Breaking
February 21, 2025

தண்டேல் திரைப்பட விமர்சனம்

மீனவ குடும்பத்தைச் சார்ந்த கதாநாயகன் நாக சைதன்யா, மற்றும் கதாநாயகி சாய் பல்லவி சிறு வயது முதல் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார்கள்.
நாக சைதன்யா தன்னுடைய மீனவக் கிராமத்தில் உள்ள நண்பர்களோடு சேர்ந்து சுமார் பல ஆயிரம் கி.மீ.க்கு தொலைவில் இருக்கும் குஜராத் கடற்கரைக்குச் சென்று, மீன்பிடிக்கச் செல்கிறார்கள்.

மீனவக் குடும்பத்தில் உள்ள அனைவரும் வருடத்தில் ஒன்பது மாதங்கள் மட்டுமே கடலுக்குள் சென்று மீன்பிடிப்பது இவர்களுடைய வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

கடலுக்குள் சென்று 9 மாதங்கள் மீன்பிடிக்கும் இவர்கள் மூன்று மாதங்கள் மட்டுமே தனது குடும்பத்தோடு சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.

கதாநாயகன் நாக சைதன்யா மீது உயிரையே வைத்திருக்கும் கதாநாயகி சாய் பல்லவி இப்படி ஒன்பது மாதங்கள் பார்க்காமல் பேசாமல் இருப்பதை கதாநாயகி சாய் பல்லவி தாங்கி கொள்ள முடியவில்லை.

மேலும், மீன்பிடி தொழில் என்பது மிகவும் ஆபத்தான தொழில் என்று, அதனை கைவிடும்படி கதாநாயகன் நாக சைதன்யாவிடம் மீள்பிடி தொழில் மிகவும் ஆபத்து என்பதால் நீ போக வேண்டாம் என கதாநாயகி சாய் பல்லவி கெஞ்சுகிறார்.

ஆனால், நமது கிராமத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் என்று கூறி கதாநாயகன் நாக சைதன்யா கதாநாயகி சாய் பல்லவி பேச்சையும் மீறி மீன்வேட்டைக்கு சென்று விடுகிறார்.
இதனைத் தொடர்ந்து சில நாட்களில், கடும் புயலில் வேறு ஒரு படகு கவிழும் நிலையில் கதாநாயகன் நாக சைதன்யா அந்தப் படகில் உள்ள ஒருவரை காப்பாற்றும் நிலையில் மீன் பிடிக்க சென்றவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் படகு சென்றுவிட பாகிஸ்தான் கப்பல் காவல் படையிடம் கதாநாயகன் நாக சைதன்யா மற்றும் 21 பேரையும் பாகிஸ்தான் காவல் படையினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அங்குள்ள சிறைக்குள் அடைக்கப்படுகிறார்கள்..

இறுதியில் கதாநாயகன் நாக சைதன்யா மற்றும் 21 பேரையும் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை ஆனவர்களா?, விடுதலை ஆகவில்லையா?, என்பதுதான் இந்த தண்டேல் திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த தண்டேல் திரைப்படத்தில் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் நாக சைதன்யா, திரைப்படத்திற்கு அதனுடைய கதாபாத்திரம் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் நாக சைதன்யா ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட், நடனம், எமோஷன்ஸ் என நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்.

கதாநாயகன் நாக சைதன்யாவிற்கும் கதாநாயகி சாய்பல்லவிக்குமான கெமிஸ்ட்ரி திரைப்படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

நடிப்பு நடனம் என படிப்பின் மூலம் சாய் பல்லவி அசத்தியிருக்கிறார்.

மேலும், ஆடுகளம் நரேன், பப்லு, கருணாகரன் உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் மிகவும் நேர்த்தியாக கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷ்யாம் தத் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, மீனவர்கள் கைது செய்யப்பட்டு அங்கு உள்ள சிறைக்குள் அடைபட்டு கிடக்கும் இந்திய மீனவர்கள் எந்த மாதிரியான இன்னல்களுக்கு எப்படி எல்லாம் ஆளாகியிருப்பார்கள் என்பதை வெளிச்சமாக காட்டி நம் கண்களில் ஈரத்தைக் கொண்டு வர வைத்துவிட்டார் இயக்குனர் சந்து மொண்டேட்டி.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *