மெய்யழகன் திரைவிமர்சனம்

கதை இல்லாமல் பணத்திமிரில் இது போன்று படமெடுத்தால் பல மெய்யழகன்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் மக்களே…….


தஞ்சாவூர் பக்க்கத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் அவரது உறவினர்களால் ஏமாற்றப்பட்டு அனைத்து சொத்துகளையும் இழந்து மனைவி மற்றும் சிறு வயது அரவிந்சாமியுடன் சென்னைக்கு குடி பெயர்கிறார்கள். 22 வருடம் கழித்து அரவிந்த் சுவாமி தன் சித்தி மகள் கல்யாணத்திற்கு கிராமத்திற்கு வருகிறார். அப்படி வரும் அவர் தன் பழைய சொந்தங்கள், நட்புகளை பார்க்கும் உணர்வுபூர்வமான உணர்வுகளை படமாக்க நினைத்த இயக்குனர் இது சூர்யா குடும்பத்தின் சொந்த படம் என்பதால் தான் யோசித்தகதையை குப்பையில் போட்டுவிட்டு கார்த்தியின் நவரசங்களை பிழிந்து ஏன்டா படத்தை பார்க்க வந்தீர்கள் கதற வைத்து அனுப்பி இருக்கிறார்.


படத்தில் இரண்டே காட்சிகள் மட்டும் ரசிக்கும்படி இருக்கிறது அரவிந்த் சுவாமி பேருந்தில் பயணம் செய்யும் காட்சி, மணமேடையில் தங்கைக்கு நகைகள் அணிவிக்கும் காட்சி இதில் அரவிந்த்சுவாமி நன்றாக நடித்திருக்கிறார்.

சென்னையில் இருந்து காலை புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு தஞ்சாவூரை அடைந்து, மாலை திருமண வரவேற்ப்புக்கு வரும் அரவிந்த்சாமி, அங்கு கார்த்தி அறிமுகமாகி அத்தான் , அத்தான் என்று அவரையே சுற்றி வருகிறார். ஆனால் அரவிந்த் சுவாமிக்கோ அது யாரென்று தெரியாமல் தவிக்குறார். அது மட்டுமல்லாமல் அன்று இரவும் அவரோடு தங்கும் சூழல், சரி படம் பழைய நினைவுகளை நோக்கி செல்லும் என்று பார்த்தால் கார்த்தி பேசுகிறார், பேசுகிறார் விடிய, விடிய பேசுகிறார். அவ்வளவுதான் படம். படத்தில் என்ன கதை வைப்பது என்று தெரியாமல் ஒரு 10 சீனை வைத்து கொண்டு ஒவ்வொரு சீனையும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று இழுக்கிறார். அதுவும் அரவிந்த் சாமி வீட்டில் இருந்து புறப்படும் அந்த காட்சி 1/2 மணி நேரம். பேருந்து உரையாடல் 20 நிமிடம். திருமண கூடத்தில் எந்தகதையியும் இல்லாமல், முக்கால் மணி நேரம். அவர் ஊருக்கு கிளம்மி,பேருந்தை தவறவிட்டு கார்த்தி வீட்டில் தங்குவதற்கு அரை மணி நேரம் என்று முதல் பாதி முடிந்து அப்பாடா இரண்டாம் பாதியில் கதை ஆரம்பம் என்று உட்கார்ந்தால், இருவரும் குடிக்க ஆரம்பித்து கார்த்தி பேச ஆரம்பித்து உங்க வீட்டு கதை எங்க வீட்டு கதை என்று மணிகணக்கில் பேசி நம்மை கதற வைத்து,

இறுதியில் அரவிந்த்சுவாமி வாயால் மெய்யழகா என்று கூப்பாடு போட்டு, எங்களை ஆளவிடுங்கடா என்று நம்மை கதற வைத்து ஒட வைக்கிறார்கள் தியேட்டரை விட்டு.

இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ராஜ்கிரண் ஒரு நாண்கு காட்சியில் வருகிறார் அழுது கொண்டே இருக்கிறார்.
இளவரசு வருகிறார் பஜ்ஜி தருகிறார் கானாமல் போகிறார்.
ஶ்ரீ திவ்யா வீட்டிற்குள் வரும் அட்மாஸ்பியர் 3 காட்சிகள்.
கருணா வருகிறார் விசில் அடிக்கிறார் போகிறார்.
ஜெயபிரகாஷ் அப்பாவாக இதில் யார் அப்பா யார் மகன் என்றே தெரியவில்லை.
இசை ஏதோ வாசித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு பெரிதாக ஏதும் இல்லை.

இந்த மாதிரி மொக்கை படத்திற்கு நன்றாக இருக்கிறது என்று கூற வைக்க மிகவும் கஷ்ட பட்டிருக்கிறார்கள் பட குழுவினர்.

மெய்யழகன் கதை என்னும் அழகில்லாதவன்.

Related Post