
சென்னை, சிட்டிக்குள் தொடர்ந்து அடுத்தடுத்து சில நபர்கள் உடல்கள் முழுவதுமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மர்மமான முறையில் கொலை செய்வது அடிக்கடி நடந்து வருகிறது.மர்மமான முறையில் நடக்கும் கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான ஷாஷாங் விபத்தில் சிக்கிக் கோமாவிற்கு செல்கிறார்.
அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கை நவீன் சந்திரா விசாரித்து வருகின்றார்.நவீன் சந்திராவிற்க்கு துணையாக துணை ஆய்வாளர் திலீபனும் வருகிறார்.
இந்தத் தொடர் கொலையை செய்து வரும் அந்த கொலைகாரன் யார்? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
நவீன சந்திரா காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை தன்னுடைய பார்வையாலும் தனது உடல் மொழியாலும் மிக எளிதாக அரவிந்தன் கதாபாத்திரத்தோடு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பயணிக்க வைத்து விட்டார். தனக்கே உரித்தான பாணியில் மிகச் சரியாக தனது கதாபாத்திரத்தை செய்து முடித்திருக்கிறார்.
தொடர்ந்து, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாஷாங் மற்றும் திலீபன் இருவருக்கும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள்.
நடிகை அபிராமி சிறப்புத் தோற்றத்தில் வந்து இருக்கிறார்.
ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜய்,நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் டி இமானின் இசையில் பலம் சேர்த்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் பார்த்திராத ஒரு கதையை மிக கவனமாக கையாண்டு அதை தெளிவாக காட்சிப்படுத்தி அழகான படைப்பாக படைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் அஜ்ல்ஸ்.