Breaking
September 29, 2024

“லப்பர்” பந்து திரைவிமசர்னம்.

சாதியை சாப்பாடாகவும் கதையை ஊருகாயாகவும் வைத்து படம் எடுத்து பணம் சம்பாதிக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், சாதியை ஊறுகாயாகவும் நல்ல கதை களத்தை சாப்பாடாகவும் வைத்து பரிமாறி இருக்கிறார் இயக்குநர்.

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண் அவாசிகா, சஞ்சனா மற்றும் பலர் நடத்திருக்கும் படம் லப்பர் பந்து

வேலை வெட்டிக்கு செல்லாமல் கிரிகெட் விளையாடி கொண்டு இருக்கும் ஒரு குடும்ப தலைவனுக்கும். சாதி பாட்டால் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் , கிடைக்கும் அணிகளில் விளையாடி கொண்டிருக்கும் ஒரு இளந்தாரி பயலுக்கும் இடையே நடக்கும் ஈகோ தான் கதைகளம். படத்தில் சாதி இருந்தாலும் அதை கையாண்டிருக்கும் இயக்குனர் ஒரு நல்ல ஆரோக்கியமான திரைகதை அமைத்து இது வழக்கமான சாதி படமல்ல அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படம் என்று தைரியமாக இயக்கி இருக்கிறார்.

கிரிகெட்டில் கெத்தாக விளையாடி கெத்து காட்டும் கெத்தாக அட்டகத்தி தினேஷ். கிரிகெட்டுக்காக ஊரை சுற்றி அதற்காக மனைவியிடம் திட்டு வாங்கி, பெட்டி பாம்பாக அடங்கும் காதல் கணவனாக, ஒரு அழகான பெண்ணுக்கு, பாசமிகு அப்பா தினேஷ். ஒரு இடத்தில் இவருக்கு எதிராக கிரிக்கெட் விளையாடி அவரது ஈகோவை சம்பாதித்து, தினேஷின் வெறுப்பில் வீழ்ந்து, ஒரு கட்டத்தில் அவருடைய மகளுடன் காதலில் விழுந்து. அவருடனேயே கிரிக்கெட் விளையாடி , காதலில் கரை சேர்வதே கதை.

தன் வயதுக்கு மீறிய நடுத்தர மனிதனாக, நாயகிக்கு அப்பாவாக தினேஷ் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். மனைவிக்கு பயந்து, அவர் காதலில் வீழ்ந்து மனைவி முன் ஒரு வார்த்தை பேசாமல், உடல் மொழியால் நடிப்பை அருமையாக தந்திருக்கிறார்.

அன்புவாக ஹரீஷ் கல்யாண் காதலில் ஜெயிக்கும் வேகத்தை விட, மாமனாரின் ஈகோவில் இருந்து வெளிவர படும் பாடுகளை . சிறப்பாக வெளிபடுத்தி இருக்கிறார்.

சுவாசிகா தினேஷின் மனைவியாக.பார்வையிலே நடத்திருக்கிறார். அவர் உடல் மொழி அருமையான நடிப்பை வெளிபடுத்துகிறார்.

மகளாக சஞ்சனா அப்பாவின் பாசத்திலும், காதலிலும் சிக்கி அளவான அழகான நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார்.

நண்பர்களாக வரும் பால சரவணன், ஜென்சன் நடிப்பு கதையுடன் அழகை ஒன்றி வெளிபட்டிருக்கிறது.

வழக்கமான சாதி கதையாக செல்லாமல் மாமனார்,மருமகனுக்கு இடையேயான கிரிக்கெட் ஈகோவாக திரைக்கதை அமைத்திருப்பது படத்தின் மிக பெரிய பலம். இதனால் இயக்குநருக்கு குடுக்கலாம் ஒரு சபாஷ்.


லப்பர் பந்து நிச்சயம் பெளண்டரி பறக்கும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *