Breaking
April 2, 2025

பாலகிருஷ்ணா நடிக்கும் ‘பகவந்த் கேசரி’

பாலகிருஷ்ணா நடிக்கும் ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள நாக்ஸ் ஸ்டுடியோஸ்

சென்னையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான நாக்ஸ் ஸ்டுடியோஸ் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.

நாக்ஸ் ஸ்டுடியோஸ் அதன் முதல் வெளியீடாக பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படமான ‘பகவந்த் கேசரி’யின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 19 அன்று வெளியாகிறது.

தமிழில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் குறித்த அறிவிப்பையும் நாக்ஸ் ஸ்டுடியோ விரைவில் வெளியிட உள்ளது.

தரமான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட சிறந்த திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு வழங்குவதே நாக்ஸ் ஸ்டுடியோவின் நோக்கமாகும். நாக்ஸ் ஸ்டுடியோவின் இதர திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ராவிப்பூடி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் அதிரடி டிரைலர் ரசிகர்களிடையே பலத்தை எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள நிலையில் இப்படத்தை அக்டோபர் 19 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட நாக்ஸ் ஸ்டுடியோ தயாராகி வருகிறது.

Related Post