Breaking
June 6, 2026

deccanwebtv

”கே டி: தி டெவில் – K D : The Devil ” படத்திலிருந்து ‘திற நீ எந்தன் தரணி திற நீ – Thira Nee Enthan Tharani Thira Nee” பாடல்

”கே டி: தி டெவில் – K D : The Devil ” படத்திலிருந்து ‘திற நீ எந்தன் தரணி திற நீ – Thira Nee Enthan Tharani Thira Nee” பாடல் மூலம் கொண்டாட்டத்தின் உச்சத்தை வழங்குகிறார் நோரா ஃபதேஹி (Nora Fatehi )

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கே டி : தி டெவில் – K D : The Devil ‘ திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கே வி என் புரொடக்ஷன்ஸ் – KVN Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது.

இப்படத்தில் ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.‌

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ‘திற நீ எந்தன் தரணி திற நீ – Thira Nee Enthan Tharani Thira Nee” எனும் துள்ளல் மிகுந்த மற்றும் உற்சாகமான ஒரு நடனப் பாடலை வெளியிட்டுள்ளனர். அதிரடியான தாளமும் கொண்டாட்ட மனநிலையையும் கொண்ட இந்த பாடல் ரசிகர்களிடையே ஒரு முக்கியமான ‘பார்ட்டி கீதம்’ ஆக ( Party Anthem) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பான பாலிவுட் நடன தாரகை நோரா ஃபதேஹி மற்றும் வசீகரமான நட்சத்திர நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த பாடல் – கவர்ச்சி – திரையில் இருவரின் ஆளுமை மிக்க தோற்றம்- விறுவிறுப்பான நடன அசைவுகள் – ஆகியவற்றை கொண்டுள்ளது. அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இந்தப் பாடல் பல்வேறு மொழி பேசும் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதியும் வகையிலான ஒரு ஈர்க்கக்கூடிய தாள லயத்தை கொண்டுள்ளது.

துடிப்புமிக்க பாடகி ராஜலட்சுமி இந்தப் பாடலைப் பாடியுள்ளார். அவரது உற்சாகமான குரல் பாடலின் கொண்டாட்ட மனநிலைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இசை அமைத்தல் – இசை ஒருங்கிணைப்பு மற்றும் பாடல் தயாரிப்பு பணிகளை அர்ஜுன் ஜன்யா மேற்கொண்டுள்ளார்.

‘திற நீ எந்தன் தரணி திற நீ ‘ பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரசிகர்களின் ஃபிளேலிஸ்டிலும் ( Playlists) , நடன மேடைகளிலும் இந்தப் பாடல் விரைவில் இடம் பிடிக்கும் என படக் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.

கே டி : தி டெவில் – KD : The Devil ‘ திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது.

சிறை” திரைப்பட வெற்றிவிழா !!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது.

படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது.

பொதுமக்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கொண்டாடப்பட்டது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற “சிறை” திரைப்பட வெற்றிவிழாவில், படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவாக வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வினில்

இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது..,

இப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஒரு காட்சியை எடுக்கும் போது அது எப்படி வரும் என்று தெரியாமல் இருந்தாலும், நம்பிக்கையுடன் அதை எடுப்போம். அந்த நம்பிக்கையில்தான் இந்த படம் முழுவதும் உருவானது. இப்படிப் பட்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை திரைப்படமாக உருவாக்குவது மிகவும் சவாலான விஷயம். ஏனெனில் ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே திரையில் காட்டினால் அது சினிமாவாக வேலை செய்யாது. அதே நேரத்தில் சினிமாவாக மாற்றும் போது அதன் உண்மை தன்மையும் காப்பாற்ற வேண்டும். அந்த சமநிலையை வைத்துப் படம் உருவாக்குவது மிகவும் கடினமான ஒரு செயல்முறை.

இப்போது பலர் மலையாள சினிமாவை எடுத்துக்காட்டாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மாதிரியான படங்களை நம் திரையரங்குகளில் ஓட வைப்பது சுலபமல்ல. பல நேரங்களில் அந்த வகை படங்களை நாம் ஓடிடியில் பார்த்து பாராட்டுகிறோம். ஆனால் தமிழ் ரசிகர்கள் திரையரங்கில் ரசிக்கும் வகையில் ஒரு படமாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது.

அந்த முயற்சியில் எங்கள் குழுவில் உள்ள அனைவரும் பெரிய ஆதரவாக இருந்தார்கள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்த படத்தை சிறப்பாக உருவாக்க உழைத்தார்கள்.

தயாரிப்பாளர் லலித் சார் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். இந்த கதையை நம்பி, அதில் தனது மகனையும் அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வைத்திருந்த நம்பிக்கை மிகவும் பெரிய விஷயம். ஒரு புதிய இயக்குநரையும், ஒரு புதிய முயற்சியையும் நம்பி இந்த படத்தை தயாரித்தது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.

இந்த படத்தின் வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படிப் பட்ட கதைகளை நம்பி எடுத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். அவர்களின் உழைப்பால் தான் இந்த படம் இந்த அளவிற்கு வந்துள்ளது. இந்த படம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவிய பாராட்டுக்களால் தான் மக்கள் அதிகமாக வந்து பார்த்தார்கள். அந்த வார்த்தைகள் மூலம் பரவிய வரவேற்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

இந்த படத்திற்கு மிகுந்த ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஊக்கமளித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” நன்றி.

இயக்குநர் தமிழ் பேசியதாவது..,

இந்த படத்தின் வெற்றிக்கு பலரின் பெரிய பங்களிப்பு இருக்கிறது. முதலில் இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அவர்களின் முயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தான் இந்த படம் உருவாகி வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தை மக்களிடம் எடுத்துச் சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.

இயக்குநர் சுரேஷ் சார் குறித்து நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும். ஒரு நல்ல கதையை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்து, அதை மக்களுக்கு சேர்க்கும் திறன் அவருக்கு உள்ளது. டாணாக்காரன் படம் வெளியாக சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்த படம் இப்போது வெளியானபோது, அது எனக்கு புதிய உணர்வை தந்தது. இப்படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கானதாக தோன்றுகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் பல சவால்கள் இருந்தன. சில சமயங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலைகளும் வந்தன. ஆனால் அந்த எல்லா சிரமங்களையும் கடந்து இந்த படம் ரசிகர்களிடம் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இப்போது தமிழ் சினிமா வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மலையாள சினிமாவையும் நாம் பெரிதும் பாராட்டுகிறோம். அங்கு பல திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன. ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.

எழுத்தாளர்களின் கதைகளை அதிகமாக வாசித்து, நல்ல கதைகளை திரைப்படங்களாக மாற்ற வேண்டும். ஏனெனில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல, அது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது. அதனால் டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களையே மட்டும் நம்பாமல், திரையரங்குகளுக்காக உருவாகும் பெரிய படங்களையும் தொடர்ந்து செய்ய வேண்டும். ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து ரசிக்கும் வகையில் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம், நன்றி.

நடிகர் LK அக்‌ஷய் குமார் பேசியதாவது..,

“இந்த மேடையில் எனது முதல் படத்திற்காக நின்றதும், இப்போது அதே மேடையில் அந்த படம் வெற்றி பெற்றதற்காக பேசுவதும் எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் என் குடும்பத்தினருக்கும், குறிப்பாக என் டீமுக்கும் நன்றி சொல்ல வேண்டும். என் டீம் தான் என் குடும்பம். அவர்களின் ஆதரவால் தான் நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன்.

ஒரு புதிய கலைஞராக நடித்த பிறகு, ரசிகர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்களா என்ற பயம் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும். ஆனால் எனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை எனக்கு வழங்கிய ரசிகர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் என் அப்பா. எங்களுக்குள் சில சமயங்களில் வாக்குவாதங்களும் நடந்திருக்கிறது. ஆனால் அவர் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி, மனதளவில் வலிமையாக இருக்கச் செய்தார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

இயக்குநர் சுரேஷ் சார் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது மிகவும் பெரிய விஷயம். இப்படி ஒரு சிறப்பான அறிமுகம் கிடைப்பது எளிதான விஷயம் இல்லை என்பதை நான் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளேன். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இருந்தும் எனக்கு பாராட்டுச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைவருக்கும், குறிப்பாக விக்ரம் பிரபு சாருக்கு என் நன்றி. அவரின் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது. அதேபோல் தயாரிப்பு குழுவில் இருந்த அருண், யோகேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் முதல் படத்திற்காக அவர்கள் என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.

நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது..,

“இன்றைய இந்த விழாவில் கலந்து கொண்டு, இப்படத்திற்கு கிடைத்துள்ள விருதுகளைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னர் என் அப்பாவின் அவார்ட் விழாக்களுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஆனால் இன்று நான் நடித்த ஒரு படத்திற்கு இவ்வளவு கேடயங்கள் கிடைப்பதை நேரில் பார்க்கும் போது அது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.

ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அது ஒரு டீம் வொர்க் என்பதற்கு சிறை படம் ஒரு உதாரணம். இந்த மேடையில் விருது பெற்றவர்களும், இன்னும் பெறவிருப்பவர்களும் அனைவரும் இந்த படத்தை தங்களது வாழ்க்கை போல உழைத்து உருவாக்கியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த படம் 2025 டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு ‘டாணாக்காரன்‘ படத்திற்கு மாநில விருது கிடைத்த செய்தி வந்தபோது, அந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. எனக்கு இரட்டை சந்தோஷமாக அமைந்தது.

இந்த வெற்றிக்கு பலர் காரணமாக இருக்கிறார்கள். குறிப்பாக தயாரிப்பாளர் லலித் குமார் சார் ஒரு நல்ல தயாரிப்பாளராக இந்த படத்திற்கு பெரிய ஆதரவாக இருந்தார். இந்த படம் எனது 25வது படம் என்பதும் எனக்கு ஒரு சிறப்பு.

நான் ஒரு நடிகரின் மகன், பேரன் என்ற அடையாளத்தோடு வளர்ந்தேன். பள்ளி நாட்களிலேயே சில சமயம் அந்த அடையாளம் காரணமாக தனியாக உணர்ந்த தருணங்களும் இருந்தன. அதனால் பல விஷயங்களில் இருந்து ஓடிக்கொண்டே இருந்தேன். பிறகு அமெரிக்காவுக்கு சென்றபோது தான் என்னை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு தான் திரும்பி வந்து சினிமாவிலேயே என் பாதையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

என் முதல் படம் ‘கும்கி’ பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு ஒரு அழுத்தமும் வந்தது. ஆனால் அதை தாண்டி தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த பயணத்தில் பல விமர்சனங்களும், சவால்களும் இருந்தன. சிலர் பாராட்டினார்கள், சிலர் விமர்சித்தார்கள். ஆனால் நான் என்னுடைய பாதையை தெரிந்து கொண்டு முன்னேறிக் கொண்டே வந்தேன்.

சினிமா என்பது திறமை, நேரம், அதிர்ஷ்டம், வாய்ப்பு ஆகியவை சேர்ந்த ஒரு துறை. அதில் பல சவால்களும் இருக்கும். ஆனால் அந்த எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன். இப்போது இந்த 25வது படத்திற்குப் பிறகு, இது எனக்கு ஒரு புதிய ஆரம்பம் போல தோன்றுகிறது. இனிமேல் இன்னும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

என் பயணத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த படத்தின் வெளியீட்டு நாளில், ‘இது ஒரு டீம் வெற்றி’ என்று நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். இன்று அந்த டீமுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் நன்றி.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,

“இன்றைக்கு இங்கே வந்து நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பெரிய ஸ்டார் பவர் இல்லாத, ஒரு கதையை மட்டும் நம்பிய படம் திரையரங்குகளில் வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல. இப்படிப்பட்ட ஒரு படத்தை நம்பி தயாரித்து, முழு ஆதரவுடன் நிற்கும் தயாரிப்பாளருக்கே முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

படம் வெளியான பிறகும் தொடர்ந்து அதை புரொமோட் செய்து, சரியான முறையில் மக்களிடம் கொண்டு சென்றது மிகப்பெரிய விஷயம். தயாரிப்பாளர் வைத்திருந்த நம்பிக்கையால்தான் இந்த படம் கமர்ஷியல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது என்று நான் நினைக்கிறேன். நான் படம் பார்த்த பிறகு அவரிடம் ‘படம் மிகவும் நன்றாக இருக்கிறது, நீங்கள் முதலீடு செய்த பணம் கண்டிப்பாக திரும்ப வரும்’ என்று சொன்னேன். ஆனால் அவர் வைத்திருந்த நம்பிக்கை அதையும் தாண்டி இருந்தது. உண்மையில் அவரது நம்பிக்கையை விட அதிகமாகவே இந்த படம் ஒரு பெரிய கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் இருக்கும் உண்மை, அதில் உள்ள உணர்வு, எல்லோரிடமும் பொதுவாக சென்றடைந்ததால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த படத்தை இப்படியாக உருவாக்கிய இயக்குநர் சுரேஷின் முயற்சி மிகவும் சிறப்பு. உண்மையில் இது தமிழ் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. அதை ஒரு திரைக்கதையாக மாற்றி, தனது பார்வையில் ஒரு முழுமையான திரைப்படமாக உருவாக்குவது சுலபமான விஷயம் அல்ல. அந்த பயணத்தில் பல சவால்கள் இருந்திருக்கும். ஆனால் அதை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அவர் நிறைவேற்றியிருக்கிறார்.

அவரது வேலை செய்யும் விதம், குழுவை ஒருங்கிணைக்கும் திறன், சிக்கலான சூழ்நிலைகளையும் அமைதியாக கையாளும் திறன் ஆகியவை மிகவும் சிறப்பானவை. அதனால்தான் இந்த படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் அழகும், நுட்பமும் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது. இந்த படத்தில் நடித்த நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள்.

இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது மிகவும் சிறப்பான விஷயம். நான் எப்போதும் சொல்லும் விஷயம் என்னவென்றால், தமிழ் சினிமாவின் மெயின்ஸ்ட்ரீம் ரசிகர்கள் மிகவும் சிறந்த ரசனையுடையவர்கள். இந்த மாதிரியான ஒரு முயற்சி வேறு மொழியில் எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற வெற்றியை அடைந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால் தமிழில் அது சாத்தியமாகியுள்ளது.

இந்த படத்தில் தமிழும் சுரேஷும் ஒருவருக்கொருவர் அளித்த மரியாதை மிகவும் சிறப்பானது. வெற்றி கிடைக்கும் போது ‘இதற்கு நான் தான் காரணம்’ என்று சொல்வது எளிது. ஆனால் எங்கும் அப்படிச் சொல்லாமல், ஒருவருக்கொருவர் கௌரவம் அளித்திருப்பது மிகவும் நல்ல விஷயம்.

இந்த படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு, விமர்சகர்களும் பாராட்டுவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இந்த குழுவில் உள்ள பலரையும் அவர்கள் கல்லூரி முடித்து வந்த காலத்திலிருந்தே நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்களுடைய கலைத்திறன் எவ்வளவு என்பது தெரியாது. ஆனால் அவர்கள் எடுத்த படங்களைப் பார்க்கும் போதெல்லாம் ‘இவ்வளவு நல்லா பண்ணுறாங்களா?’ என்று எனக்கு ஆச்சரியம் தோன்றுகிறது. அது எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

சுரேஷ் என்னுடன் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்தபோது ஒரு சாதாரண இயக்குநர்–உதவி இயக்குநர் உறவு தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது ஒரு நல்ல நட்பாக மாறியது. அவர் எதை எடுத்தாலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பார். ஒரு விஷயத்தில் முழு நம்பிக்கை இருந்தால் அதில் முழுமையாக இறங்குவார். முடியாது என்று நினைத்தால் நேராக சொல்லிவிடுவார். அந்த நேர்மையும் அர்ப்பணிப்பும் தான் அவரது சிறப்பான குணம்.

இந்த படத்தின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் குழுவில் இருக்கும் இளைஞர்கள் இப்படி நல்ல படங்களை உருவாக்கும்போது அது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட சிறந்த முயற்சிகளை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். வெற்றி கிடைத்த பிறகு பல விஷயங்கள் நம்மை சுற்றி வரும். ஆனால் எப்போதும் நாம் ஆரம்பித்த இடத்தை மறக்காமல், நிலையாக இருந்து, நம்மைப் போலவே இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் மிக முக்கியம். மீண்டும் ஒருமுறை இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் SS லலித் குமார் பேசியதாவது..,

முதலில் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நாம் ஒரு படத்தை எடுத்து முடிப்பது வரை தான் செய்ய முடியும். ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. அந்த வகையில் இந்த படத்தை பற்றி நீங்கள் எழுதியதும், பேசியதும் தான் இன்று இந்த படத்தை மக்களிடம் பெரிய அளவில் சேர்த்திருக்கிறது.

பிரஸ் ஷோ முடிந்த பிறகு நீங்கள் பலரும் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு பேசினீர்கள். சிலர் அழுதபடியே இந்த படத்தைப் பற்றி கூறினீர்கள். அந்த உணர்வுகளே பின்னர் மக்களிடமும் சென்றடைந்தது. நீங்கள் எந்த விதமான தவறும் இல்லாமல் நேர்மையாக இந்த படத்தை பற்றி எழுதியது தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

முதலில் தமிழ் இந்த கதையை சொல்ல வந்தபோது, இந்த படத்தை கண்டிப்பாக அக்ஷய் தான் செய்ய வேண்டும் என்று நான் சொன்னேன். அதற்குப் பிறகு அவரிடம் ‘நீங்களே இந்த படத்தை இயக்கப் போகிறீர்களா?’ என்று கேட்டேன். ஆனால் அவர் ‘இந்த கதையை நான் இயக்க முடியாது, கதையை மட்டும் கொடுக்கிறேன்’ என்று சொன்னார். அதற்குப் பிறகுதான் சுரேஷ் இந்த படத்தில் இணைந்தார்.

சுரேஷ் இணைந்த பிறகு இந்த கதையை எப்படி ஒரு புதிய முறையில் படமாக்கலாம் என்று பல விஷயங்கள் பேசினோம். பின்னர் விக்ரம் பிரபுவிடம் நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று சொன்னேன். அவர் நேராக என் அலுவலகத்துக்கு வந்து கதையைப் பற்றி விவரமாக பேசினார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

அதேபோல் இந்த படத்திற்கு முழுமையாக ஆதரவாக இருந்து, ஒவ்வொரு கட்டத்திலும் உதவி செய்த சிலோவுக்கும் நன்றி. அவர் ஒரு நிர்வாக தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், இந்த படத்தின் ஒவ்வொரு பணியிலும் நேரடியாக பங்கேற்று உதவினார். இசை, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப பணிகளிலும் அவர் இருந்தது இந்த படத்திற்கு பெரிய பலமாக இருந்தது.

அக்ஷயுடன் நாங்கள் அடிக்கடி விவாதிப்போம். சில சமயங்களில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளும் இருக்கும். ஆனால் அது எல்லாம் படத்தின் நலனுக்காகத்தான். ஒரு நடிகராக இருந்தாலும் தயாரிப்பின் சிரமங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரிடம் எப்போதும் சொல்லுவேன். இந்த பயணத்தில் விஷ்ணுவும் பல விஷயங்களில் நடுவில் இருந்து உதவி செய்தார்.

இன்று இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தை ஏற்றுக்கொண்டு ஆதரித்த ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகள்.

“கெணத்த காணோம்” திரை விமர்சனம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமம் அந்த கிராமத்தில் குடிதண்ணீருக்கே அல்லல் படும் மக்கள்கள்.
அந்த ஊரில் கோவில் பூஜாளியாக யோகி பாபு அவர் ஒரு சிலை வடிக்கும் சிற்பியும் கூட அவருக்கு பக்கத்து ஊரை சேர்ந்த லெவலின் சந்திரசேகரை காதலிக்கிறார் இந்த சூழ்நிலையில் ஊர் மக்கள் தண்ணீரைக்காக கலெக்டர் முதற்கொண்டு பலருக்கும் மனு கொடுத்து பல்வேறு முயற்சி செய்கிறார்கள் அதில் கிணறு வெட்ட அரசாங்கம் பணம் ஒதுக்குகிறது அந்த பணத்தை வைத்து நீரூற்றைத் தேட அந்த நீரூற்று யோகி பாபுவின் வீட்டு வாசலில் இருக்க அங்கு போர் போடலாம் என்று முடிவு செய்யும் போது யோகி பாபுவின் தாத்தா, அதெல்லாம் முடியாது எங்க கிணறுதான் வெட்ட வேண்டும் என்று கூறுகிறார்.
அவ்வாறு கிணறு வெட்ட பூதம் கிளம்பும் கதையாக அந்த கிணற்றுக்குள் ஏதோ ஒரு மிகப்பெரிய மிருகத்தின் எலும்பு படிவம் இருக்கிறது எனவே அந்த இடத்தை தொல்லியல் துறை கைப்பற்றுகிறது அவர்கள் நடத்தும் அராஜகம் அந்த ஊர் மக்களை அடித்து விரட்டி விட்டு அந்த ஊரை முழுவதுமாக தோண்டி எடுக்க முயற்சி செய்ய யோகி பாபு ஊர் மக்களும் போராடுகிறார்கள் அந்த போராட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? அந்த ஊருக்கு தண்ணீர் வந்ததா என்பது தான் படத்தின் திரைக்கதை
வழக்கம்போல யோகி பாபுவை தவிர மற்றவர்கள் எல்லோரும் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் யோகிபாபுவுக்கு வழக்கமான நடிப்புதான் அதுவும் போர் அடித்து அந்த நடிப்புதான் ஒரே மாடுலேஷனில் யாரையும் மரியாதை இல்லாமல் பேசுவது இதுதான் அவரது பாடி லாங்குவேஜ்.
படத்தின் திரைக்கதை காண கதைக்களம் மிகவும் அருமையாக தேர்ந்தெடுத்து இருக்கிறார் இயக்குனர் மேலும் இந்த கதையில் அவர் எடுத்திருக்கும் விதம் என்னதான் நமது வரலாறை உலக கொண்டு வந்தாலும் நிகழ்காலத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வாரதாரத்தை பாதிக்காமல் அதைத் தேட வேண்டும் என்பதை கூற நினைத்து இருக்கிறார் இயக்குனர் இதில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.
மிகப்பெரிய சோகம் என்னவெனில் இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் கடைசி படம் படம் முடித்து சில நாட்களிலேயே அவர் இறந்துவிட இந்த படம் இப்பொழுது திரைக்கு வந்திருக்கிறது

“கொலைச்சேவல்” திரைவிமர்சனம்


படத்தின் கதை ஒரு கிராமத்தில் ஆரம்பிக்கிறது ஒரு வீட்டில் இருந்து ஒரு சின்ன பெண் ஒரு சாப்பாட்டுக்கு கூட எடுத்துக் கொண்டு செல்கிறார் அவரது தந்தை அந்த காட்டு வழியில் போகும் போது பார்த்து பத்திரமாக போ அங்கு தான் சில ரவுடிகள் சேர்ந்து ஒரு பெண்ணை கொலை செய்தார் அதனால் பத்திரமாக சென்று வா என்று கூறுகிறார்.இந்தப் பெண்ணும் சரியென்று கூறிவிட்டு அந்த காட்டு வழியாக செல்ல அங்கே அந்த கொலை செய்யப்பட்ட பெண் பேயாக நின்று கொண்டு மிரட்டுகிறாள் இதைக் கண்டு அலறி ஓடும் அந்த பெண் வீட்டிற்கு ஓடி வருகிறாள் அதே கிராமத்தில் வாழும் கலையரசன் அவரது நிறைமாத கர்ப்பிணி தீபா பாலு அவர்கள் குடும்ப வழக்கத்தின்படி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது அவரது குலதெய்வமாக இருக்கும் நிறைசூலி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அந்த கர்ப்பிணி என் கையால் படையல் போடுவது வழக்கம் எனவே கலையரசன் குடும்பத்தினரும் சகிதமாக நிறைய சொல்லி நிறை சூலி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து படையல் இட இதே நேரத்தில் தீபா பாலுவின் குடும்பத்தினர் தீபா பாலு செய்த திருமணத்தை எதிர்த்து சாதியை காரணம் காட்டி அவர்களை கொலை செய்ய சதித்திட்டு அந்த காட்டிற்குள் வருகிறார்கள் வருபவர்கள் பொறுமையாக காத்திருந்து படையல் போட்டுவிட்டு குடும்பம் அனைவரும் கர்ப்பிணி பெண்ணை காட்டில் விட்டு விட்டு செல்கிறார்கள் கணவனுடன் மட்டும் மற்றவர்கள் எல்லாம் சென்றுவிட தீபாவளி குடும்பத்தினர் இருவரையும் வெட்டிக்கொண்டு அந்த நிறைசூழியம் காலடியிலேயே போடுகிறார்கள் இதுதான் இந்த கொலை சேவல் படத்தின் திரைக்கதை
இந்த படத்தின் இயக்குனர் என்ன கூற வருகிறார் என்பதை தெளிவாகவும் கூறவில்லை இலை மறைமுறையாகவும் கூற முடியாமல் திணறி இருக்கிறார் ஏனென்றால் இந்த படம் பிளாஷ்பேக் ஆட்சியில் செல்கிறதா அல்லது நிகழ்காலத்தில் நடக்கிறதா என்பதை பெரும் குழப்பமாக இருக்கிறது நிச்சயம் சாதி பிரச்சினையை தொடத்தான் இயக்குனர் நினைத்து இருக்கிறார் ஆனால் அதையும் அவரால் தெளிவாக சொல்ல முடியவில்லை இந்த படம் ஒருவொரு காட்சியும் மிக நீளமாக செல்கிறது எதற்காக அவ்வளவு பெரிய காட்சிகள் கோவிலுக்கு பொங்கல் வைக்க செல்பவர்கள் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் யாரும் எந்த வேலையும் செய்யவில்லை அதேபோல் அந்த காட்டில் இருந்த கிளம்பும்போது அந்த நிறைமாத கர்ப்பிணி உடல் முடியாது என்று கூறும் போது அனைவரும் நீ உன் பொண்டாட்டியை கூட்டி கொண்டு வா நாங்கள் எல்லாம் டிராக்டரில் செல்கிறோம் என்று அப்படியா அண்ணாமத்தாக விட்டு விட்டு செல்வார்கள் இதெல்லாம் இயக்குனர் கவனத்தில் இருந்தால் கொலை சேவல் ஒரு பீலிங் படமாக இருந்திருக்கும்

இந்தப் படத்தின் தயாரித்திருப்பவர் ஆர்பி பாலா இவர் பெரிய பெரிய மாற்றுமுறை படங்களுக்கு தமிழில் எவ்வளவு பெரிய படங்களுக்கு எழுதிய இவர் இந்த படத்தில் ஏனோ சற்றே தடுமாறி இருக்கிறார் என்று கூறலாம் அறிமுக இயக்குனர் துதிவாணன் படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு மட்டுமே இசை ஏதோ ஹாரர் படம் பேய் படம் என்பது போல் ஆங்காங்கே காட்டிவிட்டு கடைசி ஜாதி வேட்டையான படமாக இருக்கவே அந்த ஹாரர் மியூசிக் ஒத்து வரவில்லை

“வென்சன்ஸ்” திரைவிமர்சனம்


ஏழை குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் படிக்கும் அபர்னதி சிறுவயதிலேயே புகழ் போதையை தலைக்கு ஏற்றிக்கொண்டு இருக்கிறார் அவரது தந்தையாக காளி வெங்கட் தன் மகளின் படிப்பிற்காக எதையும் செய்ய நினைக்கிறார் படிப்பு தான் உன்னை காப்பாற்றும் என்றும் அடிக்கடி கூறிக்கொண்டு வருகிறார்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் வரும் அவர் நதி அந்தப் பாராட்டும் கைத்தட்டல்களும் சில நாட்களில் மறந்து விட அதில் மிகவும் பாதிக்கப்படுகிறார் மனதளவில் இதனால் தனக்கு அந்த புகழ்ப்பதை வேண்டும் என்பதற்காக தனது தந்தையை கொலை செய்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து அனைத்து செய்தித்தாள்களிலும் ஊடகங்களையும் வரும்படி தன்னை காட்டிக் கொள்கிறார் பிறகு படித்து மாவட்ட கலெக்டராகவும் ஆகிறார் மாவட்ட கலெக்டர் ஆகி முதலமைச்சர் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் இவரது நேர்மை அரசியல் மோதலாக அதிகார மோதலாக மாறுகிறது
இந்த சூழ்நிலையில் தனது திறமையான நடத்தியால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு அரசியல் கட்சிக்கு ஆலோசகராக சேர்ந்து பின்பு அவர்களுக்கும் மிகப்பெரிய பயங்கரமான வெஞ்சன்ஸ்கள் தான் படத்தின் தலைப்பாக வெஞ்சன் என்று வைத்துள்ளார்கள் இந்த வெஞ்சன்ஸில் அவர் யாரையெல்லாம் பழி வாங்கினார் என்ன வானார் எந்த உயரத்திற்கு சென்றார் என்பதுதான் இந்த படத்தின் திரைக்காதை
இந்த படத்தில் வேணி என்னும் கதாபாத்திரத்தில் அபர்னதி முழுக்க முழுக்க அதிகாரம் மிக்க தோரணையை மிகவும் அருமையாக உடல் மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சராக ஒய் ஜி மகேந்திரன் மேலும் சரவண சுப்பையா லிவிங் ஸ்டண்ட் ஜான் விஜய் மற்றும் பல இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்
கார்த்திக் ராஜா ஒரு நல்ல விறுவிறுப்பான இசையை அளித்திருக்கிறார்
இந்த படத்தின் இயக்குனர் எடுத்திருக்கும் கதை ஒரு பெண்ணை ஒரு அதிகாரமிக்க வர்கத்தில் எப்படி வாழ முடியும் அவர் எவ்வளவு அதிகாரமாக இருக்க முடியும் என்பதை கையில் கொண்டு ஒரு கதையாக எழுத முயற்சித்திருக்கிறார் ஆனால் படத்தில் நிறைய சீன்களை தான் எழுதியிருக்கிறார் அதை எல்லாம் தவிர்த்து படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக சிறந்த அரசியல் படமாக இருந்திருக்கும்

“காட்டான்” டிரெய்லர்……..

காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது

சென்னை, மார்ச் 13, 2026: ஜியோஹாட்ஸ்டார் வரும் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும் ” முத்து என்கிற காட்டான் ” வெப் சீரிஸின் சுவாரஸ்யமான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. முன்னதாக நடிகர் விஜய்சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய காட்டான் குழுவினர் தற்போது டிரெய்லரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் கதைநடையை மேலும் விரிவாக்குகிறது.

இதில் பல்வேறு கதாபாத்திரங்களின் அடுக்குகளான விளக்கங்கள் வெளிப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் முத்துவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். முத்து என்பவன் பயமுறுத்தும் குற்றவாளியா ? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா? என பல்வேறு கோணங்களில் காட்டப்படும் டிரெய்லர் வெப்சீரிஸின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது .

முத்துவின் உண்மை முகமும், அவர் வாழ்க்கையில் செய்த கொடூரமான சம்பவங்களும் மெதுவாக வெளிப்படத் தொடங்குகின்றன.

நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்தத் தொடரில், மிலிந்த் சோமன், சுதேவ்நாயர், மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, “மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன்
மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்”, என்றார்.

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் எம். மணிகண்டன் உருவாக்கிய இந்தத் தொடர், அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணிக்காக அறியப்படுகிறது. இதை எம். மணிகண்டனும், பி. அஜித் குமாரும் இணைந்து இயக்கியுள்ளனர். மேலும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் மதுநீலகண்டன் மற்றும் N . ஷண்முக சுந்தர் இந்தத் தொடரின் வலுவான காட்சித்தன்மையை வடிவமைத்துள்ளனர். ‘காட்டான்’-ன் உலகத்திற்கு சக்திவாய்ந்த ஒலிபரிமாணத்தை வழங்கும் வகையில், இசையை ராஜேஷ் முருகேசன் அமைத்துள்ளார். முத்து என்கிற காட்டான்’, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக மார்ச் 27 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

10th Edition of CAHOCON 2026 to Bring 2,500 Healthcare Leaders to Chennai to Advance Patient Safety

Chennai, 12 March, 2026: The 10th edition of CAHOCON 2026, India’s premier healthcare quality conference organised by the Consortium of Accredited Healthcare Organizations (CAHO), will be held from April 10 to 12, 2026, in Chennai, bringing together 2,500 healthcare leaders, clinicians, administrators, and policymakers – including over 200 international delegates, to discuss advancements in patient safety, healthcare quality, accreditation, and digital transformation.

Guided by the theme ‘Tech. Touch. Trust – The New Healthcare Code’, CAHOCON 2026 will emphasise the human connection, reliability, and innovation at the heart of advancing healthcare quality and patient safety. The main conference will feature high-impact scientific sessions, panel discussions, innovation showcases, and interactive networking opportunities, along with poster presentations by researchers and clinicians that highlight innovative projects and foster knowledge exchange.

Alongside the conference, CAHOCON 2026 will host a comprehensive healthcare exhibition with around 150 stalls, showcasing cutting-edge products and services from leading medical equipment manufacturers, digital health companies, pharmaceutical firms, and service providers. The conference will also feature three breakout houses, designed to facilitate smaller group discussions, interactive workshops, and focused learning sessions.

Recognised by the International Society for Quality in Healthcare (ISQua) as the first ISQua Regional Conference for South Asia, CAHOCON 2026 will witness addresses by 20 ISQua experts. The conference will honour excellence in healthcare quality and patient safety through the prestigious CAHO Awards, celebrating institutions and professionals who have made outstanding contributions to advancing healthcare standards.

The pre-conference workshops on April 10 will bring together 32 leading hospitals from Chennai, providing hands-on training and practical insights into quality improvement and patient safety.

Addressing a press meet, Dr. Vijay Agarwal, President, CAHO, said, “Over the past decade, CAHO has evolved into a powerful national movement dedicated to strengthening healthcare quality and patient safety across India. Through continuous training, accreditation support, knowledge-sharing platforms and collaborative initiatives, we are working to build a culture where quality and safety are embedded in every aspect of healthcare delivery.

Dr. Lallu Joseph, Secretary General, CAHO, and AGS & Quality Manager at Christian Medical College, Vellore, commented: “CAHOCON has grown into one of the most influential platforms for advancing healthcare quality and patient safety in India. It brings together clinicians, hospital administrators, quality professionals and policymakers to exchange ideas, share best practices and learn from global experiences. Through this collaborative forum, we aim to strengthen a culture of continuous improvement in healthcare systems and ensure that patients across the country benefit from safer and higher-quality care.”

In his address, Dr. S. Manivannan, Org. Co-Chairperson, CAHOCON 2026 and Founder & Managing Director of Kauvery Group of Hospitals, said: “CAHOCON 2026 is set to be a landmark gathering for healthcare professionals from across the country, bringing together clinicians, administrators, researchers, and innovators under one roof. This year’s event will feature pre-conference workshops, high-impact scientific sessions, and panel discussions designed to address the latest advancements and challenges in healthcare. Our attendees will gain unparalleled opportunities for knowledge exchange, networking, and collaboration, while also exploring practical solutions that can be implemented in their institutions.”

Dr. Sathish Devadoss, Org. Secretary, CAHOCON 2026 and Vice Chairman of Devadoss Multispecialty Hospitals, Madurai, said: “CAHOCON 2026 will feature a dynamic array of scientific sessions, covering the latest breakthroughs, clinical practices, and emerging technologies in healthcare. Our pre-conference workshops are designed to offer hands-on learning experiences, equipping participants with practical skills and innovative approaches that can be applied immediately in their practice. From expert-led lectures to interactive panel discussions, the event promises to stimulate meaningful dialogue, foster collaboration, and provide attendees with actionable insights to enhance patient care and drive excellence in healthcare delivery.”

In his remarks, Dr. Ilankumaran Kaliamoorthy, Academic Committee, CAHOCON 2026 & CEO, Apollo Hospitals, Chennai, said: “CAHOCON 2026 brings together a distinguished lineup of speakers, including leading clinicians, researchers, and healthcare innovators. There will be 20 international speakers including Dr Eyal Zimlichman – Deputy Director General & Chief Quality Officer, Sheba Medical Center, Israel; ISQua Academy Member, and Prof David Bates – Chief, Division of General Medicine, Brigham and Women’s Hospital, USA, who will share their expertise and experiences. The event also attracts a diverse group of participants, from hospital administrators to frontline practitioners, creating a vibrant environment for learning, collaboration, and knowledge exchange. This convergence of minds ensures that every attendee gains fresh perspectives, practical insights, and the inspiration to implement best practices in their own institutions.”

CAHOCON 2026 has Dr. Nalla G Palaniswami, Chairman of Kovai Medical Centre and Hospital, as Org. Chairperson, and Dr. Gurushankar, Chairman of Meenakshi Mission Hospital and Research Centre, as one of the Org. Co-Chairpersons.

The press meet was attended also by Mr Adel J, FLAB Healthcare; Dr Arjun, New Medical Centre, Puducherry; Dr V.V. Jaichandran, Sankara Nethralaya; Ms Sandhya Cherian, Frontier Lifeline Hospital, Chennai; Dr Raju Sivasamy V P, SIMS Hospital, Dr Ashokan and Dr Babu Narayanan, GEM Hospital; Ms Gayathri Sandeep, Seethapathy Clinic; Dr Lasya Thambidurai, St. Peters Medical College; Dr Sudagar Singh, SRMC; Mr Venkat Phanidhar, Shasta Healthcare Solutions; Dr Jothi Clara, Healthbridge Company; Mr Mohammed Farouk, Rela Hospital, and Dr Balamurugan, Dr. Muthus Hospital.

“பேட்ரியாட்”( Patriot) படத்திலிருந்து,   நயன்தாரா………..  

பெண்கள் தினத்தில் “பேட்ரியாட்”( Patriot) படத்திலிருந்து,  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா   சிறப்பு கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது!!

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “பேட்ரியாட்” திரைப்படத்தில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த மிகப்பெரிய மல்டி ஸ்டார்ரர்  திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் நேற்று காலை 10 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வெளியிடப்பட்டன. இதில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  
அவருடன் ரேவதி, கிரேஸ் ஆண்டனி, கீதீ சங்கீதா, ஸ்ரீ பார்வதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் செரின் ஷிஹாப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கோலோச்சி வரும் நயன்தாராவின்  கேரக்டர் போஸ்டர் மகளிர் தினத்தில் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.
 
முன்னதாக வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் மம்முட்டி, மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் மாஸ் ஆக்ஷன் லுக்கில் இடம்பெற்றிருந்தனர். அந்த காட்சியின் பின்னணி (BTS) வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தில் மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படம் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, அசர்பைஜான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் 18 ஆண்டுகளுக்கு பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லால் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிப்பதும் அதில் நயன்தாரா இணைந்திருப்பதும் படத்தின் முக்கிய சிறப்பாகும்.

இந்த படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை மனுஷ் நந்தன் மேற்கொண்டுள்ளார்.

ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் கிச்சப்பு பிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்த படம், மலையாள சினிமாவில் சர்வதேச தரத்தில் உருவாகும் மிகப்பெரிய ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

மக்கள் தொடர்பு : யுவராஜ்
விநியோகம்: (Aan Mega Media) ஆன் மேகா மீடியா

‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!

2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், மற்றுமொரு முதன்மை கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார்.  ‘பூவே உனக்காக’ புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் நடித்துள்ளனர்.

முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதே சமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் தோற்றங்கள், படம் ஒரு பரபரப்பான திரில்லர் அனுபவத்தைத் தரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, புரொடக்ஷன் டிசைனை G.துரைராஜ் கவனிக்க, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் (SKY PICTURES)  நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் (FIVE STAR) K. செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து, கோடை விடுமுறை ஆரம்பத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படம், திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரனின் எதார்த்தமான படைப்பு!

ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார்.

பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதன் அடர்த்தியான காட்சியமைப்பிற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயாரித்திருப்பதோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். புதுவையின் பின்னணியில் நடக்கும் கதையாக இது உருவகிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை, போளூர் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜனனி கதாநாயகியாக நடிக்க, சிங்கம்புலி, மதுமிதா, ரமா, முனார் ரமேஷ், முருகதாஸ், வந்தனா, ஃபெரோஸ் கான், சுகன்யா, கௌசல்யா , சித்தார்த்
என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

சதீஷ் எஸ். இப்படத்திற்கு இசையமைப்பதோடு பாடல்களையும் எழுதியுள்ளார். தேவசூர்யா கே. ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரஞ்சித் குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் (Post-Production) தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து – இயக்கம் – தயாரிப்பு: ஏ.எஸ். ரவிச்சந்திரன்.

ஒளிப்பதிவு (DOP): தேவசூர்யா கே.

இசை (Music): சதீஷ் எஸ்.

படத்தொகுப்பு (Editor): ஜி. ரஞ்சித் குமார்.

சண்டைக் காட்சிகள் (Stunt): இடிமின்னல் இளங்கோ.

உடை வடிவமைப்பு: லட்சுமிநாராயணன்.

பாடல்வரிகள்: சதீஷ் எஸ்.

மேக்கப்: மணி.

சிஜி (CG): பிரபா.

ஒலி வடிவமைப்பு: சதீஷ் எஸ்.

ஸ்டில்ஸ் & பப்ளிசிட்டி டிசைன்: வேலு

தயாரிப்பு நிறுவனம்: ஏ.எஸ்.ஆர்.
பிலிம்ஸ் (ASR FILMS)

மக்கள் தொடர்பு (PRO): திரு