Breaking
January 22, 2025

‘லியோ’ திரை விமர்சனம்

லியோ திரையில் ஒரே குய்யோ முய்யோ தான்.

OVERALL RATTING——2.5/5

விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் மற்றும் பலர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் , சண்டை இயக்குனர் அன்பறிவு இயக்கத்தில் ,அனிருத் இசையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் லியோ.

கதைச்சுருக்கம்,

மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் காரரான சஞ்சய் தத் அவருடைய தம்பி அர்ஜுன் இவர்களின் கடத்தல்களுக்கு உறுதுணையாக இருப்பது சஞ்சய் தத்தின் இரட்டை பிள்ளைகளான விஜயும் மடோனா செபாஸ்டினும், செய்யும் கடத்தலுக்கு கண்மூடித்தனமாக பல கொலைகளை செய்து அவர்கள் கடத்தலுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.மூடநம்பிக்கையில் மூழ்கி போன சஞ்சய்தத் ஒரு கட்டத்தில் தன் மகளையும் மகனையோ நரபலி கொடுத்தால் தனது கடத்தல் தொழில் மேலும் மேலும் வளரும் என்று நம்பி,யோசித்து மகளை நரபலி கொடுக்க முடிவு செய்கிறார் இதற்கு அர்ஜுனும் துணை போகிறார், இந்நிலையில் ஏற்கனவே பல கொலைகளை கண்மூடி தனமாக செய்யும் விஜய்யும் மடோனாவும் இதற்கு பயப்படுகிறார்கள். விஜய் எவ்வளவோ முயற்சி செய்தும் மடோனா கொல்லப்படுகிறார்.இதனால் அந்த ஒரு நிமிடத்தில் வாழ்க்கையே வெறுத்துப் போன விஜய் அந்த நிமிடத்தில் இருந்து திருந்தி நல்லவனாக வாழ முடிவு செய்து அந்த போதைப் பொருள் குடோனையே கொளுத்தி விட்டு தானும் இறந்துவிட்டதாக நாடகமாடி, திரிஷாவை கல்யாணம் செய்து கொண்டு காஷ்மீரில் ஒரு டீக்கடை வைத்து தான் உண்டு தன் இரண்டு குழந்தைகள் உண்டு என்று வாழ்ந்து வருகிறார். இவர் உயிருடன் இருப்பதை தெரிந்து அப்பாவும் சித்தப்பாவும் அவரை மீண்டும் கடத்தல் தொழில் இழுக்க நினைக்க, மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து அவர்களை அழிக்கிறார் இதுதான் படத்தின் கதை.

காஷ்மீரில் வசிக்கும் விஜய் அங்கு ஒரு பள்ளியில் வெறிபிடித்த ஹைனா ஒன்று
நுழைந்து விட அதை காவலர்கள் சுட்டுக்கொன்றுவிட பார்க்க விஜய் லாவகமாக அதை பிடித்து தத்து எடுத்து வளர்க்கிறார் அதற்கு சுப்பிரமணி என்று பெயர் வைத்து பெயர் வைத்து இந்த ஒரு காட்சி மட்டுமே படத்தின் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட கால் மணி நேரத்திற்கு வருகிறது ஏன்டா இதற்கு எவ்வளவு நேரம் வருகிறது என்று பார்த்தால் கிளைமாக்ஸில் மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் வந்து விஜய்க்கு உதவி செய்கிறதாம் அந்த ஹைனா.
படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வசனம் பேசி நடிக்கிறார் விஜய். படம் முழுவதும் கும்பல் கும்பலாக வருகிறார்கள் விஜயிடம் குத்தப்பட்டு செத்துப் போகிறார்கள். ஒரு சண்டையில் திடீரென துப்பாக்கி எடுத்து விஜய் ஐந்து பேரை மிக சரியாக சுட்டு கொன்று விடுகிறார். ஆனால் கோர்ட்டில் அது சென்று மேலும் அவர்கள் ஒரு கொள்ளையர்கள் என்றும் கூறி அசால்டாக விடுதலை செய்து விடுகிறார்கள். சரி படம் எப்பொழுதாவது ஆரம்பித்து விடும் என்று நினைத்தால் அதன்பிறகு கும்பல் கும்பலாக வருகிறார்கள் வெறும் சண்டை காட்சிகளாகவே உள்ளது படத்தில் ஒரு சில சீன்களில் மட்டும் விஜய் நடிக்க செய்கிறார்.


திரிஷா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்தாலும் வயது ஆக ஆக இளமை கூடிக் கொண்டே செல்கிறது திரையில் அவ்வளவு அழகாக.


சஞ்சய் தத் மெயின் வில்லன், அர்ஜுன் தம்பி வில்லன் அவர்களின் காட்சிகள் மிகவும் அழுத்தமாகவும் கொடூரமாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்தால், ஏதோ சிரிப்புதான்.

விஜயின் நண்பராக ,பாரஸ்ட் ரேஞ்சராக வரும் கௌதம் வாசுதேவன் இவ்வளவு மக்கு போலீசாக இருப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை எதிர் பார்க்கவே இல்லை


மன்சூர் அலிகான் அலிகான் அவர் அவராகவே வருகிறார் அவரது நடிப்பு வழக்கம் போலவே.
கைதி படத்தில் பிரமோஷன் வாங்கின கான்ஸ்டபிள் இங்கு விஜய் வீட்டுக்கு காவலாளியாக மாற்றலாகி‌ வருகிறார்.
அனுராக் காஷ்யப் இரண்டு நிமிடங்கள் வந்து விஜய் கையால் சுடப்பட்டு செத்துப் போகிறார் .
படத்தில் மேலும் ஏகப்பட்ட நடிகர்களை போட்டு அவர்களின் என்ன சீன் வைப்பது என்று தெரியாமல் குழம்பி ஏதோ செய்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.


அனிருத்தின் இசை வழக்கம் போல காட்டு கத்தலுடன் வருகிறது.


ஒளிப்பதிவு ஒளிப்பதிவு நிறைய காட்சிகளுக்கு சிஜி தேவை என்று தெரிந்தும் ஏனோ ஒளிப்பதிவில் சொதப்பி இருக்கிறார்கள் சிஜி காட்சிகளும் சொதப்பி இருக்கிறார்கள்.


இப்படி பல வெட்டு குத்துகள் பல கொலைகள் என்று படம் முடிந்ததும் கமலஹாசனின் குரலில் விக்ரம் படத்தின் தொடரச்சியாக இந்த படம் இருக்கும் என்று அவரது குரலில் ஒரு வசனத்தை போட்டு நம்மை தியேட்டரை விட்டு கிளம்ப வைக்கிறார்கள்.


லியோ திரையில் ஒரே குய்யோ முய்யோ தான்.

OVERALL RATTING——2.5/5

Related Post