Breaking
February 20, 2025

பிரபாஸ் படத்தில் இணைந்த அனுபம் கேர்…..

‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் – இயக்குநர் ஹனு ராகவபுடி – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படத்தில் இணைந்த பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர்

ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களான சலார் மற்றும் கல்கி 2898 கிபி ஆகிய படங்களின் மூலம் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் ‘ரெபல் ஸ்டார் ‘ பிரபாஸ் தற்போது படைப்பாற்றல் மிக்க இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கும் பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்திய அளவில் புகழ்பெற்ற பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம்- வாழ்க்கையை விட மிகப்பெரிய கூறுகள் நிறைந்த பிரம்மாண்டமான படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கிறது.

இந்த திரைப்படத்தில் பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.‌ இதனை நடிகரே பகிர்ந்து கொண்டுள்ளார். தான் ஏற்று நடிக்கும் கேரக்டர்களை கவனமாக தேர்வு செய்யும் அனுபம் கேர், இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு ‘அற்புதம்!’ எனக் கூறியிருக்கிறார். அத்துடன் பிரபாஸுடன் திரையை பகிர்ந்து கொள்வதில் உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் ஹனு ராகவபுடியின் திறமையையும் அவர் பாராட்டினார். இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன கேட்க முடியும்? என்றும் அனுபம் கேர் கேட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்..
” அறிவிப்பு : இந்திய சினிமாவின் #பாகுபலியுடன் எனது 544 வது பெயரிடப்படாத படத்தில் இணைந்திருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரே ஒரு #பிரபாஸ், நம்ப முடியாத திறமை மிக்க ஹனு ராகவபுடி இப்படத்தை இயக்கியுள்ளார். அத்துடன் மைத்ரி மூவி மேக்கர்ஸின் அற்புதமான குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனது அருமை நண்பரும், புத்திசாலியுமான ஒளிப்பதிவாளர் #சுதீப் சாட்டர்ஜி தான் இதில் பணியாற்றுகிறார். ‘இது ஒரு அற்புதமான கதை. வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்? நண்பர்களே! வெற்றி பெறுங்கள்! ஜெய் ஹோ!” என பதிவிட்டிருக்கிறார்.

‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ்- ஹனு ராகவபுடி – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இது.

1940களில் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த வரலாற்று புனைவு கதை / மாற்று வரலாறு. போர் மட்டும் தான்…உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட அநீதிகளுக்கும், மறக்கப்பட்ட உண்மைகளுக்கும் ஒரே தீர்வு என்று நம்பிய சமூகத்திலிருந்து… அதன் நிழல்களிலிருந்து… எழுந்த ஒரு போர் வீரனின் கதை.‌

இப்படத்தில் பிரபாஸுற்கு ஜோடியாக நடிகை இமான்வி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் முன்னாள் பிரபல நடிகர்கள் மிதுன் சக்கரவர்த்தி- ஜெயப்பிரதா ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். சர்வதேச தரத்திலான தயாரிப்பு மற்றும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் அதிக பொருட் செலவில் இப்படம் தயாராகிறது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். சுதீப் சட்டர்ஜி ISC ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பை அனில் விலாஸ் ஜாதவ் கையாளுகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நடிகர்கள் :
பிரபாஸ் , இமான்வி, மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா மற்றும் பலர்

தொழில்நுட்ப குழு :

எழுத்து & இயக்கம் : ஹனு ராகவபுடி
தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி – ஒய். ரவிசங்கர்
ஒளிப்பதிவு : சுதீப் சட்டர்ஜி ISC
இசை : விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு வடிவமைப்பு : அனில் விலாஸ் ஜாதவ்
படத்தொகுப்பு : கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்
பாடலாசிரியர் : கிருஷ்ண காந்த்
ஆடை வடிவமைப்பாளர்கள் : ஷீத்தல் இக்பால் சர்மா – டி . விஜய் பாஸ்கர்
விளம்பர வடிவமைப்பு : அனில் – பானு
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *