
கதாநாயகி சாய் தன்யாவை பார்த்தவுடன் காதல் கொள்ளும் கதாநாயகன் சதாசிவம் சின்னராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக நடத்தி வரும் கதாநாயகன் சதாசிவம் சின்னராஜ், திடீரென செய்து கொண்டிருந்த வேலை போய் விடுகிறது.
தனது காதலிக்காக இருசக்கர வாகனம் தனது தனது காதல் மனைவிக்காக காரும் மாதத் தவணையில் வாங்குகிறார்.
இதனால் செய்து கொண்டிருந்த வேலையும் வருமானமும் இல்லாததால், தன் காதல் மனைவிக்காக வாங்கிய இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைகளுக்கான மாத தவணை கட்டமுடியாமல் கதாநாயகன் சதாசிவம் சின்னராஜ், அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறார்.
தன் காதல் மனைவிக்காக வாங்கிய பைக்கும் காரும் கட்ட வேண்டிய மாதத்தவனை கட்ட முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் கதாநாயகன் சதாசிவம் சின்னராஜ் மாதத் தவணை கட்டினாரா? கட்டவில்லையா? என்பதுதான் இந்த EMI மாத தவணை திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த EMI மாதத் தவணை திரைப்படத்தில் சதாசிவம் சின்னராஜ் புதுமுக கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
நடிப்பு என்பது எதார்த்தமாக இருக்க வேண்டும் இந்த திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக நடித்திருக்கும் சதாசிவம் சின்னராஜ் செயற்கை தனமாக நடித்திருக்கிறார்.
இந்த EMI மாதத் தவணை திரைப்படத்தில் கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சாய் தன்யாவுக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை.
கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பேரரசு மொத்தத்தில் சுமாராக நடித்திருக்கிறார்.
கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செந்தி குமாரி வழக்கம் போல் வந்து போகிறார்.
கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிளாக் பாண்டி, மாத தவணை வசூலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சன் டிவி ஆதவன் ஓ.ஏ.கே.சுந்தர், லொள்ளு சபா மனோகர் ஆகியோறும் நடிப்பு ஓகே ரகம்.
ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்திருப்பது திரைப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சையின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.
வங்கியை நம்பி கார் வீடு இருசக்கர வாகனம் வீட்டு உபயோக பொருள்கள் வரை அனைத்தையும் எளிதில் வாங்க கூடிய மாத தவணை திட்டத்தில் மாட்டிக்கொள்ளும் மக்களை எப்படி எல்லாம் வங்கியில் உள்ளவர்கள் தவணை பசுபிக்கிறேன் என்ற பெயரில் மக்களை சின்ன பின்னமா ஆக்குகிறது என்பதையும் வங்கி கடன் உள்ளிட்டவைகளால் நடுத்தர குடும்பத்தினர் எப்படி கஷ்ட்டப்படுகிறார்கள் என்பதை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சதாசிவம் சின்னராஜ்.