வசூலில் தொடர் சாதனை படைத்து வரும் பிரபாஸ்

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ், ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களை திரையரங்கத்திற்கு கவர்ந்திழுத்து வசூலில் தொடர்ந்து சாதனை படைக்கும் நாயகனாக சரித்திரம் படைத்திருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் – வெளியான நான்கு நாட்களில் 555 கோடி ரூபாயை வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.

பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. ‘பாகுபலி’ படத்தில் பிரம்மாண்டமான வசூல் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ சாஹோ’, :ராதே‌ ஷ்யாம்’, ‘ஆதி புருஷ்’, ‘சலார் -பார்ட் 1’ என அனைத்து படங்களும் இருநூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதனால் இந்திய திரையுலகின் முன்னணி வசூல் நாயகன் என்ற பட்டத்தையும் அவர் வென்றிருக்கிறார்.

பிரபாஸ் நடிக்க ஒப்புக் கொள்ளும் கதாபாத்திரங்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதுடன், தயாரிப்பாளர்களின் நலன்களையும் மனதில் கொண்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பினையும் பூர்த்தி செய்யும் அபூர்வ கலைஞராகவே… அதிசய நட்சத்திரமாகவே… தொடர்ந்து இந்திய திரையுலகில் வலம் வருகிறார்.

Related Post