ராம் சரணின் “கேம் சேஞ்சர்” படத்தின் வட இந்திய விநியோக உரிமையை AA பிலிம்ஸ் பெற்றுள்ளது.

“கேம் சேஞ்சர்” படத்தின் வட இந்திய விநியோக உரிமையைப் பெற்ற ஏஏ பிலிம்ஸ் !!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” திரைப்படம், நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பிலிருந்து வருகிறது. இப்படம் வரும் 10 ஜனவரி 2025 அன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வட இந்திய விநியோக உரிமை, அபரிமிதமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த தொகை ராம் சரணின் சினிமா கேரியரில் மிக அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

புகழ்மிகு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஜனவரி 10, 2025 அன்று சங்கராந்தி அன்று வெளியாகும் இப்படம், S.S. ராஜமௌலியின் “RRR” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராம் சரண் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

இப்படத்திலிருந்து “ஜருகண்டி” மற்றும் “ரா ரா மச்சா” ஆகிய இரண்டு உற்சாகமிக்க பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். “கேம் சேஞ்சர்” படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வணிகம் ஏற்கனவே சிறப்பாக நடந்து வருகிறது, இப்படத்தின் வட இந்திய விநியோக உரிமையை, அனில் ததானியின் AA பிலிம்ஸ் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாகத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு “கேம் சேஞ்சர்” வட இந்தியாவில் மிக அதிகபட்ச திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடப்படுவதை உறுதி செய்கிறது, அனில் ததானியின் வெளியீட்டில் இப்படம் மிகப்பிரமாண்டமாக வெளியாகும் என்பது, ராம் சரண் ரசிகர்களையும் திரைப்பட ஆர்வலர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

“கேம் சேஞ்சர்” படத்தில் ராம் சரண் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக ஊழல் மற்றும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுடன் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காகப் போராடுகிறார். பாலிவுட் அழகி கியாரா அத்வானி நாயகியாகவும், நடிகை அஞ்சலி ஒரு முக்கிய பாத்திரத்திலும் நடித்துள்ளனர் மற்றும் பல பெரிய நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

தமனின் அற்புதமான பாடல்கள் மற்றும் அதிரடியான பின்னணி இசை, திருவின் வசீகரிக்கும் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது இப்படத்தின் எடிட்டிங்கை இரட்டையர்களான ஷம்மர் முகமது மற்றும் ரூபன் ஆகியோர் கையாள்கின்றனர்.

ஹைதராபாத், நியூசிலாந்து, ஆந்திரப் பிரதேசம், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் உள்ள பிரமிக்க வைக்கும் இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் அனுபவமாக இருக்கும். பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளன.

முன்னணி நட்சத்திர நடிகர்கள், வசீகரிக்கும் கதைக்களம் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் குழுவுடன், “கேம் சேஞ்சர்” ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் ஆக தயாராக உள்ளது, இப்படம் இப்பொழுதே நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *