நமது ஆழ் மனதில் எதை அதிகம் விரும்புகிறோமோ அதுவே நமது வாழ்க்கை” என்ற கருத்தை காதல் பின்னணியோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவா.ஆர்.
சிறு வயதில் கதாநாயகன் வெற்றியின் கண் முன்னே நடந்த விபத்து ஒன்றில் தனது தாய் மற்றும் தந்தை இழந்து தன் மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு சென்று ஆன்மீகம் கற்றுக்கொண்டு மனப் போராட்டத்தில் இருந்து தப்பிக்கலாம் என நினைக்கிறார்.
எழுத்தாளர் ஆக வேண்டும் என்று 10 வருடங்களாக முயற்சித்தும் ஆன்மீகத்தை மனதளவில் ஏற்க முடியாமல் தவிக்கிறார். எழுத்தாளராக வேண்டும் என்ற தனது பயணத்தை தொடங்குகிறார்.
அப்போது அவருக்கு ரயில் பயணத்தில் கிடைக்கும் வெளிநாட்டு பெண்னின் நட்பு, அந்தப் பெண்ணின் நட்பு மூலம் சன்னியாசியாக சுற்றி திரிந்த வெற்றி சாதாரண மனிதராக மாறி எழுத்தாளராக வேண்டும் என்று கனவினை நோக்கி பயணப் படும்போது, மீண்டும் ஒரு கசப்பான சம்பவத்தை கதாநாயகன் வெற்றி எதிர்கொள்கிறார்.
மீண்டும் சன்னியாசியாக மாறும் வெற்றியின் வாழ்க்கை என்னவானது எழுத்துலகில் அவர் சாதித்தாரா? சாதிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ஆலன் திரைப்படத்தின் மீதிக்கதை.
ஆலன் திரைப்படத்தில் நாயகனாக வெற்றி நடித்திருக்கிறார்.
அமைதியான முகம், அளவான நடிப்பு என சன்னியாசி கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் கதாநாயகன் வெற்றி.தன் சன்னியாசி கதாபாத்திரத்தை களைத்து விட்டு இந்த வெள்ளைக்கார பெண்ணுடன் காதல் வயப்படும் போது, தனது முகத்திலும், உடல் அசைவிலும் வெட்கத்தை வெளிப்படுத்தும் விதம், நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை மற்றும் தமிழ் மொழியை நேசிக்கக் கூடிய ஜெர்மனி நாட்டு பெண்ணாக நடித்திருக்கும் மதுரா, அனைத்து காட்சிகளிலும் சிரித்த முகத்தோடு பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனு சித்தாரா ……
விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி என மற்ற கதாபாத்திரங்களில்.
ஒளிப்பதிவாளர் வின்தன் ஸ்டாலின், தனது ஒளிப்பதிவு மூலம் ரிஷிகேஷ் உள்ள ஆன்மீகத் தளங்களுக்கு நேரில் சென்று பயணித்த அனுபவத்தை கொடுக்கிறது.
மொத்தத்தில் இந்த “ஆலன்” சன்னியாசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்