“சாலா” திரைவிமர்சனம்

சிறுவயதில் தீரன் ஏரியாவில் தாதாவாக இருக்கும் அருள்தாஸின் உயிரை ஒரு மோதலில் போது காப்பாற்றுகிறார்.உடனே தாதா அருள்தாஸ் தன் வாரிசாக கதாநாயகன் தீரனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அருள்தாஸின் எதிரி தாதாவான சார்லஸ் வினோத் ஏலத்தில் அருள்தாஸ் நடத்தும் பார்வதி பார் உரிமையை ஏலத்தில் கைப்பற்றுகிறார். இழந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதே அருள்தாஸின் லட்சியமாக வாழ்ந்து வருகிறார்.கதாநாயகன் தீரன் வளர்ந்து தனது குருவிற்காக அந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதில் உறுதுணையாக நிற்கிறார்.பலநூறு பார்களை நடத்த வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கும் கதாநாயகன் தீரன்.
மதுபான கடைகளையும் பார்களையும் மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நாயகி ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, எதிரும் புதிருமாக இருக்கும் இருவருக்கும் நடக்கும் மோதல் காதலாக மாறுகிறது.இதற்கிடையே இந்த பார்வதி பாரை ஏலம் எடுப்பதில் நாயகன் தரப்புக்கும், வில்லன் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
பார்வதி பாரை ஏலம் எடுத்தார்களா? எடுக்கவில்லையா?ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் காதல் என்ன ஆனது ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் இந்த சாலா திரைப்படத்தின் மீதிக்கதை.

சாலா திரைப்படத்தில் அறிமுக நாயகனாக தீரன் அறிமுகமாகியிருக்கிறார். ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என்று முரட்டுத்தனமாக இருந்தாலும் அப்பாவித்தனமான தனது நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.தன் காதலி கதாநாயகி ரேஷ்மா பாதிப்புக்கு ஆளாகும்போது பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷுக்கு புரட்சிகரமான கதாபாத்திரம், அதை புரிந்து நடித்திருக்கிறார்.
சார்லஸ் வினோத் மற்றும் அருள்தாஸ் வழக்கமான நடிப்பு கொடுத்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்கள்..
நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீநாத் , சம்பத் ராம், யோகிராம், பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் அற்புதமாகவும் காட்சிப்படுத்துள்ளார்.
இசையமைப்பாளர் தீசன் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்.
மதுப்பழக்கத்திற்கு மக்கள் எப்படியெல்லாம் அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் இயக்குநர் மணிபால் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

Related Post