
சூரி, தனது அக்கா சுவாஷிகா மீது அளவு கடந்த அன்பாக இருக்கிறார்.சுவாசிகாவுக்கு திருமணம் நடந்து பந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் காத்திருந்த சுவாசிகாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. சூரி அக்கா சுவாசிகாவுக்கு பிறந்த ஆண் குழந்தையை தாயைப் போல அனைத்து பணிவிடைகளும் செய்து சீராட்டி வளர்க்கிறார்.ஐஸ்வர்யா லட்சுமி சூரியின் அக்கா பிரசவம் பார்த்து டாக்டராக பணிபுரிந்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி, சூரிக்கு காதல் மலருகிறது அந்தக் காதல் திருமணத்தில் சென்று முடிகிறது.
ஐஸ்வர்யா லட்சுமி ,. சூரியின் இல்லற வாழ்க்கையில் அக்கா மகன் முதல் இரவில் இருந்து ஆரம்பித்த பிரச்சனை இல்லற வாழ்க்கையில் அக்கா மகன் பாசம் இடையூறாக அமைகிறது. இல்லற வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டு இருவரும் பரிகிறார்கள்.
இரு குடும்பங்களுக்கு இடையேசிக்கல்களும் பிரச்சனைகள் தீர்ந்ததா?கதாநாயகன் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
எந்த திரைப்படத்திலும் எப்படியப்பட்ட கதாப்பாத்திரமாக இருந்தாலும் எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், அதற்கு ஏற்ற நடிகனாக தன்னால் உருவெடுக்க முடியும், என்பதை இந்த திரைப்படம் மூலம் தனது நடிப்பினால் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
தன் குடும்பம் மற்றும் அக்கா மீது காட்டும் அன்பும், அக்கறையும் போல் தனது மனைவியிடம் காட்டவில்லை என்பதை உணர்ந்து கலங்கும் காட்சியில் தாய்மார்களை கண் கலங்க வைக்கும் கதாநாயகன் சூரிக்கு, இனி தமிழக பெண் ரசிகைகள் அதிகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர் கதாபாத்திரம் , மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, அன்பு பாசம் நெருக்கம் அனைத்து எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் தனது நடிப்பின் மூலம் மிகவும் நேர்த்தியாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.
ராஜ்கிரணின் கதாபாத்திரமும், அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜி சந்திரசேகர் இருவரும் நடிப்பு திரை இருப்பும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
‘லப்பர் பந்து’ திரைப்படத்திற்குப் பின் மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் சுவாஷிகா சூரியின் அக்கா கதாபாத்திரத்தில் அவருடைய கண்கள் மூலமாகவே நடிப்பின் மூலம் பல உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நடன இயக்குனர் பாபா பாஸ்கர், மாஸ்டர் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவுமிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை அதிகம் சத்தம் இல்லாமல் திரைக்கதை ஓட்டத்திற்கு அளவாக சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
திருமண, காது குத்து, சீமந்தம் நிகழ்ச்சி என்று திரைப்படம் முழுவதும் குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் சிறு சிறு பிரச்சனைகளை மிகவும் சுவாரஸ்யமாக, குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்,