கன்னியாகுமரி மாவட்டத்தில் வாய் பேச முடியாமலும் காது கேட்க முடியாமலும் அருண் விஜய், சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டு தனது தங்கை ரிதாவுடன் வாழ்ந்து வருகிறார். தனது கண்ணெதிரே எந்த ஒரு தவறு நடந்தாலும், அது யாராக இருந்தாலும், தட்டிக் கேட்கும் முரட்டுத்தனமான சுபாவம் கொண்டவர்.அருண் விஜயின் கோபத்தை குறைப்பதற்காக ஒரு நிரந்தரமான வேலை ஒன்று ஏற்பாடு செய்ய முடிவு செய்யும் தங்கை ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில் வாட்ச்மேன் வேலை வாங்கிக் கொடுக்கிறார்.
தன்னைப் போன்று குறைபாடு இருந்தாலும் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு மத்தியில் காப்பகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சொந்த அண்ணன் போல் தனது பணியை செய்து வரும் கதாநாயகன் அருண் விஜய்.காப்பகத்தில் தன்னைப்போல் உள்ள தனது தங்கைகளுக்கு நடந்த ஒரு அநீதியைக் பார்த்து கடுமையாக கோபம் கொள்வதோடு, அநீதி செய்தவர்களை மிகப்பெரிய அளவில் தண்டனை தருகிறார்.
அருண் விஜய்யின் வாழ்க்கை என்னவானது? என்பதுதான் இந்த ‘வணங்கான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் அருண் விஜய், மாற்றுத்திறனாளியாக நடித்து ரசிகர்களை அசர வைத்து இருக்கிறார்.ஆக்ஷன் காட்சிகளில் கவனிக்க வைத்தது மட்டுமல்லாமல் தங்கையின் மீது வைத்திருக்கும் பாசத்தில் நெகிழ வைத்து இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷின் அறிமுகம் மிக அமர்க்களமாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் கதாநாயகன் அருண் விஜய்யை ஒருதலையாக காதலிப்பது, அவரது கதாநாயகனின் முரட்டுத்தனத்தை ரசிப்பது, அவருக்காக கண்ணீர் சிந்துவது, என திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இருக்கிறார்.
அருண் விஜயின் தங்கையாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிதா, அண்ணனின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கலங்க வைத்துவிடுகிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரது திரை இருப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
டாக்டர்.யோஹன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன் ராஜ், கவிதா கோபி, பாலா சிவாஜி, முனிஷ்குமரன், பிருந்தா சாரதி, தீபிகா என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு மூலம் கன்னியாகுமரி மாவட்ட மக்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு மூலம் சாதாரண மக்களின் வாழ்வியலையும், அவர்களது உணர்வுகளையும் மிகவும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் முலம் கதைக்களத்தை பலம் சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப அளவாக பயணித்திருக்கிறது.
சாதாரண ஏழை எளிய மக்களையும், அவர்களது வாழ்க்கை மற்றும் வலிகளை திரைப்படத்தில் கொண்டு வருவதோடு, அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து நிற்கும் கதாநாயகனையும் எளிய மக்களின் ஒருவனாக சித்தரித்து அவர்களை முன்னிலைப்படுத்துவதை மிக அருமையாக இயக்கி உள்ளார் இயக்குநர் பாலா,