Breaking
January 22, 2025

“நந்தன்” திரைவிமர்சனம்

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைபடம் நந்தன்

காலம் காலமாக எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் போட்டியின்றி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்து தலைவராக இருந்து வரும் வணங்கான் குடி கிராமத்தை திடீரன தனித்தொகுதியாக மாற்ற, ஏற்கனவே தலைவராக இருக்கும் பாலாஜி சக்திவேல் தன் வீட்டில் வேலை செய்யும் தலித்தை சேர்ந்த சசிகுமாரை நிற்க வைத்து தனக்கு அடிமையாக்கி தானே அதிகாரத்தில் இருக்க நினைக்கிறார்.

அது நிறைவேறியதா? இல்லை சசிகுமார் அடிமை தனத்தில் இருந்து வெளியே வந்தாரா? என்பது தான் கதை.
வணங்கான் குடி தலைவராக பாலாஜி சக்திவேல், அவரின் அடிமை கூல் பானையாக சசிகுமார்.
பொது தொகுதியாக இருக்கும் தனது ஊரை தனித்தொகுதியாக மாற்றியதும் கோபப்படும் பாலாஜி சக்திவேல், தனக்கு ஒரு அடிமை தலைவரை தேர்ந்தடுக்க காட்டும் படபடப்பு, அவன் கை மீறும் போது காட்டும் கோபம், அந்த ஊரின் நிரந்தர தலைவர் தான் மட்டுமே என்று நினைக்கும் ஆணவம் என பல்வேறு நடிப்பு பரிமாணத்தில் நிற்கிறார்.
கூல்பாணை அம்பேத்குமாராக சசிகுமார். அந்த கதாபாத்திரமாக மாற அவர் முயற்ச்சி செய்திருந்தாலும் படத்தில் ஒட்டாமலே இருக்கிறது. நடிப்பு மிகையாக தெரிகிறது. அவருடைய கதாபாத்திரம் அறிவாளியாக இல்லாமலும், முட்டாளாக காட்ட முடியாமலும் தினறுகிறார் இயக்குநர். சசிகுமார் தன் நடிப்பை மெருகேற்ற வேண்டும். கூல் பாணை மனைவியாக ஸ்ருதி பெரியசாமி நடிப்பு ஓகே ரகம். சிலகாட்சிகளில் அதிக நடிப்பும், சிலகாட்சிகளில் அளவான நடிப்பும் தந்திருக்கார்.
படத்தில் வரும் ஒரு மாப்பிள்ளை கேரக்டர் கத்திகத்தி பேசுகிறது.
இரா சரவணன் ,, பொது தொகுதி தனி தொகுதியாக மாறிஅங்கு வரும் தலித் தலைவர்களை மற்ற சாதியினர் படுத்தும் அவமானத்தை மையப்படுத்தி எடுத்திருக்கும் கதை களம் நிச்சயம் புரட்சி வெடித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அமைத்திருக்கும் திரைகதையில் ஒரு சுனக்கம் ஏற்படுகிறது. தலித் மக்களை காட்டினால் அவர்களை கருப்பாகவும், குளிக்கதவர்களாகவும் தான் காட்ட வேண்டும் என்பது கட்டாயமில்லை.

BDO அதிகாரியாக வரும் சமுத்திரகனி, ஊனமுற்ற அதிகாரிகள் தான் நேர்மையாக இருப்பார்கள் என்று காட்டி இருப்பது ஏன்.?


ஜிப்ரானின் இசை படத்திற்கு சற்றே பலம்.


மக்களிடம் சாதி ஒழிந்தாலும் அரசியல் தலைவர்கள் நிச்சயம் அதை ஒழிக்க விடமாட்டார்கள், எத்தனை திரைப்படம் வந்தாலும் மாறாது அதிகாரமும், அரசியலும்.

நந்தன் பெருக்கேற்ற வீரியம் அதிகமாக இருந்திருக்கலாம்.

Related Post