திரையிலும், திரைக்கு அப்பாலும் ரசிகர்களின் இதயங்களை வெல்லும் இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான பிரபாஸ்..!

இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் நாடு முழுவதும் மட்டுமில்லாமல் உலக நாடுகள் முழுவதும் பரவியிருக்கும் அவரது ரசிகர்களையும், பார்வையாளர்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் அவரது திறமை- அவரின் ஈடு இணையற்ற செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது. அவரது பணிவு- ரசிகர்களுடன் உண்மையான அக்கறையுடன் கூடிய தொடர்பு – இதனால் அவர் ரசிகர்களிடம் அசைக்க முடியாத ஆதரவை பெற்றிருக்கிறார். இதன் காரணமாகவே பாக்ஸ் ஆபீஸ் வெற்றியையும் தொடர்ந்து உறுதி செய்கிறார். ‘பாகுபலி’ முதல் ‘கல்கி’ வரை பிரபாஸ் தொடர்ந்து மிகப்பெரிய ஓப்பனிங்கை வழங்குகிறார். தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கு.. கணிசமான வருவாய் உத்திரவாதம் அளிப்பதன் மூலம் தயாரிப்பாளர்கள் இவரை நம்பி பிரம்மாண்டமான படைப்புகளை உருவாக்குகிறார்கள். அவருடைய திரைப்படங்கள்- பொழுது போக்கு மற்றும் எமோஷனின் கலவையாக இருப்பதால், அவர் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார். மேலும் பிராந்திய அளவிலான புகழில் இருந்து உலகளாவிய நட்சத்திர நடிகர் என்ற எல்லை வரை பிரபாஸின் பயணம் விரிவடைந்திருக்கிறது. இது அவரது திறமையையும், கடின உழைப்பையும் வெளிப்படுத்துகிறது.

பிரபாஸ் உண்மையில் ஒரு உணவுப் பிரியர். படப்பிடிப்பு தளங்களிலும் கூட தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சி அடைகிறார். மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற அவரது சிந்தனையாலும், செயலாலும், அக்கறையாலும் அவருடன் பணியாற்றும் நபர்களிடமிருந்து அவர் பெறும் மரியாதை தனித்துவமானது. ‘கல்கி 2898 கிபி’ படத்தின் விளம்பர நிகழ்வில் போது தீபிகா படுகோன் போன்ற சக கலைஞரிடமிருந்து உணவு பரிமாறும் விசயங்களில் பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.

மகத்தான வெற்றியைப் பெற்றாலும் பிரபாஸ் பணிவுடன் இருப்பதை பின்பற்றுபவர். ‘கல்கி 2898 கிபி’ படத்தின் வசூல் ஆயிரம் கோடியை கடந்த போது மிக மிக எளிமையான ஒரு போஸ்டரை மட்டுமே பகிர்ந்து கொண்டார். அவரது இந்த பணிவான செயல்.. ரசிகர்களிடம் எதிரொலித்தது. இதன் காரணமாகவே அவரின் பணிவை பலரும் பாராட்டினார்கள்.

பிரபாஸ் எப்போதும் தனது ரசிகர்களை ‘டார்லிங்’ என்று அன்புடன் குறிப்பிடுவார். இதிலிருந்து அவர் ரசிகர்கள் மீதும், ரசிகர்களுக்கு அவர் மீதும் இருக்கும் அன்பும், நன்றியும் பிரதிபலிக்கிறது. அவரது அபிமானத்திற்கு உரியவர்களிடம் அவரின் உண்மையான தொடர்பு.. அவரை ஒரு நட்சத்திரமாக மட்டுமல்ல அன்பிற்குரிய நபராகவும் மாற்றுகிறது.

பிரபாஸ் அர்ப்பணிப்பின் உருவம் என்று குறிப்பிடலாம். ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் அவரது கதாபாத்திர தோற்றத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட அசைக்க முடியாத அர்ப்பணிப்பு – இதற்கு சிறந்த சான்றாகும். இந்த படத்திற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்களை அவர் அர்ப்பணித்தார். மேலும் கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். சிக்கலான… நுட்பமான… அதிரடி காட்சிகளில் நடிப்பதற்காகவும் தேர்ச்சி பெற்றார். அத்துடன் அந்த திரைப்படம் எடுத்துரைக்கும் காவிய உலகில் தன்னை ஒரு கதாபாத்திரமாகவே மூழ்கடித்து கொண்டார். இன்றைய வேகமான தொழில்துறையில் இந்த அளவிலான அர்ப்பணிப்பு என்பது மிகவும் அரிதானது. பிரபாஸின் இடைவிடாத சிறப்பான ஈடுபாடு.. அவரது வாழ்க்கையில் என்றும் நிலையானது. இது அவரை பின்பற்ற நினைக்கும் ஆர்வமுள்ள நடிகர்களுக்கு உண்மையான உத்வேகத்தையும் அளிக்கிறது.

பிரபாஸ் பெருந்தன்மை மிக்கவர். சமூக காரணங்களுக்காக தாராளமாக நன்கொடைகளை வழங்கி தன் பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார். அண்மையில் கேரளா – ஆந்திரா- தெலுங்கானா – ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட பேரிடரின் போது நிவாரண நிதியாக நான்கு கோடி ரூபாயை நன்கொடையாக அளித்தார்.

பிரபாஸின் தோற்றம் மற்றும் அவரது கவர்ச்சி ஒரு சூப்பர் ஸ்டாராகவே காணத் தோன்றுகிறது. சிக்ஸ் பேக் … மெலிந்த உடல்… என எந்த தோற்றத்தில் திரையில் தோன்றினாலும் அவரது வசீகரம்… பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இதனுடன் அவருடைய எளிமையான இயல்பும், அவரது தோற்றமும் அவர் சார்ந்த தொழில்துறையில் ஒரு தனித்துவமான ஆளுமையாக்குகிறது.

திறமை – பணிவு – அசைக்க முடியாத அர்ப்பணிப்பு – தாராளமான நன்கொடை- என பல்வேறு அம்சங்களால் இந்திய அளவில் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலித்து, தேசம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயத்தை வெல்கிறார். வென்று வருகிறார்.

Related Post