G.0.A.T. திரைப்பட விமர்சனம்.

தந்தைக்கு வில்லனாகும் மகன், மகனை வென்று (கொன்று) ஜெய்ப்பாரா, ஜெய்க்கிறாரா?

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந், பிரபுதேவா, அஜ்மல் , மைக்மோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் G.O.A.T.

இந்தியாவின் ரகசிய உளவாளிகளாக ஜெயராமிற்கு கீழ் வேலை செய்யும் விஜய், பிரசாந், பிரபுதேவா, அஜ்மல் நால்வரும்(முக்கிய விஷயம் இவர்கள் வேலை செய்வது கட்டின பொண்டாகளுக்கே தெரியாதாம் இதை நம்ப வேண்டும்). ஒரு ரகசிய வேலையாக ஒரு தீவிரவாதியை பிடிக்க வெளிநாடு போகிறார்கள். அங்கு தீவிரவாதிகளின் தலைவன் மைக்மோகனை கொன்று நாடுதிரும்புகிறார்கள். அடுத்த வேலைக்காக பாங்காக் செல்ல முடிவெடுக்கும் போது விஜயின் மனைவி சினேகா தொல்லை தாங்க முடியாமல் அவர்களையும் அங்கு அழைத்து செல்ல, அங்கு ஏற்படும் தீவிரவாதிகள் தாக்குதலில் மகனை எதிர்பார்த்தபடியே இழந்து விடுகிறார். அதே நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இந்தியா உளவுத்துறை வேண்டாம் என்று இந்தியன் எம்பசியில் வேலைக்கு சேர்கிறார். கிட்டத்தட்ட 20 வருடம் கழித்து எம்பசி வேலையாக  ரஷ்யா செல்ல அங்கு பாங்காக்கில் தொலைத்த தன் மகனை காண்கிறார். பிரசாந்த் உதவியுடன்இந்திய அழைத்து வந்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார்.

ஒரு நாள்ஜெயராமை சந்திக்க செல்ல நினைக்கும் போது அவரை ஒருவன் கொலை செய்ய அவனை பிடிக்க முடியாமல் மீண்டு உளவு வேலைக்கு சேர்கிறார்.

விஜக்கு மற்றும் அவரது டீமிற்கு தான் சஸ்பென்ஸ்., நமக்கு அது விஜயின்  மகன் இன்னொரு விஜய் என்று தெரிந்த உடன் படமே முடிந்து விடுகிறது. இவ்வளவு கதையும் முதல் ஒன்னரைமணி நேரத்தில் முடிந்துவிடுகிறது.. அதுவும் அந்த மகனை பாங்காக்கில் மைக்மோகன் திருடி சென்று வளர்த்து அப்பாவுக்கு எதிராக வளர்த்து பழிவாங்க வருகிறார் என்று தெரிந்தவுடன் எப்படியும் அப்பா மகனை கொன்று ஜெய்ப்பார் என்று தெரிந்து விடுகிறது. அப்புறம் எதற்கு அடுத்த ஒன்னரை மணி நேரம் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.

போன படத்தில் மகனுக்கு அப்பா வில்லனாக இருந்தார். இந்த படத்தில் அப்பாவுக்கு மகன் வில்லன். தன் மகன் மேல் என்ன பகையோ தெரியவில்லை மகன் பேர் சஞ்சய். நல்ல வேளை மனைவிக்கு சங்கீதா என்று வைக்கவில்லை. அப்பா விஜயின் நடிப்பு ஒரு இடத்தில் பல வருடங்கள் கழித்து மகனை பார்க்கும் இடத்தில் மட்டுமே ரசிக்கும்படி இருக்கிறது. மகன் விஜய் வில்லன். AI டெக்னாலஜி மூலம் சிறு வயதாக காட்டுகிறார். பார்க்க பொம்மை போல் உள்ளது. உதட்டசைவு ஒட்டவே இல்லை, அப்பா மகன் இருவரது ஹேர்ஸ்டைல் மின்சாரம் பாய்ந்த பொமேரியன் நாய் முடி போல் சிலிர்த்து கொண்டு இருக்கிறது.

AI மூலம் விஜய்காந்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பாவம் இறந்த பிறகு அசிங்கப்படுத்தி இருக்க வேண்டாம்.

பிரசாந்த் நீண்ட நாட்கள் கழித்து எண்ட்ரி அவருக்கு தான் எமோஷனல் நடிப்பு வராது என்று தெரியாதா? அவரின் மகளை கொன்று பிரசாந்தை உருண்டு புரண்டு அழவிட்டு பார்க்கபாவமாக  இருக்கிறது.

அஜ்மல் பலி கொடுப்பதற்காக வளர்க்கப்பட்ட ஆடு,

நான்கு பேர் ஒன்றாக இருந்தால் அதில் ஒரு வில்லன் வேண்டுமல்லவா அது பிரபுதேவா.

மைக் மோகன் பேசாமல் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம். அதை கொண்டு வந்து பிரித்து போட்டு நாசம் செய்திருக்கிறார்கள். சினேகா வருகிறார் அழுகிறார் போகிறார். லைலா இரண்டு சீனில் அழகாக சிரிக்கிறார்.

பிரசாந்தின மகளாக வரும் மீனாட்சி நடிக்க முயற்சிக்கிறார். ஆனால் மனதில் பதியவில்லை.

மேலும் வெங்கட்பிரபு கூட்டம் படத்தில் ஆங்காங்கே வருகிறது ஒடுகிறது.

படத்தின் ஒளிபதிவு பரவாயில்லை.

இசை யுவனிறகு விஜய் மேல் கோபமா இல்லை, வெங்கட்பிரபு மேல் கோபமா என்று தெரியவில்லை படத்திற்கு இசை அமையவே இல்லை நமக்கெல்லாம் வில்லனாகி விட்டார் யுவன்.

வெங்கட்பிரபு முதல் பாதியிலேயே படத்தை முடித்து விட்டு இரண்டாம் பாதியில் என்ன செய்வது என்று தெரியாமல் , விஜக்கு படத்தின் பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக தந்ததால் அவரை மட்டுமே சுற்றி ஓடி இருக்கிறார் அவரும் கிளைமாக்ஸ் சண்டையின் நேரத்தை குறைத்து ஏதாவது கதை சொல்லியிருந்தால் பராவாயில்லை.வெறும் விஜய் புராணமாக உள்ளது. இரண்டு மணி நேர படத்திற்கு எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் வேஸ்ட். கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் அல்ல, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் ஒர்ஸ்ட் ஆக ஆனது.

மொத்தத்தில் GOAT என்னும் AGS , வெங்கட்பிரபு என்னும் கசாப் கடை கரானிடம் மாட்டிய பலி ஆடு

Related Post