Breaking
January 22, 2025

SDT18 திரைப்படத்தின் இன்ட்ரூட் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் ஆர்கேடி (ஆர்கேடி உலகில் ஒரு பயணம்) வீடியோ வெளியாகியுள்ளது.

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், ரோஹித் கேபி, கே நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் #SDT18 திரைப்படத்தின் இன்ட்ரூட் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் ஆர்கேடி (ஆர்கேடி உலகில் ஒரு பயணம்) வீடியோ வெளியாகியுள்ளது.

விருபக்‌ஷா மற்றும் ப்ரோ என தொடர்ந்து, பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்த மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், தற்போது அறிமுக இயக்குனர் ரோஹித் கேபி இயக்கத்தில் மிகப்பெரிய கேன்வாஸில் உருவாகி வரும் #SDT18 எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக பான் இந்திய வெற்றிப்படமான பிளாக்பஸ்டர் ஹனுமான் திரைப்படத்தை வழங்கிய பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட்டின் சார்பில், கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில், பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

சாய் துர்கா தேஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, தயாரிப்பாளர்கள் “இன்ட்ரூட் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் ஆர்கேடி” என்ற தலைப்பில் ஒரு அற்புதமான வீடியோவை வெளியிட்டுள்ளனர், இது படத்தின் கதைக்களத்தை விவரிக்கும் வகையில், படத்தினைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. ஒரு நிலம் நீண்ட காலமாக தீய சக்திகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது, அதன் மீட்பரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. தற்போது அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இந்த அற்புதமான உலகத்தை உயிர்ப்பித்திருக்கும் தயாரிப்புக் குழுவின் அர்ப்பணிப்பு முயற்சிகளை, இந்த வீடியோ நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பிரமிக்க வைக்கும் செட்கள், சிக்கலான வடிவம் கொண்ட ஆயுதங்கள் மற்றும் நடிகர்கள் பாத்திரங்களாக மாற்றப்படுவதை பார்வையாளர்கள் இந்த வீடியோவில் காணலாம் , குறிப்பாக வீடியோவின் கடைசி பிரேம்கள் பிரமிக்க வைக்கின்றன, கதாநாயகன் பிரம்மாண்டமாக எழுச்சி அடையும் தருணத்தை, படம் பிடித்து காட்டுகிறது. இது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

ஆர்கேட் உலகத்துக்கான இந்த ஸ்னீக் பீக், அபாரமான ஆர்வத்தைத் தூண்டுகிறது, குறிப்பாக சாய் துர்கா தேஜ் பீஸ்ட் மோடில் இருப்பது, நம்மை சிலிர்க்க வைக்கிறது. இது உண்மையிலேயே ஒரு அபாரமான படைப்பு என்பதை உணர்த்துகிறது.

சாய் துர்கா தேஜ் முதன்முறையாக ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த அதிரடி, பீரியட்-ஆக்சன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்கிறார்.

இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.

நடிகர்கள்: சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : ரோஹித் கே.பி தயாரிப்பாளர்கள்: கே நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி
தயாரிப்பு : பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் மக்கள் தொடர்பு : யுவராஜ்

Related Post