பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை கருவுறுதல் மையங்கள் பற்றி நமக்கு அதிக அளவில் தெரியாது.
ஆனால் இன்று பல இடங்களில் செயற்கை கருவுரு மையங்கள் அதிக அளவில் இருக்கிறது.



இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கறுவுரு மையங்களுக்கு சென்றால்தான் குழந்தை பெத்துக்க முடியும் என்ற நிலை உருவாகி விடுமோ?
செயற்கை கருவுறுதல் என்ற விஷயத்திருக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி தரும் க்ரைம் அம்சத்தை சொல்லி இருக்கிறது இந்த ட்ராமா திரைப்படம்.
கதாநாயகன் விவேக் பிரசன்னா, கதாநாயகி சாந்தினி தமிழரசன், இருவரும் திருமணம் நடந்து பல ஆண்டுகள் பிறகு கர்ப்பம் அடையும் நிலையில் மிக சந்தோஷமாக இருக்கும் நேரத்தில், ஒரு மர்ம நபர் ஒருவர் போன் செய்து உனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை உன் கணவர் கதாநாயகன் விவேக் பிரசன்னா கிடையாது, என்ற உண்மை கூறி வருவதோடு, அதே போன் கால் மூலம் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று அனுப்பி 50 லட்சம் பணத்துடன் வரவேண்டும் என அந்த மர்ம நபர் மிரட்டுகிறார்.
ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து மகள் பூர்ணிமா ரவி, தனது காதலன் பிரதோஷ் மூலம் கர்ப்பமடைந்து ஏமாற்றப்பட்டு காதலன் பிரதோஷின உண்மையான முகம் பற்றி தெரிந்து கொண்டு தன் காதலன் பிரதோஷ் உடன் சேர்ந்து வாழவே கூடாது, என்ற முடிவுக்கு வருகிறார்.
இந்த இரண்டு கதைகளிலும் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அதில் இருந்து மீண்டார்களா?, மீளவில்லையா?, இந்த இரண்டு பெண்கள் வாழ்க்கையில் நடந்த பாதிப்புக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதுதான் இந்த ‘ட்ராமா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ட்ராமா’ திரைப்படத்தில் கதாநாயகனாக விவேக் பிரசன்னா, நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் எதார்த்தமான நடிப்பை கொடுத்து பல உணர்வுகளை மிக அருமையாக நடித்திருக்கிறார்.
தன்னால் தன் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க முடியாது என தன்னிடம் உள்ள குறைபாடு தான் காரணம் என்பது தெரிந்திருந்தாலும், அதை தன் மனைவியிடம் இருந்து மறைப்பது, அதனால் தன் மனைவிக்கு ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு ஆகியவற்றை எண்ணி வருந்துவது என தனது நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
இந்த ‘ட்ராமா’ திரைப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி தமிழரசன், நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன், குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம், குழந்தை இல்லாத ஏக்கம், தன் கர்ப்பமடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதம், அதன் பிறகு கர்ப்பத்தால் மிகப்பெரிய அளவில் உருவாகும் பிரச்சனை என பல காட்சிகளில் மிக அழுத்தமான நடிப்பு கொடுத்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
மற்றொரு இளம் ஜோடி நடித்திருக்கும் பிரதோஷ், அவரது காதலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்ணிமா ரவி இருவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகன் விவேக் பிரசன்னாவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்த் நாக் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்ஜீவ் நடிப்பிலும் எந்த ஒரு குறையில்லாமல் நடித்திருக்கிறார்.
மறைந்த மாரிமுத்து, பிரதீப் கே.விஜயன், ரமா என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் திரைக்கதையோட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு மிகப்பெரிய அளவில் திரைப்படத்தின் தரத்தை உயர்த்துள்ளது.
இசையமைப்பாளர் ஆர்.எஸ். ராஜ்பிரதாப் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாக பயணித்திருக்கிறார்.
மருத்துவ பின்னணியில் நடக்கும் குற்ற செயல்களை மையமாக கதையை வைத்து திரைக்கதை சுவாரஸ்யமாக அமைத்து, அதை சொல்லிய விதம் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன்,
மூன்று கதைகள் மூலம் தான் சொல்ல வந்த கருத்தை மிக வித்தியாசமாகவும் அருமையாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன்,