கேரள மாநிலத்தில் உள்ள, குமுளி என்ற ஊரில் சிறிய அளவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யும் கடை நடத்தும் சமுத்திரக்கனி, மனைவி, அனன்யா இரண்டு பெண் பிள்ளைகளோடு ஏழ்மையுடன், வாழ்ந்தாலும், தன்னிடம் பழகும் அனைவரிடத்திலும் அன்பாக பழகுகிறார்.சமுத்திரகனி இடம் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் பாரதிராஜா, பணம் காணாமல் போய்விட்டதால், வாங்கிய லாட்டரி டிக்கெட்டுகளை பணம் கொடுத்துவிட்டு வாங்கி கொள்கிறேன், என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.பாரதிராஜா வாங்கிய லாட்டரி டிக்கெட்டுகளில் ஒரு லாட்டரி டிக்கெட்டுக்கு மட்டும் ரூபாய்.1 கோடியே. 50 லட்சம் முதல் பரிசு விழுந்துவிட, பாரதிராஜாவிடம் பரிசு விழுந்த பணத்தை ஒப்படைக்க கதாநாயகன் சமுத்திரக்கனி தேடி கண்டுபிடித்து எப்படியாவது ஒப்படைத்து விட வேண்டும் என முடிவெடுக்கிறார்.
இந்த நிலையில் பாரதிராஜா யார்?, எந்த ஊர்? உள்ளிட்ட எந்த விபரமும் தெரியாமல் பாரதிராஜா கொண்டு வந்த மஞ்சள் பையில் இருந்த ஊர் பேரை வைத்துக்கொண்டு, அவரை கண்டுபிடித்து பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை அவரிடம் ஒப்படைக்க கதாநாயகன் சமுத்திரக்கனி அலைந்து கொண்டிருக்கிறார்.விஷயம் கேள்விப்பட்ட அவருடைய மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், கதாநாயகன் சமுத்திரக்கனி யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.
சொந்த பந்தங்களுக்கு எடுக்கும் முயற்சியால் கதாநாயகன் சமுத்திரக்கனியை சில ஆபத்துகளும் துரத்த, லாட்டரி டிக்கெட் வாங்கிய பாரதராஜாவிடம் லாட்டரி டிக்கெட்டை ஒப்படைத்தாரா?,ஒப்படைக்கவில்லையா?,என்பதுதான்‘திரு.மாணிக்ம்’ படத்தின் மீதிக்கதை.
கதாநாயகன் சமுத்திரகனி மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில், எளிமை, அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட, தெளிவான சிந்தனை, நேர்மையான வாழ்க்கை என மிக அருமையான நடிப்பை கொடுத்து மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறார்.
மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனன்யா, கல்லூரி, காதல் என்று இளம் வயது கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவராக இருந்தாலும், மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், குடும்ப கஷ்டம் தீர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும், கணவரின் நேர்மையால் அந்த குடும்ப கஷ்டம் முடியாமல் போகும்போது, உள்ளுக்குள் எழும் கோபத்தை தனது நடிப்பின் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி சிறந்த நடிகை என முத்திரை பதித்திருக்கிறார்.
முதியவர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும் பாரதிராஜா, வழக்கும் போல் எதார்த்தமாக நடித்திருக்கும் இளவரசு, சில காட்சிகளில் வந்தாலும் நினைவில் நிற்கும் ரசிகர்கள் மனதில் தங்கிவிடும் கதாபாத்திரங்களில் நாசர், வடிவுக்கரசி, தேவாலய பாதிரியராக நடித்து பாதிரியார்களை கலாய்த்த சின்னி ஜெயந்த், கருணாகரன், சாம்ஸ், ஸ்ரீமன் லண்டன் ரிட்டர்னாக தம்பி ராமையா, என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தாங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் அளவான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பக்கபலமாக அனைத்து கதாபாத்திரங்களும் அமைந்திருக்கிறது
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் கேமரா கேரள பகுதிகளை பசுமையாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தியிருப்பதோடு, மட்டுமல்லாமல் எளிமையானவர்களின் சோகம் மற்றும் கண்ணீரை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் இடம் நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் கடத்திச் சென்று இருக்கிறார்.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்