‘மார்கழி திங்கள்’ திரைவிமர்சனம்

பாரதிராஜா, ரக்ஷனா மற்றும் ஷியாம் செல்வம் அறிமுகத்தில் சுசீந்திரனின் திரைக்கதையில்,மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்திருக்கும் படம் மார்கழி திங்கள்.


கதை சுருக்கம்,

திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டியில் நடக்கும் கதை. பெற்றோரை இழந்து தாத்தாவின் அரவணைப்பில் வாழும் கவிதா. பத்தாம் வகுப்பு படிக்கும் இவருக்கும் அவருடன் படிக்கும் மாணவரான வினோத்திற்கும் படிப்பில், போட்டி வந்து, அந்த போட்டியே காதலாக மாறி நிற்கிறது ,தாத்தாவிற்கு தான் தான் உலகம் என்று நினைக்கும் கவிதா, தாத்தாவிடம் தன் காதலை சொல்ல அந்த காதலை தாத்தா சேர்த்து வைத்தாரா, அல்லது அல்லது தன் சமூகத்தின் மீதான பயத்தில் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை படத்தின் திரை கதை.
தாத்தாவாக பாரதிராஜா, வயது முதிர்ந்த தனது தளர்ந்த உடலாலும், குரலாலும் அந்த தாத்தாவின் கதாபாத்திரத்திற்கு அழகாக உயிரூட்டி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் பாரதிராஜா. பேதியாக வரும் நடிகை ரக்ஷனா, கவிதாவாக வாழ முயற்சி செய்திருக்கிறார். தனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். அந்த வயதிற்கே உரிய காதல் ஏமாற்றம் இயலாமை ஆகியவற்றை தன் நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார். காதலனாக வரும் ஷியாம் செல்வம் எனும் மனதில் நிற்க மறுக்கிறார், காதல் காட்சிகளிலும் உயிரோட்டம் இல்லாமல் இருக்கிறது. இயக்குனர் சுசீந்திரன் தன்னை படத்தில் வில்லனாக காட்டிக் கொள்ள மிகவும் மெணக்கெடுக்கிறார் .,ஆனால் அவர் வில்லன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவருக்கு அந்த கதாபாத்திரம் ஒட்டவில்லை.
அப்புகுட்டி படம் முழுவதும் வருகிறார் ஒரு சில வசனங்கள் மட்டும் பேசுகிறார் இன்னும் அவரை ஆழமாக அழுத்தமாகவும் காட்டி இருந்தால் அவரது நடிப்பு படத்திற்கு பலமாக இருந்திருக்கும்.


கவிதாவின் தோழியாக வரும் நக்க்ஷா படம் முழுவதும் வருகிறார் அனைவரையும் கவனிக்க வைக்கிறார்.
வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு படத்திற்கு இன்னும் அழகு ஊட்டி இருக்கலாம். கிராமத்தின் அழகை எடுத்துக் காட்டி இருக்கலாம். படத்தொகுப்பு இன்னும் விறுவிறுப்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இசை இளையராஜா ஆனால் இளையராஜாவை இசை நமக்கு ஞாபகப்படுத்தவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் கதை நடக்கும் களம் அந்த கதைகளத்தை மிகவும் கவனமாக கையாண்டு இருக்கிறார்கள் திரைக்கதையில். ஒரு சில காட்சிகள் நாடக பாணியில் இருப்பதை தவிர்த்து இருக்கலாம் அந்த காட்சிகள் படத்திற்கு தொய்வை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு கிராமத்தின் சூழலை கையில் எடுத்த இயக்குனர் அந்த கிராம மக்களின் வாழ்க்கையை காட்டி இருக்கலாம் அந்த கிராமத்தில் கதாபாத்திரங்கள் மட்டுமே இருப்பதாக காட்டி இருப்பது சற்று நெருடலாக உள்ளது.
கடைசியில் வரும் 20 நிமிட படத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருந்தால் படம் நிச்சயம் நம் மனதை விட்டு நீங்காமல் இருந்திருக்கும் கண்கலங்க வைத்திருக்கும்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத ஒன்று மிகவும் வலியான ஒன்று.

மார்கழி திங்கள் காதலுக்கும் சாதிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் காதல் நெஞ்சங்கள்

OVEREALL RATTING——–3/5

படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகளுக்காக மட்டுமே இந்த மதிப்பெண்

Related Post