லேபில் சீரிஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு .

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், உருவாகியிருக்கும் ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை, நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

இதனையொட்டி பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக “லேபில்” சீரிஸின் நான்கு எபிசோடுகள், சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது.

இந்த சிறப்புத் திரையிடலைத் தொடர்ந்து, லேபில் வெப்சீரிஸ் குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்…

ஒளிப்பதிவாளர் தினேஷ் பேசியதாவது…
இயக்குநர் அருண் ராஜாவுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளேன். அவருடன் இணையும் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருக்கும், இது மிகச்சிறப்பான சீரிஸாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி,

எடிட்டர் ராஜா ஆறுமுகம் பேசியதாவது…
இப்போது 4 எபிசோடு பார்த்திருப்பீர்கள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சீரிஸாக இல்லாமல் படத்திற்கு மாதிரி தான் உழைத்தோம், முழுக்க முழுக்க ஒரு படத்தைப் போலவே தான் பிரம்மாண்டமாக உருவாக்கினோம். உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சாம் C S பேசியதாவது…
ஹாட்ஸ்டாருக்கு நான் செய்யும் இரண்டாவது சீரிஸ் இது. சீரிஸ் என்றாலே டிவி நாடகத்துக்கு அடுத்த கட்டம் என்று நினைக்கிறார்கள், ஆனால் இது சினிமாவை தாண்டிய அடுத்த கட்டம், வரும் காலத்தில் சினிமாவை விட வெப் சீரிஸ் தான் பெரிதாக இருக்கும். நான் செய்து வரும் சீரிஸ்களே அதற்குச் சாட்சி, அதில் ஒன்று தான் லேபில். நமக்கு என்று ஒரு அடையாளம் தேவை என்பதை எல்லோருமே நினைப்போம், அது மாதிரி அடையாளப் பிரச்சனையைச் சொல்லும் சீரிஸ் தான் இது. இப்போது பார்த்த எபிசோட் உங்களுக்குப் பிடித்திருக்குமென நம்புகிறேன். இதில் மூவி மாதிரி தான் வேலை பார்த்தோம், பாடல் எல்லாம், ஒரு கமர்ஷியல் படம் போலவே இருக்கிறது. எங்கள் டீமின் உழைப்பு உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன். அருண் ராஜாவுடன் உழைத்தது மிக மகிழ்ச்சி. ஜெய் உடன் படம் செய்திருக்கிறேன், ஆனால் இந்த சீரிஸில் அவர் தன்னை அந்தக்கதாபாத்திரமாகவே மாற்றி நடித்திருக்கிறார். தினேஷ் மிக அழகான விஷுவல்ஸ் தந்துள்ளார், எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். மிகச்சிறப்பான சீரிஸாக இருக்கும். எல்லோருக்கும் நன்றி.

எழுத்தாளர் ஜெயசந்திர ஹாஸ்மி பேசியதாவது…
எனக்கு முதல் மேடை, ஒரு மேடை கிடைப்பது அரிது, இந்த மேடையை அமைத்துத் தந்ததற்காக அருண் ராஜாவிற்கு நன்றி. இயக்குநர் ஆவது தான் என் கனவு. அருண்ராஜாவின் படங்கள் மிகவும் பிடிக்கும், இந்த சீரிஸ் அவருடன் வேலை பார்த்தது சிறந்த அனுபவம், தப்பித்தவறி கூட ஒரு சமூகத்தைத் தப்பாக அடையாளம் காட்டிவிடக்கூடாது, என்பதில் மிகத்தெளிவாக இருந்தார். அது தான் அவரிடம் பிடித்த விசயம். நாங்கள் என்ன எழுதினோமோ அதை திரையில் கொண்டு வந்தார் ஜெய். லேபில் நம் மீது சமூகம் வைக்கும் முத்திரையை உடைத்து, நமக்கான அடையாளத்தைத் தேடிப் போகும் ஒருவனின் கதை தான். தமிழில் ஒரு சிறந்த சீரிஸாக இது இருக்கும் நன்றி.

நடன இயக்குநர் அசார் பேசியதாவது…
ஒரு சீரிஸில் பாட்டா என எல்லாரும் யோசிப்பார்கள், ஆனால் அது தான் அருண்ராஜா மாஸ்டர். சீரிஸில் பாட்டு வைத்ததற்கு அவருக்கு நன்றி. சீரிஸில் பாட்டு எடுப்பது வித்தியாசம், ஆனால் அதில் நிறையப் புதுசாக செய்துள்ளோம். மாண்டேஜாக நிறைய எடுத்தோம். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

நடிகர் ஹரி சங்கர் பேசியதாவது..
இது எனக்கு மிகவும் முக்கியமான சீரிஸ், இதில் வாய்ப்பு தந்ததற்கு அருண் ராஜா அவர்களுக்கு நன்றி. நெருப்புக் குமாராக எனக்கு ஒரு அடையாளம் தந்துள்ளார்கள். மகேந்திரன் என் நீண்ட கால நண்பன், எனக்காக அவன் பெருமைப்படுவான், அவனுக்காக நான் பெருமைப்படுவேன். தீபாவளிக்கு வீட்டிலிருந்து இந்த லேபிலை கொண்டாடுங்கள் நன்றி.

நடிகர் ஹரீஷ் குமார் பேசியதாவது….
எனக்கும் இது ஒரு மிக முக்கியமான அடையாளம், 6 வருடம் கழித்து என்னை மேடை முன்னே நிற்க வைத்துள்ளீர்கள், நான் தொலைத்த இடத்தைத் தந்து என்னைப் பாராட்ட வைத்துள்ளீர்கள், அருண் ராஜாவிற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் தினேஷ் என்னை மிக அழகாகக் காட்டியதற்கு நன்றி. ஜெய் பிரதர் எனக்கு மிக சப்போர்ட்டாக இருந்தார் நன்றி. முத்தமிழ் படைப்பகம் நிறுவனத்திற்கு நன்றி. மகேந்திரன் எங்குப் பார்த்தாலும் என்னைப் பாராட்டுவான் தேங்க்யூ தம்பி. எல்லோரும் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். எங்களைக் கொண்டு சேர்க்கும் டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.

நடிகர் மகேந்திரன் பேசியதாவது…
மிக அழகான மேடை, இந்த மாதிரி ஒரு நல்ல புராஜக்டில் நாமும் இருக்க வேண்டுமென நினைப்பேன், ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. ஆனால் இந்த சீரிஸ் வாய்ப்பிற்காக அருண் ராஜா அவர்களுக்கு நன்றி. தினேஷ் மிக அட்டகாசமாக ஃப்ரேம் வைப்பார். அவருக்காகவே நன்றாக நடிக்க வேண்டுமென நினைப்பேன். இந்த சீரிஸில் எல்லோருமே கடுமையாக உழைத்துள்ளனர். பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை காயத்திரி பேசியதாவது…
உணர்வுப்பூர்வமான ஒரு சீரிஸை அருண்ராஜா தந்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும். நம் மீது திணிக்கப்படும் அடையாளத்தை, லேபிலை, எதிர்த்துப் போராடும் ஒரு விசயத்தைப் பற்றி எடுத்துள்ளார். எனக்கு மிக உணர்வுப்பூர்வமான பாத்திரம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஶ்ரீமன் பேசியதாவது…
லைவ் லொகேஷனில் ஷீட் செய்வது கடினம், ஆனால் தினமும் பல தடைகளைத் தாண்டி, ஷீட் செய்தார் அருண்ராஜா. அவர் மிக கூலான டைரக்டர், அற்புதமான கலைஞன், யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என அவருக்குத் தெரியும். ஜெய்க்கு இது மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும். மாஸ்டர் மகேந்திரன் மெச்சூர்ட் மகேந்திரனாக லேபில் மூலமாக மாறுவார். இந்த சீரிஸை பெரிய பட்ஜெட்டில் உழைத்து உருவாக்கிய அனைவருக்கும் நன்றி. பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் சரண் ராஜ் பேசியதாவது..
முதலில் ஒரு படம் செய்வதாகச் சொல்லித் தான் அழைத்தார்கள், கதை கேட்டேன் நிறையக் கதைகள் கேட்டாலும் எனக்குப் பிடித்தால் மட்டுமே நடிப்பேன், அருண் ராஜா பார்க்கவே வித்தியாசமாக இருந்தார். கதை சொன்னார் மிக அமைதியாக அவர் சொன்ன விதமே என்னை அசத்திவிட்டது. நான் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டர் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. சிலர் கதை சொன்னாலும் நன்றாக எடுக்க மாட்டார்கள், முதல் நாளில் அவர்கள் எடுத்த ஷாட்டை பார்த்தேன், அப்போதே பிடித்துப்போய் விட்டது. 5 மணி நேர ஃபுட்டேஜ் எடுத்திருக்கிறார். இந்த மாதிரி ஒரு படைப்பை எடுக்கப் பெரிய திறமை வேண்டும், அருண் ராஜா அசத்தியுள்ளார். ஜெய் என் குடும்ப நண்பர் அவரை எனக்குத் தெரியும், இதில் அட்டகாசமாக நடித்துள்ளார். மிகச்சிறப்பாகத் தயாரித்துள்ள முத்தமிழ் பதிப்பகத்திற்கு நன்றி. ஹாட்ஸ்டாருக்கு நன்றி. இந்த சீரிஸ் மிகப்பெரிய வெற்றி பெறும் நன்றி.

நடிகை தான்யா ஹோப் பேசியதாவது…
லேபில் டீமுடன் நான் இணைந்து பணியாற்றியது மிக மகிழ்ச்சியான அனுபவம். நடிகர்கள் தொழில் நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த பாத்திரத்தைத் தந்த அருண் ராஜாவிற்கு நன்றி. இந்த சீரிஸை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஜெய் பேசியதாவது…
முத்தமிழ் படைப்பகம், ஹாட்ஸ்டார் தயாரிப்பில், அருண்ராஜா இயக்கத்தில் அக்டோபர் 10 ஹாட்ஸ்டார் ஓடிடியில் வருகிறது, எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள், பொதுவாக படவிழாக்களை டீவியில் பார்க்கும்போது, படம் பற்றி எல்லோரும் பேசுவதைப்பார்த்தால், கொஞ்சம் ஓவராக பேசுவதாக தோன்றும், ஆனால் இதில் வேலை செய்து, முடித்த போது தான் அதன் அர்த்தம் புரிந்தது. மிக மிக முக்கியமான படைப்பு, அந்த உழைப்பு மிகப்பெரிது. அவ்வளவு டீடெயிலாக உருவாக்கியுள்ளார்கள். எனக்கு மிக முக்கியமான சீரிஸாக இது இருக்கும். எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியதாவது…
லேபில் என் மூன்றாவது படைப்பு ஒவ்வொன்றிலும் கற்றுக்கொண்டு வருகிறேன். இதில் என்னை ஈஸியாக வைத்துக்கொண்டவர் ஒளிப்பதிவாளர் தினேஷ். அவர் தான் எனக்காகச் சேர்த்து உழைத்தார். எனக்குக் கிடைத்த கிஃப்ட் அவர். அவருக்கு நன்றி. இந்த சீரிஸில் வேலை பார்த்த அனைவரும் என்னை மிகவும் நம்பினார்கள், எல்லோரும் சினிமாவில் சாதித்தவர்கள், அவர்கள் தரும் உழைப்பைச் சரியாக எடுத்துக்கொண்டாலே போதும். இந்த சீரிஸ் நன்றாக உருவாக காரணம், என் டைரக்சன் டீம் தான். என்னையே அவர்கள் தான் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. ஜெய் இந்த படைப்பின் மூலம் நண்பராகக் கிடைத்துள்ளார். இதற்கு முன் வேட்டை மன்னனில் அஸிஸ்டெண்டாக இருந்த போது அவர் நடிகராக இருந்தார், இப்போது அவரை இயக்கும்போது எனக்காகக் கூடுதலாக உழைத்தார் நன்றி. எங்கள் டீமில் நிறைய இழப்பு நேர்ந்திருக்கிறது அதைத்தாண்டி, உங்களுக்காக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளோம். உங்கள் கைதட்டல்களில் தான் எங்கள் மகிழ்ச்சி இருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தான்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “லேபில்” சீரிஸ் நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.

Related Post