Breaking
March 7, 2026

“மகா அவதார் நரசிம்மா” திரை விமர்சனம்

பெருமாளின் ஒன்பது அவதாரங்களில் மூன்றாவது அவதாரம் மற்றும் நான்காவது அவதாரம் வராக, நரசிம்ம அவதாரம் இந்த இரண்டு அவதாரங்களை வைத்து அனிமேஷன் மூலமாக சொல்லப்பட்ட கதை மகா அவதார் நரசிம்மா.
காசிபர் முனிவர் மற்றும் திதி ஆகியோரின் மகன்களாக இரண்யகசிபுவும், இரண்யாட்சனும்பிறக்கிறார்கள். ஒரு தவறான நேரத்தில் அவர்கள் இருவரும் இணைவதால் அரக்கர்களின் வரம் பெற்று குழந்தைகளாக பிறக்கிறார்கள் அவர்கள் பிறக்கும் பொழுது அவர்கள் அனைத்து தேவர்களையும் அடிமைப்படுத்தி ஆள்வார்கள் என்றும் அவர்கள் பெருமாளின் அவதாரத்தால் தான் வதம் செய்யப்படுவார்கள் என்பதும் நாம் அறிந்த கதை.
அவ்வாறுஇரண்யகசிபுவும், இரண்யாட்சனும் தேவர்களை நோக்கி கடும் தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று கொடுங்கோல் ஆட்சி செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் இரண்யாட்சன் பூமாதேவியை கடலுக்குள் ஒளித்து வைத்து சிறை பிடிக்கிறான். அப்பொழுது அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் சென்று முறையிட அவருடைய தும்மலையிலிருந்து வராக அவதாரமாக உருவெடுத்து பூமிதேவியை காப்பாற்றுகிறார் இரண்யாட்சனையும் கொல்கிறார். தன் தம்பியின் மறைவுக்கு விஷ்ணு தான் காரணம் விஷ்ணுவை நான் வதம் செய்வேன் என்றும் இரண்யகசிபு சபதம் செய்துஇறைவனிடம் நான் காலையிலும் சாகக்கூடாது, இரவிலும் சாகக்கூடாது ,வானிலும் சாகக்கூடாது நீரிலும் சாகக்கூடாது, பூமியிலும் சாகக்கூடாது, மிருகங்களாலும் சாகக்கூடாது, ஆயுதங்களாலும் சாகக்கூடாது, வீட்டிற்கு உள்ளே என் சாகக்கூடாது, வெளியேயும் சாகக்கூடாது, என்று வரம் பெறுகிறான். இந்த வரத்தின் பிறகு அவன் ஆடும் அனைத்து கோரத்தாண்டவம் அதே நேரத்தில் அவனுக்கு பிறக்கும் மகன் விஷ்ணுவின் சீடனாக விஷ்ணுவின் பக்தனாக விஷ்ணுவை அடைய நினைப்பவனாக வளரும் பிரகலாதன் ஒரு கட்டத்தில் இரண்யகசிபு தன்மகன்பிரகலாதனையே கொல்ல நினைக்கிரான் ஆனால் அவனுடைய திட்டம் எதுவும் நிறைவேறாமல் விஷ்ணு பிரகலாதனை காப்பாற்றுகிறார் .

கடைசியில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து எப்படி இரண்யகசிபு வை வதம் செய்கிறார் என்பதுதான் இந்த மகா அவதார் நரசிம்மா.
.இந்தப் படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் அவர்களின் முகபாவனையும் மிகச் சிறப்பாக காட்டியிருக்கிறார்கள் கிராபிக்ஸ் குழுவினர் குறிப்பாக கிளைமாக்ஸ்சில் வரும் நரசிம்மா அவதாரத்தின் சண்டைக் காட்சி மிகவும் பிரம்மாண்டம் ஒருவேளை இதை நிஜ கதாபாத்திரங்களை வைத்து படமாக்கி இருந்தால் நிச்சயம் பிரம்மாண்டமாக காட்டி இருக்கலாம் ஆனாலும் அதைவிட இந்த அனிமேஷன் படம் மிகச் சிறப்பாக நமக்கு நரசிம்மர் அவதாரத்தின் கதையை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார்கள் நிச்சயம் குழுவினருக்கு ஒரு பாராட்டுக்கள் தான்

Related Post