Breaking
February 24, 2025

நானியின் நடிப்பில் கிரைம் வித் ஆக்சன் திரில்லர் ‘ HIT – தி தேர்ட் கேஸ் ‘

நேச்சுரல் ஸ்டார் நானியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரைம் வித் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘ HIT – தி தேர்ட் கேஸ் ‘ பெரும் பரபரப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தி வருகிறது. தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநர் டாக்டர் சைலேஷ் கோலானு இயக்கியுள்ள இந்த திரைப்படம் வெற்றிபெற்ற HIT எனும் திரைப்படத்தின் மூன்றாவது பாகமாகும். இந்தத் திரைப்படம் இதற்கும் முன் கவர்ச்சிகரமான காட்சிகளாலும், கண்ணை கவரும் போஸ்டர்களாலும் பார்வையாளர்களிடத்தில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வால் போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி மற்றும் நானியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான யுனாானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ‘சர்க்காரின் லத்தி’ எனும் பெயரில் டீசர் ஒன்று.. நானியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

கதைக்களம் – ஒரே மாதிரியாக நிகழும் கொலை குற்ற சம்பவங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை வழக்கு காவல்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அவர்களின் இடைவிடாத முயற்சிகள் இருந்த போதிலும்.. அவர்களால் இந்த கொலை வழக்கை தீர்க்கவோ அல்லது குற்றவாளியை பிடிக்கவோ முடியவில்லை. இதன் இறுதி முயற்சியாக.. அவர்கள் அர்ஜுன் சர்க்காரிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறார்கள். அர்ஜுன் சர்க்கார் என்பது குற்றவாளிகளின் முதுகெலும்பை நடுநடுங்க வைக்கும் பெயர்.

அர்ஜுன் சர்க்காராக நானியின் சித்தரிப்பு கொடூரமாக இருக்கிறது. அவரது கதாபாத்திரத்தில் வடிகட்ட இயலாத தீவிரத்தை கொண்டு வருகிறார். அவர் தவிர்க்க முடியாதவர் போலவே பயமுறுத்தும் ஒரு கதாபாத்திரத்தையும் உருவாக்குகிறார். அவரது மிரட்டும் சைகைகள் முதல் வெடிக்கும் கோபம் வரை நாணியின் அர்ஜுன் சர்க்கார் ஆக்ரோசத்தின் சூறாவளி.

ஒரு குற்றவாளியின் வயிற்றில் கத்தியை குத்தி, அதை மேலே நோக்கி உயர்த்தும் போது… கொடூரமான காட்சியில் ரத்தம் கூரையில் தெறிக்கிறது. இந்த தருணம்- கதாபாத்திரத்தின் அடக்க முடியாத மூர்க்கத்தனத்திற்கு ஒரு சிலிர்க்க வைக்கும் சான்றாகும்.

இயக்குநர் சைலேஷ் கோலானு ஒப்பற்ற கதை சொல்லல் மற்றும் காட்சி மொழியாக விவரிப்பதால் ..’ HIT தி தேர்ட் கேஸ்’ படத்தின் மூன்றாவது பாகத்தை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார். நானி தனது ஆற்றல் வாய்ந்த நடிப்பால் கதையை மேம்படுத்துவதுடன் அதன் ஆழத்தையும், தீவிரத்தையும் நடிப்பால் உணர்த்துகிறார். வழக்கமான பிம்பங்களை அந்த கதாபாத்திரம் உடைக்கிறது. நானியின் மாற்றமும் ரசிக்கத்தக்கது மற்றும் மறக்க இயலாதது.

கிரைம் வித் ஆக்சன் திரில்லரான இந்த திரைப்படத்திற்கு ஏற்ற வகையில் பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவருடன் பின்னணி இசை மூலம் பதற்றத்தை அதிகரிக்க மிக்கி ஜே. மேயர் இணைந்திருக்கிறார். வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி மற்றும் நானி ஆகியரோல் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்தின் தயாரிப்பின் தரம் சர்வதேச அளவிலானது. படத்தின் படத்தொகுப்பு பணிகளை கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் கையாள, தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ நாகேந்திர தங்கலா கவனிக்கிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் ‘HIT : தி தேர்ட் கேஸ்’ – 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

துடிப்பான மற்றும் வழக்கத்திற்கு மாறான கதைக்களம் – நானியின் அற்புதமான நடிப்பு – ஆகியவை இணைந்து ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம்… கிரைம் வித் ஆக்சன் திரில்லர் படங்களின் எல்லையை மறு வரையறை செய்வதாகவும், பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் என்றும் உறுதியளிக்கிறது.

நடிகர்கள் :
நானி , ஸ்ரீநிதி ஷெட்டி

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : டாக்டர் சைலேஷ் கோலானு
தயாரிப்பாளர் : பிரசாந்தி திபிர்னேனி
தயாரிப்பு நிறுவனம் : வால் போஸ்டர் சினிமா & யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்
ஒளிப்பதிவு : சானு ஜான் வர்கீஸ்
இசை : மிக்கி ஜே. மேயர்
படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்
தயாரிப்பு வடிவமைப்பு : ஸ்ரீ நாகேந்திர தங்கலா
நிர்வாக தயாரிப்பு : எஸ் வெங்கட ரத்தினம் (வெங்கட் )
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *