
கார்த்தீஸ்வரன், பலவழிகளில் தனியார் ஃபேங்க்கில் சில முறை கேடுகள் செய்து அதன் மூலம் மோசடி செய்து குறைந்த பட்சம் ரூ.5.ஆயிரம் கோடி சம்பாதித் திருக்கிறார். சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்குபறந்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக்கொள்கிறார். அவர் நாயகனை தொடர்ந்து பாலோ செய்துக் கொணஂடிருந்த போது திடீரென்று போலீஸிடம் சிக்கிக் கொண்டகார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? இல்லையா?, அவர் செய்த மோசடிகள்எத்தனைகள் என்ன ? அதை அவர் எப்படி சாமர்த்தியமாக செய்கிறார், அவர்இப்படி செய்வதற்கு என்ன காரணம் ?, என்பதை ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் கதைக்களம்.
இந்த படத்தை இயக்கியிருக்கிறார் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். எல்லோரிடம் அப்பாவி முகம், வைத்து சாதுவான தோற்றம் என்று சாதாரணமாக வலம் வந்த கார்த்தீஸ்வரன் செய்யும் மோசடிகள் அனைத்தும்,அடங்கப்பா யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியம் ரகங்களாகவும்,எல்லாருக்கும் அதிர்ச்சியளிக்கின்றன. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் கார்த்தீஸ்வரன்,பலவித கெட்டப்புகளில் தோன்றியதுடன், அவற்றுக்குபொருத்தமாக கனகச்சிதமாக செய்திருக்கிறார்.
அவர் செய்தது . இல்லாதது சற்று வருத்தமளிக்கிறது.இருந்தாலும், ஒரு நடிகராக நடிப்பு, நடனம், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் கனகச்சிதமாக சரியாக செய்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார் ஸ்ரீநிதி இன்ஸ்பெக்டர் ரோல் கம்பீரமாகவும்,கவர்ந்திழுக்கும் அழகோடும் வலம் வருகிறார்
கார்த்தீஸ்வரனின் மோசடி குழு உறுப்பினராக
நடித்திருக்கும்ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன்,
திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால்,நிச்சயம் இன்னொரு சதுரங்க வேட்டை படத்தைப் பார்த்த மாதிரி ஆடியிருக்கலாம்.
