Breaking
January 10, 2025

அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !!

அகத்தியா படத்தின் முதல் சிங்கிள் பாடல் “காற்றின் வைரல்” வெளியிடப்பட்டது: இப்படம் இசை மற்றும் விஷுவல் மாஸ்டர் பீஸ், ஃபேண்டஸி-ஹாரர்-திரில்லராக உங்களை மகிழ்விக்க ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்தியா வெளியீடாக வருகிறது.

தமிழ்த் திரையுலகில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரைப்படமான “அகத்தியா” திரைப்படத்தின், முதல் சிங்கிள் பாடல், “காற்றின் விரல்” இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை, அதிர வைக்கும் விஷுவல்களுடன், திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது இப்பாடல். இப்பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றாக “அகத்தியா” இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

ஃபேண்டஸி வகையில், திகில் மர்மம் நிறைந்த ஒரு புத்தம் புது உலகிற்கு அழைத்துச் செல்லும் இப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

படத்திற்கு மேடை அமைத்துத் தரும் பாடல்

காற்றின் விரல் ஒரு மெல்லிசை டூயட் பாடலாகும், இது அகத்தியா படத்தின் களத்தையும் அதன் மாயாஜால உணர்வுகளையும், முழுமையாக உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இளையராஜாவின் சிக்னேச்சர் பியானோ இசைத் துண்டுடன் தொடங்கும் பாடல், ஒரு ஆத்மார்த்தமான மெல்லிசையாக மாறுகிறது, மறக்க முடியாத கேட்கும் அனுபவத்தை அளிக்கிறது. மெல்லிசையில் வல்லவரான யுவன் ஷங்கர் ராஜா, பாடல் கேட்பவர்களிடம் ஆழமாக எதிரொலிக்கும் வகையில், ஒரு இசையமைப்பை உருவாக்கியுள்ளார். புகழ்பெற்ற ஸ்ரீதர் மாஸ்டரின் நடன அமைப்பும், தீபக் குமார்பதியின் அற்புதமான ஒளிப்பதிவும், இந்தப் பாடலைத் திரையில் உயிர்ப்பிக்கிறது. இப்பாடல் ஒரு உண்மையான காட்சி விருந்தாக அமைந்துள்ளது.

படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக முழுப் பாடலையும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு, பாடல் உருவாக்கும் தாக்கத்தில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பறைசாற்றுகிறது. இயக்குநரும் பாடலாசிரியருமான பா.விஜய் குறிப்பிடுவது போல், “இந்தப் பாடல் வெறும் மெல்லிசை அல்ல – இது ஒரு பயணம். இளையராஜா மற்றும் பீத்தோவன் இருவரின் புத்திசாலித்தனத்தின் சாரத்தை இது கொண்டு செல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். இந்த ஐடியாவை யுவனிடம் முன்வைத்தபோது, வெறும் 10 நிமிடத்தில் அவர் அந்த மேஜிக்கை செய்தார். இது காலத்தைக் கடக்கும் ட்யூன்கள் மற்றும் நவீன உணர்வுகளின் கலவையாகும், அது தந்த மகிழ்ச்சியிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை.

பாடல் குறித்த யுவனின் கருத்து.

பாடல் அனுபவம் குறித்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா, “பா.விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே சிறப்பான அனுபவமாகும். நாங்கள் 300 க்கும் மேற்பட்ட பாடல்களில் ஒன்றாக வேலை செய்துள்ளோம், நாங்கள் பகிர்ந்து கொள்ளும் உறவு தனித்துவமானது. என் தந்தையின் பியானோ இசைத்துண்டு மற்றும் பீத்தோவனின் ட்யூனை காற்றின் விரலில் இணைப்பது பற்றி அவர் என்னிடம் சொன்னபோது, நான் சிலிர்த்துப் போனேன். இந்த இரண்டு அற்புத இசையின் பாரம்பரியத்தால் வழிநடத்தப்பட்டதைப் போல, இந்த பாடல் சிரமமின்றி தானாக வந்தது. இது எனது சிறந்த மெல்லிசைப் பாடல்களில் ஒன்று என்று நான் நம்புகிறேன், மேலும் கேட்போர் இதைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருகிறது.
 
பாடல் குறித்து தயாரிப்பாளர் கருத்து

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைவரும், தொலைநோக்கு தயாரிப்பாளருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் பாடல் குறித்து, உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டதாவது…: “அகத்தியா மிக முக்கியமான லட்சிய திரைப்படம், மேலும் இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சமும் உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றின் விரல் இந்தத் திரைப்படத்தின் மகுடம் – யுவனின் அசாதாரண இசையமைப்பு, அசத்தலான காட்சிகள் மற்றும் நடன அமைப்புடன் திரையில் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இந்தப் படத்தை உருவாக்குவதில் காட்டப்பட்ட அர்ப்பணிப்புக்கும் ஆர்வத்துக்கும் சான்றாகும்.

அகத்தியா: ஒரு கூட்டு அற்புதம்

தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களுடன் அனீஷ் அர்ஜுன் தேவ் தலைமையிலான வாமிண்டியா (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்) இணைந்து, அகத்தியா திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. டீஸரும் இப்போது முதல் சிங்கிளும் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கி, 2025 ஆம் ஆண்டில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் எனும் எதிரப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 31, 2025ஐ உங்கள் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். புதிய அனுபவத்திற்குத் தயாராகுங்கள்

மர்மம், திகில் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், அகத்தியா ஒரு அற்புதமான திரை அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படம் ஜனவரி 31, 2025 இல் பிரம்மாண்டமாக வெளியாகிறது. டீசர், முதல் பார்வை, காற்றின் விரல் பாடல் என அனைத்தும், இப்படம் ஒரு விஷுவல் விருந்தாக இருக்குமென்பதை உறுதி செய்கிறது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *