தொடர் 4 டிஸ்கவரி சேனல் மற்றும் டிஸ்கவரி+ ஆகியவற்றில்டிசம்பர் 11 அன்று இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது!
Chennai-13.12.2023வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் ஒரு‘ஹிஸ்ட்ரி ஹண்டர்’ தொடரில் புகழ்பெற்ற நிகழ்ச்சித்தொகுப்பாளரான மனிஷ் பால் அவர்கள் இந்தியாவில்பழங்காலம் முதலே புகழோடு உள்ள மகாபலிபுரத்தின் ஏழுகோயில்களைச் சுற்றியுள்ள மர்மங்களை கண்டறிவதற்கானஒரு மனம்கவரும் வரலாற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார்.சென்னையில் இருந்து வெறும் 60 கி.மீ தெற்கே அமைந்துள்ளஇந்த யுனெஸ்கோ உலக புராதான சின்னம் ஒற்றைக் கல்லால்உருவாக்கப்பட்டு தனியாக நிற்கின்ற ரதங்கள் என்றுஅழைக்கப்படும் 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுக் குகைக்கோயில்களுக்கு புகழ்பெற்றதாகும்.
டிசரம்பர் 11 அன்று இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும்இந்த தொடர், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியகடற் பயணிகளுக்கு ஒரு அடையாளச் சின்னமாககடற்கரையோரம் காணப்பட்டதாக ஒரு காலத்தில்நம்பப்படுகின்ற ஏழு கோயில்களின் புதிர் நிறைந்தவரலாற்றைப் பற்றிய ஒரு தெளிவினை ஏற்படுத்துகிறது. எனினும், காலப்போக்கில், இந்த கட்டமைப்புகள் யாவும்மறைந்துவிட்டன, மேலும் அவற்றுக்கு என்ன ஆனது என்கின்றவிடை தெரியாத கேள்விகளை மட்டும் விட்டுச் சென்றுள்ளன.
2003ஆம் ஆண்டு தேசிய கடலியல் மையம் மகாபலிபுரத்தின்கடற்கரையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலமாக மணிஷ்பால் அவர்கள் பார்வையாளர்களை ஒரு மனம் கவரும்பயணத்தில் அழைத்துச் செல்கிறார். இந்த கடற்கரைகோயிலுக்கு தெற்கே கட்டமைப்புகள்கண்டுபிடிக்கப்பட்டாலும், போதுமான ஆதாரம் இல்லாதகாரணத்தால் ஏழு கோயில்களுக்கான தொடர்பு இன்னும்புரியாத ஒன்றாகவே உள்ளது. 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப்பிறகு நீருக்கு அடியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிபழங்கால சிதைவுகளை வெளியே கொண்டு வந்ததோடு இந்தபகுதியில் உள்ள இரகசியங்களை வெளிப்படுத்துவதில் ஒருமுக்கிய பங்காற்றியுள்ளது.
மண்ணுக்கு அடியில் காலத்தால் மறைக்கப்பட்ட புதிர்களைவெளிக்கொண்டு வரும் வகையில், அடுத்தடுத்துமேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது அந்த பகுதியல்கோயில் இருந்ததற்கான ஆதாரத்தை வெளிப்படுத்தும்எழுத்துக்களுடன் கூடிய கற்கள் உள்பட பலவற்றை மணிஷ்பால் அவர்கள் ‘ஹிஸ்ட்ரி ஹண்டரில்’ வழங்குகிறார். மகாபலிபுரத்தின் ஏழு கோயில்கள் என்னும் வரலாற்றுப் புதிர்பற்றிய ஒரு மனதை ஈர்க்கும் விளக்கத்திற்கு இந்த ஆராய்ச்சிஉறுதியளிக்கிறது.
டிசம்பர் 11 அன்று இரவு 9:00 மணிக்கு டிஸ்கவரி சேனலில்ஒளிபரப்பாகின்ற மற்றும் டிஸ்கவரி+ இல் பார்க்கக்கூடிய, இத்தகைய ஒரு மனம்கவரும் வரலாற்றுப் பயணத்தைப்பார்க்கத் தவறாதீர்கள்.