காவேரி மருத்துவமனை நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு


ஓட்டத்தில் 6,500 பேர் பங்கேற்றனர்
ஆரம்பகால புற்றுநோய் கண்டறிதல் மற்றும் தடுப்பதை ஊக்குவிக்கும் முயற்சி
சென்னை, 2 பிப்ரவரி 2025: உலக புற்றுநோய் தினம் வரும் 4 ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சென்னையில் ஞாயிறன்று (பிப்.2) காவேரி மருத்துவமனை K10K என்ற பெயரில் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் 6,500 பேர் உற்சாகமாக பங்கேற்றனர்.
சென்னை, பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில், நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி புற்றுநோயால் பாதிக்கப்பட்வர் களுக்கான சமூக ஆதரவை தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்டது. மேலும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் நடத்தப்பட்டது.
இந்த ஓட்டமானது இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. 10 கிமீ ஓட்டம் மற்றும் 5 கிமீ ஓட்டம், பிட்னஸ் ஆர்வலர்கள், தொழில்முறை விளையாட்டு வீரர்கள், குடும்பங்கள், மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் தொழில் வல்லுநர்கள் உட்பட பலதரப்பட்ட நபர்கள் இதில் கலந்துகொண்டனர். இவர்களின் ஆர்வமான பங்கேற்பு புற்றுநோய் விழிப்புணர்வில் அதிகரித்து வரும் அக்கறையை பிரதிபலிக்கிறது. மற்றும் வழக்கமான பரிசோதனைகள் மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவற்றால் உயிரை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டையில் உள்ள கதிரியக்க புற்றுநோயியல் இயக்குநர் டாக்டர் ஏ என் வைத்தீஸ்வரன், கூறுகையில் உலகளவில் அதிக இறப்புக்கு புற்றுநோயே முக்கிய காரணம் என்பதால் அந்நோயை முன்கூட்டியே கண்டறிவது அவசியம் என்றார். காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோய்க்கு விரிவான முன்னேறிய நவீன சிகிச்சை வசதிகள் உள்ளது என்றார். மேலும் ஆரம்பத்திலேயே அந் நோயை கண்டறிந்தால் விரைவாக குணப்படுத்த முடியும். பொது மக்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு கல்வியை கற்பிப்பதும், வழக்கமான சோதனைகளுக்கு முன்னுரிமை அளிக்க அவர்களை ஊக்குவிப்பதும் இந்த ஓட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த முக்கியமான காரணத்தை ஆதரித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மருத்துவமனை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் தடுப்பு ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். “பல ஆண்டுகளாக, புற்றுநோய் பராமரிப்பு என்பது தனிப்பட்ட நபர்களுக்கு ஏற்றவகையிலும் இலக்குடன் கூடிய சிகிச்சைகள் வந்துள்ளன. புற்றுநோயைத் தடுப்பது மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே எங்கள் முதன்மை நோக்கமாகும். மேலும் K10K ஓட்டத்தின் மூன்றாவது பதிப்பிற்கு சென்னை மக்களிடமிருந்து இதுபோன்ற நேர்மறையான பதிலைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆதரவு தொடரும் என நம்புகிறோம், மேலும் இந்த நிகழ்வு அதிகமானோரை அவர்களின் அன்றாட வாழ்வில் உடற்பயிற்சியை ஒருங்கிணைக்க தூண்டுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருந்த சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் பெரு சென்னை மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
10 கிமீ ஓட்டத்தில் பல்வேறு வயதுப் பிரிவினர் கலந்து கொண்டனர். அனைத்து நிலைகளிலும் உடற்தகுதியுடையவர்கள் ஓட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *