சென்னையைச் சேர்ந்த கதாநாயகன் ஷேன் நிகம், தமது திருமணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நடத்த வேண்டும் என விரும்புகிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெரிய அளவில் நடந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், எதிர்பாராமல் நடக்கும் விபத்து மூலம் ஷேன் நிகமின் வாழ்க்கை தடம் புரள்கிறது அதனால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார். என்பதுதான் இந்த ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் நாயகனாக ஷேன் நிகம் அறிமுகமாகியிருக்கும் முதல் திரைப்படத்திலேயே ஆக்ஷன் காட்சிகளில் அசால்டாக நடித்திருக்கிறார்.
தாயிடம் பாசம் காட்டி பேசுவதும், அத்தைகளிடம் ஐஸ் வைத்து பேசுவதும், தனது காதலியிடம் கெஞ்சி கொஞ்சுவது என்று துறுதுறு என்று நடிப்பின் மூலம், அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
நிஹாரிகாவின் ஒரு வார்த்தை தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்றாலும் திரைப்படத்தில் காட்சிகள் மிக குறைவே உள்ளது.
கலையரசன், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா தத்தா, சில காட்சிகளில் வந்தாலும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
கதாநாயகனின் தாய் மாமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாஸ், தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டியராஜன், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், அத்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா, நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லல்லு என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை மிகப்பெரிய அளவில் வழங்கியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், ஆக்ஷன் காட்சிகளை மிக மிரட்டலாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் பின்னணி இசை கொஞ்சம் சத்தமாக இருந்தாலும், வேகமான திரைக்கதைக்கும், ஆக்ஷன் காட்சிகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது.
சிறு விசயத்தை வைத்துக் கொண்டு திரில்லர் ஆக்ஷன் ஜானரை ராவான காட்சிகள் மூலம் எழுதி இயக்கியிருக்கும் வாலி மோகன் தாஸ், மிரட்டலாக கொடுத்திருக்கிறார்