
இளம் பெண் ஒருவர் நடுஇரவில் கடத்தப்படும் நிலையில் இதனை தொடர்ந்து அவருடைய தாய் மற்றும் தாத்தா காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை அளிக்கின்றனர்.புகாரின் அடிப்படையில் உடனடியாக காவல்துறை ஆய்வாளர் சிபிராஜ் உடனடியாக விசாரணை தொடங்குகிறார். வழக்கை சிபிராஜ் விசாரணை செய்து கொண்டு இருக்கும் போதே, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் ஒன்று வருகிறது. தனியார் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு பெண் ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டு அந்தப் பெண்ணை எப்படியாவது காப்பாற்றுங்கள் என ஆண் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கிறார்.
இதை அறிந்து அந்த பேருந்தை டோல்கேட் செக்போஸ்டில் காவல்துறையினர் பிடிக்கிறார்கள்.அந்த பேருந்திற்குள் சிபிராஜ் சென்று பார்க்க, அங்கு கால் செய்த நபர் இறந்து கிடக்கிறார்.
ஒரு இளம் பெண் கடத்தப்பட்டு இருப்பதும் ஒரு பெண் ஒருவர் பேருந்தில் கொடுமை செய்யப்படுகிறார் என காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நபரும் பேருந்தில் இறந்து கிடக்க என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்களை கதாநாயகன் காவல்துறை ஆய்வாளர் சிபிராஜ், இதற்கெல்லாம் யார் காரணம் என குற்றவாளியை கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ் இதுவரை பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் சற்று மாறுபட்ட நடிப்பை மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
திரைப்படத்தில் நடித்திருக்கும் கஜராஜ், ஜீவா ரவி ராஜ் அய்யப்பா, முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, ஷாருமிஷா, நிரஞ்சனா, ஆகியோரின் நடிப்பும் திரைப்படத்திற்கு மிகச் சிறப்பு சேர்த்து இருக்கிறது.
மேலும், திரில்லர் திரைப்படத்தில் கதை மற்றும் திரைக்கதைக்கு வில்லன்தான் மிகமிகவும் முக்கியம் ஆனால் வில்லனுக்கு உதவியாக வரும் பஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் இருந்த வலு, வில்லனுக்கு இல்லாதது திரைப்படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாக பயணித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி யின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு திரைப்படத்தில் இன்னும் கூட கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம்.
தனது அறிமுக இயக்கத்திலேயே அருமையாக கதையை தேர்ந்தெடுத்து ஒரே இரவில் 10 மணி நேரத்தில் ஒரு திரில்லர் கதைக்களத்தை கையில் எடுத்து அருமையான திரைக்கதையை வடிவமைத்து மிகச்சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள்