‘கோட்’ திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது……..

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்பட டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகும் என்று இன்று (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ள படக்குழுவினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பான்-இந்தியா திரைப்படம் நாடு முழுவதும் பலத்தை எதிர்பார்ப்புகளை ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளது.

திரைப்படம் குறித்து பேசிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, “ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய திரை விருந்து காத்திருக்கிறது. தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணி அற்புதங்களை செய்து மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது. இதன் ஒரு சிறு பகுதியான டிரைலர் வரும் சனிக்கிழமை அன்று வெளியாகிறது,” என்று கூறினார்.

இரட்டை வேடங்களில் தளபதி விஜய் தோன்றும் ‘கோட்’ விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த திரைப்படமாக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி மற்றும் யோகி பாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் 68வது படமான ‘கோட்’, அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். தான் ஏற்றிருக்கும் இரண்டு கதாபாத்திரங்களுக்காக கடினமான உழைப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

தேசத்தின் பெருமையான சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள ‘கோட்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் எதிர்பார்ப்புகளை இன்னும் எகிற வைத்துள்ளது.

ரசிகர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து படைக்கும் வகையில் நிலையான மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் செப்டம்பர் 5 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘கோட்’ வெளியாகிறது.

Related Post