
தனது பிறந்தநாள் விழாவில் தன் தாயுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் பயணிக்கும் போது டிடிஆர் ஆன யோகி பாபுவை சந்திக்கும்போது லவ்லின் சந்திரசேகரின் நிலைமையை புரிந்துக்கொள்ளும் யோகி பாபு, தாய் என்பவர் எவ்வளவு முக்கியம் என்பதை லவ்லின் சந்திரசேகருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் கூறுகிறார்.
தாய் கனிகா இறந்த துக்கத்தில் தாய் பாசத்திற்காக ஏங்கும் மும்பை தாதா, நட்டி நடராஜ் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் தாய், தந்தை பாரதிராஜா வடிவுக்கரசி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தன் தாயை காப்பாற்ற முடியவில்லை மகன் ரியோ ராஜ் சோகம், தாய் ஆதிரா என்ற உறவுக்காக எதை வேண்டுமானாலும் தூக்கி எரிய தயாராக இருக்கும் ஆதரவற்ற இளைஞன், சாண்டி, துளசி என நான்கு விதமான நல்ல கதைகளும், அதில் பயணித்த கதாபாத்திரங்களின் தாய் மீதான பாசப் போராட்டம் தான்
லவ்லின் சந்திரசேகரிடம் யோகி பாபு கூறும் அந்த நான்கு கதைகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை ’தாய்’ என்ற உறவு மட்டுமேதான் என அனைவரும் கொடுத்த கதாபாத்திரங்களை உணர்ந்து நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைக் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி என அனைத்து கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பான நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு மூலம் நான்கு கதையிலும் மிக நேர்த்தியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
நான்கு கதைகளையும் தாய் செண்டிமெண்டோடு சொன்னது தவறில்லை, ஆனால் நான்கு கதைகளிலும் அளவுக்கு அதிகமான சோகத்தை கொடுத்திருப்பது தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை இருந்தாலும் மிக அருமையாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரிட்டோ ஜே.பி.