Breaking
March 7, 2026

“ஹரிஹர வீர மல்லு” திரைவிமர்சனம்

ஹரிஹர வீர மல்லு 1650 ஆரம்பிக்கும் கதையானது,ஒளரங்கசீப் தன்னுடைய கொடுங்கோல் ஆட்சியில் தன் சொந்த மதத்தை பரப்பவும், இந்து மதத்தை அழிக்கவும்,தன்னை எதிர்க்கும் மன்னர்களையும் மக்களையும் கொன்று குவிக்கும் கொடுமையான அரசனாக இருக்கிறார் ஒளரங்கசீப். அதே நேரத்தில் 1650 இல் பிறந்து 1659 இல் வளர்ந்து பெரியாளாகி பெரிய திருடனாக இருக்கும் வீரமல்லு(பவன் கல்யாண்) இவர் ஒரு போராளி இவர் குழந்தையாக இருக்கும் பொழுது சத்யராஜிடம் இருந்து அனைத்தையும் கற்று பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்கு கொடுக்கும் ராபின் ஹூட்டாக வருகிறார்.

இந்த நிலையில் ஒரு குறுநில பிரபுவுடன் ஒரு ஒப்பந்தத்தின் பெயரில் வைரம் கொள்ளை அடிக்கும் திட்டத்தை போடுகிறான் வீரமல்லு. அந்த நிலையில் அந்த குறுநில மன்னனின் பிடியில் இருக்கும் நிதி அகர்வாலை காதலிக்கிறார். அவரும் காதலிக்கிறார் பின் நிதி அகர்வாலின் சூழ்ச்சியால் அந்த வைரக்திருட்டில் கோல்கொண்டா மன்னரால் பிடிபடுகிறான். அங்கே கோல்கொண்டா மன்னருடன் ஒப்பந்தம் செய்து கோகினூர் வைரத்தை ஒளரங்கசீப்பிடம் இருந்து திருட திட்டமிட்டு டெல்லிக்கு செல்கிறார். அங்கு கோஹினூர் வைரத்தை கொள்ளையடித்தார்களா? அல்லது வீர மல்லுவின் பின் கதை என்ன அவருக்கு பின்னணியில் என்ன நடக்கிறது? என்பதுதான் கதை
உலக சினிமாவில் இந்த மாதிரி ஒரு வரலாற்று படத்தை எவ்வளவு ……………… எடுக்க தெலுகு இன்டஸ்ட்ரியல் மட்டுமே முடியும் ஏன் உலக அளவில் ஓடிய கிளாடியேட்டர் போன்ற படங்களும் இவர்களுக்கு முன்னால் நிற்காது. அந்த அளவுக்கு ஒரு வரலாற்று கதையை எவ்வளவு ……………..க எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள் இந்த ஹரிஹர வீர மல்லு திரைப்படத்தை.

இந்த திரைப்படமானது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எடுத்துக் கொண்டிருந்தார்கள் ஏன் என்றால் பவன் கல்யாண் அரசியல் பிரவேசம் அது இது என்று படத்திற்கு ஏகப்பட்ட தடங்கல்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பவன் கல்யாண் பிஜேபியுடன் சேர்ந்த பிறகு இந்த படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட ஹிந்து மதத்தை முன்னணியில் வைத்து முஸ்லிம்களை வில்லன்களாக சித்தரித்து வெறும் ஹிந்து மதவாதிகளை மட்டுமே மனதில் வைத்து எடுக்க முயற்சித்து இருக்கிறார். இந்த முயற்சியின் காரணமாக என்னவோ இந்த படத்தை சிறிது காலம் க்ரிஷ் இயக்கி விட்டு விலகிவிட்டார் .அதன் பிறகு நம்மூர் ஏ எம் ரத்தினத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி இருக்கிறார.

இத்தனை ஆண்டுகள் இவர்கள் காத்திருந்தது ஒரு சிறப்பான கிராபிக்ஸ் காட்சி வரும் என்று இல்லை எவ்வளவு மொக்கையான காட்சிகளை எடுத்து வைக்க எப்படி தான் மனசு வந்தது அதுவும் இந்த படத்தில் அடிக்கடி வீரமல்லியின் காலை க்ளோசபில் காட்டுகிறார்கள் அதை பார்க்கும் பொழுது ஒரு படத்தில் வடிவேலு தீப்பொறி திருமுகமாக வருவார் அந்த காட்சி தான் நமக்கு நினைவில் வருகிறது

மொத்தத்தில் ஹரிஹர வீர மல்லு ஒருவருக்கே வீரம் இருப்பதாக மல்லு கட்டுகிறது, திரைக்கதையிலும் மல்லு கட்டுகிறது

Related Post