Breaking
November 19, 2024

எலக்சன் திரைவிமர்சனம்

வேலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் கதாநாயகன் விஜய் குமார், தந்தை ஜார்ஜ் மரியன் மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகிறார்.

அக்கிராமத்தில் சுமார் 40 வருட காலமாக மாநில கட்சியில் விஜய் குமாரின் தந்தை ஜார்ஜ் மரியன், அந்த கட்சியில் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார்.தனது கட்சிக்கு விசுவாசமாக இருந்து, அங்கு நடக்கும் தேர்தலில் கட்சியின் மேலிடத்திற்கு கட்டுப்பட்டு அக்கட்சிக்காக ஜார்ஜ் மரியன் பணிபுரிகிறார்.தனியார் நிறுவனத்தில் பணிபுரிய, காதல் தோல்வி ஒன்று நடக்க, தொடர்ந்து வீட்டில் பார்த்த பெண் கதாநாயகி பிரீத்தி அஸ்ரனி திருமணம் செய்து கொள்கிறார்.

இந்நிலையில், அந்த ஊரில் உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில், கதாநாயகன் விஜய் குமார் தந்தையான ஜார்ஜ் மரியனை அவமானப்படுத்தப்பட அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கதாநாயகன் விஜய் குமார் தேர்தலில் நிற்கிறார். வீட்டை அடமானம் வைத்து அந்த பணத்தை தேர்தலுக்காக செலவு செய்கிறார். தேர்தலில் தோல்வியடைந்து பணம் மட்டுமல்லாமல், ஒரு உயிர், போகிறது அதனால் அனைத்தையும் இழந்து நிம்மதியை இழந்து மனதளவில். பாதிப்படைகிறார்.

மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் நின்று விஜய்குமார் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா.? தனது இழப்பை எப்படி பழி தீர்த்தார்.?? என்பதுதான் இந்த எலக்சன் திரைப்படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் விஜயகுமார் சில சில காட்சிகளில் நீண்ட வசனத்தை பேசி தனது திறமையை நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார்.ஆனால், ஒரு சில காட்சிகளில் நடிப்பு எதார்த்தமாக இல்லை எனவும் கதையை தாங்கும் அளவிற்கான கதாபாத்திரத்திற்கு கதாநாயகன் விஜய்குமார் பொருத்தமாக இல்லையே என்ற சந்தேகம் எழுகிறது.

கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரா நடித்துள்ளார். தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரா க்யூட்டான சில காட்சிகளில் எக்ஸ்ப்ரஷன்களைக் கொடுத்து கதைக்கேற்ற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

ஜார்ஜ் மரியான் தனது அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார்.இவர்களைத் தொடர்ந்து பவல் நவகீதன் மற்றும் திலீபன் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்து தங்களது கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சியில் மிக அருமையாக கேமராவை கையாண்டு இருக்கிறார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் திரைப்படத்திற்கு மிக அருமையாக கைகொடுத்திருக்கிறது.

கிராமங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி கதை இருப்பதால் ஆங்காங்கே சில காட்சிகளில் இன்னும் கொஞ்சம் தெளிவான விளக்கத்தைக் கொடுத்து கதையை நகர்த்தியிருக்கலாம் என தோன்றியது.

மேலும், உள்ளாட்சி தேர்தல் கதையை கையில் எடுத்த இயக்குனர் உள்ளாட்சி தலைவருக்கு அதிகாரம் என்னவென்று தெரிந்து கொண்டு இந்த கதையை அழுத்தமான திரைக்கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து விளக்கமாகவே கொடுத்திருந்திருக்கலாம்.

எலக்சன் நடக்கும் போது இருக்கும் பரபரப்பு திரைக்கதையில் இல்லாமல் போனது!!!!!!!!

Related Post