Breaking
January 23, 2025

மஜீத் இயக்கத்தில், விமல், யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படம்

CONFIDENT FILM CAFE சார்பில் அப்துல் மஜீத் தயாரித்து இயக்க, நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக உருவாகியுள்ள புதிய படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக கோர்த்து, இப்படத்தை உருவாக்கியுள்ளார் தமிழன் படப்புகழ் இயக்குநர் அப்துல் மஜீத்.

இப்படத்தில் முன்னணி நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ளார், சாம்பிகா டயானா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை பெரும் பொருட்செலவில், சார்பில் அப்துல் மஜீத் தயாரித்து இயக்குகிறார். ஒளிப்பதிவு கே. கோகுல், எடிட்டிங் ஏ.ஆர்.சிவராஜ், இசை பைஜூ ஜேக்கப், EJ ஜான்சன், நிர்வாக தயாரிப்பு மு. தென்னரசு, எம்.ரகு. கிரியேட்டிவ் ஆர்கனைஸேசன் பாஸ்கர் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள். மக்கள் தொடர்பு
வேலு.

பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையிலான கலக்கலான கமர்ஷியல் காமெடிப்படமாக இப்படம் இருக்கும். இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Related Post