Breaking
June 5, 2026

“நீ பார் எவர்” திரைவிமர்சனம்

காதல் திருமணம் என்றாலே பிடிக்காத குடும்பத்தை சேர்ந்த சுதர்சன் கோவிந்த் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார்.உண்மையான காதலுக்காக ஏங்கும் ஒரு சராசரி மனிதன்.அவர் காதலர்களுக்காக நீ பார் எவர் என்ற ஒரு டேட்டிங் ஆப்பை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.ஏன் நேரத்தில் அர்ச்சனா ரவி திரைப்படத்தில் ஒரு இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஒரு காதல் கதையை எடுத்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.இந்த சூழலில் அவர் ஒரு டேட்டிங் ஆப்பிள் யாராவது ஒருவரை சந்தித்து அவரிடம் காதலிப்பது போல் பழகி அந்த உண்மையான காதலை வைத்து ஒரு திரைக்கதை எழுத முயற்சி செய்கிறார்.அதே நேரத்தில் சுதர்சன் கோவிந்த் தனது ஆப்பிற்காக ஒரு பெண்ணிடம் பழக நினைக்கிறார் இருவரும் ஒரு சூழலில் ஆப் மூலம் பழக இவர்களுக்குள் ஒரு உண்மையான காதல் உருவானதா இல்லை அவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி பழகுவது தெரிகிறதா.இறுதியில் அந்த காதல் உண்மையானதாக மாறி வெற்றி பெற்றதா குடும்பத்தினர்கள் ஏற்றுக் கொண்டார்களா? அஜயன் தாத்தா காதலை வெறுக்கும் நிலையில் இந்த காதலை ஏற்றுக் கொள்கிறாரா என்பதுதான் நீ பார் எவர் படத்தின் திரைக்கதை
இந்தப் படத்தின் நாயகனாக சுதர்சன் கோவிந்த் நல்ல உயரமான ஒரு உருவம் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் காதலுக்காக ஏங்கும் நிலையை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அர்ச்சனா ரவி திரைக்கதில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வலம் வரும் நாயகி.
நாயகனின் தாத்தாவாக வை ஜி மகேந்திரன் காதலுக்கு எதிரியாக வருகிறார்.
பொதுவாகவே இந்த மாதிரி திரைப்படத்திற்கு இசை என்பது மிகவும் உறுதுணையாக இருக்கும் இந்த படத்திற்கு ஓரளவுக்கு உறுதுணையாக இருக்கிறது அஸ்வின் ஹேமந்த் இன் இசை.
ஒளிப்பதிவு கிராமத்தையும் பொள்ளாச்சியின் பசுமியையும் மிக அழகாக காட்டியுள்ளார்கள்
இயக்குனர் அசோக் குமார் கலைவாணி இன்றைய தலைமுறைகளை குறி வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அதில் அவர் சென்றடைவார் என்று நம்புவோமாக
மொத்தத்தில் நீ பார் எவர் இன்றைய தலைமுறைக்கு எட்டா கணி

Related Post