
2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற “லூசிஃபர்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து L2 எம்புரான் இரண்டாம் பாகமான வெளிவந்திருக்கிறது.
இரண்டாம் பாகத்தில் டோவினோ தாமஸ் நல்லாட்சி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஊழலில் மட்டுமே அதிகரித்துள்ளது.ஐந்து வருடங்களை நிறைவு செய்த டோவினோ தாமஸ், தந்தையின் பாதையிலிருந்து ஒரு மாற்றத்தை செய்ய தயாராகிறார்.ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடமிருந்து தப்பிக்க, அபிமன்யு சிங் தலைமையிலான மதவாதக் கட்சியோடு கைகோர்த்து, தன் சொந்தக் கட்சியிலிருந்தே விலகி, டோவினோ தாமஸ் தனியாகக் அதாவது தன் தந்தை வழிநடத்திய கட்சியை விட்டு புது கட்சியை தொடங்குகிறார்.முதல்வர் டோவினோ தாமஸ் கட்சியை தொடங்கியதால் கேரளத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அனைவரும் அஞ்சுகிறார்கள்.
முதல்வர் டோவினோ தாமஸின் இந்த நடவடிக்கையால் கேரளாவில் மத வெறுப்பும், கலவரமும் எந்நேரமும் வெடிக்க காத்திருக்கிறதுஇப்படியான சூழலில், சர்வதேச அளவில் போதைக் கும்பல்களால் உலகளவிலும் பிரச்னைகள் எழ, இரண்டையும் சரி செய்ய, கேரளாவின் ஒரே நம்பிக்கையாக கருதப்படும் கதாநாயகன் மோகன்லால் பத்திரிகையாளர் இந்திரஜித் சுகுமாரன் முயற்சியால் மீண்டும் கதாநாயகன் மோகன்லால் களமிறங்குகிறார்.
கதாநாயகன் மோகன்லால் தனது கேரளா மாநிலத்தில் மீண்டும் அமைதியை கொண்டு வர முடிந்ததா? முடியவில்லை? என்பதுதான் இந்த ‘L2 எம்புரான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் மோகன்லால், தனக்கே உரிய பாணியில் நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
கதாநாயகன் மோகன்லால் உதவியாளராக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ், கமாண்டோ கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
கதாநாயகன் மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் இருவருமே ஆக்சன் காட்சிகளில் மாஸ் காண்பித்து இருக்கிறார்கள்.
மஞ்சு வாரியர் அரசியல் கட்சியில் இணையும் போது அவர் போடும் நான்கு கட்டளைகள் சபாஷ் போட வைக்கிறது.
ஸ்டைலிஷ்னா முதல்வர் கட்சித் தலைவர் என டோவினோ தாமஸ்.
ரசிகர்களை கவனம் பெற்று இருக்கிறார்
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிமன்யு சிங் பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவனின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் தீபக் தேவின் இசையுலகில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் ஸ்டண்ட் சில்வாவின் ஆக்சன் காட்சிகள். காட்டில் நடக்கும் சண்டைக்காட்சியும், கிளைமாக்சில் நடக்கும் சண்டைக் காட்சியும் மிகப்பெரிய அளவில் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக எல் 2 எம்ரான் திரைப்படத்தை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மாஸாகவும் மிரட்டலாகவும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரன்.