Breaking
November 23, 2024

டைகர்-3 படத்தில் தனது அச்சுறுத்தும் கதாபாத்திரம் குறித்து விவரிக்கும் இம்ரான் ஹாஸ்மி

”ஆதிஷ் ஒரே மனதாக டைகரையும் அவருடைய குடும்பத்தையும் அழிக்க விரும்புகிறான்” ; டைகர்-3 படத்தில் தனது அச்சுறுத்தும் கதாபாத்திரம் குறித்து விவரிக்கும் இம்ரான் ஹாஸ்மி

‘டைகர்-3’யில் இம்ரான் ஹாஸ்மி நடிப்பதை ஒரு பெரிய ரகசியமாகவே வைத்திருந்தார் ஆதித்யா சோப்ரா. படத்தின் பிளாக்பஸ்டர் டிரைலரை பார்த்த பின்னர் அது ஏன் என்பதை நாம் தெரிந்து கொள்வோம். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வரிசையில் லேட்டஸ்ட்டாக உருவாகியிருக்கும் ‘டைகர் 3’யில் ஒரு சூப்பர் ஏஜென்ட் ஆன டைகர் என்கிற அவினாஷ் சிங் ரத்தோரின் கொடூரமான வில்லனாக, இம்ரான் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான். பெருமூளை என இம்ரானை விவரிக்கும் விதமாக இரக்கமற்ற கூலித்தொழிலாளியாக தந்திரமான கதாபாத்திரம் அவருடையது.. அவனது மனம் தான் அவனது மிகப்பெரிய ஆயுதம். மேலும் அவன் நாட்டை சுற்றியுள்ள அதிகாரிகள் மீது மகத்தான சக்தியை பயன்படுத்துகிறான்.

மேலும் இம்ரான் டைகர்-3யில் தனது கதாபாத்திர பெயர் குறித்தும் தெரிவிக்கிறார். அவர் கூறும்போது, “ஆத்திரத்தால் தூண்டப்பட்ட மற்றும் டைகரை அழிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஒரு மனிதனான ஆதிஷை உருவாக்குவதார்காக மிகச்சிறந்த நேரத்தை நான் பெற்றிருந்தேன். ஹிந்தி சினிமாவிலேயே அரிதான ஒரு தனித்துவமான வித்தியாசமான வில்லனாக நான் நடித்திருக்கிறேன். அவன் தான் ‘பெரு மூளை’, அவனது மனம் தான் மிகப்பெரிய ஆயுதம் மற்றும் அவனது வஞ்சகமான திட்டங்களை செயல்படுத்துவதற்காக நாட்டை சுற்றியுள்ள அதிகாரிகள் மீது மகத்தான சக்தியை பயன்படுத்துகிறான்.

மேலும் இம்ரான் கூறும்போது, “அவன் ஒரே மனதாக டைகரையும் அவரது குடும்பத்தையும் அழிக்க விரும்புகிறான். அதை செய்வதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஏஜென்ட்டை இல்லாமல் செய்ய விரும்புகிறான். இந்தியாவுக்காக கடைசி வரை நிற்கும் மனிதனாக டைகர் இருப்பார் என்பது அவனுக்கு தெரியும் என்பதால் எந்த விலை கொடுத்தேனும் அவரை இல்லாமல் செய்வதற்கு அவன் விரும்புகிறான்” என்கிறார்.

‘டைகர் 3’ டிரைலர் ஆன்லைனில் வெளியானதை தொடர்ந்து நேற்று முதல் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக மாறியது ஒருமனதாக பாராட்டப்பட்டு வருகிறது. யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸில் வில்லனாக இருப்பதற்காக மகிழ்ச்சியடைவதாக இம்ரான் கூறுகிறார்..

மேலும் இம்ரான் கூறும்போது, “யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸின் வில்லன்கள் துருப்புச்சீட்டுக்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் உங்களை ஆச்சர்யத்தால் அசத்தியுள்ளனர். மேலும் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சர்யத்தால் பிடித்து இழுக்க வேண்டும் என விரும்பிய ஆதித்ய சோப்ரா அதில் தெளிவாக இருந்தார். அதனால் தான் படம் முடியும் வரை என்னை மறைத்து வைக்கும் விதமான விரிவான திட்டமும் உருவாக்கப்பட்டது” என்கிறார்

மேலும், “டைகர் 3 பற்றி மக்களுக்கு சொல்வதற்காக நான் துடித்துக்கொண்டிருந்தேன்.. அப்படி என் கதாபாத்திரம் குறித்து மக்களிடம் வெளிப்படுத்தினால் அது உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மிக நன்றாகவே தெரியும் என்பதால் அப்படி செய்ய முடியவில்லை.. டைகர் 3 டிரைலர் வெளியாகும்போதுதான் வில்லனை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும் என்கிற முடிவில் தெளிவாக இருந்தோம். அதற்கேற்ப ரசிகர்கள் தற்போது எனது அச்சுறுத்தும் இந்த திருப்பத்தை நேசிக்கின்றார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார் இம்ரான்.

வில்லன்கள் எப்போதுமே மறக்க முடியாத கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும்.. அவை மக்களால் நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்திருக்கப்பட வேண்டும் என்பதை இம்ரான் எப்போதும் உணர்ந்தே இருக்கிறார்.

அவர் கூறும்போது, “எந்த ஒரு விதிமுறைகளை பற்றியும் கவலைப்படாத ஒருவனை பற்றி சொல்கிறோம் என்பதால் எப்போதுமே வில்லன்களாக நடிப்பதற்கு ஜாலியாகத்தான் இருக்கும். பதிலாக அவர்கள் தங்களுக்கென தனி விதிகளை உருவாக்குவார்கள். அதனால் இந்த வாய்ப்பு வந்ததும் அந்தப்பக்கம் தாவிவிட்டேன். ஏனென்றால் மக்கள் நீண்டகாலத்திற்கு ஞாபகத்தில் வைத்திருக்க கூடிய ஒரு வில்லனை உருவாக்குவதற்கான சுதந்திரத்தை நான் பெற்றிருக்கிறேன் என்பது எனக்கு தெரியும்” என்கிறார்.

மேலும், “ஒரு வழிகாட்டியாக இருந்து இந்த ஆதிஷ் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுக்க உதவியதற்காக இயக்குநர் மனீஷ் சர்மாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட இந்த கதாபாத்திரம் அவரது தொலைநோக்கு பார்வையில் உருவானது தான். நான் பெருமிதப்படும் விதமாக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியதில் எனக்கு அவர் உதவி புரிந்திருக்கிறார்” என்கிறார் இம்ரான்.

சல்மான்கான், கத்ரீனா கைப், நடித்துள்ள ‘டைகர் 3’ வரும் நவ-12, ஞாயிறு அன்று தீபாவளி வெளியீடாக ரிலீஸாக இருக்கிறது. அதிரடியான ஆக்சன் காட்சிகளை கொண்ட இப்படத்தை கண்கவரும் விதமாக இயக்கியுள்ளார் மனீஷ் சர்மா.

Related Post