Breaking
January 23, 2025

‘வைஜெயந்தி மியூசிக்’ எனும் இசை நிறுவனம் தொடங்கப்படுவதை பிரபல வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

1974 ஆம் ஆண்டில் தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத்தால் தொடங்கப்பட்டு, பின்னர் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாக தெலுங்கு சினிமாவில் வளர்ச்சி அடைந்த படத் தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ். இந்நிறுவனம் தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகரமான படைப்புகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் திரைத் துறை சார்ந்த தொழில்துறையில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து ஒத்துழைத்த தயாரிப்பு நிறுவனம் இது. இந்நிறுவனம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பல திரைப்படங்களை தற்போது தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் தொழில்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிறுவனம். இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவனம் புதிதாக ‘வைஜெயந்தி மியூசிக்’ எனும் இசை நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.‌ 50 ஆண்டுகள் நிறைவடையொட்டி இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி 2024 ஆம் ஆண்டு வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ‘கல்கி 2898 கி.பி.’ என்ற பிரம்மாண்ட இலட்சிய படைப்பின் வெளியீட்டிற்கு முன்னதாக அவர்கள் இந்த வைஜெயந்தி மியூசிக் எனும் இசை நிறுவனம் தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

மேலும் ‘எங்கள் இசையை உங்கள் வாழ்வில் கொண்டு வருவோம்’ என்பதுதான் வைஜெயந்தி மியூசிக் எனும் மியூசிக் பிராண்டின் நோக்கம் என இந்நிறுவனம் பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.‌

Related Post