சீனுராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகிபாபு. பிரகிடா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைபடம் கோழி பண்ணை செல்லதுரை
நாயகனும் அவன் தங்கையும் சிறு வயதாக இருக்கும் போது அவர்ளுடைய தாய் உன் கள்ளகாதலுடன் ஓடிவிட, அப்பாவோ அவள் மேல் உள்ள கோபத்தில் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு அவனும் சென்று விட, அதே ஊரில் கோழி பண்ணை வைத்திருக்கும் யோகிபாபு அரவணைப்பில் 12 ஆண்டுகள் பாடுபட்டு வளர்ந்து தன் தங்கைக்கு திருமணம் முடித்து தானும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது, ஓடி போன தாய் பைத்தியமாக வந்து நிற்க, அவளை காப்பாற்ற போகும் போது. விட்டு போன தந்தை இரண்டு கிட்னியும் செயலிழந்து ஒற்றை மகளுடன் வந்து நிற்க அவருக்கு தன் ஒரு கிட்னி தந்து காப்பாற்றி நாயகன் தியாகியாகும் கதைதான் இந்த கோழி பண்ணை செல்லதுரை.
நாயகனாக ஏகன் பல வேலைகள் செய்து தங்கையை வளர்க்கும் கதாபாத்திரம்.நிறைய தியாகத் தன்மையோடும் அமைக்கப்பட்டு இருக்கும் கதாபாத்திரம், தங்கையாக சத்யா தேவி அண்ணனே தெய்வம் என வாழ்ந்திருக்கிறார்.
பிரகிடாவிற்கு படத்தில் ஒரே ஒரு வேலைதான நாயகனை காதலிப்பது. யோகி பாபு யாருக்காக, எதற்காக இந்த படத்தில் வந்தார் என்று தெரியவில்லை. கடமைக்கு வருகிறார். நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஜீவனும் இல்லை.
இயக்கம் சீனுராமசாமி இந்த மாதிரி ஒரு படத்தை நிச்சயம் நாம் அவரிடம் எதிர்பார்க்கவில்லை ஏமாற்றிவிட்டார. படத்தில் உள்ள காதாபாத்திரங்கள் எல்லாம் விட்டிற்கு உள்ளேயே செல்ல மாட்டேங்குது எல்லாம் வெளிலேயே பேசுகிறார்கள். பெண் பார்க்கும் காட்சி கூட வீட்டின் போர்டிகோவில் தான் பேசுகிறார்கள். படம் பயங்கர பட்ஜெட் படம் போல.
தேனி மாவட்டத்தில் நடக்கும் கதை என்று கூறிவிட்டு ஒரு காதாப்பாத்திரம் கூட வட்டார மொழி பேசவில்லை ஏனோ இயக்குநர் அதை கவணிக்கவில்லை.
இசை உயிரோட்டமாக இல்லை.
கோழி பண்ணை செல்லதுரை கதையில் பறவை காய்ச்சல் வந்தது போல் ஆகிவிட்டது.