
சட்டவிரோத செயல்களை செய்துவரும் ஜோஜு ஜார்ஜ் மிகப்பெரிய தாதாவாக வளம் வந்து ஜோஜு ஜார்ஜ் தாய், தந்தை இல்லாத கதாநாயகன் சூர்யாவை வளர்த்து வருகிறார்.தனது காதலி கதாநாயகி பூஜா ஹெக்டேவுக்காக வெட்டு குத்து அடிதடியை விட்டுவிடுவதாக சூர்யா கதாநாயகி பூஜா ஹெக்டேவிடம் உறுதி கூறுகிறார்.
பூஜா ஹெக்டேவை சூர்யா திருமணம் செய்து கொண்டு அமைதியாக வாழ வேண்டும் என விரும்புகிறார்.ஆனால், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டேவிறகாக தனது வளர்ப்பு தந்தையின் கையை துண்டாக வெட்டி விட, அவரது தந்தையின் ஆட்களையும் கொலை செய்து விடுகிறார்.
இதனால், சூர்யாவிடம் இருந்து இருந்து பூஜா ஹெக்டே தனது காதலில் இருந்து விலகிச் சென்று விடுகிறார். சூர்யா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
கதாநாயகி பூஜா ஹெக்டே அந்தமானில் இருக்கும் தகவல் சூர்யாவுக்கு தெரிய வர பூஜா ஹெக்டேவை சமாதானப்படுத்தி அவர் விரும்பியது போல், அடிதடி இல்லாத அமைதியான புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அந்தமான் செல்லும் சூர்யாவுக்கு, அங்கே மிகப்பெரிய பொறுப்பும், யுத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சூர்யாவின் வாழ்க்கை என்னவானது?, பூஜா ஹெக்டே ,சூர்யா இருவரும் இணைந்தார்களா? இணையவில்லையா? என்பதுதான் இந்த ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.
தன்னை வளர்க்கும் தந்தையாக இருந்தாலும், அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் துணிச்சல் மிக்க மகனாகவும், காதல் தோல்வியால் இது வந்து போகும் காதலனாகவும் அதன், பிறகு தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக போரிடும் போராளியாகவும், என ஒரே கதாபாத்திரத்திற்கு சூர்யாவின் நடிப்பின் மூலம் சிரிக்காமலேயே நடனம் ஆடுவது, ஆக்ஷன் காட்சிகளை ஸ்டைலிஷாக கையாள்வது என்று திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்திருக்கிறார்.
கதாநாயகி பூஜா ஹெக்டே, கதையின் மையப்புள்ளியாகவும், கதையை நகர்த்திச் செல்லும் வழக்கமான கதாநாயகியாக அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பை கொடுத்து தமிழ் திரைப்பட ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.
கிங் மைக்கல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக எந்த ஒரு குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.