
திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை கிஸ்ஸா 47 என்ற பெயரில் யூடியுப் மூலம் விமர்சனம் செய்யும் சந்தானத்திற்கு ஒரு தமிழ் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு உங்களது குடும்பத்துடன் வரவேண்டும் என அழைப்பு வருகிறது.அந்த சிறப்புக் காட்சி அழைப்பின் பேரில் சந்தானத்தின் குடும்பம் அப்பா நிழல் ரவி, தங்கை யாஷிகா ஆனந்த், அம்மா கஸ்தூரி செல்கிறார்கள். சிறப்பு காட்சி நடக்கும் திரையரங்கில் ஆபத்து இருப்பதை உணர்ந்த சந்தானம் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக செல்கிறார். திரையிடப்படும் சிறப்பு காட்சியில் குடும்பமும், திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி இந்த திரைப்படத்தின் கதைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
அந்த பிரச்சனையில் சந்தானம் தன் குடும்பத்தை காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா?, என்பதுதான் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சந்தானம் தனது வழக்கமான பாணியில் தன்னுடைய அணியினருடன் சேர்ந்து, வழக்கமான காமெடிகளை கொடுத்து திரைப்படத்தை தாங்கி பிடித்திருக்கிறார். சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கீதிகா திவாரி கதாநாயகி மட்டுமின்றி பேயாகவும், பெயருக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
புதியதாக கூட்டணியில் இணைந்திருக்கும் இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், தந்தையாக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, தாயாக நடித்திருக்கும் கஸ்தூரி,யாஷிகா ஆனந்த் கூட்டணி மற்றும் மொட்டை ராஜேந்திரன், மாறன், ரெடின் கிங்ஸ்லி என பழைய காமெடி கூட்டணியும் சேர்ந்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை.