் சரண் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

இப்படத்திலிருந்து “ஜருகண்டி” மற்றும் “ரா ரா மச்சா” ஆகிய இரண்டு உற்சாகமிக்க பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். “கேம் சேஞ்சர்” படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வணிகம் ஏற்கனவே சிறப்பாக நடந்து வருகிறது, இப்படத்தின் வட இந்திய விநியோக உரிமையை, அனில் ததானியின் AA பிலிம்ஸ் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாகத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு “கேம் சேஞ்சர்” வட இந்தியாவில் மிக அதிகபட்ச திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடப்படுவதை உறுதி செய்கிறது, அனில் ததானியின் வெளியீட்டில் இப்படம் மிகப்பிரமாண்டமாக வெளியாகும் என்பது, ராம் சரண் ரசிகர்களையும் திரைப்பட ஆர்வலர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

“கேம் சேஞ்சர்” படத்தில் ராம் சரண் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக ஊழல் மற்றும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுடன் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காகப் போராடுகிறார். பாலிவுட் அழகி கியாரா அத்வானி நாயகியாகவும், நடிகை அஞ்சலி ஒரு முக்கிய பாத்திரத்திலும் நடித்துள்ளனர் மற்றும் பல பெரிய நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

தமனின் அற்புதமான பாடல்கள் மற்றும் அதிரடியான பின்னணி இசை, திருவின் வசீகரிக்கும் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது இப்படத்தின் எடிட்டிங்கை இரட்டையர்களான ஷம்மர் முகமது மற்றும் ரூபன் ஆகியோர் கையாள்கின்றனர்.

ஹைதராபாத், நியூசிலாந்து, ஆந்திரப் பிரதேசம், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் உள்ள பிரமிக்க வைக்கும் இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் அனுபவமாக இருக்கும். பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளன.

முன்னணி நட்சத்திர நடிகர்கள், வசீகரிக்கும் கதைக்களம் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் குழுவுடன், “கேம் சேஞ்சர்” ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் ஆக தயாராக உள்ளது, இப்படம் இப்பொழுதே நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

SIMS Hospital Join hands with Former Indian Cricketer Dinesh Karthik to Strike a Powerful Blow Against Stroke

Chennai, October 29th, 2024 – In a powerful display of support for stroke awareness, former Indian cricketer Dinesh Karthik joined forces with SIMS Hospitals to commemorate World Stroke Day. The event brought together a diverse group of individuals, including stroke survivors, healthcare professionals, and corporate teams, all united by a common goal: to raise awareness about stroke and inspire hope for recovery.

The highlight of the event was the thrilling ‘Strike Against Stroke’ cricket match, which saw corporate teams and healthcare professionals face off in a friendly yet competitive match. The “Strike Against Stroke” match was won by Tata Consultancy Services (TCS), while Equitas Small Finance Bank and Brakes India came in first runner-up and second runner-up, respectively. The winner of the match was Tata Consultancy Services (TCS).This unique initiative aimed to promote physical activity and a healthy lifestyle, while also highlighting the importance of being active and physically fit to prevent stroke.

“It’s an honor to be a part of this initiative,” said Dinesh Karthik.“Stroke can have devastating consequences, but stroke can be avoided by maintaining a healthy level of physical activity and fitness. I urge everyone to adopt a healthy lifestyle and seek medical attention immediately if they experience any symptoms of stroke.”

Dr. Ravi Pachamuthu, Chairman, SRM Group, emphasized the hospital’s commitment to providing world-class care to stroke patients. “At SIMS Hospitals, we are dedicated to help stroke survivors regain their independence and quality of life,” he said. “We are grateful to Dinesh Karthik for his support and inspiring hope in the hearts of stroke survivors.”

One of the stroke survivors who participated in the cricket match expressed their gratitude, saying, “This event has given me hope and motivation. It’s inspiring to see so many people come together to support this cause.”

Dr. Suresh Bapu, Director & Senior Consultant, Institute of Neuroscience stated, “By adopting a healthy lifestyle, including regular exercise, a balanced diet, and avoiding smoking and excessive alcohol consumption, you can significantly reduce your risk of stroke”.