Breaking
June 5, 2026

“சாத்தான் தி டார்க்” திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஹாரர் ஜானர் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. ஆனால் எல்லா ஹாரர் படங்களும் ஒரே மாதிரி jump scare-களில் நம்பிக்கை வைக்கும் நிலையில், “Sathan: The Dark” ஒரு வித்தியாசமான முயற்சி. இது வெறும் பயமுறுத்தும் படம் இல்லை — ஒரு இருண்ட, மன உளைச்சல் தரும் அனுபவம்.

கதை British காலத்தில் நடந்த ஒரு தவறான கருப்பு மந்திர சடங்கு (black magic ritual) மூலம் ஆரம்பமாகிறது. அந்த சடங்கு சரியாக நிறைவேறாமல் போனதால், ஒரு தீய சக்தி உருவாகிறது.

அந்த சாபம் ஒரு குறிப்பிட்ட கிராமத்தை தலைமுறைகள் கடந்தும் தாக்கிக்கொண்டே இருக்கும். மக்கள் அங்கு விசித்திரமான மரணங்கள், பயங்கரமான சம்பவங்கள், மற்றும் unexplained incidents-ஐ சந்திக்கிறார்கள்.

Present timeline-ல், ஒரு இளைஞன் இந்த கிராமத்துக்கு வருகிறான். அவன் காதலி இந்த சக்தியால் பாதிக்கப்படும்போது, அவன் அந்த பழைய இரகசியத்தை ஆராய ஆரம்பிக்கிறான்.

அந்தச் சாத்தானிய சக்திகளை எதிர்கொண்ட, தனது காதலியை அந்தப் பரம்பரைச் சாபத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும் எஃப்.ஜே மீட்டெடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

  • Hero – கதைக்கு தேவையான serious tone-ஐ maintain பண்ணுகிறார். Emotional scenes-ல் decent performance.
  • Heroine – பயம், குழப்பம் போன்ற உணர்வுகளை நன்றாக காட்டுகிறார்.
  • Supporting characters – சிலர் natural-ஆ இருக்கிறார்கள், சில இடங்களில் acting average feel தருகிறது.

Overall, star value இல்லாததால் realism இருக்கிறது.

இயக்குனர் ஒரு strong concept எடுத்திருக்கிறார்,ஆரம்பம் slow-ஆ build ஆகிறது,screenplay சில இடங்களில் confusing ஆகிறது,second half-ல் clarity இன்னும் better இருந்திருக்கலாம்.

Related Post