Breaking
September 29, 2024

“கடைசி உலகப்போர்” திரை விமர்சனம்

ஹிப்பாப் ஆதி தயாரிப்பு மற்றும் கதை, திரைகதை, எழுதி இயக்கி இருக்கும் படம் கடைசி உலக போர்.

கதைக்களம் 2028 ஆம் ஆண்டில் தொடங்குகிறது.தமிழகத்தில் முதலமைச்சராக நாசர் பதிவில் இருந்து வருகிறார்.பினாமியாக, இருக்கும் அவருடைய மச்சான் நட்டி நடராஜ் கூறும் அனைத்து ஐடியாக்களை நம்பி நாசர் செயல் பட்டு வருகிறார்.நட்டி நடராஜ்தான் தமிழக ஆட்சியையே உருவாக்கி இருப்பது போல தன்னை நினைத்து கொள்கிறார்.ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிந்துள்ளது.இந்தியாவை கைபற்ற ரஷிய மற்றும் இதர ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்தியாவை கைபற்ற ரஷிய மற்றும் இதர ரிபப்ளிக் நாடுகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதியை தமிழக முதல்வராக இருக்கும் நாசரின் மகள் காதலித்து வருகிறார்.ரிப்பப்ளிக் நாடுகள் இந்தியா மீது தாக்குதல் நடத்துகின்றனர்.தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அனைத்து மக்களும் என்ன நடக்கிறது என்று அவதிப்படுகிறார்கள்..சென்னை மாகாணம் மொத்தமும் குண்டுகள் வீசி தரைமட்டமாக அழிக்கப்படுகிறது.

இதற்கு பிறகு என்ன ஆனது? ரிபப்ளிக் நாடு சென்னையை கைப்பற்றியதா? கைப்பற்றவில்லையா? என்பதுதான் இந்த கடைசி உலகப் போர் திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக ஹிப் ஹாப் ஆதி அமைதியான முறையில் மிக அருமையாக அரசியல் பேசுகிறார்.காதல் காட்சிகளில் கவனம் செலுத்தாமல் ஆக்சன் காட்சிகள் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி ரசிகர்களை கவர்கிறார்.

நாயகியாக அனகா கொடுத்த கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.

நட்டி நட்ராஜ், தன்னை ஒரு கிங் மேக்கர் என்று சொல்லிக் கொண்டு ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கும் வேலையை நடிப்பின் மூலம் காண்பித்திருக்கிறார்.வழக்கமான பாணி தான் என்றாலும் கதாபாத்திரம் திரைப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

நாசர் தனது அனுபவ நடிப்பு கொடுத்து திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

புலிப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், சினிமா நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாரா முனீஷ்காந்த், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், கல்யாண், தலைவாசல் விஜய், குமரவேல், இளங்கோ குமணன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உடன் இணைந்து திரையில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான ஒளிப்பதிவின் மூலம் மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் இசையமைத்து இயக்கி தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, மிகவும் வித்தியாசமான முயற்சி மட்டும் இன்றி விபரீதமான முயற்சியும் இந்தத் திரைப்படத்தின் மூலம் எடுத்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *